Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள...
By General | 2016-02-02 22:07:49

நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்தில் ரஜினியை இரு விதமான பாத்திரமாக உருவாக்கியிருப்பார் இயக்குநர். ஆரம்பத்தில் போக்கிரியாகவும் பின்பு பொறுப்பான மனிதனாகவும் உருவாக்கப்பட்ட அந்தப் பாத்திரத்தின் இரு காலகட்டத்துக்கும் இருவேறுபட்ட சூழ்நிலையில் இருவேறு பாடல்களை அமைத்திருப்பார் இசைஞானி இளையராஜா அவற்றைப்பாடியவர் யேசுதாஸ்.

 

அந்த இரு பாட்டிலும் இருவேறு குணவியல்புகளைத் தத்ரூபமாக தனது குரலில் கொண்டு வந்திருப்பார் யேசுதாஸ். முதல் பாடலில் நையாண்டியும் அடுத்த பாடலில் பொறுப்பும் சோகமும் யேசுதாஸின் குரலில் தெறித்து விழுகிறது. அதுதான் யேசுதாஸ். அந்தப்பாடல்கள்:

 

1) வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள.
2) சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு.

 

இந்தப் பாடல்களைப்பற்றிய சிந்தனை வந்தபோது “வச்சுக்கவா உன்ன மட்டும்” என்ற பாடலில் மெட்டு, யேசுதாசின் குரல், பாடலைப்பாடிய விதம் என்பவற்றுடன் இன்னொரு அசத்தலான விடயமும் இருக்கின்றது என்பது நினைவுக்கு வந்தது. அதுதான் அந்தப் பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கப்பட்டுள்ள விதம். அந்த வாசிப்பு ஒரு காலத்தின் பதிவு. 80களின் கண்ணாடி.

 

80களில் வெளிவந்த அனேக படங்களில் ஒரு கபரே அல்லது கிளப் பாடல் உடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலில் ஹீரோவுடன் அப்போதைய கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் துள்ளாட்டம் ஆடியிருப்பார்.

 

இந்தப் பாடல்களில் அனேகமானவை அப்போது உச்சத்திலிருந்த இசைஞானி யாராலேயே உருவாக்கப் பட்டவை.

 

இந்த வகைப்பாடல்களை ஞானியார் மேற்கத்தேயப் பாணியில் மேலத்தேய ஆர்கஸ்ட்ரேஷனுடன் வேகமான மெட்டுக்களால் உருவாக்கியிருப்பார்.

 

அந்தப் பாடல்களில் அவரால் நெய்யப்பட்டுள்ள ஆர்கஸ்ட்ரேஷனை பிரித்து மேய்ந்து பார்ப்போமானால் அவற்றுக்குள் இரண்டு இசைக்கருவிகளிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். அவையாவன ட்ரம்பட், சாக்ஸஃபோன் மற்றும் ட்ரம்ஸ்.

 

பொதுவாக Saxophone என்ற இசைக்கருவியில் 8 வகையானவை இருக்கின்ற போதிலும் அவற்றுள் tenor மற்றும் alto ஆகிய இரண்டு விதமானவைகளைத்தான் உலகின் பெரும்பாலான கொம்போசர்கள்  அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

 

இசைஞானியாரும் தனது கொம்போசிங்கில்  இவையிரண்டையுமே அதிகமாகப் பாவித்திருக்கலாம்.

 

இந்தப் பாடல்களை அதிகம் பாடியவர்கள் பாலுவும் யேசுவும்தான். ஆனால் இருவரும் இந்தப் பாடல்களை பாடிய விதம் வேறுபட்டதாக இருப்பதுதான் இதன் சிறப்பு. இருவரும் வெவ்வேறு விதமான பரிமாணங்களை இவற்றில் வெளிப்படுத்தியிருப்பார்கள்.

 

"நீங்கள் கேட்டவை " என்ற படத்தில் பாலு பாடிய அடியே மனம் நில்லுன்னா நிக்காதுடி என்ற ஊடரடி பாட்டுக்கும் "நான் வாழ வைப்பேனில் " யேசுதாஸ் பாடிய “கிளப்” பாடலான ஆகாயம் மேலே பாதாளம் கீழே என்ற பாடலும் வெவ்வேறு பாணியாக இருக்கும்.

 

குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால், சாஸ்திரீய இசையை முறைப்படி கற்று அதில் மிகுந்த புலமையுடன் இருந்த யேசுதாஸ் அவர்களின் இத்தகைய பாடல்களில் அவற்றின் சாயல் இருக்காததுதான்.

 

அடுத்ததுதான் மிக முக்கியமானது. அது இந்தப்பாடல்களில் ட்ரம் வாசிக்கப்பட்டுள்ள விதம் அலாதியானது. கேட்கும் போது புத்துணர்ச்சியையும் இனம்புரியாத உவகையையும் ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்களுடன் கூடிய அட்டகாசமான ஆர்ப்பாட்டமான ஆக்ரோஷமான வாசிப்பை இந்தப் பாடல்களில் கேட்கலாம்.

 

அதுசரி 80 களில் இளையராஜாவின் அந்தப் பாடல்களில் ட்ரம்ஸ் வாசித்து அசத்திய அந்த அரும்பெருங் கலைஞர் யாராக இருக்கும்?

 

அநேகமானவர்கள் தமிழ்த் திரைப்பாடல்களில் உலகத்தரமான ட்ரம்ஸ் வாசிக்கப்பட்டிருந்தால் அதை ( வாசித்தது ) உடனே சிவமணி என்று அநியாயத்துக்கும் முத்திரை குத்துகிறார்கள், இது மிகத் தவறு.

 

அரைகுறை ஊடகவியலாளராலும் ஊடகங்களாலும் தெரியாத்தனமாக சோடிக்கப்பட்டுவிட்ட தவறான தகவல் சிவமணி உலகத் தரமான ட்ரம்ஸ் கலைஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது அதற்காக தமிழ்த் திரையில் சிறப்பாக வாசிக்கப்பட்ட ட்ரம்ஸ் எல்லாவற்றுக்கும் அவர் சொந்தக்காரனாக ஆகிவிடமுடியாது.

 

எனக்குத் தெரிந்தவரையும், அறிந்தவரையும் 80 களில் வெளியான ஞானியாரின் அநேகமான பாடல்களில் இடம்பெற்றுள்ள அந்த அற்புதமான அதிரடி ட்ரம்ஸ் வாசிப்புக்குச் சொந்தக்காரர் "புரு" என்று சக கலைஞர்களால் அன்பாக அழைக்கப்படும் புருஷோத்தமன் தான்.  

 

Purushothaman இவர் இசைஞானியாரின் இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலுக்கு கிட்டார் வாசித்த  சந்திரசேகரின் தம்பி.

 

அதுமட்டுமல்லாமல் இவரின் இன்னொரு விசேடம் இளையராஜாவின் கொம்போசிங்கில் “கொண்டக்டராக” பல வருடங்கள் பணியாற்றியவர்.
அவரவருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்தே தீர வேண்டும்.

 

அதுதான் மனுதர்மமும் நியாயமும் ஆகும். அந்த வகையில் பல வருஷங்களாக இசைஞானியாரின் பல நூறு பாடல்களுக்கு ட்ரம்ஸ் வாசித்து எம்மை மகிழ்வித்த "புரு" என்கிற புருஷோத்தமனுக்கு ஒரு ரசிகனாக எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* "சின்ன மாமியே உன் சின்­ன ­ம­க­ளெங்கே? "  பாடல் புகழ் எம்.எஸ். கம­ல­நாதன்

 

* கே.வி. மகா­தேவன் : மறக்­கப்­படக் கூடாத இசை­ய­மைப்­பாளர்

 

* பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்  நீ வருவாய் என...

 

* 'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின்  அற்­புத இடை­யிசை...

 

*'அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...': ஆஹா என்னவொரு இனிமையான பாடல்...

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
srikumar2016-02-03 14:51:38
Many people don t know these info. Thanks for sharing. This is one way of conveying our gratitude to unknown genius worked with our Isaignani sir.........
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.