Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
"சின்ன மாமியே உன் சின்­ன ­ம­க­ளெங்கே? " பாடல் புகழ் எம்.எஸ். கம­ல­நாதன்
By General | 2016-01-29 14:19:59

“சின்­ன­மா­மியே உன் சின்ன மக­ளெங்கே..? எனத் தொடங்கும் பாடல் உலகில் தமிழ் மக்கள் வாழும் பகு­தி­க­ளி­லெல்லாம் மிகப் பிர­சித்­த­மான தமிழ் பொப்­பிசைப் பாடல்.

 

இப்­ பா­டலை எழு­திய எம்.எஸ். கம­ல­நாதன் கடந்த 25 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கால­மானார். அவரின் இறு­திக்­கி­ரி­யைகள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை யாழ் வட­ம­ராட்­சியில் நடை­பெற்­றன.


இலங்கைப் பாட­லுக்கு இலங்கை மக்­களால் வர­வேற்புக் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை எனும் குறை பல­ரிடம் உள்­ளது. ஆனால், "சின்ன மாமியே உன் சின்­ன­ம­க­ளெங்கே? பள்­ளிக்குச் சென்­றாளோ படிக்கச் சென்­றாளோ? பாட­லா­னது இலங்கை, இந்­தி­யாவில் மாத்­தி­ர­மல்ல தமிழ்­கூறும் நல்­லு­ல­கெங்கும் மக்கள் மனங்­களில் கோலோச்­சிய பாட­லொன்­றாகும்.


அப் ­பா­டலை இயற்றி மெட்­ட­மைத்துப் பாடி­யவர் எம்.எஸ். கம­ல­நாதன். பின்னர் பிர­பல பொப்­பிசைப் பாடகர் நித்தி கன­க­ரத்­தி­னத்தின் குரலில் அப்­பாடல் ஒலி­நா­டாவில் பதி­வு­செய்­யப்­பட்டு ஒலி­ப­ரப்­பா­கி­யது. ஏரா­ள­மான மேடை­களில் நித்தி கன­க­ரத்­தினம் அப்­ பா­டலை பாடி பிர­பல்­யப்­ப­டுத்­தினார்.


1983 ஆம் ஆண்­டுக்­குமுன் தமிழ்­பேசும் மக்­களின் திரு­மண, பிறந்­தநாள் வைப­வங்கள், விழாக்­களில் தவ­றாமல் ஒலிக்கும் பாட­லாக சின்­ன­மா­மியே பாடல் விளங்­கி­யது. தமிழ் மக்­க­ளிடம் மாத்­தி­ர­மல்­லாமல் சிங்­கள மக்­க­ளி­டமும் பிர­சித்தி பெற்ற பாடல் இது. ஒரு காலத்தில் சிங்­கள மக்­க­ளுக்கு அதிகம் தெரிந்த தமிழ் பாட­லா­கவும் சின்ன மாமியே பாடல் விளங்­கி­யது.


யாழ். வட­ம­ராட்சி வதி­ரியில் சீனித்­தம்பி தங்­க­ரத்­தினம் தம்­ப­தி­யி­ன­ருக்கு மூத்த மக­னாக பிறந்­தவர் எம்.எஸ்.கம­ல­நாதன்.


கால்­பந்­தாட்டம், கிரிக்கெட் விளை­யாட்டு வீர­ரா­கவும் திகழ்ந்­தவர் எம்.எஸ்.கம­ல­நாதன்,     1950களில் வதிரி டயமன்ட்ஸ் விழை­யாட்­டுக்­க­ழக வீர­ர­ராக அவர் விளங்­கினார்.   1957இல் காங்­கே­சன்­துறை றோயல் விளை­யாட்டுக் கழ­கத்­தி­னரால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்­டியில் அக்­க­ழகம் வென்­றபின் தனது நாட்டம் கால்­பந்­தாட்ட மத்­தி­யஸ்­தத்­தினை நோக்­கித்­தி­ரும்­பி­ய­தாக எம்.எஸ். கம­ல­நாதன் தெரி­வித்­தி­ருந்தார்.


 பின்னர் கால்­பந்­தாட்ட மத்­தி­யஸ்­தர்­க­ளுக்­கான பயிற்சி வகுப்­புக்­களில் பங்­கு­பற்றி அப்­ப­ரீட்­சை­களில் சித்­தி­ய­டைந்து முதல்­தர மஸ்த்­தி­யஸ்­த­ருக்­கான தகு­தியை பெற்று கால்­பந்­தாட்ட மத்­தி­யஸ்­த­ராக அவர் பணி­யாற்­றினார். குறுந்தி­ரைப்படங்­க­ளையும் அவர் இயக்­கி­யுள்ளார்.


எம்.எஸ்.கம­ல­நாதன் எழு­திய கட்­டு­ரை­யொன்றில் தனது புகழ்­பெற்ற சின்­ன­மா­மியே பாடல் குறித்து இவ்­வாறு குறிப்­பி­டு­கிறார்.


       
“1962இல் என்னால் இயற்றி மெட்­ட­மைத்துப் பாடப்­பட்ட  ”சின்­ன­மா­மியே உன் சின்­ன­ம­க­ளெங்கே………” எனப் பாடப்­பட்ட பாடல் இலங்­கையின் முதல் பொப் இசைப் பாட­லாகும். இப்­பாடல் செவி வழி­யாகப் பல மேடை­க­ளிலும் குறிப்­பாக இலங்கை வானொ­லி­யிலும் ஒலி­ப­ரப்­பப்­பட்டு கேட்ட பாட­லாகும்.

 

இதனை இன்­­னொ­ருவர் காவிக்­கொண்டு தனது தயா­ரிப்­பென விளம்­ப­ரப்­ப­டுத்தி வந்த நிலையில் இப்­பாடல் திரு எம்.எஸ்.கம­ல­நாதனால் எழுதி மெட்­ட­மைத்து பாடப்­பட்­டது என்ற உண்­மை­யினை அறிந்த பலர் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அதனை இரவல் வாங்கியவரே ஒத்துக்கொண்ட நிலையில் தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இன்றும் திரு எம்.எஸ்.கமலநாதனின் பாடல் என்ற முகவரியோடு அறுபத்தேழு நாடுகளில் பவனிவருகிறதென்பது சாதாரண விடயமல்ல.இவை எனது முயற்சியின் வெற்றி அனுபவமாகும் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.”

 

 

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* கே.வி. மகா­தேவன் : மறக்­கப்­படக் கூடாத இசை­ய­மைப்­பாளர்

 

* பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்  நீ வருவாய் என...

 

* 'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின்  அற்­புத இடை­யிசை...

 

*'அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...': ஆஹா என்னவொரு இனிமையான பாடல்...

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
ஆர்.கிருபாளினி2016-01-29 23:49:11
என் சின்ன வயதில் சின்ன வயதிலிருந்தே "சின்ன மாமியே..." பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலை இயற்றியவர் பற்றி அறிந்திருக்கவில்லை. நன்றி.
0
1
க.தர்மலிங்கம்2016-01-29 15:48:33
இந்த பாடல் பரவலாக ஒலித்துக்கொண்டிருந்த காலத்தில் ஈழத்து இசைத்துறை அதன் உச்சத்தில் இருந்தது.
0
2
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.