Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கே.வி. மகா­தேவன் : மறக்­கப்­படக் கூடாத இசை­ய­மைப்­பாளர்
By General | 2015-12-07 19:36:54

– அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா

 

தமிழ்த் திரை­யி­சை­ய­மைப்­பா­ளர்கள் பலர் இருந்­தார்கள்; இருக்­கி­றார்கள்; இருப்­பார்கள். இவர்­களில் பலர் வந்­தார்கள்; போனார்கள். ஆனால், இந்த இசை­ய­மைப்­பா­ளர்­களில் தமிழ்த் திரை­யி­சையின் தற்­போ­தைய வளர்ச்­சிக்­கான முன்­னோ­டிகள் யாரெனக் கேட்டால் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாறு­பட்ட கருத்து இருக்­கலாம்.

 

எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வரை இந்த முன்­னோ­டி­களின் அத்­தி­யாயம் ஜீ.ராம­னா­தனில் இருந்து ஆரம்­பிக்­கி­றது. அதற்கு அடுத்­தவர் கே.வி. மகா­தேவன் என்­பதே என் கருத்து. இவ­ருக்கு அடுத்து வந்­த­வர்­களே மெல்­லிசை மன்­னர்கள்.

 

கே.வி. மகா­தே­வனை அன்­பாக மாமா என்றே அப்­போது எல்­லோரும் அழைப்­பார்கள் என்று பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் மேடை நிகழ்ச்­சி­யொன்றில் அமரன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

 

சிவா­ஜியின் வசந்­த­மா­ளிகை, தில்­லானா மோக­னாம்பாள், உத்­தமன், எம்.­ஜி. ­ஆரின் அடி­மைப்பெண், நல்­ல­நேரம்  மற்றும் திரை இசையில் வேறொரு பரி­மா­ணத்தைக் காட்­டிய சங்­க­ரா­ப­ரணம் போன்ற இன்னும் பல படங்­களின் இசை­ய­மைப்­பாளர் இவர்.

 

காலத்தால் அழி­யாத எஸ்.­பி.­பி.யின் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எம்­.ஜி­.ஆ­ருக்­காக அடி­மைப்­பெண்ணில் உரு­வாக்­கி­ய­வரும் இவரே.

 

இசைஞானி இளையராஜா கோலோச்­சிய 80 களில் இவ­ருக்கு மிக­வும் ­வ­ய­தா­கி­விட்­டி­ருந்த போதிலும் இவரின் இசை இள­மை­யு­ட­னேயே இருந்­தது என்­பதன் வெளிப்­பா­டுதான் 1988 ஆம் ஆண்டு வெளி­வந்த “பாய்­ம­ரக்­கப்பல்” படத்தில் எஸ்­.பி.பி. இவரின் இசையில் பாடிய "ஈரத் தாமரைப் பூவே.. " என்ற அரு­மை­யான மெலடி. 

 

மறு பக்­கத்தில் ஜேசுதாஸ் தத்­துவப் பாடல்­களில் பின்னிப் பெட­லெ­டுத்துக் கொண்­டி­ருந்த கால­மது. அதைப் புரிந்து கொண்டு அந்த ட்ரெண்­டிற்கு ஏற்ப ஜேசு­தாசைக் கொண்டு ஜன­க­ரா­ஜுக்­காக பாய்­ம­ரக்­கப்பல்  படத்தில் இவர் பாடு­வித்த "வானம் எங்கே முடி­கி­றது கண்டு பிடித்­தவர் சொல்­லுங்கள்'' என்ற தத்­துவப் பாடலும் 80 களில் எங்கள் வய­தி­னரின் மட்­டத்தில் மிகப் பிர­ப­ல­மா­கி­யதை மறக்க முடி­யாது.

 

இவரின் பாடல்­களில் பழ­மை­யான தாள வாத்­தி­யங்­களில் ஒன்­றான டோலக்கின் பங்­க­ளிப்பு அதி­க­மாக இருப்­ப­துதான் ஏன் என்­பது புரி­ய­வில்லை. ஒரு­வேளை, அது அவரின் பாணி இசை­யாக இருக்­கலாம். ஆனால், எனக்கு ஏனோ டோலக் அதிகப் பிர­சங்­கித்­த­ன­மாக இருப்­ப­தா­கவே இன்­று­வரை படு­கின்­றது.

 

இவ­ரது உத­வி­யா­ள­ராக புக­ழேந்தி என்ற திரை­இ­சையில் நன்கு புலமை வாய்ந்த ஒருவர் பல்­லாண்­டு­க­ளாக இருந்­துள்ளார். ஆனால், அவ­ருக்குக் கிடைக்­க­வேண்­டிய அங்­கீ­கா­ரமும் பாராட்­டு ­தல்­களும் வழ­மை­போலக் கிடைக்­க ­வில்லை என்­பது துர­திர்ஷ்டம்.

 

திரை­யிசைத் திலகம் என்ற பட்டப் பெய­ருடன், எம்­ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்­ப­வான்­களின் பல வெற்­றிப்­ப­டங்­களின் இசை­ய­ம­மைப்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய மகா­தே­வனின் சாத­னைகள் அடுத்த சந்­த­திக்குத் தெரி­யப்­ப­டா­ம­லேயே போய்­வி­டுமோ என எண்ணத் தோன்­று­கின்­றது.

 

காரணம் தமிழ்த் திரை­யு­ல­காலும் ஊட­கங்­க­ளாலும் மெல்ல மெல்ல அவர் மறக்­கப்­ப­டு­கிறார் என்­ப­தையே உணரக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

 

ஒரு மிகச் சிறந்த ஞானஸ்­தனை, தமிழ்த் திரைப்­பா­டல்­களில் பல முத்­துக்­க­ளையும் முத்­தி­ரை­க­ளையும் பதித்த ஜாம்­ப­வானை அவரின் சாத­னை­களை தொலைக்­காட்­சிகள் மீண்டும் மீண்டும் தமது இசை சம்­பந்­த­மான நிகழ்ச்­சி­களில் நினை­வு­ப­டுத்த வேண்டும். 

 

அவரின் இசையில் பாடிய பாடக பாடகிகள் மற்றும் வாசித்த இசைக் கலைஞர்களின் வாயால் அவரின் தனித்து வங்கள், சாதனைகள் மக்க ளுக்கு ஜனரஞ்சகமான முறை யில் சொல்லப்பட வேண்டும்.

 

இல்லா விட்டால் மகாதேவனுக்கும் ஜி.ராமனா தனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற் படும். அடுத்த சந்ததிக்கு அவர் தெரியாம லேயே போய்விடும் அநியாயம் நிகழ்வதை தவிர்க்க முடியாது.


'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் ஓர் இசைமேதை. தமிழ்த் திரை இசையில் யார் தொட்ட எல்லையையும் கே.வி.மகாதேவன் தொடுவார்.

 

ஆனால், கே.வி.மகாதேவன் தொட்ட ஓர் எல்லையை எவரினாலும் தொட முடியாது உள்ளது. 

திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை, ஆதி பராசக்தி முதலான புராணப் படங்களாகட்டும் தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம் முதலான பாரம்பரிய கலையை மெச்சும் படங்களாகட்டும் கே.வி.மகாதேவன் போல் வேறு ஒருவரால் இசையமைத்திருக்க முடியுமா?  பலர் முயன்றும் முடியவில்லை. 

 

"பாட்டும் நானே...", "மன்னவன் வந்தானடி...", "ஒருநாள் போதுமா..." "கங்கைகரைத் தோட்டம்...", "ஏரிக்கரை மேலே...", "மணப்பாறை மாடுகட்டி...", "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..." போன்ற பாடல்கள் மறக்கத் தக்கனவா? 

 

குத்துப் பாடல் என்றாலும் கே.வி.மகாதேவன்தான் நிற்கிறார். "எலந்தைப் பழம்...", "மாமா மாமா..." போன்ற பாடல்கள் காலத்தால் அழியத்தக்க பாடல்களா? 

 

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஒருவர், கே.வி.மகாதேவன் தெலுங்கில் 200 திரைப்படங்களும் தமிழில் 300 திரைப்படங்களும் இவர் இசையமைத்தவை.

 

1942 முதல் 1992 வரை 50 வருடங்கள் இசையமைத்திருக்கிறார்.  1975ஆம் ஆண்டிலிருந்து (14 வயது) கே.வி.மகாதேவனின் பரம இரசிகன், நான். -                                                  – இரைவி அருணாசலம்

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* "சின்ன மாமியே உன் சின்­ன ­ம­க­ளெங்கே? "  பாடல் புகழ் எம்.எஸ். கம­ல­நாதன்

 

* கே.வி. மகா­தேவன் : மறக்­கப்­படக் கூடாத இசை­ய­மைப்­பாளர்

 

* பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்  நீ வருவாய் என

 

* 'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின்  அற்­புத இடை­யிசை...

 

*'அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...': ஆஹா என்னவொரு இனிமையான பாடல்...

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
ராஷித் அஹமத்2016-03-28 00:34:20
பாடத்தெரியாதவர் ஒரு இசையமைப்பாளராக இருக்கவே முடியாது. கேவி மகாதேவன் அவர்கள் பாடி நான் கேட்டதில்லை. ஆனால் இவர் எப்படி திரை இசைத்திலகமாக திகழ்ந்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஜி ராமநாதன் முதல் அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் பாடியுள்ளனர்.
0
0
siva2016-01-20 03:47:15
K.V.M vasanthamaligai nallaneram ponra padankalukkum isai amaithullar. K.V.M migasirantha isaiamaippalar. mellulla vimarsanam mikavum sari.
0
1
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.