Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்
By General | 2014-10-19 19:49:13

- அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

"மத­னோற்­சவம் ரதி­யோ­டுதான்" - 1978 இல் வெளி­யான சது­ரங்கம் என்ற ரஜி­னியின் படப்­பா­ட­லிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்­த­னையோ வரு­டங்­க­ளா­கி­ன்றன. ஆனால் பாலுவின் குரல் அப்­ப­டி­யேதான் இருக்­கின்­றது.


பாடலின் முத­லா­வது சர­ணத்தில்

மீனாடும் கண்­ணி­லி­ருந்து
 நானா­டவோ..
தேனாடும் செவ்­விதழ் தன்னில்
நீரா­டவோ..

என்று பாலு இரண்­டு­ த­டவை பாடு­கிறார். இரண்டு தட­வையும் வித்­தி­யா­ச­மாகப் பாடு­கிறார். அதற்குள் இரண்­டா­வது தடவை நீரா­டவோ என்று பாடும்­போது அதை நீ...ரா..டவோ என்று சில்­மிஷம் வேறு வைக்­கிறார். அது மட்­டு­மல்ல..


பாலு உச்­சஸ்­தா­யியில் பாடி முடிக்­கவும் வாணி அம்மா ,
.. புரி­யாத பெண்­மை­யிது .
பூப்­போன்ற மென்­மை­யிது..
பொன்­னந்தி மாலை .
என்­னென்ன லீலை..

என்று கீழ் ஸ்தாயில் பாடும் அழகே தனிதான்.

 

 

 


உண்­மையில் இதன் காங்­கோ­வுடன் கூடிய வித்­தி­யா­ச­மான தாளக் கட்டும் பின்­ன­ணியில் கிட்டார் செய்யும் அலங்­கா­ரமும் 70 களின் கடை­சியில் வெளி­வந்த இசை­ஞா­னியின் பாடல்­க­ளி­லுள்ள ஆர்­கஸ்ட்­ரே­ஷ­னையே நினை­வு­ப­டுத்­து­கின்­றது. ஆனால் ...
இந்தப் பாட்­டுக்கு இசை இசை­ஞா­னி­யல்ல, வி.குமார்.

 

மெல்­லிசை மன்­னர்கள் பிரிந்து அவர்­களில் எம்.எஸ்.வி. உச்­சத்தில் கோலோச்­சிய காலத்தில் அறி­மு­க­மான மற்றைய இசை­ய­மைப்­பா­ளர்­களில் வி.குமார் குறிப்­பி­டத்­தக்­கவர். இவரின் மெல­டிப்­பா­டல்கள் எம்.எஸ்.வியின் பாணி­யி­லி­ருந்து வித்­தி­யா­ச­மாக இருந்­தன. உன்­னிடம் மயங்­கு­கின்றேன், என்ற ஜேசு­தாசின் மகு­டத்தில் வைர­மாக ஜொலிக்கும் பாடலை உரு­வாக்­கி­யவர் இவர்தான்.


சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் பழைய சஞ்­சி­கை­யொன்றில் ஒரு பேட்டி படித்த நினைவு. . அது வி.குமாரின் மனைவி திரு­மதி.சொர்­ணா­வி­னு­டை­யது. இவரும் ஒரு பாட­கி­யாக அறி­மு­க­மாகி வி,குமா­ருடன் ஏற்­பட்ட காதல், திரு­ம­ணத்தில் முடிந்­த­வுடன் பாடு­வதை நிறுத்­தி­யவர் .


அந்தக் கட்­டு­ரையில் சொர்­ணாவும் அவ­ரது மகனும் தமிழ்த்­தி­ரை­யு­லகை மிகவும் வெறுப்­பது தெரிந்­தது. அமெ­ரிக்­காவில் செட்­டி­லாக முயற்­சிக்கும் மக­னுடன் எப்­ப­டி­யா­வது போய்த் தங்­கி­விட வேண்டும் என அந்தத் தாய் ஆதங்­கப்­பட்­டி­ருந்தார். அந்த வெறுப்­புக்­கான காரணம் வி.குமார் என்ற இசை­ய­மைப்­பா­ளரின் இறுதிக் காலத்தில் அவ­ருக்கு சினிமா உலகம் இழைத்த அநீ­தி­யெனக் குறிப்­பிட்­டுள்­ளார்கள். 

 

ஒரு காலத்தில் மிகப் பிர­ப­ல­மாக இருந்து பல நடி­கர்­களை உயர்த்­தி­விட்ட இந்தக் கலைஞன் தனக்குக் கிடைத்த ஏமாற்­றத்­தாலோ என்­னமோ 80 களில் ஒருநாள் திடீ­ரென வந்த மார­டைப்பால் தனது குடும்­பத்தை தவிக்க விட்டு இறந்­து­போனார்.

 

வி.குமார் எம்.எஸ்.வி. கோலோச்சிக் கொண்­டி­ருந்த கால­கட்­டத்தில் பால­சந்­தரால் "நீர்க்­கு­மிழி" படத்தில் அறி­மு­க­மாகி அவரின் படங்­க­ளுக்கு தொடர்ந்து இசை­ய­மைத்துக் கொண்­டி­ருந்­தவர், நீர்க்­கு­மி­ழியில் சீர்­காழி நாகேஸுக்­காகப் பாடும் ஆடி அடங்கும் வாழ்க்­கை­யடா என்ற பாடல் இன்றும் ஒலித்­த­ப­டி­யேதான் இருக்­கின்­றது.

 


பி.பி.ஸ்ரீவாஸின் "தாம­ரைக்­கன்­னங்கள்.. தேன் மழைக் கிண்­ணங்கள்..." என்ற அதி அற்­பு­த­மான பாடலும் வி.குமாரின் இசையில் வெளி­வந்­த­துதான்.

---

 

70 களின் ஆரம்­பத்தில் வெளி­வந்த அவ­ரது மெல­டிப்­பா­டல்கள் ராஜாவின் பாடல்­க­ளாக இருக்­கலாம் என்ற பிர­மையை ஏற்­ப­டுத்­து­வ­தென்­னமோ உண்­மைதான்.

 

பாலு பாடி­யுள்ள "பொன்னை நான் பார்த்­த­தில்லை" என்ற பாடல் உரு­வாக்­கப்­பட்­டுள்ள விதமும் அதில் ட்ரம்பட் முக்­கிய வாத்­தி­ய­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாங்கும் அந்­தப்­பா­டலை ராஜாவின் பாடல் என்றே என்னை பல வரு­டங்­க­ளாக எண்ண வைத்­தி­ருந்­தது. இவ­ரது உத­வி­யா­ள­ராக இருந்­தவர் ஏ.ஆர்.ரஹ்­மானின் தந்தை சேகர்.


'மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்­லக்கு... எனும் பாடல்
ஜேசு­தா­சுக்கு வி.குமார் கொடுத்த இன்­னொரு மாஸ்டர் பீஸ்.


கடந்த வருடம் தொலைக்­காட்சி பாடல் போட்டி நிகழ்ச்­சி­யொன்றில் எம்.எஸ்.வி யையும் கே.பால­சந்­த­ரையும் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக அழைத்து அவர்கள் இரு­வரும் சேர்ந்து படைத்த பாடல்கள் என் சில­வற்றை போட்­டி­யா­ளர்­களைக் கொண்டு பாட வைத்­தார்கள். பால­சந்­தரும் அருமை ..அருமை என்று எம்.எஸ்.வியுடன் சேர்ந்து போட்­டி­யா­ளர்­களை வாழ்த்தி விட்டுச் சென்­று­விட்டார்.


 ஆனால் உண்­மையில் பாலச்­சந்தர் என்ற இயக்­குனர் பிர­ப­ல­மா­கி­யதன் பிற்­பா­டுதான் எம்.எஸ்.வியுடன் சேர்ந்து படங்­களை உரு­வாக்­கினார். ஆனால் இதே பால­சந்தர் தன்னை நிலை நிறுத்தப் போரா­டிய ஆரம்­ப­கா­லத்தில் அவரின் ஆஸ்­தான இசை­ய­மைப்­பா­ள­ராக வி.குமார்  இருந்­துள்ளார்.

 

பால­சந்­தரின் நாட­கங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தவர் குமார். அதே பால­சந்தர் பின்னர் பட இயக்­கு­ன­ராக வாய்ப்புப் பெற்­ற­போது வி.குமாரையே தனது நீர்க்­கு­மிழி படத்­துக்கு இசை­ய­மைக்­கும்­படி வேண்டிக் கொண்டார். தொடர்ந்து பல படங்கள் இரு­வரும் சேர்ந்து பணி­யாற்­றினர்.

 

அந்­தப்­ப­டங்­கள்தான் பால­சந்தர் என்ற இயக்­கு­னரின் தனித்­து­வத்தை தமிழ்த்­திரையுல­கிற்கும் ரசி­கர்­க­ளுக்கும் வெளிப்­ப­டுத்தி அவரை பிர­ப­லப்­ப­டுத்­திய படங்கள். அவற்றால் கிடைத்த பிர­ப­லத்தின் பின்­னர்தான் எம்.எஸ்.வி. போன்ற நட்­சத்­திர இசை­ய­மைப்­பா­ள­ருடன் படம் பண்­ணத்­தொ­டங்­கினார். 

 

ஆனால், இவற்­றைப்­பற்றி எந்த நிரு­பர்­களோ டி.வி. தொகுப்­பா­ளர்­களோ எங்­குமே பால­சந்­தரைக் கேட்­ப­தில்லை பால­சந்­தரும் ஏனோ வி.குமா­ரைப்­பற்றி எங்கும் கூறி நான் கேட்­ட­தில்லை.


பல ஹிட் பாடல்­களைக் கொடுத்தும், பால­சந்­தரின் ஆத­ரவு இருந்தும், பல வெற்­றிப்­ப­டங்­க­ளிற்கு இசை­ய­மைத்­தி­ருந்தும் வி.குமாரால் 70 களின் நடுப்­ப­கு­திக்குப் பின்னர் ஒரு எல்­லைக்கு மேல் பய­ணிக்க முடி­ய­வில்லை. இதற்கு இளை­ய­ராஜா என்ற இளம் இசை­ய­மைப்­பா­ளரின் வரு­கையும் அவர் உரு­வாக்­கிய வித வித­மான பாடல்கள் மற்றும் பின்­ன­ணி­யி­சை­யுமே காரணம் என பலர் நினைக்­கலாம் அது ஓர­ள­வுக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய கார­ண­மாக இருந்­த­போ­திலும் என் மனதில் வேறு எண்­ணங்­களும் தோன்­று­கின்­றன.


ஒரு இசை­ய­மைப்­பா­ள­ரா­னவர் தான் இசை­ய­மைக்கும் படத்தின் ஒரு பாடலை அல்­லது இரண்டு பாடல்­களை மட்டும் ஹிட்­டாக்­கினால் போதாது. தொடர்ந்து வெற்­றி­களைக் கொடுக்க வேண்டும். அது­த­விர அவர் அமைக்கும் பின்­ன­ணி­யி­சை­யா­னது அதன் காட்­சி­க­ளுடன் பேச­வேண்டும். அந்த விட­யத்தில் வி.குமாரின் சாத­னைகள் என்று கூறக்­கூ­டி­யவை எவை என எனக்குப் புரி­ய­வில்லை.


வி.குமார் மிகச்­சி­றந்த சில மெல­டிப்­பா­டல்­களை தமிழ்த் திரை­யி­சைக்கு விட்டுச் சென்­றுள்­ளார்தான் ஆனால் அவர் தன்னை மென்­மேலும் வித்­தி­யா­ச­மா­ன­வ­ராக காட்ட முய­ல­வில்­லையோ என்றே நான் எண்­ணு­கின்றேன்.

 

அவர் வித்­தி­யா­ச­மாக செய்­துள்­ளது என எண்­ணும்­போது துள்­ளல் நடனப் பாடல்­க­ளுக்குப் பாடிக்­கொண்­டி­ருந்த எல்.ஆர்.ஈஸ்­வ­ரியை "காதோ­டுதான் நான் பாடுவேன்" என்ற சிறந்த மெல­டிப்­பா­டலைப் பாட வைத்து ஈஸ்­வ­ரியால் இப்­ப­டிக்­கூடப் பாட­மு­டியும் என நிரூ­பித்து வென்ற ஒரு விட­யமே நினை­வுக்கு வரு­கின்­றது.


எந்த ஒரு இசை­ய­மைப்­பா­ளரும் புதிது புதி­தாகத் தேட வேண்டும், நதி­போல ஓடிக்­கொண்டே இருக்க வேண்டும் குளம் போல தேங்­கக்­கூ­டாது அப்­படி ஓடிக்­கொண்­டி­ருப்­ப­தைத்தான் அவர்கள் புதிது புதி­தாகத் தேடு­வ­தாகக் கொள்­ளப்­படும். அந்த வகையில் தனக்குக் கிடைத்த படங்களில் ஓரிரு பாடல்களைக் ஹிட்டாக்கினாலே போதுமென நினைத்திராமல். புதியவைகளைப் பரீட்சித்திருந்தால் இந்தத் திறமைசாலி இன்னும் தொலைதூரம் நிதானமாகப் பயணித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

 

வி.குமாரின் இசையமைப்பில் ஹிட்டான  சில பாடல்கள்:

 

* சிகப்புக் கல்லு மூக்குத்தி
* உன்னிடம் மயங்குகிறேன்
* புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
* தேவன் கீதமும் கண்ணன் கீதையும்
* உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
* ஒருநாள் யாரோ
* மோகம் என்னும் ராகம் பாடும்
* மதனனோற்சவம் ரதியோடுதான்
* ஆடி அடங்கும்
* உன்னை தொட்ட காற்று வந்து
* நேற்று நீ சின்ன பப்பா
* கல்யாண சாப்பாடு போடவா
* வாழ்வில் சௌபாக்கியம்
* கண்ணொரு பக்கம்
* இளமை கோவில் ஒன்று

--

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.