Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நரேந்­திர மோடி இந்­தி­யாவின் 14 ஆவது பிர­த­மரா அல்­லது 15 ஆவது பிர­த­மரா?
By General | 2014-06-05 20:02:21

கேள்வி:  நரேந்­திர மோடி இந்­தி­யாவின் 14 ஆவது பிர­த­மரா அல்­லது 15 ஆவது பிர­த­மரா? பலரும் பல­வி­த­மாக குழப்­பு­கி­றார்­களே?
      -கே.ஜெய­ரூ­பினி, மஸ்­கெ­லியா.

 

பதில்: இந்­திய பிர­த­ம­ராக பத­வி­யேற்ற 15 ஆவது நபர் நரேந்­திர மோடி. இது­வரை ஜவ­ஹர்லால் நேரு, குல்­ஸ­ரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்­திரி, இந்­திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்­திர சேகர், பி.வி. நர­சிம்­மராவ், எச்.டி. தேவ­கௌடா, ஐ.கே. குஜ்ரால், ஏ.பி. வாஜ்பாய், மன்­மோகன் சிங், நரேந்­திர மோடி ஆகியோர் இப் ­ப­த­வியை வகித்­த­வர்­களில் அடங்­கு­கின்­றனர்.

 

ஆனால், ஜவ­ஹர்லால் நேரு பிர­தமர் பத­வியை வகித்த நிலையில் 1964.05.27 திடீ­ரென இறந்­து­விட, பதில் பிர­த­ம­ராக குல்­ஸ­ரிலால் நந்தா 13 நாட்கள் பதவி வகித்தார்.

 

பின்னர் லால் பகதூர் சாஸ்­திரி பிர­த­ம­ரானார். அவரும் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்­த­போதே 1966.01.11 இல் கால­மா­னதால் மீண்டும் குல்­ஸ­ரிலால் நந்தா பதில் பிர­த­ம­ராக பத­வி­யேற்றார். 13 நாட்­க­ளின் பின் இந்­திரா காந்தி பிர­த­ம­ரானார்.

 

இந்­ நி­லையில் பதில் பிர­த­ம­ராக பதவி வகித்த குல்­ஸ­ரிலால் நந்­தாவை இப் ­பட்­டி­யலில் சேர்க்­காமல் நரேந்­திர மோடி 14 ஆவது பிர­தமர் என்­கின்­றனர். நந்­தா­வையும் பட்­டி­யலில் கருத்­திற்­ கொள்­ப­வர்கள் நரேந்­திர மோடி 15 ஆவது பிர­தமர் என்­கின்­றனர்.

 

கேள்வி: ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடந்த ஐ.பி.எல். முதல் சுற்றில் தனது 5 போட்­டி­க­ளிலும் தோல்­வி­யுற்ற மும்பை இண்­டியன் அணி இந்­திய மண்ணில் 7 போட்­டி­களில் வென்­றமை எப்­படி சீனி­யரே?

மொஹமட் சாதிக், கல்­முனை.

 

பதில்: அம்­பானி திட்டு கொடுத்­தாரோ அல்­லது தட்­டிக்­கொ­டுத்­தாரோ தெரி­ய­வில்லை. இந்­தி­யா­வுக்குத் திரும்­பி­ய­வுடன் ஆவே­ச­மாக விளை­யாடி வெற்­றி­களைக் குவித்­தது மும்பை அணி. தோல்­வி­களைக் கண்டு துவண்­டு­விடாமல் போரா­டினால் வெல்­லலாம் என்­ப­தற்கு மும்பை அணியின் பிளே ஒவ் பிர­வேசம் மற்­றொரு உதா­ரணம்.

 

கேள்வி: நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு விழாவில் பங்­கு­பற்ற தன்­னுடன் வரு­மாறு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்னேஸ்­வரன் நிரா­க­ரித்­தமை குறித்து?
அ.சிவ­காந்தன், வவு­னியா.

 

பதில்: அழைப்பு விடுத்­தமை ஜனா­தி­ப­தியின் இராஜ­தந்­திரம். அதை நிரா­க­ரித்­தமை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் இராஜ­தந்­திரம். இரு­வரின் தீர்­மா­னங்­களும் நீண்­ட­கால நோக்­குடன் மேற்­கொள்­ளப்­பட்­டவை.

 

கேள்வி: தற்­போ­தைய தமிழ் திரைப்­பட கதா­நா­ய­கி­களில் துணிச்­ச­லான வேடங்­களில் நடிப்­ப­தற்கு தயங்­கா­த­வர்­களில் யாருக்கு முத­லிடம் வழங்­கலாம்.


ஆர்.ஜெக­தீஸ்­வரன், பம்­ப­லப்­பிட்டி.

 

பதில்: ஸ்ருதி ஹாசன். அவரின் துணிச்சல் துணி விச­யத்தில் மாத்­தி­ர­மல்ல.

 

கேள்வி: இலங்கைக் கலை­ஞர்­களால் தமிழ் திரைப்­படம் தயா­ரிக்­கப்­பட்டு இந்­தி­யாவில் வெளி­யி­டப்­பட்டு வெற்றி பெறும் சாத்தியம் உள்ளதா?

பி.ரொஷான், களுத்துறை.

 

பதில்: கதையிலும் தொழில்நுட்ப ரீதியிலும் இந்திய படங்களுக்கு இணையாக இருந்தால் அல்லது அதைவிட சிறப்பாக  இருந்து, அப் படத்தை சிறந்த முறையில் விளம்பரப்படுத்தினால் வெற்றி பெறக்கூடும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.