Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?
By General | 2014-04-27 10:27:32

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

ந்தப் புத்­தாண்­டி­லா­வது தமிழ் திரை­யி­சையில் மற(றை) க்கப்­பட்ட இரண்டு அற்­பு­த­மான வயிலின் கலை­ஞர்­களை நினை­வு­கூ­ரு­வோமா ??


வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்குள் வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?


“பட்­டினப் பிர­வேசம்” என்ற படத்தின் “வான் நிலா.. நிலா ..அல்ல” என்ற பாட்டு தமிழ்த்­தி­ரை­யி­சையில் ஒரு மைல்கல்.


இந்­தப்­பாட்டின் உரு­வாக்கம் அதை இசை­ய­மைத்த எம்.எஸ்.வி.யையும் அந்தப் பாடலை எழு­திய கண்­ண­தா­ச­னையும் அதனை அனு­ப­வித்துப் பாடிய பாலு­வையும் எங்கோ உய­ரத்­துக்குக் கொண்­டு­சென்று வைத்­தது.

 


ஆனால் அந்தப் பாட்­டிற்கு அழகைக் கொடுக்கும் வயிலின் கலை­ஞர்­களை எவரும் கணக்­கெ­டுக்­க­வில்­லை­யென்­பது மிகக் கவ­லைக்­கு­ரிய விடயம்.

 

 


இந்­தப்­பாட்டில் பாலு­வுக்கு சரிக்குச் சரி­யாக வயி­லினால் பதில், கூறி­ய­வர்கள் இரண்டு கலை­ஞர்கள். முத­லா­மவர் ஜோசப் கிருஷ்ணா மற்­ற­யவர் ரி.என். மணி ஆகியோர்.


இவர்கள் இரு­வரின் புகைப்­படம் ஏதா­வது ஒன்­றா­வது எங்­கா­வது கிடைக்­காதா என்று இணை­யத்தில் தேடிக் கொண்­டி­ருக்­கிறேன்.. ம்ஹூம் எங்­குமே இல்லை. அந்தக் கலை­ஞர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட மரி­யாதை இதுதான். வெட்­கப்­ப­ட­வேண்­டிய விடயம் இது.


எம்.எஸ்.வி.யின் உத­வி­யா­ள­ராக இருந்­த­வர்கள் பலர். அவர்­களில் ஹென்றி டானி­யல், ஜோசப் கிருஷ்­ணா, மற்றும் சாமுவேல் ஜோசப் ஆகி­யோரும் அடங்­குவர். அதில் ஒருவர் பியானோ வாசிப்­பவர் அத்­துடன் இசை உத­வி­யா­ளர், இன்­னொ­ரு­வரும் இசை உத­வி­யா­ள­ரா­கவும் வயிலின் கலை­ஞ­ரா­கவும் இருந்­துள்ளார்.


இந்த உத­வி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான ஜோசப் கிருஷ்­ணாதான் இந்தப் பாட்டின் வயிலின் கலை­ஞர்­களில் ஒருவர். சாமுவேல் ஜோசப் என்­ப­வர்தான் பிற்­கா­லத்தில் ஷியாம் என்ற பெயரில் இசை­ய­மைப்­பா­ள­ராக இருந்­துள்ளார் . குறிப்­பாக மலை­யா­ளத்தில் மிகப் பிர­ப­ல­மாக இருந்­துள்ளார்.

 

எது எப்­ப­டியோ ஷியாமின் இசையில் வெளி­வந்­ததும் ஷைல­ஜாவை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­து­மான மழை­த­ருமோ என் மேகம் என்ற பாட்­டுக்கு நான் ரசிகன் . அந்த ஷியாம் என்­கிற தசா­முவேல் ஜோசப்­பு­டன்தான் இங்கே படத்தில் பாலு அமர்ந்­தி­ருக்­கிறார்.


சமீ­பத்தில் எனது முகநூல் நண்­பர்­களில் ஒரு­வ­ரான வயிலின் கலைஞர்  மணிபாரதி ஒரு­கா­லத்தில் வயி­லின்­க­லை­ஞர்­களின் திற­மையை அள­விடும் அள­வு­கோ­லாக இருந்த வான் நிலா.. நிலா.. அல்ல என்­ற­பா­டலை தான் வாசித்த லிங்­கையும் தொலைக்­காட்­சியில் அவரின் பேட்­டி­யொன்­றையும் என் பார்­வைக்கு அனுப்­பி­யி­ருந்தார்.


மணி­பா­ர­தியின் வயி­லினில் வான் நிலா.ா..நிலா.. அல்ல என்ற பாடலைக் கேட்டு அசந்துபோனேன்.


இந்தக் கலைஞருக்கும், இந்த வயிலின் இசையை திரைப்பாடலில் பாலுவுடன் சரிக்குச் சரியாக வாசித்த ஜோசப் கிருஷ்ணா மற்றும் டீ.என். மணி ஆகிய இருவருக்கும் ஒரு சபாஷ்.

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.