Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?
By General | 2014-04-26 19:25:34

-அ.கலைச்சென்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

திருச்சி லோக­நாதன் - தமிழ் திரையில் முதல் பின்­ன­ணிப்­பா­டகர். நட­ராஜன் என்­ப­வ­ரிடம் முறை­யாக சங்­கீதம் பயின்­றவர். ஆனால் சம்­பள விட­யத்தில் கறார் பேர்­வழி. இவ­ரைப்­பற்­றிய இரண்டு விட­யங்கள் சுவ­ராஸ்­ய­மா­னவை.


அவை :


1) நகைச்­சுவை நடிகர் தங்­க­வேலு வீட்டு நவ­ராத்­திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இர­சித்து தான் கையில் வைத்­தி­ருந்த வெள்ளி வெற்­றிலை பெட்­டியை திருச்சி லோக­நாதன்  பரி­ச­ளித்தார்.


2) சம்­பள விஷ­யத்தில் கறார் பேர்­வ­ழி, நடி­கர்­தி­லகம் சிவா­ஜி­க­ணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்­ப­டத்தில் இடம்­பெற்ற 8 பாடல்­க­ளையும் வாய்ப்பு வந்­த­போது ஒரு பாட­லுக்கு ரூபா 500 சம்­பளம் கேட்­டார், தயா­ரிப்­பா­ளர்கள் சம்­ப­ளத்தை குறைக்கச் சொல்ல மது­ரை­யி­லி­ருந்து புதுசா ஒருத்தர் வந்­தி­ருக்­கார், அவரை பாடச் சொல்­லுங்கள் என்று கூறி­விட்டார்.

 

திருச்சி லோக­நாதன் சுட்­டிக்­காட்­டிய அந்த மது­ரைக்­கா­ரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடி­னார், அவர் டி. எம். செளந்­த­ர­ராஜன். ( நன்றி விக்­கி­பி­டியா )
அவர் சுட்­டிக்­காட்­டிய டி.எம்.எஸ். இன் பிர­மாண்ட எழுச்சி அதற்­குப்பின் பல தசாப்­தங்­க­ளாக இசை­ஞா­னியின் வருகை வரை, மிகத்­தி­ற­மை­சா­லி­யான அவ­ரைத்­தாண்­டி, எவ­ராலும் முன்­னே­வர முடி­யாத ஒரு நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.


இந்தத் திருச்சி லோக­நா­த­னுக்கு மூன்று மகன்கள். ..அவர்­களும் பாட­கர்­களே. அவர்­களில் மூத்­த­வர்கள் இரு­வ­ரான ரி.எல். மகா­ரா­ஜ­னையும் அடுத்­த­வ­ரான தீபன் ச­க­ர­வர்த்­தி­யையும் ஓர­ள­வுக்கு இசை ரசி­கர்­க­ளுக்குத் தெரியும் ஆனால் மூன்­றா­ம­வ­ரான தியா­க­ராஜன் என்­றொ­ருவர் இருக்­கிறார்.. அவரைப் பற்றி எவ­ருக்­கா­வது தெரி­யுமா? அவர் பாடிய பாட­லொன்றைப் பற்­றித்­தெ­ரி­யுமா ? அதைப்­பற்­றிய பதி­வுதான் இது.


சில பாடல்கள் திடீ­ரென எதிர்­பா­ராத இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­டத்­தி­லி­ருந்து எதிர்­பா­ராத பாடகர் பாடி வெளி­வரும்.. சில நாட்­களில் மிக. மிகப்­பி­ர­ப­ல­மா­கும், ஆனால் அந்தப் பாடல் இடம்­பெற்ற படம் வெளி­வ­ரா­மலோ வெற்­றி­ய­டை­யா­மலோ போய் அல்­லது இசை அறிவில் வறட்­சி­யான இயக்­கு­னரின் பட­மாக்­கலால் அந்­தப்­பாடல் அநி­யா­ய­மாக இருந்த இடம் தெரி­யா­ம­லேயெ மறைந்­து­விடும். என் ­பார்­வையில் அப்­ப­டிப்­பட்ட பாடல்­களை சபிக்­கப்­பட்ட பாடல்­க­ளா­கவே பார்க்­கிறேன்.


ஒரு இசை­ய­மைப்­பா­ள­ரா­னவர் தான் ஆசை­யாக உரு­வாக்­கிய மெட்­டுக்குள் ரசித்து ரசித்துச் இசை அரெஞ்மெண்ட் செய்­வது ஒர் சிற்­பி­யா­னவன் தனது சிற்­பத்தை ரசித்து ரச்­சித்துச் செதுக்­கு­வ­தற்கு ஒப்­பா­னது.


அப்­படி ஆசை­யாக செதுக்­கிய ஒரு பாடல் அதன் தாற்­ப­ரியம் தெரி­யாத ஒரு இயக்­குநரால் பட­மாக்­கப்­பட்டு சிதைக்­கப்­ப­டு­வ­தால், அல்­லது பொருத்­த­மற்ற நடி­கர்­களின் தர­மற்ற நடிப்­பால், அல்­லது தர­மற்­ற, வெளி­வ­ராத படத்தில் இடம்­பெற்­றதால் குரங்குக் கை பூமா­லை­யா­கி­றது. அவற்றில் ஒரு பாடல்தான் அமுத மழை பொழியும் முழு நில­விலே..

 


 

80 களின் நடுப்­ப­கு­தியில் வெளி­வந்து பிர­ப­ல­மா­கி­யி­ருந்­தது இப்­பாடல். இந்­தப்­பா­டலை யார் பாடி­யது என்­பது நீண்­ட­கா­ல­மாக ஒரு புரி­யாத புதி­ரா­கவே இருந்­தது.


சமீ­பத்­தில்தான் இந்­தப்­பா­டலைப் பாடிய பாடகர் தியா­க­ராஜன் என்றும் இவர் திருச்சி லோக­நா­தனின் மகன்­களில் ஒருவர் என்றும் கேள்­விப்­பட்­டி­ருந்தேன்.


 இவரின் அண்­னன்­க­ளான ரீ.எல்.மக­ரா­ஜ­னும், தீபன் சக்­க­ர­வர்த்­தியும் ஏற்­க­னவே தமிழ்த் திரைப்­பா­டல்­க­ளைப்­பா­டி­யி­ருந்தும் அவர்­க­ளாலும் நிலை­யான ஒரு இடத்தைப் பிடிக்க முடி­ய­வில்லை. அதிலும் தீபன் சக்­க­ர­வர்த்தி திரு­மதி உமா ரமணன் அவர்­க­ளுடன் பாடிய செவ்­வந்­திப்­பூக்­களில் செய்த வீடு, மற்றும் பூங்­க­தவே தாழ் திற­வாய், சுசீலா அம்­மா­வுடன் பாடிய அரும்­பாகி மொட்­டாகி பூவாகி .. போன்ற பாடல்கள் அற்­பு­த­மான பாடல்கள். இருந்தும் அவ­ராலும் ஒரு இடத்­தைப்­பி­டிக்க முடி­ய­வில்லை. அதே­நி­லைதான் தம்­பிக்கும்.


இந்தப் பாடல் பட­மாக்­கப்­பட்­டி­ருக்­க­வில்­லை­யென்றே படு­கின்­றது. இதன் இசை­ய­மைப்­பாளர் யார் என்­பதும் தெரி­ய­வில்லை. எந்த நடி­கர்க்­காக உருவாக்கப்பட்டது என்பதும் புரியவில்லை.


சில காலங்களின் பின் அநியாயமாகக் காணாமலேயே போய்விட்டது.
எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் தூக்குத் தூக்கியில் சம்பளத்தில் கறாராக இருந்ததால் தமிழ் திரை இசைக்கு டி.எம்.எஸ். உருவாகுவதற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாக இருந்தார் திருச்சி லோகநாதன். இன்று அவரது மகன்கள் திறமைசாலிகளாக இருந்தும் எவ்வளவுதான் முயன்றாலும் அந்தச் சந்தர்ப்பம் நழுவிக் கொண்டே செல்கின்றது.

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.