Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி
By General | 2014-03-14 12:15:12

அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

ருநாள் வழ­மைபோல் இசை­ஞா­னியின் 80களின் பாட்டைப் போட்டுக் கேட்­ட­படி கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்தேன். அப்­போது கொடி­யிலே மல்­லி­கைப்பூ.. என்ற கட­லோரக் கவி­தைகள் பாடல் போய்க் கொண்­டி­ருந்­தது. அதில் இரண்­டா­வது Interlude இல் வய­லின்­களின் ஆதிக்­கத்தின் போது எதையோ தனித்­து­வ­மாக உணர்ந்தேன்.

 

இதுதான் செல்­லோ­வாக (Cello) இருக்­குமா என்ற கேள்வி எனக்குள் ஏற்­பட்­டது. ஆனால் செல்­லோவைப் பற்­றிய போதிய அறிவு எனக்­கில்லை. அதனால் ஒரு முடி­வுக்கு வர­மு­டி­ய­வில்லை.


எனவே என்­னுடன் பணி­பு­ரியும், மேற்­கத்­தைய இசை படித்த அவுஸ்­தி­ரே­லிய பெண் நண்பி ஒரு­வ­ருக்கு அதைப் போட்டுக் காட்­டி­ய­போது அந்த இசையைக் கேட்ட அவர் அது செல்லோ தான் என்றார். அது என்ன செல்லோ?


இந்த இசைக்­க­ரு­வியை கலை­ஞர்கள் சுமந்து செல்­வதை புகை­யி­ரத நிலை­யங்­க­ளிலும் விமான நிலை­யங்­க­ளிலும் பார்த்­தி­ருக்­கிறேன். பார்த்­து­விட்டு இது வயி­லினா அல்­லது கிட்­டாரா? பார்த்தால் இரண்­டும்­கெட்­டா­னாக வித்­தி­யா­ச­மாக இருக்­கி­றதே? ஒன்­றுமே புரி­ய­வில்­லையே என்று தலையை சொறி­வ­துண்டு, ஆனால் அதைப் பார்ப்­ப­தோடு சரி அதற்­குப்­பி­றகு அதை மறந்து விடுவேன். அந்த இசைக்­க­ரு­வியின் தாக்கம் ஒரு இசை ஆல்­பத்­திலோ சினி­மாவின் பின்­னணி இசை­யிலோ அல்­லது பாட்­டிலோ எவ்­வ­ளவு தூரம் இருக்­கின்­றது என்றோ அது எப்­ப­டி­யி­ருக்கும் என்றோ அறிய முயன்­ற­தில்லை.


ஆனால் சமீ­பத்தில் நிலமை மாறி­யது.   செல்லோ பற்றி எழு­து­வ­தற்கு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத சில பழைய சரி­யான தக­வல்­களை எப்­படி எடுக்­கலாம் என்று மண்­டையை குடைந்­து­கொண்­டி­ருந்த போது செல்லோ பற்றி சில முக்­கி­ய­மான தவல்­களைத் தந்து என்னை எழுதத் தூண்­டி­யவர் சேகர் ராமச்­சந்­திரா என்­கின்ற இசைக்­க­லைஞர்.

 

“பட்­டினப் பிர­வேசம்” என்ற படத்தின் “வான் நிலா.. நிலா ..அல்ல” என்ற பாட்டில் வயிலின் வாசித்­த­வர்­களின் திற­மையை பல்­லாண்­டு­கா­ல­மாக ரசிக்­கி­றோமே ஆனால் அவர்­களின் பெயர்கள் எங்­கேயும் பாராட்டப்படவில்லையே... தெரி­யாதே என்ற எனது ஆதங்­கத்தை நான் பதி­வி­லிட்ட மறு­க­ணமே அதை வாசித்­தது  ரி.என்.மணி, மற்றும்  ஜோசப் கிருஷ்ணா என்று பின்­னூட்­ட­மிட்டு, எத்­த­னையோ வரு­டங்­க­ளாக என்­னுள்ளும் என்­னைப்­போன்றே பல­ருள்ளும் இருந்த விடை­தெ­ரியாக் கேள்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்து மலை­யென உயர்ந்து நின்றார்  சேகர். ராமச்­சந்­திரா. அந்த பெரும் கலைஞர் இசைக்கும் இசைக்­க­ரு­விதான் செல்லோ.

 

FB/cellosekar

 

செல்­லோவின் பூர்­வீகம், அதன் உரு­வாக்கம் புலப்­படத் தொடங்கி கொஞ்சம் கொஞ்­ச­மாக அதைப்­பற்­றி­யி­ருந்த குழப்­பங்கள் பனிப்­புகார் போல மறையத் தொடங்­கின. ஆனால் தமிழ்த் திரை­யி­சையில், அதுவும் முக்­கி­ய­மாக இசை­ஞானி செல்­லோவை எவ்­வாறு பாவித்­துள்ளார் என்­பதை அனு­மா­னங்களின் அடிப்­ப­டையில் இல்­லாமல் உறு­தி­பட அறி­ய­வேண்­டு­மென முடி­வெ­டுத்­தி­ருந்தேன்.


எனது 'கட­லோ­ரக்­க­வி­தைகள்' படப் பாட்டின் அனு­ப­வத்­துக்குப் பின், சேக­ரி­டமே அவரின் செல்­லோ­வுடன் கூடிய இசைப்­ப­ய­ணத்தைப் பற்­றியும் அவர் வாசித்து அவரால் மறக்­க­மு­டி­யாத பாடல்­களைப் பற்­றியும் கேட்டால் என்­ன­ என்­றொரு எண்ணம் உதிக்­கவும் ஒரு குறுந்­த­வலை அனுப்­பி­யி­ருந்தேன்.. அதற்கு அவர் அனுப்­பி­யி­ருக்கும் பதில்தான் இந்தப் பதி­வுக்­கான ஆதா­ரமே. அவ­ரையும் இசை­ஞா­னி­யு­ட­னான அவரது பய­ணத்­தையும் பார்க்கு முன் அவரின் இசைக்­க­ரு­வி­யான செல்­லோ­வைப்­பற்றிப் பார்ப்போம்.


"செல்லோ” (Cello) மிகவும் பழை­மை­யான இசைக்­க­ருவி இது வய­லினைப் போன்­றது தனியே இசைக்­கவும் முடியும், ஏனைய இசைக்­க­ரு­வி­க­ளுடன் சேர்ந்தும் இசைக்­கலாம் இது 1600ஆம் ஆண்­ட­ளவில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இசைக்­க­ருவி. செல்லொ என்னும் சொல் ”விய­லான்­செல்­லலோ” என்னும் இத்­தா­லிய சொல்லில் இருந்து வந்­தது சிம்­பொனி ஆர்­கஸ்­ராவில் 8 ,12 பேர்­வரை செல்லோ வாசிப்­பார்கள்.

 

இந்த இசைக்­க­ரு­வியின் அடிப்­பக்கம் 2,3 மில்­லி­மீற்றர் மொத்­த­மா­னது அதுவே இதன் இசையின் தரத்தை நிர்­ண­யிக்­கி­றது. வயிலின் குடும்­பத்தில் Double bass இற்கு அடுத்த பெரிய இசைக்­க­ருவி இதுதான். Europian classical மிக முக்­கிய பங்கை வகிக்கும் இந்த இசைக்­க­ரு­விதான் மனிதக் குர­லுக்கு அதன் சுரு­திக்கு மிகவும் நெருக்­க­மா­ன­தாக கூறப்­ப­டு­கி­றது. வயிலின் குடும்­பத்தில் மிகக் குறைந்த ஸ்தாயியில் வாசிக்க வேண்­டு­மென்றால் இந்த இசைக் கரு­வி­யையே  Composer கள் உப­யோ­கிக்­கி­றார்கள். ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இசையின் நுணுக்­கங்­களைப் புரிந்து ரசிக்­காத எங்­களைப் போன்ற சாம­னி­யர்கள் இதி­லி­ருந்து வெளி­வரும் இசை­யையும் வயிலின் இசை என்றே பல்­லாண்­டு­க­ளாக நினைத்து ரசிக்­கிறோம்.


உலகின் இசை வர­லாற்றின் ஜாம்­ப­வான்­க­ளாக கரு­தப்­படும்  Johan bach  மற்றும் Mozart ( இவர்­களின் தீவிர ரசிகர் இசை­ஞானி, இவர்­களின் பாதிப்பை இசை­ஞா­னியின் இசையில் காணலாம் ) போன்­ற­வர்கள் தங்­களின் காலத்தால் அழி­யாத இசைத் தொகுப்­புக்­களில் இந்த வாத்­தி­யத்தை உப­யோ­கித்­துள்­ளார்கள்.


இதில் இன்­னு­மொரு முக்­கி­ய­மான விட­யத்தைக் குறிப்­பிட்டே ஆக­வேண்டும். இந்த இசை­க­ரு­வியை எல்­லோரும் புரிந்து கொள்­வ­தில்லை. அதனால் பயி­லு­வ­தில்லை. இதனைப் பயில்­ப­வர்கள் இசையில் அதீத ஈடு­பாடும் ஆர்­வமும் உள்­ள­வர்கள்.

 

இசையை ஆழ­மாக நேசிப்­ப­வர்கள். பொது­வாக எல்­லோரும் கிட்டார், கீபோர்ட், வயிலின் என்று பயில இவர்கள் மட்டும் செல்லோ பயி­ல்கி­றார்கள். இதன் கார­ண­மா­கவோ என்­னமோ அநே­க­மான ஐரோப்­பிய கலை­ஞர்கள் பய­ணிக்கும் போது தமது செல்­லோவை தம்­முடன் விமா­னத்­துக்குள் எடுத்துச் சென்று பய­ணிக்­கி­றார்கள். அதை விமா­னத்தின் Luggage பகு­திக்குள் போட அனு­ம­திப்­ப­தில்லை. தமது இருக்­கைக்கு அடுத்த இருக்­கையை செல்­லோ­வுக்­காக ஒதுக்­கு­வ­தற்­காக, பணம் செலுத்தி ரிக்கற் வாங்குவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. செல்லோ மீது அவ்வளவு செல்லம் அவர்களுக்கு.


செல்லோ வயிலினைப் போன்றதா  வயிலினிற்கும் இதற்குமுள்ள வேறுபாடென்ன? இவற்றை உபயோகிக்கும் விதம் உட்பட பல வித்தியாசங்கள் இருந்தாலும் முக்கியமாகச் சொல்வதானால் இந்த இசைக்கருவியால் வயிலினால் தொடமுடியாத கீழ் ஸ்தாயியை (Lower notes) சென்று தொட முடியும்.


இசைஞானி செல்லோவை தனது இசையில் பாவித்த விதத்தையும் அதில் இசைஞானியின் கற்பனைக்கு உயிர் கொடுத்த மதிப்புக்குரிய சேகர்  ராமச்சந்திரா யார் என்பதையும்  பார்ப்போம்.

 

இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வுக்கு “செல்லோ” கலை­ஞ­ராக பல வரு­டங்­க­ளாகப் பணி­பு­ரியும் சேகர் ராமச்­சந்­திரா, இந்­திய வயிலின் மேதை குன்­னக்­குடி வைத்­தி­ய­நா­தனின் மகன்.


இவர் 16.08.1958 இல் பிறந்­தவர். வயலின் மேதை­யான குன்­னக்­குடி வைத்தி­ய­நா­த­னுடன் சேர்ந்து, தனது 10 ஆவது வய­தி­லேயே வயிலின் இசைக்கத் தொடங்­கினார் சேகர்.


தனது 14ஆவது வயதில் தந்­தையின் ஒலிப்­ப­தி­வுக்­கூ­டத்தில் முதன் முதலில் செல்­லோவைப் பார்த்த சேக­ருக்கு அதன் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்­படத் தொடங்­கி­யது. அதை வாசிக்கத் தொடங்­கிய  சேகர் யாரி­டமும் பயி­ல­வில்லை. தானா­கவே கற்றுக் கொள்ளத் தொடங்­கினார். இதற்­கான முக்­கிய காரணம் அந்த நாட்­களில் தமி­ழ­கத்தில் “ செல்லோ “ பிர­ப­ல­மில்­லா­ததும் அதைப் பயி­ற்றுவிக்கும் ஆசி­ரி­யர்கள் இல்­லாத­து­மாகும்.


கால­வோட்­டத்தில் அதில் பாண்­டித்­தியம் பெற்ற சேகர், பண்டிட் ரவி­ஷங்கர், இசை­ஞானி, ஏ.ஆர்.ரஹ்மான் என இந்­தி­யாவின் இசை மேதை­க­ளுடன் பணி­யாற்றி வரு­கிறார்.


நாம் காலம் கால­மாக கேட்கும் இசை­ஞா­னியின் பாடல்­களில், வயலின் கூட்­ட­ணியின் பின்னால் வரும் உறு­தி­யான, ஆனால் குறைந்த ஸ்தாயி இசை , செல்லோ இசை­யாகும், அதே போல, இசை­ஞானி இசை­ய­மைத்த படங்­களின் பின்­ன­ணி­யி­சையில் உணர்ச்சி மிகு காட்­சி­களில், இந்த செல்லோ பெரும் பங்கை எடுத்துக் கொள்­கி­றது. படத்தில் இடம் பெறும் அந்தக் காட்சி, பார்ப்­போரை ஆளு­மை­செய்து, அவர்­களை படத்­துடன் ஒன்­றாக்கி விடு­வ­தற்குக் கார­ண­மாக பல்­லாண்­டு­க­ளாக இருந்து வரு­வ­துடன், இசையின் அடி­யி­லி­ருந்து வெளிக்­கி­ளம்பி, நாடி நரம்­பு­களை கலங்கச் செய்யும் பின்­னணி இசையும் சேகரின் இந்த செல்­லோவில் இருந்து உரு­வாகி வரு­வ­துதான்.


எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்த மட்டில், செல்­லோ­வா­னது, ஒரு பாட்­டிலோ அல்­லது பின்­ன­ணி­யி­சை­யிலோ இசை­யாக வெளிப்­ப­டும்­போது, அது­வரை ஏனைய இசைக்­கூட்­ட­ணியின் ஆக்­கி­ர­மிப்பில் மெய்­ம­றந்­தி­ருந்­த­வரின் மன நிலையில் ஒரு குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அந்தச் சூழ்­நி­லையைக் கன­மா­ன­தாக ஆக்­கு­கின்­றது.


பல வரு­டங்­க­ளாக இசை­ஞா­னியின் முத்­தான பாடல்­க­ளிலும், .பின்­ன­ணி­யி­சை­யிலும் முக்­கிய பங்­காற்றி வரும் இவரின் செல்லோ எம்மை என்­ன­வெல்லாம் செய்­துள்­ளது? இதற்கு உடனே என்னால் சொல்­லக்­கூ­டிய உதா­ரணம் “கட­லோரக் கவி­தைகள்” படத்தின் பல காட்­சி­களும் அதன் கிளை­மாக்ஸும்.


இந்தப் படத்தின் இறு­திக்­காட்­சி­கள்தான் படத்தின் வெற்­றிக்கு முக்­கிய பங்­க­ளித்­துள்­ளன என்றால் மிகை­யா­காது. அந்த இறு­திக்­காட்­சி­க­ளுக்கு ஜீவன் கொடுத்­தது இசை­ஞா­னியின் நாடி­ந­ரம்­பு­களை ஊட­றுத்துச் செல்லும் இசை.


இவற்றில் ரேகா சத்­ய­ராஜைப் பார்க்க வைத்­தி­ய­சா­லைக்குள் வரும்­போது வச­னங்­களே இல்­லாமல் பின்­ன­ணி­யி­சை­யா­லேயே அந்தக் காட்­சியை நகர்த்­தி­யி­ருப்பார் இசை­ஞானி. அதில் அவரின் இசைக் கற்­பனை உணர்வு பூர்­வ­மா­னது . அதற்­காக அவர் வய­லின்­க­ளையும் செல்­லோ­வையும் புல்­லாங்­கு­ழ­லையும் கீபோர்ட் மற்றும் டோலக்­கைத்தான் முக்­கிய வாத்­தி­யங்­க­ளாகப் பாவித்­துள்ளார்.


முக்­கி­ய­மாக ரேகா கடல் சங்கு ஒன்றைக் கொண்டு போய் சத்­தி­ய­ரா­ஜிற்கு அருகே வைக்கும் காட்­சியில் பின்­ன­ணி­யிசை உச்சக் கட்டம். இதில் ஒற்றை வயிலின் தனது சோகத்தை கத­ற­லாக வெளிப்­ப­டுத்­து­கி­றது அதற்குப் பக்­கத்­து­ணை­யாக அந்த ஒற்றை வயி­லினின் சோகத்தின் பெறு­மா­னத்தை எமக்கு உணரச் செய்­வது அதற்குப் பின்னால் சமாந்­த­ர­மாக போய்க்­கொண்­டி­ருக்கும் செல்லோ.


அந்தக் காட்­சியில் எதைச் சொல்­வது ரேகா ரயில் நிலையம் சென்­றதும் சத்­யராஜ் கோயில் மணியை அடிப்­ப­தற்­காக ஓடிச்­சென்று முடி­யாமல் மணிக்­க­யிற்­றிற்கு முன்னே விழுந்­து­வி­டுவார். அங்­கி­ருந்து தவண்டு..தவண்டு.. மணிக்­கயிற்றை நோக்கிப் போக எத்­த­னிப்பார்.


அதைப் பார்த்துக் கொண்­டி­ருக்கும் பார்­வை­யா­ளர்­க­ளான எங்­க­ளுக்கு எப்­ப­டி­யா­வது சத்­யராஜ் மணிக்­க­யிறை எட்டிப் பிடித்­து­விட வேண்­டுமே என்­ற­வொரு பச்­சாத்­தாபம், பதற்றம், ஆதங்கம். சோகம் ஏற்­ப­டு­கி­ற­தல்­லவா.. அதேதான்.... அந்த உணர்ச்சிக் கொந்­த­ளிப்பை உரு­வாக்­கு­வது இசை­ஞா­னியின் பின்­ன­ணி­யிசை அந்த நோட்சை அப்­ப­டியே வாசித்­தது சேகர் ராமச்­சந்­தி­ராவின் “செல்லோ.”

 

நான் கூற வருவதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமானால் உங்களின் கணினியின் அல்லது நீங்கள் இதைப்படித்துக் கொண்டிருக்கும் கைப்பேசியின் ஒலி அளவை முற்றாகக் குறைத்துவிட்டு அந்தக் காட்சியைப் பாருங்கள், ஏதோ ஒன்றைப்பார்ப்பதைப் போல ஏனோதானோ என்று பார்த்துக் கொண்டிருப்பீர்கள், பின்பு அதே காட்சியை ஒலியின் அழவை அதிகரித்துவிட்டு கேட்டுப்பாருங்கள். உங்களுக்குள் இரசாயன மாற்றம் பச்சாத்தாபம் ஒன்று மெது மெதுவாக உருவாகி காட்சியின் முடிவில் காதலர்களின் மகிழ்ச்சியில் பட்டாம் பூச்சியாகப் பறப்பீர்கள். அங்குதான்..அந்த இடத்தில்தான் ஒரு காட்சிக்கு பின்னணி இசை எவ்வளவு தூரம் உயிர் கொடுக்க முடியும் என்பதும், ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்கு பின்னணியமைக்க செல்லோ எவ்வளவு இன்றியமையாத வாத்தியம் என்ற உண்மையும் புரியும்.. இதோ..அந்த் அற்புதமான, பின்னணி இசையையும் அதில் செல்லோவின் பங்கையும் கேட்க இங்கே சொடுக்குங்கள்.. இதைக் கட்டாயம் நீங்கள் பார்த்துக் கேட்க வேண்டும்..

 

 

அதே போல , இதே படப் பாட­லான “கொடி­யிலே மல்­லிகைப் பூவில்” இசைக்­க­ரு­விகள் எல்­லாமே முக்­கி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவற்றில் இந்த “செல்லோ” வை எவ்­வ­ள­வு­தூரம் இசை­ஞானி முக்­கி­யப்­ப­டுத்­தி­யுள்ளார் என்­பதை அந்­தப் பாட்டின் இரண்­டா­வது இடை­யி­சையை உற்று பொறு­மை­யாகக் கேட்டுப் பாருங்கள். ஒன்­றித்துப் போவீர்கள். அந்தப் பாட்டில், மனதை முள்ளால் குத்தும் வலியை ஏற்­ப­டுத்தி படத்தின் நாயகன் நாய­கியின் வேத­னையை எமக்குள் செலுத்தி உண­ர­வைக்­கி­றது “செல்லோ” . நேற்று நான் கேட்ட அந்தப் பாட்டில், அது எனக்குள் ஏற்­ப­டுத்­திய பாதிப்­புத்தான் இன்று இந்தப் பதிவை எழுதத் தூண்­டி­யுள்­ளது.


அந்­தப்­பாட்டைக் கேட்­டு­விட்டு உடனே அதைப்­பற்றி எனக்குள் ஏற்­பட்ட கேள்­வி­யையும், அதைத்­தொ­டர்ந்து, சேகரின் இசைப்­ப­ய­ணத்தைப் பற்றி எனக்­கேற்­பட்ட கேள்­வி­க­ளையும் அவ­ரிடம் குறுந்­த­வ­லாக அனுப்பிக் கேட்­டி­ருந்தேன் , அதற்­கான பதிலை அவர் அனுப்­பி­யி­ருந்தார். அதை அப்­ப­டியே மீள் பதி­வி­லிட்டு அவ­ரையே பேசச் சொல்­கிறேன்..…


சேகர் ராமச்­சந்­திரா கூறு­கிறார் :


“என்­னு­டைய இசைப்­ப­யணம் தொடங்­கிய வருடம் 1976 என்று நினைக்­கிறன். முதன்­மு­த­லாக எனது தந்தை குன்­னக்­குடி வைத்தி­ய­நாதன் அவர்­க­ளுக்­குத்தான் சிறு­வ­னாக வாசித்தேன். பிறகு  ஜி.கே. வெங்­கடேஷ் அவர்­க­ளுக்கு வாசிக்­கும்­பொ­ழுது அதே இசைக்­குழு தான் இளை­ய­ராஜா அவர்­க­ளுக்கும் வாசித்­தது. . அதன் பல­னாக நானும் அங்கே வாசிக்கும் சந்­தர்ப்பம் கிடைத்­தது.

நான் வாசித்த முதல் படம் 'பொண்ணு ஊருக்கு புதுசு'. பிறகு தொடர்ச்­சி­யாக பல­வ­ரு­டங்கள் சென்­றன. நடுவில் பல வரு­டங்கள் தெலுங்கு, மலை­யாளம் மற்றும் கன்­னட படங்­க­ளுக்கு வாசிக்க நேர்ந்­தது.பிறகு மீண்டும் காதல் தேவதை படத்தில் இணைந்தேன். அன்றில் இருந்து இன்­று­வரை இனி­மை­யாக சென்­று­கொண்டு இருக்­கி­றது. நான் வாசித்த பல பாடல்­களில் சில­வற்றை இங்கே தொகுத்து வழங்­கு­கிறேன்.

1 காதல் ஓவியம் பாடும் காவியம்  பாட்டில் வரும் 3ஆவது பின்­னணி இசை.

2 ஆனந்த ராகம்  என்ற பாட்டு உமா­ர­மணன் பாடி­யது.


3 எங்­கெங்கோ செல்லும் என் எண்­ணங்கள்  என்ற பட்­டா­கத்தி பைரவன் படத்தில் வரும் பாட்டு.


4 புத்தம் புது காலை என்ற பாடலில் வரும் 3ஆவது பின்­னணி இசையில் வயலின் உடன் சேர்ந்து வரும்.


இது போல் நூற்­று­க்க­ணக்­கான பாடல்கள் மற்றும் நூற்­று­க்க­ணக்­கான படங்­களில் பின்­னணி இசையில் எனது செல்லோ சோலோ இளை­ய­ரா­ஜாவின் சிறந்த பின்­னணி இசையில் வெளி­வந்து இருக்­கி­றது.


நீங்கள் குறிப்­பிட்ட பாடலில் (கொடி­யிலே.. மல்­லிகைப் பூ. மணக்­குதே மானே) கூட அந்த ஓசை செல்­லோ­வி­னு­டை­ய­துதான். இதுதான் என்­னு­டைய கதை சுருக்கம்.
செல்லோ உரு­வாக்­கி­யவர் பெயர் Nicolo Amati  என்­பவர். செல்­லோவின் முழு பெயர் violoncello. இது strings family உடன் 16 ஆம் நூற்றாண்டு மத்தியில் சேர்க்கப்பட்டது. மற்ற விவரங்களை கூகுள் அல்லது என்னுடைய வெப்சைட் cellosekar.in   செல்லவும். மீண்டும் உங்களுடன் பிறகு பேசுகிறேன்.. நன்றி.”


எத்தனையோ வருடங்களாக நாங்கள் கேட்டு ரசித்த பாடல்களில் “ செல்லோ” வரும் இடங்களிலெல்லாம், அதைப்புரிந்து கொள்ளாமல் வயலினாக நினைத்துக் கொண்டு ஆஹா வயலின் பிரமாதமாக இருக்கின்றது, என்றெண்ணி அந்த இசையை வாசித்தவரை விடுத்து வேறொருவரை மனதாரப் பாராட்டியுள்ளோம். இனியாவது இந்தப் பதிவிற்குப் பிறகாவது “ செல்லோ “ என்ற பாரம்பரியம் மிகுந்த இசைக்கருவியையும், அதை வாசிக்கும் பிறவிக் கலைஞனையும் வாழ்த்திக் கௌரவிப்போம்.

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.