Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசைஞானியின் இசை தளபதி சதா
By General | 2014-02-28 13:58:41

- அ.கலைச்செல்வன் சிட்னி அவுஸ்திரேலியா

 

 

'என் இனிய பொன் நிலாவே...'


'ராஜ ராஜ சோழன் நான்...'


'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..'


'பூங்காற்று .. புதிதானது..'


'கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..'


'வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட..'


'அந்த நாள் ஞாபகம்..'


'எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..'


'கண்ணம்மா.. காதலெனும் கவிதை சொல்லடி..'

 


- இப்படி எத்தனையோ இனிமையான மேற்கத்தேய இசையின் ஆளுமையுடன் கூடிய பின்னணி இசையுடன் பாலு மகேந்திராவுக்காக இசைஞானி அற்புதமாக அமைத்த பாடல்களில் இடம்பெற்ற கிட்டாரில் தனது கைவண்ணத்தைக் காட்டியது. இந்தப்படத்தில் அவருக்கு அருகில் தோழமையுடன் நிற்கும் இசைஞானியின் இசைத்தளபதிகளில் ஒருவரும் அவரின் ஆஸ்தான கிட்டார் கலைஞருமான மதிப்புக்குரிய சதாசுதர்சனம் சதா.

 

 

நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியின் இசையமைப்பாளரான காலம் சென்ற தசுதர்சனத்தின் புதல்வரான இவரின் இசைஞானியுடனான பயணமானது அப்பழுக்கில்லாதது.

 

ஒரு தோழனாக, இசைத்தளபதியாக, சகோதரனாக. உறவினனாக . ரசிகனாக, மொத்தத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்ட ஒருவனாக அவருடன் தோளோடு தோளாக நிற்கும் கலைஞன். தன்னிடம் பயிலும் மாணவர்களையே 'சார்' என்று அழைக்கும் இந்தப் பெரிய மனிதர் மிகச் சிறந்த மனிதர். என்று அவருடன் பழகிய ஒருவரல்ல இருவரல்ல பலர் சொல்லக் கேட்டு வியந்திருக்கிறேன்.

 


இசைஞானி மேற்கத்தேய இசையையும் கிட்டாரையும் பயின்ற தன்ராஜ் மாஸ்டரிடம் அவர் கூடவே பயிலச் சென்றவர் இந்தக் கலைஞர்.

 

                                                                                                    FB/Sadasudarsanam Sada
 

இசைஞானி படங்களுக்கு அமைத்த பின்னணியிசைகளில் உள்ளத்தை வருடும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தனது கிட்டார் மூலம் கொட்டிய மேதை.


மௌனராகத்தில் இவர் வாசித்த பின்னணியிசை இன்றுவரை  மூளைக்குள் புகுந்து குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கிறது. அசைக்கவே முடியவில்லை.

 

பாலு மகேந்திரா என்ற இசை ரசிகன் மறைந்து போன இந்த வேளையில் அவருக்காக,  அவரின் கற்பனையை புரிந்து கொண்டு இயற்கையை இன்னும் இன்னும் தனது கிட்டாரால் அழகாக்கிய  சதா. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோருக்கு இந்தக் கடைக் கோடி ரசிகனால் நன்றி என்ற சொல்லைத்தவிர, வேறு என்னத்தைத்தான் தர முடியும்?

 

 

 

மேலும் சில நான் ரசித்த பாடலும் இசையும் கட்டுரைகள்:

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
krish2014-09-24 16:34:53
அருமையான கட்டுரை sir shall we use this information for some other friendly sites for knowledge transfer.
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.