Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்
By General | 2014-02-21 12:30:22

அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா


விஜி மனுவல் –  தமிழ்த் திரை­யி­சையின் வர­லாற்றில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பதி­யப்­பட்­டு­விட்ட பெயர். எங்­களின் மூச்­சோடும் உயி­ரோடும் கலந்­து­விட்ட இசை­ஞானி என்ற மாமே­தையின் இசைக்­கற்­ப­னைக்கு உயிர்­கொ­டுத்த ­வர்­களில் முக்­கி­ய­மா­னவர். இசை­ஞா­னி­யுடன் பல­த­சாப்­த­மாக அல்லும் பகலும் கூடவே தோளோடு தோள் கொடுத்து வரும் இசைத்­த­ள­ப­தி­களில் கட்­ட­ளைத்­ த­ள­பதி.

 

இசைஞானியுடன் ஒலிப்பதிவுக் கூடத்தில் விஜி மனுவல்

 

 

இசை­ஞா­னியின் வெற்­றிக்குப் பின்னால் இருக்கும் இசைக்­க­லை­ஞர்கள் பலர். அவர்­களில் கீபோர்ட் வாசிக்கும் கலை­ஞர்தான் இந்த விஜி மனுவல். 1970 களில் இருந்தே இசை­ஞா­னியின் உண்மைத் தள­பதி.

 


பியா­னோ­விலும் சிறந்த விற்­பன்­ன­ரான இவரின் கைவண்­ணத்தில் உரு­வா­ன­துதான் "தர்­மத்தின் தலைவன் படத்தில் இடம்பெற்ற பாலு பாடிய 'தென்­ம­துரை வைகை­நதி தினம்­பாடும் தமிழ்ப் பாட்டு" என்ற ரஜி­னிகாந்த் நடித்துப் பெய­ரெ­டுத்த பாட்டின் ஆரம்ப இசை­யாக வரும் பியா­னோவும் பாட்­டுடன் வரும் பியானோ இசையும்.


'ஜானி, 'மௌன­ராகம்' உட்­பட ராஜாவின் காலத்தால் அழிக்க முடி­யாத பல படங்­களின் பின்­னணி இசையின் நுண்­ணிய உணர்வு வெளிப்­பா­டு­க­ளிற்குப் பின்னால் இருந்­தது இந்தக் கலை­ஞனின் கை விரல்­கள்தான்.

 


இவரின் தந்­தையும் ஒரு மிகச்­சி­றந்த பியானோ கலைஞர். தந்தை 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்­ப­தற்கு உதா­ர­ண­மா­கத்­தி­கழ்­பவர் விஜி மனுவல்.

 


தனது தந்­தையின் இழப்பு ஏற்­ப­டுத்­திய விரக்­தியால் சினிமா இசைப்­பக்­கமே திரும்பிப் பார்க்க விரும்­பாமல் இருந்த திலீப் என்­கின்ற தற்­போ­தைய ஏ.ஆர். ரஹ்­மானை 1987 இல் தனக்கு உத­வி­யா­ள­ராக்­கினார் விஜி மனுவல். அதன் கார­ண­மா­கத்­தான், ராஜாவின் புன்­னகை மன்­னனில் இசை­ஞா­னிக்­காக கமல் ரேவ­தியின் அற்­பு­த­மான டான்ஸ் தீமுக்கும் அந்தப் படத்தில் இடம்­பெற்ற இலத்­தி­ர­னியல் சம்­பந்­தப்­பட்ட பாட்­டுக்கும் கீபோர்ட்டை வாசிக்கும் சந்­தர்ப்பம் ரஹ்­மா­னுக்குக் கிடைத்­தது என அறி­கிறேன்.. இது எவ்­வ­ளவு தூரம் உண்­மை­யென்­பதை காலம்தான் தெரி­விக்க வேண்டும்.

 

யுவன் ஷங்கர் ராஜா இசை­ய­மைக்கத் தொடங்­கிய ஆரம்­ப­கா­லத்தில் தனுஷின் துள்­ளு­வதோ இள­மைக்கு இசை­ய­மைக்க பக்கத் துணை­யாக இருந்­தவர் விஜி மனுவல்.


நான் அறிந்­த­வ­ரையில் இந்­தி­யாவின் சிறந்த கீபோர்ட் கலை­ஞர்­களில் ஒருவர் விஜி மனுவல் என்­பது புல­னா­கி­றது. ஆனால் இவரின் இன்­னொரு திறமை பேஸ் கிட்டார். இது பல­ருக்குத் தெரி­யாத விடயம். அதை நிரூபித்த பாட்டு தமிழ்த்­தி­ரை­யி­சையின் முதல் ஸ்டீரியோப் படப் பாட்­டுக்­களில் ஒன்­றான டார்லிங்..டார்லிங்..டார்லிங்.. என்ற 'ப்ரியா' படப் பாட்டில் 'ஐய் லவ் யூ' என்­ப­தற்கு முன் வரும் கிட்­டாரின் 'டீய்ங்' என்ற இசை­யாகும்.


பொது­வாக இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­விடம் இசைக்­க­ரு­விகள் வாசிப்­ப­வர்கள் தத்தம் வாத்­தி­யத்தில் மேதை­க­ளாக இருந்தால் மட்­டுமே அவ­ரிடம் வாசிக்க முடியும். அப்­ப­டிப்­பட்ட ஒரு மேதைதான் விஜி மனுவல்.


அண்­மையில் எதேச்­சை­யாக விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்தேன். ஜானகி அம்மா வந்­தி­ருந்து சிறப்­பித்த அந்த நிகழ்ச்சி மிகவும் தர­மாக இருந்­தது. அதில் ஒரு போட்­டி­யாளர் 'உத­ய­கீதம்' படத்தில் இசை­ஞா­னியின் இசையில் பாலுவும் ஜானகி அம்­மாவும் சேர்ந்து பாடிய அரு­மை­யான மெல­டி­யான 'பாடு நிலாவே … தேன் கவிதை .. பூ மலரே..' என்ற மு. மேத்­தாவின் பாடலைப் பாடி முடித்து ஜானகி அம்­மாவின் பாராட்டைப் பெற்­றதும் நடு­வர்­களில் ஒரு­வ­ரான ஸ்ரீனி­வாஸ், இந்தப் பாட்­டுக்கு கீ போர்ட் வாசித்­தவர் விஜி மனுவல் என்­றும், அவர்  உடல் நிலை சரி­யில்­லாமல் இருக்கின்றார் என கூறினார்.

 

கடந்த 3 தசாப்தமாக எங்களைத் தாலாட்டிச் சீராட்டிய ராஜாவின் இசைக் கற்பனைக்கு உயிர் கொடுத்த இசை மேதைகளில் ஒருவரான விஜி மனுவல் மீண்டும் வரவேண்டும். இன்னும் பல சுகமான மெலடிகளை ராஜாவுடன் சேர்ந்து எங்களுக்காகப் படைக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

 

ஏ.ஆர்.ரஹ்மானுடன் விஜி மனுவல்

இங்கே நான் பதிந்துள்ள புகைப்படம் 80 களில் எடுக்கப்பட்டிருக்கின்றது.  இதில்  விஜி மனுவலுக்குப் பின், நீல நிற ஷே ர்ட்டுடன் இளைஞன் ஒருவர் அமர்ந்திருக்கிறாரல்லவா? அவரை அப்போது எல்லோரும் 'திலீப் ' என்றே அழைப்பார்கள். அவர்தான் இப்போதைய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் புகைப்படத்தை எனக்குத் தந்துதவியவர் அருமை நண்பர்எடி டினேஷ். அவருக்கு அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

இன்று இந்த மாபெரும் கலைஞன் விபத்தில் அகப்பட்டு மீண்டு வரும் வேளையில் அவருக்கு உறுதுணையாக நல்ல நண்பனாக இருப்பவரும் இதே எடி டினேஷ் தான். விஜி மனுவலைப்பற்றி இன்னும் ..இன்னும் எழுதவுள்ளேன்.
 

 

மேலும் சில நான் ரசித்த பாடலும் இசையும் கட்டுரைகள்:

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.