Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விழி­யிலே மலர்ந்­தது... உயி­ரிலே கலந்­தது -
By General | 2014-02-14 13:34:49

- அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

கிறங்க வைக்கும் புல்­லாங்­குழல், .. ஒரு பாட்­டுக்குள் மேற்­கத்­தேய, வட இந்­திய, கிரா­மிய தாள­வாத்­தி­யங்கள் ஆனால் முரண்­பாடு இல்லை - அதுதான் ராஜா.


"விழி­யிலே மலர்ந்­தது உயி­ரிலே கலந்­தது...
பெண்­ணெனும் பொன்­ன­ழகே அடடா எங்­கெங்கும் உன் அழகே...
அடடா எங்­கெங்கும் உன் அழகே..."


இந்­தப்­பாட்டை இன்று கேட்டேன்... திரும்பத் திரும்பக் கேட்டேன்... பல­வி­ட­யங்கள் ஆச்­ச­ரியப்படவும் ஒரே­யொரு விடயம் மட்டும் நெரு­டவும் செய்­தன.

 

இந்­தப்­பா­டலின் பின்­ன­ணி­யி­சையும், அதற்குள் வயிலின் புல்­லாங்­கு­ழலின் வேலைப்­பா­டு­களும், தாலக் கட்டும், அதற்குள் மேலைத்­தேய வட இந்­திய கிரா­மிய வாத்­தி­யங்­களின் ஒருங்­க­மைப்பும் என்னை, மதி மயங்க வைக்­கின்­றன.


பொது­வாக ராஜாவின் பாடல்­களில் முக்­கிய திருப்­பங்­க­ளையும் இசைப்­பு­திர்­க­ளையும் போட்டுக் கிறங்க வைப்­பது புல்­லாங்­குழல்.

 

புல்­லாங்­கு­ழலை, ஒன்றில் பல்­ல­வி­யி­னதோ, பாட­லி­னதோ, சார­ணத்­தி­னதோ ஆரம்பம் அல்­லது முடிவில் பாவிப்­ப­துதான் அநே­க­மான இந்­திய இசையமைப்பாளர்களின் வழக்கம். ஆனால் ராஜா ஒரு படி மேலேபோய் இன்­னொன்­றையும் புல்­லாங்­கு­ழலால் அசத்­த­லாகச் செய்து வந்­துள்ளார்.

 

இசை­ய­மைப்­பா­ள­ரா­னவர் ஒரு பின்­ன­ணி­யி­சையை எழு­தும்­போது அதில் பல வாத்­தி­யங்கள் உள்­ள­டக்கப் பட­வேண்­டி­யி­ருக்கும். ஒரு வாத்­தியம் இசைத்து முடித்­ததும் அது விட்ட இடத்திலி­ருந்து அடுத்த வாத்­தியம் தொடரும் என்­பது தெரிந்­ததே. அப்­படி ஒன்­றன்பின் ஒன்­றாக இரண்டு வாத்­தி­யங்கள் சேரு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் அவற்றின் இயங்குதிற­னுக்­கேற்ப அவற்றின் ஸ்தாயியில் சிறு மாற்­றங்கள் ஏற்­பட வாய்ப்­புண்டு. அந்­த­மாற்றம் இசையைக் கேட்டு ரசித்­துக்­கொண்­டி­ருப்­ப­வரின் மன­நி­லையில் தொய்வை ஏற்­ப­டுத்தி ரசிப்பில் பாதிப்பை ஏற்­ப­டுத்த வல்­லது. இந்தத் தொய்வை 80 களில் ரஜி­னியின் பல ஹிட் படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த இசை­ய­மைப்­பாளர் ஒரு­வரின் பல பாடல்­களில் நான் உணர்­கிறேன்.

 


இப்­படி நான் குறிப்­பி­டு­வதை ஏதோ ராஜாவை உயர்த்­து­வ­தற்­காக மற்­ற­வரை குறைத்து மதிப்­ப­தாக யாரும் தய­வு­செய்து தப்­பாக எண்­ண­வேண்டாம், ஒர­ள­வுக்­கா­வது பாடல்­களை உள்ளே போய் ரசிப்­ப­வர்­களால் நான் கூறு­வதைப் புரிந்துகொள்ள முடியும். .

 

குறிப்­பிட்ட அந்த இசை­ய­மைப்­பா­ளரின் பல பாடல்கள் மெட்­டைப்­பொ­றுத்­த­வரை இனி­மை­யா­ன­தாக இருந்­தி­ருக்­கின்­றன. ஆனால் அந்­தப்­பாடல் வரி­களை சுமந்து செல்லும் பின்­ன­ணி­யி­சை­களும் இடை­யி­சையும் ஒன்­றுடன் ஒன்று ஒவ்­வாது முட்டி மோதி நாரா­ச­மாக ஒலிப்­பதை அனேக பாடல்­களில் கேட்­கலாம். அவரின் பல பாடல்­களில் தேவை­யில்­லாமல் ட்ரம்­பட்டை (Trumpet) முன்­னி­றுத்­தி­யி­ருப்பார் அந்த இசை­ய­மைப்­பாளர். விளைவு ட்ரம்­பட்­டிற்கு அடுத்து வரும் இசைக்­க­ரு­வியின் இசை அடி­பட்­டுபோய் இரண்டு இசைக்­க­ரு­வி­க­ளுக்கும் இடை­யி­லான ஒவ்­வாமை அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்­டி­ருப்­ப­வரின் மன­நி­லையில், மன உணர்­வில ஒரு முறிவை ஏற்­ப­டுத்­து­வதை பல பாடல்­களில் கேட்டு அசௌ­க­ரியப் பட்­டி­ருக்­கின்றேன்.

 


ஆனால் ராஜா இதில் கில்­லாடி. அவரின் பெரும்­பா­ன­மை­யான பாடல்­களில் இப்­ப­டி­யான முறி­வு­கள வராமல் மிகப் புத்­தி­சா­லித்­த­ன­மாகப் பார்த்­துக்­கொண்டார்.

 

அதைத்தான் ஞானம் என்­கி­றார்கள் என்­பது என் எண்ணம். அவரின் அந்த இசை­ஞா­னத்தை செய­லாக்­கி­யவர் ஒருவர். அவர் நெப்­போ­லியன் செல்வராஜ் ( இந்­தப்­பாட்டு வெளி­வந்த காலத்தில் புல்­லங்­குழல் வாசித்­தவர் குண­சிங்கா, சுதா­கரா அல்­லது நெப்­போ­லியனா என்­பதை என்னால் தெளி­வு­ப­டுத்த முடி­ய­வில்லை) . இரு இசைக்­க­ரு­வி­க­ளுக்­கி­டையில் முறி­வுகள், முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதைத் தவிர்த்து பால­மாக அதி­க­ளவில் வெற்­றி­க­ர­மாகப் பாவிக்கப் பட்­டது நெப்­போ­லியனின் புல்­லாங்­குழல்.  அவ­ருக்கு முன்னர் சுதாகர்  அந்தப் பணியை செய்­துள்ள போதிலும் பெரும்­பான்­மை­யான பாடல்­களில் பங்­காற்­றி­யி­ருப்­பவர் நெப்­போ­லியன். ஆனால், இந்தப் பாட்டில் புல்­லாங்­குழல் வித்­தி­யா­ச­மான இடத்தில் பாவிக்­கப்­பட்­டுள்­ளது.அதுதான் இந்தப் பாட்டின் இசை அரேஞ்­மெண்டின் மேதா­வித்­தன்மை.

 

 


இந்­தப்­பாட்டில் பல்­லவி 3 தட­வைகள் பாலுவால் பாடப்­ப­டு­கின்­றது. அதா­வது, பாட்டின் ஆரம்­பத்தில் ஒரு­த­ட­வையும் முத­லா­வது சர­ணத்­துக்குப் பின் ஒரு­த­ட­வையும் இரண்­டா­வது சர­ணத்­துக்குப் பின் ஒரு­த­ட­வை­யு­மாக 3 தடவை பாடப்­ப­டு­கின்­றது. இது வழ­மை­யாக எல்­லாப்­பா­டல்­களின் அமைப்பை ஒத்­தது ஆனால் அந்த 3 பல்­ல­வி­க­ளிலும் சிறு வித்­தி­யாசம் ஒன்று ராஜாவால் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

அதா­வது பல்­ல­வியின் பின்­ன­ணி­யி­சையில் பாவிக்­கப்­பட்ட வாத்­தி­யத்தை வித்­தி­யா­சப்­ப­டுத்தி இரண்டு வித­மான அழகை பல்­ல­வி­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்ளார் அவர். முத­லா­வது பல்­ல­வியில் புல்­லாங்­கு­ழலை எதிர்­பார்க்க முடி­யாத இடத்தில் பாவித்­துள்ள ராஜா, இரண்­டா­வது மற்றும் மூன்­றா­வது பல்­ல­வியில் வயிலின் கூட்­ட­ணியை அழ­காக எதிர்­பா­ராத இடத்தில் பாவித்­துள்ளார்.

 


இதன் முத­லா­வது பல்­ல­வியில் புல்­லாங்­கு­ழலை எதிர்­பா­ராத இடத்தில் எதிர்­பாராத் நேரத்தில் பாவித்து ஒரு வித்­தி­யா­ச­மான இனி­மையை பாட­லுக்குக் கொடுத்­துள்ளார். அது என்ன வித்­தி­யாசம்?

 


இந்­தப்­பாட்டை பாலு விழி­யிலே மலர்ந்­தது உயி­ரிலே கலந்­தது.. என்று பாடி முடித்து அடுத்த வரி­யான பெண்­ணென்னும் ..என்ற வரி­களைத் தொடங்கி இரண்­டா­வது எழுத்­தான பெ "ண்" ணென்னும் என்று பாடத் தொடங்கும் போது அந்த "ண் " ணை உச்­ச­ரிக்­கையில் புல்­லாங்­கு­ழலை சேர்த்­துள்ளார் அல்­லது அரேஞ் பண்­ணி­யுள்ளார் இசை­ஞானி. இங்கே சொடுக்கி பாட்டைக் கேளுங்கள் புரியும். 

 

 

 

அந்த இடத்தில் தா நா நா நா .. என்று குபீ­ரெனக் கிளம்பி மென்­மை­யாக அடங்­கு­கின்­றது புல்­லாங்­குழல்.

 


இதில் நான் ஆச்­ச­ரி­யப்­படும் விடயம் என்­ன­வென்றால் இந்த இடம் பாடலின் தொடக்­கமோ முடிவோ அல்­லது இரண்டு முரண்­பட்ட தன்­மை­களை இணைக்கும் இடமோ அல்ல... இது யாருமே எதிர்­பார்க்க முடி­யாத இடம்.. இந்த இடத்தில் புல்­லாங்­கு­ழலை சேர்க்க முடியும் என்று எந்­த­வி­தத்­திலும் சாதா­ரண மனித மூளையால் கற்­பனை பண்ண முடி­யுமா ? . .. ஆனால் அந்தப் பண்­ணை­பு­ரத்து பாம­ர­ருக்கு மட்டும் புரிந்­துள்­ள­தா­னது அசா­தா­ரணம்.. இப்­ப­டிப்­பட்ட அதி­ச­ய­மான கற்­ப­னை­க­ளால்தான் அவர் வேறு­ப­டு­கிறார்.

 


அடுத்து இரண்­டா­வது மற்றும் மூன்­றா­வது பல்­ல­வி­களைக் கேட்டுப் பாருங்கள். அங்கே புல்­லாங்­குழல் இருக்­காது அதற்குப் பதில் பின்­ன­ணியில் எதிர்­பா­ராத இடத்தில் எதிர்­பா­ராத நேரத்தில் வயி­லின்­களின் ஆர்ப்­ப­ரிப்பு எழுந்து அடங்கும்.
பாலு விழி­யிலே.. மலர்ந்­தது.. என்று முடித்­ததும் முடிக்­கா­த­து­மாக தன ந தன்னா.. என்று ஓங்கி எழுந்து ஆர்ப்­ப­ரித்து அடங்கும் வயலின்­களின் கூட்­டணி தொடர்ந்து , உயி­ரிலே கலந்­தது என்று அடுத்த வார்த்­தை­களை பாலு முடித்­ததும் முடிக்­கா­த­து­மாக மீண்டும் தன நா தன்னா.. என்று ஆர்ப்­ப­ரித்து அடங்­கு­கின்­றன.

 

ஒரு மெல­டிப்­பாட்­டுக்கு அந்த இடத்தில் வய­லின்கள் திமி­ராக எழுந்து அடங்கி அழகு கொடுப்­பதும் புது­மைதான். இது ராஜா­வுக்கு மேற்­கத்­தேய கிளா­சிக்கல் இசையில் இருக்கும் அதீத ஆர்­வத்தின் வெளிப்­பா­டாக இருந்­தி­ருக்­கலாம் என்­பதும் புது­மை­களை புகுத்­து­வதில் அப்­போ­தைய இளம் ராஜா­வுக்கு இருந்த வேட்­கை­யையும் எனக்குப் புலப்படுத்துகின்றது.

 


தாளக்கட்டைப் பாருங்கள்.. அதிலும் வித்தியாசங்கள். ஆரம்பத் தில் மேலைத்தேய சாயலாகவும் இடையில் கஸல் பாணி தப்லாவும் இறுதிச் சரணத்தில் கிராமிய இசையான உருமி போன்ற ஒன்றையும் கலந்து தாளக்கட்டை அமைத்துள்ளார்.

 

ஆனால் எவராவது ஒரேபாட்டில் மேலைத்தேய , வட இந்திய , எங்களின் பாரம்பரிய வாத்தியங்களின் கூட்டை சரி சமமாக ராஜா பாவித்துள்ள வித்தகத்தை கவனித்துள்ளோமா? அந்த முரண்பாடான வாத்தியங்கள் இசைக்கும் இசை ஒன்றுடன் ஒன்று முரண்படாமல் ஒவ்வொன்றுடன் தழுவிச் செல்வதை உணருகிறோமா ? இல்லை.. இல்லவேயில்லை . . இப்படியாக ஒரு தமிழனிற்கு இசையில் இருக்கும் அதி உச்சப் புலமையைப் பார்த்து நான் பிரமிக்கிறேன்.. பெருமைப் படுகின்றேன்.

 

மேலும் சில நான் ரசித்த பாடலும் இசையும் கட்டுரைகள்:

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு
 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
S.Kantharuban2014-02-21 13:23:19
அருமையான, நுட்பமான விமர்சனக் கட்டுரை
0
1
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.