Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசைஞானி : Counterpoint மூலம் Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)
By General | 2014-01-17 21:20:22

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

(கடந்த வாரத் தொடர்ச்சி)


அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர் 'சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்' என்ற பாடலைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாட்டை நிறுத்தச் சொன்ன எஸ்.பி. பாலசுப்ரமணியம்.  அந்தப் பாட்டின் உள்ளே இருக்கும் சூட்சுமம் என்ன ,  இசைஞானி எப்படி விசேட விதமாக இந்தப் பாட்டை கொம்போஸ் பண்ணியிருக்கிறார் என்பதை சிலாகித்துக் கூறினார். அந்தப் பாட்டின் விசேட தன்மை பற்றி பாலு கூறிய விடயம் இதுதான்:-

 

"அனேகமான பாட்டுக்களில் சந்தத்துக்கு ஜால்ரா போட்டபடி அதனுடன் கூடவே பின்னணி இசை பயணிக்கும் ஆனால் இந்தப்பாட்டின் ஆரம்ப இசையிலேயே மூன்று நான்கு வாத்தியங்கள் வெவ்வேறு இசை ராஜாங்கங்களைச் செய்கின்றன. பின்பு அவை எல்லாம் ஒன்றாகி ரிதத்துடன் போகின்றன. ஆனால் தங்களின் ஆரம்பத் தனித்தன்மையில் மாற்றமில்லாமல் போகின்றன. இருந்த போதிலும் அவை நான்கையும் ஒன்றாக கேட்கும் போது வேற்றுமையில் ஒற்றுமையாக ஒரு இனிய இசை அனுபவத்தைக் கொடுக்கின்றன.. ."

 

இப்படி சாரல் படக் கூறிவிட்டு  'அந்தப் பாட்டின் முதல் இசையில் வாசிக்கப் பட்ட ஒவ்வொரு இசைக்கருவிகளையும் தனியாக வாசிக்கச் சொன்னார் பாலு. அதன் பிறகு அவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாசிக்கச் சொன்னார்.

 

அடடா.. அவை எல்லாம் சேர்ந்து ஒன்றாக வெளிவந்த போது 'சங்கீத மேகத்தின்' பிறீலூட்டாக (Prelude)) கனகச்சிதமாக இருந்தன. "இதுதான் ராஜா" என்றார் பாலு.

 

அதன் பின் போட்டியாளர் பாடத்தொடங்கி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ராஜாவின் அந்த இசைக்கு என்ன பெயர் போன்ற விளக்கங்களை பாலு தந்ததாக நினைவு இல்லை. ஆனால் எனக்குள்ளே இது என்ன மெஜிக் என்பதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆவல்.. ஏன் வெறியே ஏற்பட்டது. தேடினேன். தேடினேன்.. தேடிக்கொண்டே இருந்தேன்.

 

இசையில் பாண்டித்தியம் இல்லாத என்னால் ஊகத்தின் அடிப்படையில் கண்டுபிடித்துப் படிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 1970 களில் இசைஞானி கொடுத்த பேட்டியொன்றை அதிர்ஷ்ட வசமாக சமீபத்தில் பத்திரிகையில் படித்தேன். என்னுடைய பல வருடக் கேள்விக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போனேன்.

 

அந்தப் பேட்டியில் :
'மேற்கத்தைய இசை நுணுக்கம் ஒன்றை தான் தமிழிசையில் பயன்படுத்த முயல்வதாகவும், பல வாத்தியங்களின் வேற்றுமையில் இனிமையைக் கொண்டுவரும் உத்தியான  Counterpoint எனும் அந்த நுணுக்கத்தைப் பற்றி பல வாத்தியக் காரர்களுக்கும் இயக்குனர்களுக்கும் விளக்கமில்லாமல் இருப்பதாகவும். இப்படியானவற்றை அறிமுகப் படுத்த திறமையான இயக்குனர்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

அப்படியிருந்தும் தனது இரண்டாவது படமான பாலூட்டி வளர்த்த கிளியில் இடம்பெற்ற 'நான்..பேச வந்தேன் சொல்லத்தா..ன் ஓர் வார்த்தயில்லை..' என்ர பாட்டில் ஹம்மிங்கிலும் ஆரம்ப இசையிலும் அதைப் பரீட்சித்துப்பார்த்துள்ளதாகவும் கூறியிருந்ததைப் படித்தபோது..ஆஹா சந்தோஷம்... அப்பாடா புரிந்து கொண்டேன்.

 

1985 களில் எனக்குள் ஏற்பட்ட கேள்விக்கு விடை என்னவென்று புரிந்து கொண்டு அதற்கான விளக்கத்தை பெறுவதற்காக  Counterpoint இனைப் பற்றித் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். ஓரளவுக்கு அந்த இசை நுணுக்கத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

 

Counterpoint   என்றால் என்ன. ?? அதன் பிதாமகன் என்றால் யாரைக் குறிப்பிடலாம்??

The word counterpoint comes from the Latin punctus contra punctum, which means "note against note". That's actually a pretty nice short definition of counterpoint; a longer way of saying it is that it is the combination of individual melodic voices with each other to form a harmonious whole. In other words, counterpoint is the art of putting together different lines of music in a way that sounds good.

 

ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு பல இசைக் கருவிகளில் இருந்து இசைகளை ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் 'ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையாக, இனிமையாக இருக்க வேண்டும்.


மேற்கத்தைய இசையின் சூட்சுமங்களில் ஒன்றான இந்தக் Counterpoint இல் ஜீனியஸ் என்று பலர் இருந்திருந்தாலும் ..இருந்தாலும்,ஜேர்மனியில் பிறந்த Johann Sebastian Bach   என்பவர் தன்னுடையை இசையிலும், இசைக் கோப்புக்களிலும் மிகப் புத்திசாலித்தனமாக இதைப் பாவித்துள்ளார் என அறியக் கூடியதாக இருக்கின்றது.

 

இப்போது சங்கீத மேகத்தைக் கேட்டுப் பாருங்கள். மேற்கத்தைய இசையின் நுணுக்கத்தை எமக்கு ஏற்றமாதிரி தமிழ் சினிமாப் பாட்டில் 1985 இலேயே,  கம்பியூட்டர் காலத்துக்கு முதலேயே என்னமாய் இசைஞானி என்ற இசை அறிவாளி தந்துள்ளார் என்பதைப் புரிந்து சிலிர்த்துப் போவீர்கள்.

 

சங்கீத மேகம் பாடல் வீடியோ

 

முதலில் பேஸ்கிட்டாரும் கிட்டாரும் ஆரம்பிக்கின்றன.


சில செக்கனில் ட்றம் தன்னுடைய அதிரடியைத் தொடங்குகிறது.


கீபோர்ட் லல..லல்லல..என்று போய்க்கொண்டிருக்கிறது


பேஸ்கிட்டார் சிவனே என்று எங்கோ போவதைப் போல பாசாங்கு செய்கின்றது.


ட்றம் இன் அதிரடியுடன் எல்லாமே நிறுத்திக் கொள்கின்றன.


பின்பு ட்றம்பட் புறப்பட்டு தனது கட்டைக் குரலுடன் போகிறது.


கீபோர்ட் முதல் வாசித்த நோட்சையே அட்சய பிசிறில்லாமல் அப்படியே வாசிக்கிறது.


ட்றம்மும் தன் பாட்டுக்கு அடிச்சு அல்லிக் கொண்டு போகிறது..
பேஸ்கிட்டார் பின்னாலே முனகுகிறது..


இவையெல்லாம், இந்த நான்கு வாத்தியங்களும் தனித்தனி நோட்சை வாசிக்கின்றன ஆனால் அவற்றை எல்லாம் சேர்த்து ஒரே நேரத்தில் கேட்கும் போது (Harmony  அளவுகடந்த உற்சாகமும் இனிமையும் கிடைக்கிறதல்லவா.. அதுதான் Counterpoint .... அங்குதான் எங்கள் இசைஞானியின் நோட்ஸ்..கைவண்ணம்.. மேதாவித்தனம்.. இசையைப் பற்றிய ஆளுமை,... இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்... எல்லாமே இருக்கிறது. இதே போலவே இந்தப் பாட்டின் இடையிசையையும் கொம்போஸ் பண்ணியிருக்கிறார்.

 

இதேபோன்ற பல பாடல்களை இசைஞானி உருவாக்கியுள்ளார் என்பது இப்போ புரிகிறது.. பல பாடல்களில் சில இடங்களில் மட்டும் பாவித்துள்ளார்.


'தளபதியின் சுந்தரி..கண்ணால் ஒரு சேதி' யைக் கேட்டுப்பாருங்கள்.. இசையின் வேறொரு பரிமாணத்தைப் புரிந்து கொள்வீர்கள்.. 'புத்தம் புதுக் காலை..பொன்னிற வேளை..என்ற அலைகள் ஓய்வதில்லைப் பாட்டின் ஆரம்ப இசையைக் கேட்டுப் பாருங்கள் புரியும் ...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


இவற்றையெல்லாம் பார்த்துப் படித்த பிறகு, இசைஞானி மேல் இருந்த மரியாதை இன்னும் இன்னும் எங்கோ போய்விட்டது. அவரின் ஒவ்வொரு பாட்டிலும் இப்படியான நுணுக்கங்களை எங்கெல்லாம் உள்நுழைத்துள்ளார் என்பது விளங்கி ரசிக்கும் போது அந்த இசை கொடுக்கும் ஆத்ம திருப்தி பன்மடங்கு பெரியது.

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* இசைஞானி :  Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....
 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு !!!

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
baliah ganesan2014-02-14 23:46:55
இந்த பாடலை முதன் முதலில் கேட்ட போதே இதன் இசை வித்யாசமானது என உணர்ந்தேன். ஆயிரம் முறை கேட்டு ரசித்து இருக்கிறேன். ஆனால் இன்று முழு உன்மையும் புரிந்தது.. இப்பொழுது கேட்க இன்னும் இனிமையாய்... நன்றி
1
0
சித்தீக் காரியப்பர்2014-01-25 22:19:18
இந்தப் பாடலைக் கேட்கும் போது அதன் இசையானது சாதாரணமாக அமைக்கப்பட்ட இசை என்றதொரு தவறான கருத்தினையே நான் இதுவரை கொண்டிருந்தேன். ஆனால், எனது கருத்து தவறானது என்பதனை இந்தக் கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததனையிட்டு மகிழ்ந்து போனேன். - சித்தீக் காரியப்பர்
0
0
R.Ruthran2014-01-24 13:31:16
அபூர்வமான தகவல்களைக் கொண்ட இனியமையான கட்டுரை இது
0
0
சி.சுகிர்தன்2014-01-18 22:17:56
இசையில் கௌண்டர்பொயின்ட் பற்றி அறியத் தந்த கலைச்செல்வனுக்கு நன்றி.
0
1
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.