Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசைஞானி : Counterpoint மூலம் Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)
By General | 2014-01-10 15:11:20

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா-

 

அது சிட்­னியில் கொஞ்சம் குளி­ரான கால­நிலை. கோடை­காலம் முடிந்து அடுத்த பரு­வத்­துக்குள் சிட்னி காலடி எடுத்­து­வைக்கும் காலம் ஆரம்­ப­மா­கி­விட்­ட­தற்­கான அறி­கு­றி­யாக லேசான கால­நிலை மாற்­றங்கள். வெளியில் போவ­தற்கு மனம் இடம்­த­ர­வில்லை. எனவே வீட்டில்  ஓய்­வாக கிடைத்த இடை­வெ­ளியில் நடிகர் மோக­னுக்­காக இசை­ஞானி இசை­ய­மைத்து எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணியம் பாடிய பாடல்­களைக் கேட்­க­வேண்டும் போன்­ற­தொரு உணர்வு.

 

சீடி­களை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசை­ஞானி, எஸ்.பி.பாலு ஆகி­யோரின் இளமைப் படங்­களும் , அந்­தப்­பாட்­டுக்­களை இவர்­களின் கூட்­ட­ணி­யில்தான் உரு­வாக்க வேண்டும் என்று ஒற்­றை­காலில் நின்று,  இசை­ஞானி, காலத்தால் அழி­யாத மெல­டி­களை உரு­வாக்க உந்­து­தலைக் கொடுத்த தயா­ரிப்­பாளர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்­தம்­பியின் படமும் மற்றும் அந்­நா­ளைய பிர­பல நடி­கர்­களின் படங்­களும் ஆயிரம் பசுமை நினை­வு­களைத் தரு­வித்­தன.

 


ஒவ்­வொரு சி.டியின் மேலுறை களையும் பார்த்­த­படி வந்­த­போது உத­ய­கீதப் பாட்­டுக்கள் இருக்கும் செல­க் ஷனில் கண் நின்­று­விட்­டது. கை தானா­கவே அதற்குள் இருக்கும் சிடியை பொக்­கி­ஷத்தை எடுப்­ப­தைப்­போல எடுத்து பக்­கு­வ­மாக சிடி பிளே­ய­ருக்குள் போட்டு அதை இயக்க பாடல் ஆரம்­பித்­தது. 

 

இளை­ய­ராஜா என்னும் எங்­களின் ராசா, 80 களில் போட்ட மெட்­டுக்­களில் மெய்­ம­றந்து போயி­ருந்தேன். அந்தப் பாட்­டுக்கள் எல்­லாமே போட்டி போட்­டுக்­கொண்டு இனி­மையைப் பொழிந்­தன. சங்­கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்..., பாடு­நி­லாவே தேன் கவிதை...,  மானே தேனே கட்­டிப்­புடி, உத­ய­கீதம் பாடுவேன்.. ., தேனே தென்­பாண்டி மீனே...என எல்­லாமே அற்­பு­த­மான மெல­டிகள். மானே தேனே என்ற துள்ளல் பாட்டில் கூட மெல­டியைக் கொண்­டு­வந்­தி­ருந்த ராஜா தன் சாணக்­கி­யத்தைக் காட்­டினார்.

 

ஆனால், இவை­களில் சங்­கீத மேகம் தேன் சிந்தும் நேரம்.. என்ற பாட்டில் இருக்கும் ஒரு விசேஷத் தன்­மை­யை ராஜாவின் இசை ராஜாங்­கத்தைப் பற்றி நீண்ட நாட்­க­ளாக எனக்குள் இருந்த விடயம் ஒன்று மீண்டும் தலை தூக்­கி­யது.

 


படத்தில் இந்தப் பாட்டின் எடிட்­டிங்கும் (Editing ) மிகப் பிர­மா­த­மாக இருக்கும். பாடலின் தொடக்­கத்தில் வெளி­நா­டொன்­றி­லி­ருந்து மீனம்­பாக்கம் வந்­தி­றங்கும் ரேவதி, மோகனின் இசை நிகழ்ச்­சி­யொன்­றுக்கு செல்­கிறார். பாட்டின் Prelude எனப்­படும் ஆரம்ப இசையை ட்றம் ( Drum ) தொடக்கி வைக்கும் போது விமான நிலை­யத்தில் காரில் ஏறு­கிறார் ரேவதி.

 

அதைத் தொடர்ந்து அவரின் கார்ப்­ப­ய­ணத்­துடன் செல்லும் இசை,  அவர் இசை நிகழ்ச்சி நடை­பெறும் மண்­ட­பத்­துக்­குள்ளே சென்று அமரும் வரை பின்­தொ­டர்ந்து, மேடை விளக்­குகள் போடப்­பட்டு பாட்டுத் தொடங்கும் போது கன கச்­சி­த­மாக முடிந்து பாட்டின் மீது மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி வழி விடு­கி­றது..


இதில் இசைக்­கேற்­றாற்­போல, காட்­சியை நகர்த்­திச்­செல்லும் எடிட்­டரை குறிப்­பிட்டே ஆக­வேண்டும். இந்தப் பாட்டை ஒவ்­வொரு முறை பார்க்­கும்­போதும் இந்தப் பாட்டின் எடிட்­டரை மன­துக்குள் பாராட்­டாமல் நான் இருந்­த­தில்லை.

 

80 களின் நடுப்­ப­கு­தியில் இந்தப் பாட்டு வெளி­வந்து யாழ்ப்­பா­ணத்தில் மிகப் பிர­ப­ல­மா­கி­யது. ஒரு முறை யாழ். நகர் நோக்கி மினிபஸ் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருக்கும் போது இவற்றை முதன் முதல் கேட்­டது நல்ல நினைவு. நகரை சென்­ற­டைந்­த­துமே நேரே நியூ­விக்ரேர்ஸ் ( New Victors ) என்ற பிர­ப­ல­மான கடைக்குச் சென்று, 20 ரூபா கொடுத்து உத­ய­கீதப் பாட்­டுக்­களை வாங்­கினேன். அந்த நாட்­களில், மெல்­லிய நீல நிறத்­தி­லான maxell cassette tape இல் புதிய பாட்­டுக்­களை 20 ரூபாக்­க­ளுக்கு நியூ­விக்­ரேர்சைத் தவிர யாழ்ப்­பா­ணத்தில் வேறு எங்­குமே வாங்க முடி­யாது.

 

கசற்­றுடன் வீட்­டுக்கு ஓடோடி வந்து எங்­களின் வீட்டில் இருந்த சின்ன நெசனல் ரேப் ரெக்­கோ­டரில் போட்டுக் கேட்ட போது பேரு­வ­கை­யாக இருந்­தது. குறிப்­பாக சங்­கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்.. என்ற பாட்டை கேட்க கேட்க இனிமை கூடிக் கொண்­டே­யி­ருந்­தது. அலுப்­புத்­தட்­ட­வில்லை. அதற்குப் பின் உத­ய­கீதம் படம் வெளி­யாகி அந்தப் பாட்டை காட்­சி­க­ளுடன் பார்த்­த­போது, முக்­கி­ய­மாக Prelude, முத­லா­வது இடை­யிசை,  (Interlude)   இரண்­டா­வது இடை­யிசை (Interlude) எல்­லாமே புது­மை­யாக இருந்­தது.

 


ராஜாவின் அநே­க­மான பாட்­டுக்கள் என்னை மிக மிக கவர்ந்­துள்­ளன. ஆனால், இது அதையும் தாண்டி என்­னவோ மாதி­ரி­யி­ருக்­கி­ற­தே ஏன் ? புரி­ய­வில்லை எனக்கு..  கேட்டு அறி­வ­தற்கும் இசை­நு­ணுக்­கங்கள் பெரி­த­ள­வுக்குத் தெரிந்த ஒரு­வ­ரையும் எனக்குத் தெரி­யாது. இசை தெரிந்­த­வர்­க­ளுக்குக் கூட ராஜாவின் இசைச் சூட்­சுமம் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது.

 


 எனவே, யாழ்ப்­பா­ணத்தின் நடுத்­த­ர­வர்க்க இளை­ஞர்கள் எல்­லோரும் செய்­வதைப் போல சங்­கீத மேகம் என்ற பாட்டில் ஏதோ இருக்­கி­றதே அது என்ன  என்ற ஒரு விடை­தெ­ரியாக் கேள்­வியை மன­துக்குள் அடித்து அமர்த்தி விட்ட என்­பாடு, தன் பாட்­டுக்கு போய்க் கொண்­டி­ருந்­தது.

 

அதற்குப் பின் பல மாற்­றங்கள், யாழ்ப்­பா­ணத்தில் இருந்த நான் இப்போ சிட்­னியில். ஆனால் ஒவ்­வொரு தட­வையும் அந்தப் பாட்டை எங்கே, எப்­போது கேட்­டாலும்,  நான் 1985 களுக்கு போவதும், மன­துக்குள் இருக்கும் கேள்வி எட்­டிப்­பார்த்­து­விட்டு மறை­வ­து­மாக வாழ்க்கை ஓடிக்­கொண்­டி­ருந்­தது.

 

சமீ­பத்தில், கொஞ்சம் இசை நிகழ்ச்­சிகள் சம்­பந்­த­மான டீ.வீ.டி.க்கள் வாங்­கி­வந்தேன். அவற்றுள், சில வரு­டங்­க­ளுக்கு முன்பு எஸ்.பி.பாலு, ஜெயா ரீவியில் தொகுத்து வழங்­கிய என்­னோடு பாட்டுப் பாடுங்கள் என்ற நிகழ்ச்­சியும்,  அதன் பின்பு கலைஞர் ரீவியில் தொகுத்து வழங்­கிய வானம்­பாடி, என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்­சி­களும் அடங்­கி­யி­ருந்­தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைப் பார்ப்­பதும் அவற்றில் பாலுவின் அனு­ப­வங்­களைக் கேட்டுப் புள­காங்­கிதம் அடை­வதும் வழக்கம். 

 

அதில் ஒரு டீவி­டியைப் பார்த்துக் கொண்­டி­ருந்த போது, அதில் பங்­கு­பற்­றிய ஒரு போட்­டி­யாளர் எனது மன­துக்குள் விடை­தெ­ரி­யாத வினாக்­க­ளுடன் அடக்­கி­வைக்கப் பட்­டி­ருக்கும் அதே பாட்டை..' சங்­கீத மேகம் தேன் சிந்தும் நேரம்' என்ற பாட்டைப் பாடத்­தொ­டங்­கினார்.

 

 

 

போட்­டி­யாளர் பாடலைத் தொடங்­கிய சிறிது நேரத்­தி­லேயே பாட்டை நிறுத்தச் சொன்னார் பாலு. ஏன் நிறுத்தச் சொல்கிறார் என்ற கேள்விகளுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

 


 பாலு கூறத் தொடங்கினார்.. . அந்தப் பாட்டின் உள்ளே இருக்கும் சூட்சுமம் என்ன ? இசைஞானி எப்படி விசேட விதமாக இந்தப் பாட்டை கொம்போஸ் பண்ணியிருக்கிறார் என்பதை சிலாகித்துக் கூறினார். நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போய் அமர்ந்திருந்தேன்.  இந்தப் பாட்டின் விசேட தன்மை பற்றி பாலு கூறிய விடயம் என்ன என்பதை    அடுத்தவாரம் இப்பக்கத்தில் பார்க்கலாம்.

 

சங்கீத மேகம் பாடல் வீடியோ

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி  சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி  (பாகம் 2)

 

* 'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....
 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு !!!

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
R.Rajeevan2014-01-11 17:36:40
அ.கலைச்செல்வனின் மற்றொரு அருமையான கட்டுரை.
0
1
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.