Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சரும நோயிலிருந்து விடுபட சில ஆலோசனைகள் - வைத்தியர் கே.கிர்ஷாந்த்.
2016-02-28 12:21:45

எம்மில் பலர் தோல் நோய் காரணமாக பல அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.

 

சருமம் அழகாக இல்லாததன் காரணமாக தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர் இதனால் மன உளைச்சல், சோர்வு போன்ற பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

 

பொது இடங்களுக்கு செல்லுதல்,  நண்பர்களுடன் பழகுதல் என்று எல்லா விடயங்களிலும் பின்வாங்கும் நிலைக்கு உள்ளாகின்றனர். மேலும் சரும நோயாளர்களை சமுதாயமும் சற்று தள்ளிவைத்துதான் பார்க்கின்றது.

 

காரணம் அவர்களின் அவலட்சண தோற்றம் மற்றும் தொற்று ஏற்படக் கூடிய பயம் என்பன இதற்கான முக்கியமான காரணிகளாக கருதப்படுகின்றன.

 

மேலும் சரும மெருகேற்றத்திற்கென தற்பொழுது சந்தையில் கிடைக்கும் பலதரப்பட்ட உற்பத்திகளாலும் சரும அலர்ஜி நோய் பலருக்கு ஏற்படுகின்றது என்கிறார் வைத்தியர் கே.கிர்ஷாந்த். 

 

சரும நோய்கள் ஏற்படக் காரணம் என்ன?


பொதுவாக மனிதர்களை 44 வகையான சரும நோய்கள் தாக்குகின்றன. சரும நோய்கள் ஏற்படுவதற்கு பல தரப்பட்ட காரணங்கள் உள்ளன. முதலாவது பரம்பரை, சில தோல் நோய்கள் நிறமூர்த்தங்களில் படிவதனால் பரம்பரை பரம்பரையாக காவப்படுகின்றன. 

 

இரண்டாவது காரணியாக கருதப்படுவது போசாக்கு உடலில் விற்றமின், கனியுப்புகள் என்பவற்றின் அளவு குறைவு பட்சத்திலும் சரும அழற்சி ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. 

 

மூன்றாவது காரணியாக கருதப்படுவது சூழல் சுற்றுபுற சூழலில் காணப்படும் நோய் தொற்றுக்கள் மற்றும் சூழல் மாசடைவதாலும் தோல் நோய் தாக்கம் ஏற்படலாம். 

 

நான்காவதாக கருதப்படுவது சந்தையில் கிடைக்கும் தரம் குறைந்த அல்லது சருமத்திற்கு ஒத்துப்போகாத அல்லது வெளிநாட்டவர்களின் பாவனைக்கென தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள், பவுடர், கிரீம் என்பவற்றை உபயோகிப்பதன் மூலம் சரும நோய்கள் ஏற்படலாம். மேலும் விசேடமாக நீரிழிவு நோயாளர்களுக்கு தோல் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

 

நம் நாட்டை பொறுத்தவரையில் ஏற்படக் கூடிய சரும நோய்கள் பற்றி கூறுங்கள்.
இலங்கையை பொறுத்வரையில் Eczema  எனப்படும்  ஊறல் நோயும் தடிப்பு தோல் அலர்ஜியுமே அதிகளவில் காணப்படுகின்றன.

 

சரும நோயின் வகையை எவ்வாறு இனங்காண முடியும். இது பற்றி விளக்கம் தாருங்கள்.


பொதுவான அலர்ஜியாயின் அதாவது உணவினால் மருந்துகளின் பாவனையால் தோலில் ஏற்பட்ட உராய்வினால் தோன்றிய அலர்ஜி எனின் குருதி பரிசோதனை மூலம் அறியலாம்.

 

இதுவே நாட்பட்ட தோல் எனின், உடல் திசு ஆய்வு (பையாப்ஸி) - அல்லது உடல் தோல் மாதிரி எடுத்து (ஸ்கிரபிங்) பரிசோதிப்பதன் மூலம் சரியாக அறியலாம். 

 

சரும நோயாளி ஒருவரின் சரும பராமரிப்பு எவ்வாறு அமைய வேண்டும்?


பொதுவாக எம்மில் அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கம் குளிக்கும் போது கரடு முரடு தன்மையான பஞ்சு, தும்பு, கல்லை கொண்டு உடல் அழுக்கை தேய்த்து குளிப்பது.

 

இது முற்றிலும் தவறான செயலாகும். சருமத்தை பலமாக தேய்த்துவிடும் போது சருமத்தில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் கிருமிகளின் தாக்கம் ஏற்படலாம்.

 

மேலும், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்த் தன்மை குறைவடையும். இதனால் தோலில் வறட்சி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். சருமத்தில் ஏற்படும் வறட்சியாலும் சரும நோய் தாக்கம் அதிகரிக்கும்.

 

சூரிய ஒளி, ஒட்சிசன் என்பன சருமத்தை ஊடுருவாத பட்சத்தில் சரும அலர்ஜி ஏற்படலாம். இவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் சரும அலர்ஜியை தடுக்கலாம். 

 

சரும நோய்களுக்கான மருத்துவ தீர்வு பற்றி கூறுங்கள்?


தோல் நோய்க்குள்ளான நோயாளி ஒருவரை முற்றும் முழுதாக அந்நோய் தாக்கத்திலிருந்து வெளியாக்க இயலாது. எனினும், நோயின் தீவிரத்தன்மையை குறைக்க முடியும். நோய் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த முடியும்.

 

காரணம் நோய் ஏற்பட்டத்திற்கான காரணம் நோயாளிக்கு நோயாளி வித்தியாசப்படுவதும் சரியான உணவு மருந்து பாவனை இன்மையுமாகும்.

 

சரும நோய் சம்பந்தமான தெளிவைப் பெறவும் அது குறித்த மேலதிக தகவல்களை அறியவும், தோல் நோய்களுக்கான மருந்து மாத்திரை, உணவு பாவனை என்பன பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

 

 

 

மேலதிக விபரங்களுக்கு:


K.R.Kirsanth,
Happy Life Hospital,
No:137/3,
Kattupalle Juncition,
Wellampitiya.


011 4269137,
072 7677847,
077 4746674. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.