Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
‘மதுபானம், சிகரெட் பாவனையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது’ - நிதர்ஷனா செல்லதுரை.
2016-02-21 10:55:42

இலங்­கையில் போதைப் பொருள் பாவ­னையைக் குறைப்­பதில் அனைத்துத் தரப்­பி­னரும் அக்­கறை காட்டி பல்­வேறு பயன்­தரும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­கி­றார்கள். அதனால் உள­ரீ­தி­யா­கவும் நடத்தை ரீதி­யா­கவும் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்­றன. 

 

 

இது அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமூக நலன் விரும்­பிகள் போன்றோர் சமூ­கத்தை விழிப்­பு­ணர்­வூட்­டு­வ­தினால் ஏற்­பட்ட வெற்­றி­யாகும்.

 

மறு­முனையில் நாௌான்­றுக்கு பல இலட்­சக்­க­ணக்கில் அப்­பாவி மக்­களின் பணத்தை சூறையாடும் சிகரெட் மற்றும் மது­பான கம்­பனிகள் தங்­க­ளு­டைய விளம்­பர தந்­தி­ரோ­பா­யங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன என்­கிறார் மது­பானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய  ஊடகப்பிரிவின் இணைப்பதிகாரி நிதர்ஷனா செல்லதுரை.

 

சமூகம் சாதகமான முறைக்கு மாறிவருவதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. குறிப்பிட்ட போதைப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளும் எங்கள் குழந்தைகள் மேல் அன்பு வைக்க ஆரம்பித்துள்ளார்கள். அதனால் கம்பனிகள் மிகவும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருவது எமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயமே.

 

சமூகம் எப்படி மாறி வருகிறது என்பதனை விரிவாக நோக்குவோம். ஆரம்பக்காலத்தில் உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியை மதுபான பாவனைகளுக்கும் சிகரெட் பாவனைகளுக்கும் செலவு செய்து  வந்தனர். ஆனால், இப்போது மேற்குறிப்பிட்ட பொருள்  வகைகளுக்கு செலவு செய்வது முட்டாள் தனமான விடயமாகும். இவற்றிக்காக மாதமொன்றுக்கு செலவு செய்யும் பணத்தொகையை கணக்கிட்டுப்பார்த்து குறைத்து வருகின்றனர்.

 

மேலும், வீணாக செலவு செய்து பணத்தொகையை சேமித்து தங்களின் குடும்ப செலவுகளுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த பல வருடங்களுக்கு முன் சிகரெட் புகைத்தால் பதற்றம் குறையும், நவீன நாகரிகப் பண்புகள் உருவாகும் என எண்ணியவர்கள் இப்போது சிகரெட் புகைத்தால் அவலட்சணம், வாய்துர்நாற்றம், பாலியல் பலவீனம், வாழ்க்கை மட்டுப்படுத்தல் போன்றன ஏற்படும் என அறிந்து புகைப்பதைக் குறைத்து வருகின்றனர். 

 

 

மது அருந்தினால் கவலை குறையும், மகிழ்ச்சி ஏற்படும், உடற்களைப்பு நீங்கும் என்பன தற்போது  பொய்யானவை என மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதாவது மதுசாரம் அருந்தினால் மேற்குறிப்பிட்ட எந்த விடயமும் ஏற்படாதிருந்த போதும் எங்களை  ஏமாற்றுவதற்காகவே மேற்குறிப்பிட்டவாறு  பல பொய்களை சொல்லுகிறார்கள் என்று அறிந்து மதுபானம் அருந்துவதால் ஏற்படும் அசௌரியத்தை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

மதுபானம் அருந்துபவர்கள் சமூகத்தில் உள்ள ஏனையோர்களுக்கு பல துன்பங்களை கொடுத்திருந்தாலும் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவருகின்றது. அதாவது மதுபானம் அருந்தியவர்களுக்கு எந்தவித வரப்பிரசாதங்களும் கொடுப்பதில்லை.

 

 

மாறாக, இவர்களுக்கு சுய நினைவு உண்டு, வரப் பிரசாதங்களைப் பெற்று கொள்வதற்கே சுய நினைவு இல்லாததைப் போன்று நடிக்கின்றார்கள் என்று அறிந்து துன்புறுத்தும் செயற்பாடுகளை எதிர்கொண்டவர்கள் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றார்கள். குறிப்பாக, பெண்கள் குடித்து விட்டு செய்யும் சேட்டைகளுக்கு தகுந்த முறையில்  பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தி  சண்டைகளைக் குறைத்து வருகிறார்கள். 

 

கம்பனிகள் முன்னர் விளம்பரங்களை எந்தவித எதிர்ப்புக்களும் இல்லாமல் விளம்பரப்படுத்தின. ஆனால், இந்நிலை மாறியுள்ளது. அரசாங்கத்திற்கு வரியாக கிடைப்பதும் இந்த அப்பாவி மக்களின் பணமே என்ற உண்மையை உணர்த்தி பாவனையாளர்கள் மார்தட்டிக் கதைக்கும் அளவு குறைந்துள்ளது.

 

இளைஞர்களை ஏமாற்றுவதற்காக சிகரெட், மதுபான கம்பனிகள் பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்தினாலும் நாௌான்றுக்கு சிகரெட் புகைப்பதினால் மரணிப்போர் 60 பேர்.

 

மதுபாவனையால் மரணிப்போர் 40 பேர்  என்ற தொகையை ஈடு செய்யவே மேற்குறிப்பிட்ட விளம்பரங்களை செய்கின்றார்கள் என மக்கள் அறிந்துள்ளனர். சிகரெட் கம்பனியானது கிளிநொச்சியில் விவசாயிகளை ஊக்குவிக்க  பல உதவிகளை செய்திருந்த போதும் சமூக மட்டத்தில் இருந்து பல எதிர்ப்புக்கள் கிளம்பின.  

 

மேலும், மதுபான நிறுவன உறுப்பினர் ஒருவர் அரசாங்க நிறுவனம் ஒன்றிற்கு ஆலோசகராகத் தெரிவான போது அனைத்துத் தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின, அது தவிர, இளைஞர்கள் முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிகரெட், மதுசாரம் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கு கவர்ச்சிகரமான செயற்பாடுகளைத் திட்டமிட்டு  செயற்படுத்தி வருகின்றனர். 

 

சமூக மட்டத்தில் ஊடகங்களில் சிகரெட், மதுபானம் உட்பட ஏனைய போதைப்பொருட்களை விளம்பரப் படுத்தும் போது அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் தற்போது  தங்களின் எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.

 

மேலும் ஊடகங்களின் மூலம் போதைப்பொருள் பாவனையை ஊக்கப்படுத்தும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விழிப்புணர்வூட்டி வருகின்றனர். 

 

ஒரு காலத்தில் சிகரெட் புகைப்பதனால், அரசாங்கம் இலாபமடைகிறது என்ற கருத்தை கொண்டிருந்தாலும் தற்போது சிகரெட் புகைப்பதனால் 90% இலாபம் பிரித்தானியா, அமெரிக்காவிற்கே செல்கின்றன என அறிந்துள்ளார்கள்.

 

இது தவிர, கஷ்டப்பட்டு உழைக்கும்  பணத்தை அபிவிருத்தி அடைந்த நாடுகள் சுரண்டி எடுக்கும் வியாபாரமே சிகரெட் வியாபாரம் என்றும் புகைப்பதனால் அல்லது மதுபானப் பாவனையினால் ஏற்படும் நோய்களுக்கு அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது என்ற உண்மையை அறிந்து வருகின்றார்கள். 

 

மேலதிக விபரங்களுக்கு: 

மதுபானம் மற்றும் போதைப்பொருள் 
தகவல் நிலைய ஊடகப்பிரிவின் இணைப்பதிகாரி
நிதர்ஷனா செலல்துரை,
ADIC 40/18, 
Park Road,
Colombo - 05.

Tel – 011 258 4416
Mob – 0714 352 849

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.