Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
குருதி அமுக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரோலிலிருந்து விடுபட சில ஆலோசனைகள் - வைத்தியர் ஆர்.கே.கிர்ஷாந்த்.
2016-02-07 11:02:27

நாம் பரவலாக பேசி வருவது, குருதி அமுக்கம், சக்கரை நோய் கொலஸ் ட்ரோல் அதிகரிக்கும் அமுக்கம், குளுக்கோஸின் மட்டம், கொழுப்பு மட்டம் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்தே.

 

ஆனால், இவற்றின் அளவு சுகதேகி ஒரு வரின் உட லில் இருக்க வேண்டிய அளவை காட்டிலும் குறையும் பட்சத் திலும் மனிதன் பல தரப்பட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றான் என்கிறார் வைத்தியர் ஆர்.கே.கிர்ஷாந்த்.

 

சுகதேசி ஒருவரின் சரீரத்தில் காணப்படக்கூடிய அமுக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்றவற்றின் எண் பெறுமானங்கள் எவ்வளவு?

 

சுகதேகி ஒருவரின் குருதி அமுக்கமானது 120 – 80 mmhg என்ற அளவிலும் சக்கரை (Glucose) 60–110 mg/dl கொலஸ்ட்ரோல் (Cholosterol) 200–240 mg/dl என்ற எண் பெறுமானங்களிலும் காணப்பட வேண்டும். 

 

உயர் குருதி அமுக்கம், உயர் சக்கரை மட்டம், குறைந்த கொலஸ்ரோல் இது பற்றி விளக்கம் தாருங்கள்?

 

குருதி அமுக்கத்தின் அளவானது 100 – 60mmhgற்கு குறைவாக காணப்படல் கொழுப்பின் அளவு 180mg/dlற்கும் குறைதல் தாழ் குருதி அமுக்கம்/ தாழ் சக்கரை/தாழ் கொலஸ்ட்ரோல் என சொல்லலாம். 

 

தாழ் அமுக்கம்  (Low pressure) ஏற்பட காரணம்  என்ன?

 

Low pressure என்பது குருதிச் சோகை எனப்படும். உடலின் குருதி அமுக்கம் மற்றும் குருதி ஓட்டத்தில் ஏற்படும் குறைவு அல்லது தாழ்வு Low pressure எனப்படும். இது HP குருதி நிறப்பொருளின் குறைபாட்டாலும் ஏற்படும்.

 

இது இரண்டு வகைப்படும். ஒன்று (Chronic) நாட்பட்ட குருதிச் சோகை உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அதாவது, காய்ச்சல், அலைச்சல், சரியான அளவு நித்திரையின்மை, பிரயாணம் போன்றவற்றால் ஏற்படக் கூடியது. 

 
Low pressure ற்கான அறிகுறிகள் எவை? 


நடுக்கம், சோர்வு, தாகம், கலைப்பு, உணவு வெறுப்பு, உறக்கம், உடல் உறுப்புக்கள் சீவனற்ற நிலை, பசி, தலைவலி என்பன பொதுவான அறிகுறிகள். 

 

சிலரது குருதி அமுக்கம் சீராக காணப்படாததற் கான விளக்கத்தை தாருங்கள்?

 

கர்ப்பிணி பெண்களுக்கு இந் நிலை அதிகம் காணப்படும் காரணம், கர்ப்பம் தரித்த ஆரம்ப காலங்களில் அவர்களால் சரியாக உணவு உண்ண முடியாமை, வாந்தி போன்ற நிலைகள் ஏற்படுவதனாலும் உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் குருதி அமுக்கம் கூடி குறையலாம்.

 

(Hormonal Problems) ஹோர்மோன் குறைபாடு உடையவர்களுக்கும் இந்நிலை ஏற்படலாம். உதாரணமாக (Thyroid diabetes) நோயாளர்களுக்கும் இத்தாக்கம் அதிகம். காரணம் சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உபயோகிப்பதால்.
இருதய நோயாளிகளுக்கு அதிகம். காரணம் சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உபயோகிப்பதால் நோயாளிகளும் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவர்.

 

நுரையீரல் நோயாளிகள் விசேடமாக உயர் குருதி அமுக்கமுடைய நோயாளிகளின் கவனயீனம் காரணமாகவும் பாதிப்பிற்கு ஆளாகுவர். காரணம், அவர்கள் உயர் குருதி அமுக்கத்திற்கு உபயோகிக்கும் மாத்திரை வகைகளின் அளவை மாற்றாமல் தொடர்ந்து ஒரே அளவில் உபயோகிப்பர். இந் நிலையில், சாதாரண அளவை விட குறைய வாய்ப்புண்டு. 

 

இதற்கான மருத்துவ தீர்வு என்ன?


சரியாக எட்டு மணி நேரம் நித்திரை கொண்டு சத்தான உணவுகளை உட்கொண்டால் 90 சதவீதமானவர்கள் குருதிச் சோகையில் இருந்து விடுபடலாம். குருதிச்சோகை குறித்த தெளிவையும் மருத்துவ ஆலோசனைகளையும் வைத்தியரிடம் பெற்றுக்கொள்ளவும்.

 

தொடர்புகளுக்கு:
வைத்தியர்  
கே.ஆர்.கிர்ஷாந்த்,
கல்வி அமைச்சின் 
சுகாதார ஆலோசகர்,
ஹெப்­பிலைப்
வைத்­தி­­ய­சாலை,
கட்­டு­பெல்ல,
வெல்லம்­பிட்­டிய.


011  4269137,
077  7677847

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.