Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எச்.ஐ.வி. தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில அறிவுரைகள் - வைத்­திய நிபுணர் சிசிர லிய­னகே.
2016-01-24 11:05:48

எச்.ஐ.வி தொற்­றா­னது ஒரு வைர­ஸாகும். மருந்­து­களை முறையாக அருந்­தினால் எயிட்ஸ்ஸிலிருந்து எமக்கு சாதா­ரண மனி­தனை போல நீண்ட­காலம் வாழலாம் என்­கிறார் தேசிய பாலியல்/எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவின் வைத்­திய நிபுணர் சிசிர லிய­னகே.

 

எச்.ஐ.வி தொடர்பில் இலங்­கையின் தற்­போ­தைய நிலையை கூறுங்கள்?

 

இலங்­கையில் முதன் முத­லாக 1986 ஆம்  ஆண்டு எச்.ஐ.வி கண்­ட­றி­யப்­பட்­டது.

 

முதன்முதலில் வெளி­நாட்­ட­வ­ர் ஒருவரே 1987 ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­ன­வ­ராக இலங்­கையில் இனம் காணப்­பட்டார். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு இலங்­கையர் ஒருவர் இந்த தொற்­றுக்­குள்­ளா­ன­வ­ராக அடை­யாளம் காணப்­பட்டார். இவற்றின் பின்னரே எச்.ஐ.வி தொற்றானது இலங்­கையில் பரவ ஆரம்­பித்­தது. 

 

2014ஆம் ஆண்டு எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளா­னவர்களாக 228 பேர் மாத்­திரம் கண்­ட­றி­யப்­பட்­டனர். அதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு 236 பேர் எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளா­னவர்களாக கண்­ட­றி­யப்­பட்­டனர். 

 

வரை படத்தில காணலாம் 2009_ 2015
UNAID நிறு­வ­ன மதிப்பீட்டின் படி எச்.ஐ.வி தொற்­றுக்­குள்ளா­ன­வர்­களில் 3,600 பேர்­ வ­ரையில் உயி­ருடன் இருக்­கி­றார்கள். ஆனால், நாங்கள் அதுவரையில் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில் 2,310 பேரை மாத்­திரம் இனங்­கண்­டுள்ளோம். இவர்களில் 308 பேர் மர­ணித்­துள்­ளார்கள். 

 

மிகுதியாக உள்ளவர்கள் உயி­ருடன் வாழ்­கி­றார்கள் என எண்ணப்படுகின்றது. எங்­க­ளிடம் சிகிச்சை பெற ­வ­ரு­பவர்­களின் எண்­ணிக்கை 17 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. 750 மற்றும் 800 பேர் மாத்­திரம் எங்­களிடம் சிகிச்சை பெற ­வ­ரு­கி­றார்கள்.

 

நாங்கள் கண்­ட­றிந்த எண்­ணிக்­கை­ போல இன்னும் அதிகமானோரை கண்­ட­றி­ய­ வேண்­டி­யுள்­ளது. ஒரு கிழ­மைக்குள் எச்.ஐ.வி.தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில் ஏழு பேரை இனங் காண­வேண்டும். இந்த நிலையில் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு­வ­ரை­யேனும் இனம் கண்­டு­கொள்ள வேண்டும்.

 

நாங்கள் அப்­படி இனங்காணும் பட்­சத்தில் அனைத்து எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளா­ன­ அனைவரையும் இனம் கண்­டு­கொள்­ள­மு­டியும். 2030 ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி ஐ இல்­லாமல் ஒழித்து விடும் நோக்கில் USAID நிறு­வ­னமும் உலக சுகா­தார நிறு­வ­னமும் CDS முயற்­சித்து வரு­கின்­றன. 

 

எயிட்ஸ் என்றால் என்ன? எச்.ஐ.வி. என்றால் என்­ன­வென்பது குறித்து விளக்கம் தாருங்கள்?

 

எச்.ஐ.வி. என்­பது ஒரு வகையான வைர­ஸாகும். இந்த வைர­ஸா­னது எங்­களின் உடலில் CD4 என்ற இடத்தில்  உட்­பு­குந்து  தங்கி வாழ்ந்து அதன் பெருக்­கத்தை அதி­க­ரித்து கொள்­கி­றது. மனித உடலில் மாத்­திரம் இந்த வைரஸால் வாழ முடிகிறது. 

 

இதனால் மனி­த­னி­லி­ருந்து மனி­த­னுக்கு பரவ அதிக வாய்ப்­புகள் உள்­ளன. வைரஸ் உட்­பு­குந்த பிறகு எம் அனை­வ­ருக்கும் உடலில் DNA உடன் சேர்ந்து உடலில் தங்கி விடுகின்றது. அதன் பின்னர் அவற்றை அகற்ற முடி­யாமல் போய் விடுகிறது. இதனடிப்படையில் சாதாரணமாக ஒரு நாளைக்கு மில்­லியன் கணக்கில் வைரஸ் பெருகுகின்றது. 

 

இவ்வாறு பெரு­கு­வதால் பெரும் பிரச்­சினை ஏற்­படுகின்றது. DNA உடன் சேர்­வதால் வைரஸை அகற்­ற­மு­டி­யாமல் போய்­விடுகிறது. எம்மால் இந் நோய்க்கு மாத்­தி­ரைகள் வழங்­கப்பட்ட போதும், உடலில் இந்த வைரஸை நிரந்­த­ர­மாக விடு­விக்க கூடிய மாத்­தி­ரை­கள் இன்னமும் யாராலும் கண்­டு­ பி­டிக்­க­ப்படவில்லை.

 

இலங்­கையைப் பொறுத்­த­மட்டில்  எச்.ஐ.வி நோயை கட்­டுப்­ப­டுத்த கூடிய சில வகையான மாத்­தி­ரைகள் இல­வ­ச­மாக நோயா­ள­ரர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

 

முன்­னைய காலங்­களில் மூன்று மாத்­தி­ரை­களை வெவ்­வே­றாக உட்கொள்ள வேண்டும். ஆனால், இப்­போது ஒரு மாத்­தி­ரை­யாக தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஒரு­ நா­ளைக்கு ஒரு மாத்­திரையை மட்டும் உட்கொள்ள வேண்டும். இந்த கண்டுபிடிப்பால் அதி­க­ளவு பக்­க­விளைவுகளை குறைத்­துக் ­கொள்­ள­க்கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

 

எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளான பின்னர் என்ன ஆகும்? எயிட்ஸ் ஏற்­பட்டால் இறந்து விடு­வோம் என்ற நிலை ஆரம்ப காலங்­களில் இருந்தது. ஆனால், இன்­றைய கால­கட்­டத்தை பொறுத்­த­மட்டில் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து மாத்­தி­ரைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.  

 

எச்.ஐ.வி தொற்­றுக்­குள்ளானவர்கள் இனம் காணப்­பட்டு அவர்களுக்குரிய மாத்­தி­ரை­களை வழங்கி, எச்.ஐ.வி தொற்றை கட்­டுப்­ப­டுத்தி எயிட்ஸ் வராமல் அவர்கள் சாதா­ரண மனி­தனை போல் நீண்ட ஆயுட்­காலத்துடன் வாழ­மு­டியும். 

 

சாதா­ரண மனி­தனை போல தொழில் செய்து வாழ முடியும் உடலில் எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது. ஆனால், மன­த­ளவில் பாதிக்கக்கூடிய பல சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன. 

 

சமூ­கத்­தினரால் இவர்­கள் கொச்­சைப்­ப­டுத்தப்படல் மற்றும் இழி­வான வார்த்­தை­களால் மனங்­களை சொல் அம்­பு­களால் பாய்ச்­சு­கி­றார்கள்.  

 

எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு அருகே செல்வதற்கு அச்சம், அவர்களைத் தீண்டுவதற்கு அச்சம், அவர்களுக்கருகில் அமர்­வ­தற்கு அச்சம், இதுமட்டுமன்றி வைத்­தி­ய­சா­லைக்கு சென்றால் அங்­கேயும் இதே பிரச்­சி­னைக்­குட்­ப­டு­கிறார்கள். 

 

ஒரு நாள் எச்.ஐ.வி தொற்­றுக்­கா­னவர் அறுவைச் சிகிச்­சைக்­காக  வந்­தி­ருந்த போது, 'ஓ' என்று சத்­த­மிட்டு கொண்டு வைத்­தி­ய­சா­லையில் ஊழி­யர்கள் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தி­னார்கள்.

 

நான் அவர்கள் அனை­வ­ரையும் அழைத்து இதற்கு பயப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை என  பல ஆலோ­ச­னை­க­ளையும் அறி­வு­ரை­க­ளையும் கூறிய பிறகு நாங்கள் அனை­வரும் ஒன்­றாக இணைந்து அறுவைச் சிகிச்சை செய்தோம்.

 

இவர்கள் வைத்­தி­யர்கள். இவர்­களே இவ்­வாறு நடந்­து­கொண்டால் பொது மக்கள் எவ்­வாறு செயற்­ப­டு­வார்கள். பொது­வாக  எச்.ஐ.வி தொற்று ஏற்­ப­டாது. இதற்கு காரணம் முறை­யற்ற பாலியல் உற­வினால் தான் 100/95 சத­வீதம் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­கி­றார்கள்.  

 

ஒன்று ஆணொ­ருவர் பெண்­ணொ­ரு­வ­ருடன் பாலியல் உற­வு­கொள்ளும் போது ஒரு­வ­ருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பின் மற்­ற­வ­ருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

 

பெண் ஒரு­வ­ருக்கு எச்.ஐ.வி தொற்றின் போது தாய்­மை­ய­டை­வதால் மற்­றது தாய் கர்ப்பம் தரித்த பிறகு தாய்க்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டால் குழந்­தைக்கு 100/ 45 _ 50 சத­வீதம் வர வாய்ப்­புள்­ளது.

 

இரத்தப் பரி­மாற்­றத்­தி­னாலும் மற்­ற­யது மது அருந்­து­ப­வர்கள் ஒருவர் ஊசி மூலம் மது ஏற்­று­வதன் மூலம் பரவ அதிக வாய்ப்­புகள் உண்டு அதா­வது ஒரு­வ­ருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தால் மதுவை ஊசி ஏற்றும் போது குருதி சிறிது சித­றலாம் அவ்­வாறு பலர் அந்த ஊசியின் மூலம் மதுவை ஏற்­று­வதன் மூலம் எச்.ஐ.வி தொற்று குருதி மூலம் பரவ அதிக வாய்ப்­புகள் உண்டு. 2004 பின் குருதி மூலம் எவ­ருக்கும் பரவ ­வாய்ப்­பில்லை. இந்­தோ­னே­ஷியா, பாகிஸ்தான் போன்ற நாடு­களில் அதிகம் பரவி வரு­கின்­றது.

 

2310 பேர் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இவர்­களில் 603 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 366 எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­னவர் இறந்­துள்­ளார்கள்.

 

ஆண்கள் தான் எச்.ஐ.வி. தொற்­றுக்­கு அதிகமாக உள்­ளாகு­கி­றார்கள். தவ­றான பாலியல் உறவின் மூலம் தான் அதி­க­மான ஆண்கள் எச்.ஐ.வி. தொற்றுக்­குள்­ளா­கி­றார்கள்.

 

விப­சார விடு­திக்கு சென்று தவ­றான பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தாலும், ஆணும் ஆணும் பாலியல் உறவில் ஈடுபடுவதாலும் எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளா­கி­றார்கள்.

 

ஆண்கள் குதம் வழியாக உறவில் ஈடு­படும் போது காய­ம­டைந்து இரத்தச் சிதைவு ஏற்­ப­டலாம். இதனால் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளாக அதிக வாய்ப்­புள்­ளது. அநேக குடும்­பங்­களை பார்த்தால் கண­வர்­களால் அதிக குடும்பப் பெண்கள் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­கி­றார்கள்.

 

இதற்கு காரணம் தவ­றான பாலியல் உறவில் ஆண்கள் ஈடு­ப­டு­வதால் தனது மனை­வி­யர்கள் துர­திஷ்­ட­வ­ச­மாக எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­கி­றார்கள்.

 

ஒரு­வ­ருக்கு குருதி வழங்­கு­வ­தற்கு முன்பு அவரின் குருதி எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளானதா என அறிந்த பின் குருதி வழங்க வேண்டும். கடந்த வருடம் நான்கு இலட்­ச­மா­ன­வ­ருக்கு குருதி பரி­சோ­தனை செய்து பார்த்தோம். 

 

சகல தாய்­மார்­க­ளையும் எச்.ஐ.வி பரி­சோ­தனை செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

 

சிபிலிஸ் இருக்­கி­றதா என பரி­சோ­தனை செய்­கிறோம்  இது தாய்க்கு இருந்தால் குழந்­தைக்கு சென்று குழந்தை குறை மாதத்தில் பிர­ச­வித்தல், உடலில் குறை­பாடு ஏற்­பட்டால் பாரம் குறை­யலாம் போன்ற பாதிப்­புக்­குள்­ளா­கலாம்.

 

2015 ஆம் ஆண்டில் பலர் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சிப்­பிலிஸ் 3,50,000  எச்.ஐ.வி 1,75,000 பரி­சோ­தனை செய்­துள்ளோம். எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளான தாய்­மார்கள் 17 பேரை கண்­ட­றிந்­துள்ளோம். இவர்­க­ளுக்கு சிகிச்சை வழங்கி அவர்கள் பெற்­றெ­டுக்கும்  ஒரு குழந்­தை­க­ளுக்­கேனும் தொற்­றா­வண்ணம் சிகிச்சை வழங்­கி­யுள்ளோம்.

 

அர­சாங்கம் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது. 25 – 49 வய­துக்­கு­மி­டைப்­பட்­ட­வர்­க­ளுக்கு தான் அதிக பாலியல் ரீதி­யான உணர்வு தோன்றும். இதனால் எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­கி­றார்கள். 

 

வரை படத்தில் காணலாம் 2009_ 2015


சாதா­ர­ண­மாக இலங்­கையை பொறுத்­த­மட்டில் 25_26 வய­திற்­குட்­ட­வர்கள் தான் திரு­மணம் செய்­து­கொள்­கி­றார்கள். அதன் பிறகு அதிக பாலியல் உற­விற்­குட்­ப­டு­கி­றார்கள். இந்த அட்­ட­வ­ணையை பார்த்தால் உங்­க­ளுக்கு விளங்கும். 15_24 வய­திற்­குட்­ட­பட்­ட­வர்­களை படத்தில் காணலாம். 

 

அடுத்த வாரம் எச்.ஐ.வி தொற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அவற்றை எவ்வாறு பராமரித்து கொள்வதையும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் உண்மை கதைகளையும் பார்க்கலாம்.

 

 

(தொடரும்)

 

மேலதிக விபரங்களுக்கு:


தேசிய பாலியல் நோய் 
வைத்திய நிபுணர், 
சிசிர லியனகே,
தேசிய பாலியல் நோய் / 
எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு,
29, டி சேரம் பிளேஸ், கொழும்பு 10.

 
011 2667163,
011 2687625
071 4483914 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.