Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிறுநீர் தொற்­றுக்­க­ளுக்­கான தீர்­வு - வைத்­திய நிபுணர் வைத்­தியர் ஆர்.­கே.கிர்ஷான்ந்.
2016-01-17 10:51:52

சிறி­யோர், பெரியோர் என்ற வேறுபாடின்றி எம்மில் பலரும் தமது வாழ்­நாளில் ஒரு முறை­யேனும் சிறு­நீ­ரக தொற்­றுக்கு ஆளாகி இருப்பர்.

 

பலர் அச்சம் கார­ண­மாக மறைத்து விடுவர். ஒரு சிலரே தமக்கு ஏற்­பட்ட அனு­ப­வத்தை பகிர்ந்து கொள்வர். 

 

இது சிறுநீர் துவா­ரத்தில் ஏற்­படும் நோய் என்­ப­தனால் பலர் நோயி­ன் ஆரம்­ப­நி­லை­யில் இது பற்­றிய அறி­கு­றி­களை வெளிப்­ப­டை­யா­க வைத்­தி­ய­ருடன் ஆலோ­சிக்க வெட்­கப்ப­டுகின்­றனர்.

 

இதனால் இந்­நோய் தாக்­கத்தின் தீவிர தன்­மை­யான சிறு­நீ­ரக பாதிப்­பிற்கு ஆளாக நேரிடும் என்­கிறார் தேச­மா­னிய வைத்­திய நிபுணர் வைத்­தியர் ஆர்.­கே.கிர்ஷான்ந். 

 

சிறுநீரக தொற்று என்­றால் என்­ன?

 

எமது உடலில் கழி­வாக வெளி­­­யேற்­றப்­ப­டும் சிறு­நீரில் வள­ரக்­கூ­டிய நுண்ணங்­கி­களின் தாக்­கத்தால் சிறுநீர் கால்வாய் மற்றும் ஆண்­குறி, யோனி என்­ப­வற்றில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­களே சிறு­நீ­ரக தொற்றாகும். இதை வைத்­தி­யர்கள் UIT என்பர் (Urinary Tract Infection) 

 

Urinary Tract Infection ஏற்­படக் கூடிய வய­தெல்லை உண்­டா? யாரை எல்­லாம் அதிகம் பாதிக்­கும்?

 

சிறியோர் முதல் வயோ­தி­பர்கள் வரை அனை­வ­ரையும் இந்­­நோய் தொற்­றக் கூடி­யது. பொது­வாக பெண்­களே அதி­களவில் பாதிப்­பிற்கு உள்­ளா­கின்­றனர். சிறு­நீ­ரகக் கல் உள்ளோர் புராஸ்டேப் சுரப்பி விரி­வ­டைந்­தோ­ரையும் அதிகம் தாக்கும்.

 

பெண்­களுக்கு இத்­தொற்று அதி­க­ளவில் ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம் என்­ன?

 

சிறு­நீ­ர­கத்தில் இருந்து சிறுநீர் வெளி­யே­றும் துவாரம் வரை­யி­லான தூரத்தை கொண்­டே சிறு­நீ­ரக தொற்றின் தீவி­ர­த்தன்மை வெளி­க்­கொ­ண­ரப்­படும். ஆண்­களில் சிறு­நீ­ரகம் தொடக்கம் சிறுநீர் வெளி­யேறும் துவாரம் வரை­யி­லான தூரம் 12cm தொடக்கம் 15cm வரையில் காணப்­படும்.

 

அதே பெண்­களில் 2.5cm தொடக்கம் 3.5cm வரை­யி­லேயே காணப்­படும். எனவே, தொற்று ஏற்­பட்ட, பட்­சத்தில் பெண்­களில் பர­வும் தூரம் குறைவு என்­ப­தனால் சிறு­நீ­ரகம் பாதிக்­கப்­படும் அளவு அதிகம். 

 

சிறு­நீ­ரக தொற்று ஏற்­ப­டக்­ கூடிய சந்­தர்ப்­பங்கள் எவை?

 

சிறு­நீ­­ரக தொற்­றா­னது பொது­வாக வெளி­யே இருந்து பிறப்­புறுப்பின் வழி­யே உட்­செல்லும் நுண்­ணங்­கி­க­ளா­லேயே அதிகம் ஏற்­ப­டு­கின்­றது. சில­ருக்கு மலக்­கு­டலில் காணப்­படும் E coll எனும் நுண்­ணங்கி சிறுநீரக பாதைக்கு வரு­வ­த­னா­லும் ஏற்­ப­டலாம்.

 

நுண்­ணங்­கிகள் உற்­செல்­லக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­க­ளாக கருதப்படுபவை:


*பிறப்­பு­றுப்பை சுத்­த­மாக வைத்தி­ருக்­கா­மை


*மாத­விடாய் காலங்­களில் தர­மான நெப்­கின்­களை உப­யோ­கிக்­காமை 


*சிறுநீர் கழித்­தபின் உறுப்பை சுத்தம் செய்­யாமை


*கழி­வ­றை­களின் அசுத்­தத்­ தன்­மையால்.

 

சிறு­நீ­ரக தொற்­றுக்­கான அறி­கு­றிகள் எவை?

 

சிறுநீர் வெளி­­யேறும் அளவு குறை­தல், சிறுநீர் கழிக்­கையில் 
எரிச்சல்/ வலி ஏற்­படல்,

யோனி­­மடல்/ ஆண்­கு­றியை சுற்றி தோல் அலர்ஜி, அரிப்பு ஏற்­படல் என்­பவை பொது­வான அறி­கு­றி­க­ளாகும்.

 

சில­ருக்கு இடுப்­பு, அடி­வயிற்றில் வலி ஏற்­ப­டலாம். மேலும் UIT ஆல் அதிகம் பாதிக்­கப்­பட்ட நிலையில் குளிர்­காய்ச்சல் ஏற்­ப­டலாம். 

 

சிறுநீர்க் குழாய் தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அறியக்­ கூடிய பரி­சோ­த­னைகள், சிகிச்சை முறைகள் எவை?

 

பொது­வாக UFR (Urine Full Report) செய்­யப்­படும். இதில் வெள்ளை, சிவப்பு அணுக்­களின் அளவு அதி­க­மாக காணப்­ப­­டு­மாயின் வைத்­தி­யரின் அறி­வுறுத்­த­லுக்கு அமைய இரண்டு அல்­லது மூன்று நாட்கள் மருந்து மாத்­தி­ரை­களை பாவிப்­பதன் மூலம் தொற்றில் இருந்து விடு­ப­டலாம்.

 

மேலும் Urine Full reportஇல் Organs, Crustle என்­பன காணப்­ப­டு­மாயின், Urine Culture and ABST எனு­ம் சிறுநீர் பரி­சோ­த­னையை செய்யவேண்டும். இதன் மூலம் நோய் தொற்­றா­னது உள்­ளி­ருந்து உரு­வா­னதா அல்­லது வெளிக்­கா­ர­ணி­களால் ஏற்­பட்­டதா என்­பதை அறிந்து அதற்­­க­மைய பிரதியுப­காரம் செய்­ய­வேண்டும். 

 

கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கு UTI அதி­க­ளவில் ஏற்­படும். இவர்­க­ளுக்கு அதி­க­ள­வி­லான மருந்­து மாத்­தி­ரை­களை பரிந்­துரை செய்ய முடி­யாது. எனவே, நரம்­பு­வலி மருந்­தேற்றல் மூலம் நோய் தொற்­று நிலையை குறைத்து கட்­டுப்­ப­டுத்­தலாம். 

 

UTI ஆல் தோலில் (பிறப்­­பு­றுப்­பில்) அலர்ஜி ஏற்­பட்­டி­ருப்பின் அதற்கு தனி­யான சிகிச்சை மேற்­கொள்ள வேண்டும்.

 

சில­ருக்கு மருந்து மாத்­தி­ரை­களின் உப­யோ­கத்­தினால் சிறுநீர் கழிக்­கையில் கடுக்­கும் நிலை ஏற்­ப­­டலாம். அதற்­கான காரணம் என்­ன? 

 

உடலில் ஏற்­படும் வெப்­ப­நிலை அதி­க­ரிப்பே இதற்­கான காரணம். மருந்து பாவ­னையால் மாத்­தி­ர­மன்றி சரி­யான உணவு முறை இன்மை, கால­நிலை மாற்றம் கார­ண­மா­க­வும் யோனி­, ஆண்­கு­றியில் சிறுநீர் கழிக்­கையில் எரிச்­சல், வலி, கடுப்பு ஏற்­ப­டலாம். 

 

எவ்­வ­கை­யான உண­வு­களை எமது உண­வு வேளையில் சேர்த்­துக்­கொள்­­வதால் இந்­நோய் தாக்­கத்தை குறைக்­க­லாம்?

 

காரம், புளிப்­புச்­சுவை அடங்­கிய உண­வு­களை தவிர்த்துக் கொள்­ளலாம். கோழி இறைச்சி, அவித்த முட்டை, இறால், நண்டு போன்ற உடல் சூட்டை அதி­க­ரிக்கும் உண­வு­களை குறைக்கவேண்டும்.  

 

 

வெள்ளரிக்காய், பாகற்காய், முள்­ளங்­கி, கொகிலை, வாழைத்­தண்டு, வாழைப்­பூ என்­ப­வற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்­ளலாம்.

 

தயிர், இளநீர் என்­பன சிறந்­­தவை. வெளியில் சொல்ல வெட்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த எம்மில் பல­ருக்கு UIT பற்றிய தெளிவை புதன் கிழமை நாட்­களில் பெற்றுக் கொள்­ள முடியும். 

 

மேல­திக விப­ரங்­க­ளுக்கு:-


தேச­மா­னிய வைத்­திய நிபுணர்.
வைத்­தியர் ஆர்.­கே.கிர்ஷான்ந்,
சுகா­தார அமைச்சின் மாகாண ஆலோசகர்,
கல்வி அமைச்சின் போஷாக்கு சுகா­தார கல்வி ஆலோ­சகர்,
ஹெப்­பிலைப் வைத்­தி­­ய­சாலை,
கட்­டு­பெல்ல,
வெல்லம்­பிட்­டிய.


011 – 4269137,
077 – 7677847

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.