Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆஸ்மா நோய்க்கான காரணிகளும் அவற்றுக்கான தீர்வுகளும் - வைத்திய நிபுணர் கிர்ஷாந்தன்.
2016-01-03 13:32:11

ஆஸ்மா என்பது ஒரு நுரையீரல் சார்ந்த நோயாகும். உடலில் காற்று செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பால் ஆஸ்மா ஏற்படுகிறது. 

 

ஆஸ்மாவின் தாக்கம் ஏற்படும் நேரத்தில் மூச்சுக் குழாயை சுத்தியுள்ள தசைகளில் பிடிப்புக்கள் ஏற்படும் இதனால் காற்று வெளியேறுவது தாமதமாகிறது என்கிறார். வைத்திய நிபுணர் கிர்ஷாந்தன்.

 

ஆஸ்மாவை அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது. ஏனெனில் எம்பஸிமா கீழ் சுவாசத் தொற்றுக்கள் ( emphysema ) மூச்சுக் குழாய் அலர்ஜி ( lower respiratory infections), போன்ற நோய்களின் அறிகுறிகளைப் போல் ஆஸ்மாவின் அறிகுறிகளும் ஒத்திருப்பதால் ஆஸ்மாவை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

 

ஆஸ்மாவை வேறு நோயிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக மருத்துவர் இரத்த பரிசோதனை, செஸ்ற் எக்ஸ்ரே, ஸ்பைரோமெட்ரி ( மூச்சு உள்ளெடுத்து வெளிவிடும் பரிசோதனை). மூச்சுக் குழாய் ஆஸ்மாவை சரிவரக் குணப்படுத்தாவிடில் அவை நுரையீரல் ஆஸ்மாவிற்கு வழிவகுக்கும்.

 

எவ்வாறாயினும், நோய் கண்டறியப்படும் தருணம் அதற்கான சிகிச்சைகள் அதிவிரைவாக வழங்கப்பட்டால் நோய் தீவிரத் தன்மை அடைவதி லிருந்து தடுக்க முடியும்.

 

கார்டியாக் ஆஸ்மா -( இதயம் சம்பந்தமான ஆஸ்மா) என்பது ஒரு நோய்நிலையாகும். இவ் ஆஸ்மாவும் மற்றைய ஆஸ்மாக்களைப் போலவே அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால், அது இருதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும். உள்ளக ஆஸ்மா ( bronchitis ) என்பது குறைவாகவே ஏற்படுகின்ற ஒரு நோயாகக் காணப்படுகின்றது. இது பொதுவாக இளமை பருவத்திலேயே ஏற்படுகின்றது. 

 

 

ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி விளக்கம் தாருங்கள்.

 

விட்டு அகலாத இருமல், விரைவான சுவாசம் (wheezing)  தடுமல் தும்மல், விக்கல், வாந்தி எடுக்கும் வரை இருமுதல், களைப்பாக இருத்தல், நெஞ்சு வலி, பேசக் கடினமாக இருத்தல், உதடுகள் அல்லது சருமம் நீலநிறமாக இருத்தல் போன்றவை பொதுவாக வெளிக்காட்டப்படும் மாற்றங்கள் ஆகும். 

 

ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு என்ன?

 

இந்நோய்க்கு நிரந்தர தீர்வு கிடையாது. கட்டுப்படுத்த மாத்திரமே முடியும். ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அவசியம் வாழ்நாள் முழுவதும் இந்நோய் குறித்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். சளி தடுமல் ஏற்படும் பட்சத்தில் அவசியம் வைத்தியரின் உதவியை நாடவேண்டும். 

 

ஆஸ்மா நோயாளர்களுக்கு என்று விசேட உணவுமுறைகள் உண்டா?

 

ஆஸ்மா நோயாளர்கள் பொதுவாக குளுமையான உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிகளவில் காரம் சேர்த்துக்கொள்ளலாம். கேஸ்டிக் இல்லாத பட்சத்தில் மேலும் மிளகு, சீரகம், இஞ்சி போன்றவை ஆஸ்துமாவிற்கு சிறந்த உணவுகளாகும். 

 

மேலும் ஆஸ்மா நோயாளி ஒருவர் தினமும் இரண்டு மூன்று துளசி இலைகளை மென்று எஞ்சில் விழுங்குவாரேயாயின் காலப்போக்கில் ஆஸ்மா நோய் தாக்கம் மற்றும் தீவிரத்தன்மை குறைவடையும். 

 

 

சுவாசம் சம்பந்தமான இந்நோய் ஏற்படக் காரணம் சூழல் மாசடைவதாகும். ஆஸ்மாவானது பிறந்த குழந்தை முதல் வயோதிபர்கள் வரை வேறுபாடு இன்றி தாக்குகின்றது. காரணம் சுத்தமான வாயுவை எம்மால் உள் எடுக்க முடியாத நிலையேயாகும். 

 

ஆஸ்மா என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் தாருங்கள்

 

மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு கொண்டு செல்லும் பாதையாக தொழிற்படும் சுவாசக் குழாயில் ஏற்படும் ஒவ்வாமை  ஆஸ்மா எனப்படும். அதாவது சுவாசக்குழாய் உட்சுவர்களில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் உள் எடுக்கப்படும் பிராணவாயுவின் அளவு குறையும். மற்றும் உள் மற்றும் வெளி சுவாசத்தின் போது ஒரு வித ஒலி தோன்றும் இது wheezing எனப்படும். 

 

ஆஸ்மா ஒருவரை எவ்வாறான நிலைகளில் தாக்கும்?

 

*தடிமன் மற்றும் Flu போன்ற நோய்த்தொற்றுக்கள் விறகு மற்றும் எண்ணெய்ப் புகை


*சிகரட் அல்லது புகையிலை புகைப்பது 


*மாசடைந்த காற்று


*செல்லப்பிராணிகள்


*காலநிலை


*அஸ்பிரின், இப்புரபேன் போன்ற மாத்திரைகளின் பாவனை


*உடற்பயிற்சி போன்ற நிலைகளில் ஆஸ்மா தொற்று ஒருவரில் பரவும்.

 

ஆஸ்மாவுடன் தொடர்புடைய பிற நோய்கள் ஏதும் உண்டா?

 

சுவாசம் சம்பந்தமான நோய் என்பதனால் ஆஸ்மா நோயாளர்களுக்கு காய்ச்சல், மூச்சிறைப்பு, நெஞ்சுவலி, நிமோனியா, இருமல் என்பன ஏற்படலாம். இவற்றில் ஒருவரில் இருந்து இன்னொருவரை விரைவில் தாக்கக்கூடிய நோயாக pneumonia கருதப்படும் நுண்ணங்கிகள் அதாவது Bacteria, viruses parasites or even the Fungus போன்றவை Lung ஐ தாக்குவதால்  pneumonia ஏற்படும்.

 

சுவாசத் தொற்றுக்களுக்கான மருத்துவ தீர்வு யாது?

 

 

போசாக்கான உணவுகளை உட்கொள்ளல். Antibiotics பயன்படுத்தல். வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய vaccination போன்றவை சிறந்த தீர்வுகளாகும்.

 

சுவாசத்தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட பலர் பல ஆண்டுகளாக வைத்தியம் செய்தும் சிறந்த தீர்வைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர். வைத்திய ஆலோசனை பெற்று தங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

மேலதிக விபரங்களுக்கு,  

Happy life Hospital,  
137/3, Kattupale Junciton, Welampitiya.
 0114269137 
 0777677847 
 0774746674    

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.