Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தொற்றுக்குள்ளானவர்களை வாழ வழிவிடுவோம் - வைத்­தியர் கிர்­ஷாந்தன்.
2015-12-11 11:31:37

HIV  தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களை சமூ­கத்தில் ஒதுக்­கி­வைக்கும் தன்­மையை தவிர்த்து அவர்­க­ளுக்கும் வாழ­ வ­ழி­வி­டுவோம் என்­கிறார் வைத்­தியர் கிர்­ஷாந்தன்.

 

19 ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் ஆபி­ரிக்க நாடு­களில் பர­விய ஒரு வகை தொற்று நோய்க்கு தடுப்­பூ­சி­யாக ஏற்­றப்­பட்ட மருந்து ஒன்றின் தொழிற்­பா­டா­னது மனித மர­ப­ணுவில் ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தின் விளை­வாக இன்று உல­கையே ஆட்­டிப்­ப­டைக்கும் கொடிய நோயான HIV  மனி­தர்­க­ளி­டையே பரவ ஆரம்­பித்­தது.

 

இவ்­வை­ரஸின் தாக்­க­மா­னது நாளுக்கு நாள் அதி­க­ரித்­து­ வ­ரு­வ­தனால் மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

 

இலங்கையில் வாரத்துக்கு நான்கு பேர் எனும் விகிதத்தில் எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர் என்று தேசிய பாலியல் நோய்/ எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 

இதேவேளை, இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 167 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

 

இதனை முன்­னிட்டு Happy Life நலன்­புரி அமைப்பு மலை­ய­கத்தில் எயிட்ஸ் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. 

 

Happy life நலன்­புரி  அமைப்பில் HIVயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்கப்படும் சேவை குறித்தும் சரி­யான தக­வல்­களை பெற முடிந்­தது. 

 

AIDS என்றால் என்ன?

 

நோய் எதிர்ப்பு திறன் குறைப்­பாடு என்­பதே (A+I+D+S) இது என்ற நான்கு எழுத்­துக்­களால் குறிக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது, Acquired Immune Deficiency syndrome என்­ப­தாகும். AIDS நிலையை ஏற்­ப­டுத்தும் நுண்­ணங்கி ஒரு­வகை வைர­ஸாகும் இவ் நுண்ணங்­கியி­னையே HIV என அழைக்­கின்றோம் அதா­வது,   HIV –  Human Immunodeficiecy virus என்­ப­தாகும். 

 

HIV எனும் நுண்­ணங்­கியின் தொற்று எவ்­வாறு மனி­தனில் ஏற்­ப­டு­கின்­றது?

 

HIV தொற்­றுக்­குட்­பட்ட இரத்தம், விந்து, யோனித்­தி­ரவம் முன்­விந்து திரவம், தாய்ப்பால் போன்­ற­வற்றில் ஏற்­படும் நேரடித் தொடர்பு­ கா­ர­ண­மாக ஒரு­வரில் இருந்து வேறொ­ரு­வ­ருக்கு பர­வலாம்.

 

இவ்­வை­ர­ஸா­னது ஆச­னவாய் யோனிக்­குழாய் அல்­லது வாய்­வழி உட­லு­றவு மூலமும் இரத்­த­தா­னத்­தினால் கிருமி பாதித்த ஊசி­களின் உப­யோ­கிப்பதன் மூலமும் பர­வலாம் அத்­துடன் தாயி­ட­மி­ருந்து குழந்­தைக்கு கருத்­த­ரிப்பு, பிர­சவம், பாலூட்டல் போன்ற முறை­க­ளிலும் HIV கிருமி தொற்­றலாம். 

 

HIV எனும் நுண்­ணங்­கியின்  தாக்கம் உடலில் காணப் ­ப­டு­மாயின் எவ்­வாறான அறி­கு­றி­களை இனங்­காணலாம்?

 

HIV நுண்­ணங்கி ஒரு­வரின் உடலில் தாக்­கத்தை செலுத்தும் எனின் அவரின் நோயெ­திர்ப்பு மண்­டலம் படிப்­ப­டி­யாக செய­லிழக்கும். இதன்­கா­ர­ண­மாக அவர்கள் வாழும் சூழலில் காணப்­படும் தொற்று நோய்­களின் தாக்கம் அதி­க­ளவில் அதிகரிக்கும்.

 

இதனால் காச்சல், வியர்வை, வீங்­கிய சுரப்­பிகள், நடுக்கம், தளர்ச்சி  மற்றும் எடை குறைவு போன்ற அறி­கு­றிகள் காணப்­படும் பொது­வாக HIV நுண்­ணங்கி உடலின் எல்லா உறுப்­புக்­க­ளிலும் பர­வு­வதால், சமி­பாட்டு தொகு­தி­யுடன் தொடர்­பு­டைய நோய்கள் ஏற்­பட வாய்ப்­புகள் அதிகம். அதா­வது சுவாச நோய்கள், காச நோய்கள் ஏற்­படலாம்.

 

சில­ருக்கு HIV தொற்றின் பிந்­திய கால­நி­லையில் மறதி, பித்து பிடித்தல் போன்ற நிலை­மைகளும் ஏற்­ப­டலாம். சில­ருக்கு தோலின் ஊதா நிற கட்­டிகள் தோன்றும் இது ஒரு­வகை புற்று நோயா­கும், கபோசின் சதைப்­புற்று  என்­ற­ழைக்­கப்­படும்.

 

அத்­துடன் HIVக்கு உள்­ளான பெண்­க­ளுக்கு கருப்­பப்பை முகப்­புற்று நோய் ஏற்­படும். 

 

HIVகிரு­மி­ தாக்­கத்தை கட்­டுப்­படுத்த ஏதுவான வழிகள் எவை?

 

HIV கிருமி தாக்கும்  முன் அதை தவிர்த்­துக் ­கொள்­வதே சிறந்த முறையாகும். ஏனெனில் இது­வ­ரையில்  HIV தொற்­றுக்­கான  நிர­ந்­தர தீர்­வாக எந்த ஒரு மருந்தும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை ஓரி­னச்­சேர்க்­கை­யா­ளர்­களோ யாராக இருப்­பினும் பாது­காப்­பான முறையிலே உட­லு­றவில் ஈடு­ப­ட­வேண்டும். கலாசார சீரழிவுகளே பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

HIVதொற்றுக்குள்ளானவர்களுக்கு உங்களது நலன்புரி அமைப்பின் மூலம் ஆற்றப்படும் சேவைகள் எவை?

 

நோயாளர்களின் தன்னம்பிக்கை தூண்டும் வகையில் ஆலோசனைகள், கருத்தரங்குகளை நடத்துதல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

 

மேலதிக விபரங்களுக்கு, 
Happy life Hospital, 
137/3, Kattupale Junciton,
Welampitiya.
0114269137 / 0777677847 / 0774746674   
 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.