Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
முழங்கால் வலியும் அதற்கான சிகிச்சைகளும் - வைத்தியர் எஸ்.சிவஞான சுந்தரம்.
2015-11-29 10:51:44

முழங்கால் வலி ஒரு உலகளாவிய நோய். எல்லா வயதினரையும் ஆண், பெண் இருபாலாரையும் பாதிக்கும் நோய். 

 

உடல் வலி கூடுவதாலும் முறையற்ற உணவுப் பழக்கத்தாலும் கூட முழங்கால், மூட்டு வலி வருவது தவிர்க்க முடியாது என்கிறார் வைத்தியர் எஸ்.சிவஞான சுந்தரம்.

 

 மூட்டு அழற்சி என்பது நுட்பமாகப் பார்த்தால் மூட்டுக்கள் தொடர்ந்து வேலைசெய்வது. இது 50 வயதிற்கு மேற்பட்டோரில் பொதுவாகக் காணப்படும், பலர் ஏதோவொரு வடிவில் மூட்டு அழற்சியின் வெளிப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

 

ஒருவருக்கு வயதாகுகையில் எலும்புகளுக்கு இடையில் காணப்படும் குருத்தெலும்பு மெல்லியதாக ஆவது ஆரம்பமாகிறது, மற்றும் பளுவைத் தாங்கும் அதன் திறன் குறைகிறது. இது உடம்பின் முழு பாரத்தையும் எலும்பின் பரப்பில், குருத்தெலும்புக்குக் கீழே இடைமாற்றுவது, எலும்பு முளை உருவாவதற்கு வழிவகுக்கிறது.

 

இந்த நிலைமையின் மிகப் பொதுவான அறிகுறிகள் வீக்கமும் வலியுமாக அல்லது முழங்கால் இறுகிக் கொள்வதாக இருக்கும். வழக்கமான நடவடிக்கைகள் முழங்கால் இணைப்பில் சிறுகாயங்களை ஏற்படுத்தலாம்.

 

வலி மரத்துப்போகவும் கூடும், முன்பகுதியில், முழங்கால்களைச் சுற்றி எல்லா இடத்திலும், முழங்காலின் பின்பக்கம், முழங்காலின் பக்கவாட்டில் அல்லது தொடை நெடுகிலும் அல்லது கெண்டைக்காலில் மட்டும் வலி கடுமையாக இருக்கும்.

 

படிகளின் மேலே ஏறுதல், கீழிறங்குதல், உட்காருதல், எழுதல், கால்களைக் குறுக்காகப் போட்டு உட்காருதல், நடத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ஒட்டி வலி உக்கிரமடைவது வேறுபடவும் கூடும்.

 

இந்நோய்க்கான பொதுவான காரணங்கள்

 

vஅலுவலகத்தில் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது. 


vவேலையில் ஏற்படும் மன அழுத்தம்


vஉடல் பருமன்


vபோதுமான உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை

 

இந் நோய்க்கு மருந்து என்று சொன்னால் வலி நிவாரணிகளும், வலியினால் உண்டாகும் வீக்கம் குறைய கொடுக்கப்படும் மருந்துகளும் தான் உள்ளன.

 

இவை ஆரம்பத்தில் வலி, வீக்கம் குறைய உதவினாலும் நீண்ட காலத் தீர்வை கொடுப்பதில்லை. எனவே, இவ்வாறான ஒரு நிலையில் முழங்கால் வலி வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கான சிகிச்சை முறை. 

 

இந்நோய் வந்தவுடன் நாம் பெரும்பாலும் செய்வது மூட்டு வலி தாங்க முடியவேயில்லை என்று ஒரேடியாக தங்களது நாளாந்த நடைவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது தான். குறிப்பாக, நடப்பதை தவிர்த்து கொள்வது அல்லது குறைத்து கொள்வது, மாடிப் படிகளில் ஏறி இறங்குவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்வது.

 

இதற்கும் மேல் தங்களது வீட்டில் இருக்கும் பாரம்பரிய கழிப்பறைகளை மேற்கத்திய பாணிக்கு மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் இவர்கள் தாங்களாகவே கை, கால் மூட்டுகளுக்கு கொடுக்க வேண்டிய சிறு சிறு அசைவுகளை கூட தவிர்த்துக் கொள்கிறார்கள்.   

 

ஒரு விடயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நமக்கு வலி வருவதே நம் உறுப்புகளை நாம் சரிவர பயன்படுத்தாதது தான். எனவே, நன்றாக திட்டமிடப்பட்ட உடற்பயிற்சியை விடாமல் செய்ய கூடிய உறுதியான மனம இரண்டும் தான் இந்த வலியில் இருந்து விடுதலைக் கொடுக்கும். 

 

முழங்காலின் அமைப்பை பார்த்தால் இம் மூட்டானது பல தசை தொகுதிகளின் கூட்டமைப்பில் அமையப்பெற்ற சிறப்பான அமைப்பாகும்.

 

இந்த தசைகளின் நெகிழ்வுத் தன்மையையும் செயல் திறனையும் உறுதிபடுத்தும் வகையிலான உடல் மகிழ்ச்சியுடன் கூடிய சிகிச்சை முறையே தற்காலத்திற்கு ஏற்ற சிகிச்சை முறையாகும்.  

 

உடற்பயிற்சியின் போது முக்கியமாக பின்வரும் நான்கு பயிற்சிகள் இன்றி அமையாதவை. அவை, 


vstretching - எனப்படும் நீட்சி பயிற்சிகள் 


vFlexibility பாதிக்கப்பட்ட தசைகளின்  நெகிழ்ச்சி தன்மையை  மறுபடி மீட்டு எடுப்பதற்கான பயிற்சிகள். 


vStrengthing -_ இழந்து போன வலுவை மீண்டும் பெற உதவும் பயிற்சிகள். 


vFunctionclity -_ செயல்  திறனை மீட்கச் செய்யும் பயிற்சிகள். (வலியினால் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை நிதானமாக செய்ய ஆரம்பித்து) முதலில் இந்த தசைகளை நன்றாக நீட்டி பழக வேண்டும். நீங்களாகவே முடிந்த அளவு நீட்டி மடக்கி பழகவேண்டும்.

 

நீட்சி பயிற்சியிலேயே நெகிழ்வுத் தன்மையும் வந்து விடும். ஓரளவு பழைய நிலைக்கு திரும்பிய பின் உறுதிப்பாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

சிறிது காலம் ஆன பின் முழங்கால் வலி வருவதற்கு முன் என்னென்ன வேலைகளை செய்து கொண்டு இருந்தீர்களோ மெல்ல மெல்ல அவைகளை செய்யத் தொடங்குகள். 

 

முதலில் 5 நிமிடம் நடைப்பயிற்சி பிறகு 10 நிமிடங்கள் அதேபோல் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் தரையில் அமர்ந்து தினமும் ஒரு முறை மாடிப் படி ஏறி இறங்குகள். நிதானமாக நேரத்தை கூட்டுங்கள். நாட்கள் செல்ல செல்ல உங்களை அறியாமல் பழைய நிலைக்கு வந்து விடுவீர்கள். 

 

சில சமயங்களில் கீழ் முதுகில் ஏற்படும் விறைப்பு (Stittness) முதலியவற்றாலும் கூட முழங்கால் பாதிக்கப்படக் கூடும். அப்போது கீழ் முதுகு உறுதிபட  தேவையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

 

மூட்டு வலி ஏற்பட்டால் இயல்பாக நடக்க முடியாது. கதிரையில் இருந்து எழும்பு வதிலும் சிரமம் ஏற்படும். இதை தவிர நாட்பட்ட மூட்டு வலியால் வேறு பல உபாதைகளும் உண்டாகும் ஆபத்தும் உண்டு. இவற்றை எல்லாம் எளிதில் தவிர்த்துக்கொள்ள கூடிய பல சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளன. 

 

மூட்டு இணைப்புகளில் திடீர் என்று வீக்கம் அல்லது அழற்சி, வலி ஏற்பட்டால் இது பொதுவாக இருவகைப்படும்.

 

01. ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoar thritis)

02. ரூமட்டாய்டு, ஆர்த்ரைட்டில் (Rheumatoid arthritis )
இவை இரண்டும் பெண்களை அதிகம் பாதிக்கும் மூட்டு வலிகள் ஆகும். 

 

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்


முழங்காலில் உள்ள இணைப்பிலும்,   எலும்புகளுக்கிடையிலும் ஒரு வித சவ்வுதான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டு எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு இது பெரிதும் உதவுகிறது. ஏதாவது காரணத்தால் இவ் சவ்வு தேய்ந்து போகும் போது தான் வலி உண்டாகிறது. 

 

ரூமட்டாய்டு ஆர்திரைட்ஸ் (Rheumatoid arthritis )


ஒவ்வொருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்புச் சக்திசெல்கள் இருக்கும். இந்த செல்களில் பாதிப்பு ஏற்படும் போது முழங்கால் மற்றும் கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதுவே ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டில்.

 

குடும்பத்தில் முன்னோர்கள் யாரேனும் ஒருவருக்கு இருந்தால் பரம்பரையில் மற்றவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் குணங்குறிகள் குறிப்பாக, காலை நேரங்களில் கைவிரல் மற்றும் முழங்கால் மூட்டுகளில் இறுக்கி பிடித்த மாதிரி உணர்வு வரும்.

 

வீக்கம் உண்டாகும். இதனால் வலி ஏற்படும் குளிர்காலங்கள், மழைபெய்யும் காலங்களில் வலி அதிகரிக்கும். கைவிரல்களை நீட்டவோ மடக்கவோ முடியாது. உடலில் உள்ள மற்றைய மூட்டுகளும் பாதிக்கப்படும். 

 

நாளடைவில் நுரையீரல், இருதயம்,  நரம்பு மண்டலம் கூட பாதிப்புக்கு உள்ளாகலாம். 

 

 ஒருவரை இந்த நிலைமைக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவது எது?


கூடுதலான எடை:


முழங்கால் எப்போதும் தாங்கக்கூடியதை விட அதிக பளுவை சுமப்பதன் காரணமாக வெகு விரைவில் மூட்டு சிதைவதற்கும் தேய்மானம் அடைவதற்கும் இது வழிவகுக்கிறது.

 

பரம்பரை:


பலமான எலும்பு மூட்டழற்சி நோய் கண்ட குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள் இளவயதிலேயே இது வருவதற்கான அதிகவாய்ப்பை எதிர்கொள்கின்றனர். மேலும் பெண்களுக்கு மூட்டழற்சி வருவதற்கு பொதுவான காரணமாக இந்தக் காரணி பார்க்கப்படுகிறது.

 

காயம்:


எலும்புகளில், குருத்தெலும்புகளில், அல்லது முழங்கால் தசைநார்களில் முன்னர் எப்போதோ ஏற்பட்ட அல்லது இடையிலே ஏற்பட்ட காயம் ஒருவரை வெகு சீக்கிரம் இந்நோய்க்கு ஆளாக்கும் நிலையை ஏற்படுத்தும், அல்லது கடும் ஆபத்தான எலும்பு – மூட்டழற்சியின் வடிவங்களுக்கு ஆளாக்கும் நிலையை ஏற்படுத்தும்.

 

பலவீனமான தசைநார் உறுதி:


முழங்காலைச் சுற்றியுள்ள தசைநார் போதுமான அளவு பலம் இல்லை என்றால் எலும்பு- மூட்டழற்சி மிக மோசமடையக் கூடும்.

 

எடையைக் குறையுங்கள்:


இதைச் செய்வதை விட சொல்வது மிகவும் எளிதாக இருந்தாலும், நீங்கள் அதிக பளுவை உங்கள் இணைப்புகளில் வைப்பது, மேலும் நிலையை மோசமாக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்: 


சுற்றியுள்ள தசைகள் போதுமான பயிற்சிகள் மூலம் பலப்படுத்தப்பட வேண்டும். மூட்டு காயம், வீக்கம் மற்றும் குறைந்த வாய்ப்பு அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

 

முழங்காலுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். மூட்டுகள் சேருமிடத்தில் வீங்கும் போதெல்லாம் ஒரு மீள் கால்மூட்டுறை பயன்படுத்தப்பட வேண்டும். வீக்கம் அல்லது பிடிப்பு, வலி நிவாரணத்துக்கு தொடர்ந்து. சிகிச்சை பெறவேண்டும்.

 

 

மேலதிக விபரங்களுக்கு:  
வைத்தியர் 
எஸ்.சிவஞானசுந்தரம், 
136 B சென்.ஜேம்ஸ் வீதி,
கொழும்பு – 15.  
077 – 3084556   
011 – 2521297   

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.