Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கீழ் வாதத்திற்கான காரணங்களும் அவற்றுக்கான வைத்திய சிகிச்சைகளும் - வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
2015-11-22 11:22:42

கீழ்வாதம் என்பது  பொதுவாக கால் பெருவிரலையே தாக்கும். சிலருக்கு மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், முதுகென்பு போன்றவற்றையும் பாதிக்கும். மூட்டுக்களில் யூரிக் அமில படிவம் காணப்படுமாயின் அம் மூட்டுப்பகுதியில் வீக்கம், எரிச்சல், வெப்ப உணர்வு விறைப்புத் தன்மை மற்றும் வலி ஏற்படும் என்கிறார் வைத்திய நிபுணர் கிர்ஷாந்த். 

 

கீழ்வாதம் என்றால் என்ன?

 

எங்கெல்லாம் இரண்டு எலும்புகள் இணைகின்றனவோ, அந்த இணையும் இடம் மூட்டு எனக்  கூறப்படுகிறது. ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு (CARTILAGE)என அழைக்கப்படுகிறது.

 

இது குஷன் (CUSHION) ஆகவும் அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படு வதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கிறது.

 

இந்த குருத்தெலும்பு ஸினோவியல் திரவம் (SINOVIAL FLUID) எனும் பசைபோன்ற திரவத்தால் மசகுத்தன்மை அடைகிறது. 

 

இந்த திரவம் மூட்டுக்கள் இதமாய் இயங்க உதவுகிறது. கீல்வாதத்தின்போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. இணக்கத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். 

 

கீழ்வாதம் எப்படி பாதிக்கிறது?

 

கீழ்வாதம், எடையைத் தாங்கும் உங்கள் உடல் உறுப்புகளான மூட்டுகளில் இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முதுகெலும்பை முக்கியமாகப் பாதிக்கிறது. பெண்களுக்கு கைகளை யும் பாதிக்கலாம். குறிப்பாக, விரல்களின் மூட்டுக்களையும், கட்டைவிரல் அடிப்பகுதியையும் பாதிக்கலாம்.

 

முக்கியமான பிரச்சினை எதுவெனில் வலிதான். பாதிக்கப்பட்ட மூட்டில் சாதாரண வலியில் இருந்து தாங்க முடியாத வலி வரை பலவிதமாக வலி ஏற்படலாம். அதிகமாக செயற்படும் போது தாங்க முடியாத வலியால் பாதிக்கப்படலாம் என்பதோடு, நடக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

 

சில சமயங்களில், பாதிக்கப்பட்ட மூட்டில் வீக்கம் ஏற்படும். காலையில் எழுந்திருக்கும் போது மூட்டுகளில் விறைப்புத் தன்மையையும், சில சமயங்களில் இலேசான வலியையும் உணரலாம். உறக்கத்தின் போது நீண்டநேரம் மூட்டு இயங்காததால், காலையில் இந்நிலை ஏற்படும். 

 

சில நிமிடங்களில் சரியாகி, சாதாரண நிலைக்கு வந்துவிடும். இந்த நோயின் பாதிப்பு கூடும்போது, வலிகள், விறைப்பு உணர்வு போன்றவை ஒரு நாளில் பல முறைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

கீழ்வாதத்தை சமாளித்து கட்டுப்பாட்டுடன் வாழும் விதம், மருந்துகளை சரிவர உட்கொள்வதுடன் மட்டுமின்றி,  உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய ஒருங்கிணைந்த திட்டத்தை மேற்கொள்ள வைத்தியரிடம் ஆலோசனைகளை பெற்று அதன்படி செயற்படவும்.

 

Gout எனப்படும் கீழ்வாதம் ஏற்படக் காரணம் என்ன?

 

மூட்டுக்களில் ஏற்படும் யூரிக்க அமில படிவினால் Gout ஏற்படுகின்றது.

 

Gout ஏற்பட்டுள்ளது என்பதை சாதாரண மனிதரால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?

 

Gout கீழ் வாதமானது பெண்களை விட ஆண்களையே அதிகளவில் தாக்குகின்றது. பொதுவாக கால் பெருவிரலையே தாக்கும் சிலருக்கு மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், முதுகென்பு போன்றவற்றையும் பாதிக்கும்.

 

மூட்டுக்களில் யூரிக் அமில படிவம் காணப்படுமாயின், அம் மூட்டுப்பகுதியில் வீக்கம், எரிச்சல், வெப்ப உணர்வு விறைப்புப் தன்மை மற்றும் வலி ஏற்படும். 

 

பொதுவாக வாத நோயாளர்களுக்கும் வலி ஏற்படுவதை போன்று வாத Gout நோயாளர்களுக்கும் வலி ஏற்படுமா?

 

Arthritis மற்றும் Gout  என்பன மாறுப்பட்ட நோய்களாகும். Gout  ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு வகையான வலிகள் ஏற்படலாம். 
ஒன்று மூட்டின் உள்ளே படிமங்களில்  ஏற்படும் வலி.

 

மற்றையது தோல் பகுதியில் ஏற்படும் வலி. படிமங்களில் ஏற்படும் வலியை விட, தோலில் ஏற்படும் வலி அதிகளவில் வேதனையை தரும். காரணம், தோலில் நூல் போன்ற சிறிய திணிவு ஒன்று படுமேயானாலும் கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவு வலி ஏற்படுவதுடன், தோல் சேதமடையும் வாய்ப்புக்களும் அதிகம். 

 

Gout  ஏற்படுவதற்கான காரணம் என்ன?

 

Gout ஏற்படுத்துவதற்கு முதன்மைக் காரணியாக தாய்வழி கடத்தல் காணப்படுகின்றது. பரம்பரையில் யாருக்கேனும் இந்நோய் இருந்திருந் தால் பரம்பரை அலகுகள் மூலம் கடத்தப்படலாம். 

 

சிறுநீரக நோயாளர்களுக்கு ஏற்படலாம். காரணம் குருதியில் அதிகரிக்கும் யூரிக்கமில கழிவுகள் சிறுநீரின் மூலம் சரியாக வெளி யேற்றப்படாமை காரணமாக மூட்டுக்களில் யூரிக்கமில  படிமங்கள்  தோன்றி Gout ஐ உருவாக்கும். 

 

பியூரின் அடங்கிய உணவுகள் (போயிகிராஸ், நண்டு, சாம்பென், போரம்) மற்றும் அல்ககோல் பாவனையாலும் ஏற்படலாம். 

 

குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கு எற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளது. காரணம் அவர்கள் குறிப்பிட்ட சில மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருவதனால் உடலில் ஏற்படும் மாத்திரை இசைவாக்கத்தால் கழிவகற்றல் குறைவடைந்து, யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிக்கும்.

 

இதய நோயாளர்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. (RBC) செங்குருதி சிறுதுணிக்கையின் சடுதியான அதிகரிப்பு காரணமாக யூரிக் அமில உற்பத்தி கூடி அவை படியும் வாய்ப்புக்கள் உண்டு.

 

இரத்த புற்று நோயாளர்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கும் ஏற்படலாம். 

 

Gout  இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?


உடலில் யூரிக் அமிலம் படிவதை தடுப்பதே ஒரேசிகிச்சை முறையாகும். இதற்காக சிறுநீர், மலம் வெளியேறுவதை சீர்படுத்தும் சிகிச்சை முறைகளையே அதிகளவில் பரிந்துரை செய்கின்றோம். 

 

கீழ்வாதம் (Gout) குறித்த அறிகுறிகள் காணப்படுமாயின், வைத்தியரை நாடி ஆலோசனை பெற்று அத்துடன் Goutஇற்கான விசேட சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.

 

மேலதிக விபரங்களுக்கு 
Happy life Hospital 
137/3, Kattupale Junciton
Welampitiya
0114269137
0777677847
0774746674 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.