Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வெள்ளைப்படுதலும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் - வைத்­திய நிபுணர் கே.ஆர்.கிர்ஷாந்த்.
2015-11-08 10:55:24

பெரும்­பா­லான பெண்கள் வெள்ளைப்­ப­டுதல் நோயால் அவ­தி­யு­று­கின்­றனர். எனினும், இந்த நோய்  பால் உறுப்­புடன் சம்­பந்­தப்­பட்­டதால் இது குறித்து மருத்­து­வரை நாடு­வதை தவிர்க்­கின்­றனர்.

 

இதனால் நோயின்  தீவிரம் அதி­க­ரிக்­குமே தவிர நோய்­கு­ண­மா­வ­தற்கு வாய்ப்பே இல்லை அத்­துடன், சிலர் தனக்கு ஏற்­பட்­டுள்ள நோய் என்னவென்­ப­தையே இனங்­காண முடி­யாத நிலை­யிலும் உள்­ளனர் என்­கிறார் வைத்­திய நிபுணர் கே.ஆர்.கிர்ஷாந்த்.

 

வெள்ளைப்படுதல் பற்றி விளக்கம் தாருங்கள்

 

பெண்­களின் பிறப்­பு­றுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்­ணிறக் கசிவு அல்­லது திரவம் ஒன்று கட்­டுப்­பாடு இன்றி வடிந்து கொண்­டி­ருக்­கு­மாயின் அது வெள்­ளைப்­ப­டுதல் நோய் என்­கிறோம். 

 

இந்நோய்க்­கான கார­ணங்கள் அறி­கு­றிகள்:

 

vபெண் பிறப்­பு­றுப்பில் அதி­க­ளவு வெள்­ளைப்­ப­டுதல்.

 
vவெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் துர்நாற்­றத்­துடன் சளிபோல் சுரத்தல்.


vவெள்­ளைப்­படும் இடங்­களில் அரிப்பு, எரிச்சல் ஏற்­ப­டுதல்.


vஎரிச்­ச­லுடன் சிறுநீர் கழித்தல்.


vவெள்ளைப்படு­வதால் உடல் சோர்வு, அடி­வ­யிறு வலி, கை கால் வலி உண்­டாதல்.


vஇடுப்பு வலி, முதுகு வலி.


vஉடல் மெலிந்து போதல். இளைத்தல்.


vஇந்நோய் உள்­ள­வர்­க­ளுக்கு சிறுநீர் இறங்­கு­வ­தற்கு முன்போ பின்போ வெண்­ணி­றத்­துடன் சீழ்போல் வெளிப்­பட்டு சிறுநீர் போகும் போது எரிச்­சலை ஏற்­ப­டுத்தும்.


vஉடல் மெலிந்து இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்­டு­க­ளிலும் அதிக வலியை உண்­டாக்கும்.


vஉடல் நலி­வ­டைந்து விரை­வி­லேயே களைப்­ப­டையச் செய்­வதால் மாடிப்­படி ஏறு­வ­தற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்­கு­வ­தற்கும் முடி­யாது.


vபிறப்பு உறுப்­பு­களில் அரிப்பு, புண் ஏற்­ப­டு­வ­தோடு, வெப்பம் அதி­க­மா­வதால் வயிற்றைப் பிடித்து இழுப்­பது போன்ற உணர்வு, கண்­களைச் சுற்றி கரு­வ­ளையம், மலச்­சிக்கல், அடிக்­கடி தலை­வலி ஆகி­ய­வையும் ஏற்­படும்.


vமாத­வி­லக்கு  ஒழுங்கு முறைப்படி இன்றி இருப்­பது. 

 

வெள்ளைப்­ப­டுதல் நோய்க்­கான காரணம் என்ன?

 

பொது­வாக உடல் வெப்பம் அதி­க­ரிப்­பத­னா­லேயே வெள்­ளைப்­ப­டுதல் நோய் ஏற்­ப­டு­கின்­றது.

 

சில­ருக்கு பெண்­ணு­றுப்பில் ஏற்­படும் பங்­கசு தொற்று  கார­ண­மா­கவும் ஏற்­ப­டலாம். நீரிழிவு நோயா­ளி­க­ளுக்கு ஏற்­பட வாய்ப்­புண்டு. உட­லு­ற­வி­னாலும் தொற்று ஏற்­ப­டலாம். 

 

வெள்ளை படுதல் நோயில் இருந்து விடு­பட என்ன செய்­யலாம்?

 

சரி­யான தூக்­க­மின்மை, உண­வுக் ­கட்­டுப்­பா­டின்மை கார­ண­மா­கவே வெப்­ப­நி­லையில் மாற்றம் ஏற்­ப­டு­கின்­றது.

 

உடல் வெப்பம் அதி­க­ரிக்­கையில் வயிறு காயும். இதனால் உடலின் நீர்ச்­சத்து குறையும்.

 

எனவே, உடல் பல­யீ­ன­ம­டையும். இந்த நிலையில் வெள்­ளைப்­ப­டுதல் நோய் ஏற்­ப­டு­கின்­றது.  எனவே, குறைந்­தது 6 – 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

 

உடல் வெப்­பத்தை தணிக்­க­கூ­டிய உண­வு­க­ளை அதி­க­ளவில் உணவில் சேர்த்­துக்­கொள்ள வேண்டும்.

 

தினமும் நீராட வேண்டும். சிறுநீர் கழித்த பின் பெண்­ணு­றுப்பை கழுவி சுத்தம் செய்­ய­வேண்டும் இதன் மூலம் பங்­கசு தொற்றால் ஏற்­படும் பாதிப்பில் இருந்து காத்­துக்­கொள்­ளலாம்.

 

கழு­விய சுத்­த­மான உள்­ளா­டை­களை உப­யோ­கிக்க வேண்டும். உள்­ளா­டைகள், துடைப்­பான்­களை  ஒவ்­வொ­ரு­வரும் தத்­த­னியே உப­யோ­கிக்க வேண்டும். வேறு ஒரு­வ­ரது ஆடை­களை பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்டும்.

 

வியர்வை படி­தலை தடுக்க வேண்டும். சற்று தளர்­வான ஆடை­களை அணிய வேண்டும். 

 

உடல் வெப்­பத்தை தணிக்கும் உண­வுகள் பற்றி கூறுங்கள்?

 

உழுந்து, சவ்வ­ரிசி, தயிர், யோகர்ட் மற்றும் இளநீர் என்­பவை சிறந்த உண­வு­க­ளாகும். மற்­றது நாட்­ட­ரிசி, சிவந்த பச்சை அரிசி சிறந்­தது. சம்பா அரிசி, கோதுமை மா உடலின் வெப்­ப­ நி­லையை அதி­க­ரிக்கும். ஆகையால் இவற்றை தவிர்க்­கவும். 

 

வைத்­தியர் என்ற வகையில் உங்­களின் ஆலோசனையை தாருங்கள்

 

வெள்­ளைப்­ப­டு­தலால் பாதிக்­கப்­படும் பல பெண்கள் வெளியில் சொல்ல வெட்­கப்­பட்டு மருத்­து­வரை அணு­கு­வ­தில்லை. அதன் விளைவு கர்ப்­பப்பையை அகற்­று­வ­தோடு, கர்ப்­பப்பை புற்று நோய் ஏற்­படக் கூட கார­ண­மா­கி­றது.

 

வெள்­ளைப்­ப­டுதல் சிறிய வயது பெண்கள் முதல் வய­தான பெண்கள் வரை அனை­வ­ருக்கும் வரு­கி­றது.

 

குறிப்­பாக, 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்­க­ளுக்கு தான் அதி­க­மாக வரு­கி­றது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது.

 

சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். 

 

மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு.

 

நோயின் குணம் நாட்பட நாட்பட நிறமும் மாறுபடும். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.

 

பொது­வாக ஒரு சில பெண்­க­ளுக்கு வய­திற்கு வந்த நாள் முதலே வெள்ளைப்படுதல் இருக்கும்.

 

தவறான உணவுப் பழக்­கங்கள். பழுத­டைந்த உணவுப் பொருட்­களை உண்­ணுதல், சுகா­தா­ர­மற்ற உள்­ளா­டைகள், சுய இன்பம் காணுதல், மாத­விடாயைத் தூண்டும் மாத்­தி­ரை­களை உண்­ணுதல், ஊளைச் சதை உள்­ள­வர்கள், இரத்தச் சோகை உள்ள­வர்கள், உடலில் அதிக வெப்பம்,  அதிக உடலு­றவில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்­படும்.

 

கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்­ள­வர்கள். சில­ருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்­ளைப்­ப­டலாம். இரத்த சோகை உள்­ள­வர்­க­ளுக்கு இந்நோய் அதி­க­மாக காணப்­படும்.

 

தூக்­க­மின்மை, மனக்­க­வலை, கல்­லீரல் பாதிப்பு போன்­ற­வற்­றாலும் இந்நோய் ஏற்­ப­டலாம். சுகா­தா­ர­மற்ற இடங்­களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்­புண்டு.

 

அதிக மன உளைச்சல், மன பயம், சத்­தற்ற உணவு போன்­ற­வற்றால் வெள்ளைப் படுதல் உண்­டா­கி­றது.

 

மாத­விடாய் நின்­ற­வர்­க­ளுக்கும் வய­தா­ன­வர்­க­ளுக்கும் வரும் வெள்­ளைப்­ப­டுதல் மிக ஆபத்­தா­னது, இதனை ஆரம்­பத்தில் கவ­னிக்­கா­விட்டால் மிகப் பெரிய நோய்­க­ளுக்கு இது அடித்­த­ள­மாக அமைந்­து­விடும்.

 

எனவே, இந்நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உடனே மருத்­து­வரை அணுகி சிகிச்சை மேற்­கொள்­வது மிகவும் அவ­சியம்.

 

நுண்­ணுயிர்த் தொற்று, சிறு­நீர்ப்­பாதை நோய்த்­தொற்று, கர்ப்பப்பை வாய்ப்­ப­குதி வீங்­குதல், கர்ப்பப்பை மற்றும் யோனியில் புண், புற்­றுநோய் போன்­ற­வற்றால் வெள்­ளைப்­படும் நோய் ஏற்­ப­டலாம். சில சமயம் துர்நாற்­றமும் ஏற்­படும்.

 

பல பெண்கள் கவ­னிக்­கா­மலும், வெளியில் சொல்ல வெட்­கப்­பட்டும் விட்டு விடு­வ­துண்டு.

 

இதை கவ­னிக்­காமல் விடுவதால் இன­வி­ருத்தி உறுப்­பு­களின் ஒரு பகு­தி­யையோ அல்­லது பல பகு­தி­யையோ பாதித்து தீவி­ர­மான நோய்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக மாறிவிடும்.

 

சில வேளையில் கர்ப்­பப்பையை எடுக்க கூடிய சூழ்­நிலை கூட உண்­டாகும்.

 

மேலதிக விபரங்களுக்கு, 
கே.ஆர்.கிர்ஷாந்த்,
சுகாதார அமைச்சின் மாகாண ஆலோசகர், 
ஹெப்பி லைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.
தொலைபேசி இலக்கம்
011-4269137/077-4746674
 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.