Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தற்­காப்புக் கலையும் ஆலோ­ச­னை­க­ளும் - டாக்டர்.வி.தன­ராஜா.
2015-10-18 11:08:06

மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும்.உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன.

 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு  முன்பே தற்காப்பு கலையானது தமிழகத்திலும் , வடகிழக்கு இலங்கையிலும், கேரளாவிலும் , ஆந்திராவின் தென் பகுதியிலும் புழக்கத்தில் இருந்தது என்கிறார் அக்­கு­பஞ்சர் மருத்­து­வரும் கராத்தே நிபு­ண­ரு­மான டாக்டர்.வி.தன­ராஜா.

 

தற்காப்பு கலை பற்றி விளக்கம் தாருங்கள்?

 

ஆரம்ப காலத்தில் கல்­வி­கற்­கா­த­வர்கள் மாத்திரம் இந்த கலையை கற்றார்கள். ஏனை­ய­வர்கள் சண்டை என சொல்லி தற்காப்பு கலையை பெரிதும் விரும்புவதில்லை.

 

தற்காப்பு கலையானது சிறுசத்தத்தின் மூலமும் அங்க அசைவு மூலமும் ஒருவரை அறிந்து கொள்ள முடியும். சிறு சிறு ஆபத்துக்களிலிருந்து எம்மை பாதுகாத்துகொள்ளலாம்.

 

மேலும் தற்காப்பு கலையில் தலைமைத்துவம் மற்றும் உடற்பயிற்சி வழங்கப்படுகின்றது.

 

அத்தோடு நாம் தற்காப்பு கலை பயிற்சிக்கு முன்பு விளையாட்டு  ஒன்றை விளையாட வைத்து, பிறகு தான் இந்த பயிற்சியை ஆரம்பிப்போம்.
எமது வகுப்பில் மாணவர்கள், பெரியவர்கள் இடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்-? எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும்? என பல நல்ல பழக்கங்களை நாம் தற்காப்பு கலை வகுப்பில் கற்றுக்கொடுக்கிறோம்.

 

ஆரம்ப காலத்தில் பிள்ளைகள் படிக்கவேண்­டும் எனக் கூறி எதையும் கற்க விடுவதில்லை. ஆனால், இப்போது மாறிவிட்டது. 

 

மாணவர்களிடம் அன்பாக பேசி பழகி நான் கற்றுக்கொடுக்கிறேன். இந்த தற்காப்பு கலையில் ஐந்து நிறப்பட்டிகள் உண்டு.

 

இதில் வெள்ளை, ஒரேன்ஞ், பச்­சை, பிறவுன், கறுப்­பு என்ற நிறங்­க­ளில் பட்டிகள் உண்டு ஒவ்வொரு தரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

 

மாணவர்களின் திறமையின் அடிப்படையில் அவர்களின் கற்கையின் காலத்தை குறைத்து விரைவில் கறுப்பு பட்டியை பெற்றுக்கொள்ள முடியும்.

 

கறுப்புப் பட்டி தான் இந்த தற்காப்பு கலை பயிற்சியின் இறுதிப் பட்டியாகும். இதில் பத்து பிரிவுகள் உண்டு. இவை ஒவ்வொரு தரத்தின் அடிப்படையில் அமைந்து காணப்படுகின்றன.

 


தற்காப்பு கலை செய்வதால் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படுமா?

 

ஆண்கள் போன்ற உடல் தோற்றமாகலாம் என பலர் கருதுகின்றனர். ஆனால், இது தவறான எண்ணம்.

 

தற்காப்பு கலை பயிற்சியை செய்வதன் மூலம் பெண்களின் உடலில் எந்த மாற்றமும் நிகழாது. ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் நல்ல உடற்பயிற்சியாகும்.

 

எந்த நேரத்திலும் செய்யலாம். உடற்பருமனானவர்களுக்கு மாத்திரம் அவர்களுக்கான ஒரு பயிற்சி உண்டு. அவர்கள் அதிகாலையில் இப்­ப­யிற்­சியை செய்யவேண்டும். 

 

எந்த வயதினர் இக்­க­லையை பயிலவேண்டும்?

 

அனைத்து வய­தி­ன­ரும் இக்­க­லையை பயி­லலாம். அறிவுத்திறனான பயிற்சிகள் வழங்குகின்றோம் ஒருவரை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும். உளரீதியான பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். 

 

அக்குபஞ்சருக்கும் தற்காப்பு கலைக்கும் ஏதாவது தொடர்புண்டா?

 

ஆம், வர்ம புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த இடத்தில் தாக்குவதன் மூலம் ஒருவர் பாதிப்படையலாம். ஆனால், நல்ல விடயத்திற்கு மாத்திரம் பயன்படுத்தவேண்டும். தப்பாக செய்யக் கூடாது. 

 

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.

 

வர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே. ஆதி­கா­லத்­தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. 

 

அடிப்படையில் மனித உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால், வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய, பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்தால் குறிப்பிட்ட சில­ மாண­வர்­களை தேர்ந்தெடுத்து அவர்­க­ளுக்கு மாத்­திரம் கற்­றுக்­­கொ­­டுகின்­­றோம்.

 

இதன் மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக குறிக்கப்பட்டுள்ளன.

 

இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப, அடங்கல்கள் என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

 

இக்கலை பல ஆசான்களால் செம்மைப்படுத்தப்பட்டு இந்த வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு நோய்கள், பின்விளைவுகளான  காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம் பேசமுடியாமை  போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.

 

 
* எப்படியான உணவை உண்ணவேண்டும்?

 

நாம் உண்ணும் உணவில் எல்லா விதமான நிறமுள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதில் அனைத்து விற்றமின்களும் கிடைக்கும். அதிகமாக இயற்கை உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

 

பழங்கள், காய்கறிகள் உண்ணவேண்டும். அதிகாலையில் 8.00 மணிக்கு உண்ணவேண்டும்.

 

இரவு உணவு உண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலையில் உண்பதால் எமது உடல் சுறுசுறுப்பை இழந்து சோர்வு ஏற்படும். இதனால் காலை உணவை அவசியம் உண்ண வேண்டும். உண்ணும் போது அமர்ந்து அமைதியாக இருந்து பாடல் கேட்டுக்கொண்டு மிகவும் மகிழ்சியாக உண்ணவேண்டும்.

 

நாம் வேலை செய்வது உண்பதற்காக தான். அதனால் உணவுக்கு மதிப்பு கொடுத்து அமர்ந்து ஆறுதலாக உண்ண வேண்டும். 

 

நோய் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்யலாமா?  இந்த பயிற்சி செய்வதால் நோய் வருவதை தடுக்கலாமா?

 

இந்த பயிற்சியை அனைவரும் செய்யலாம். இதயடைப்புள்ளவர்கள் கட்டாயமாக எந்தப் பயிற்சியும் செய்யக் கூடாது. இப்பயிற்சி செய்வதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.

 

உயர் குருதி அமுத்தம், நீரிழிவு நோய் ஆகி­ய­வற்­றை தடுக்கலாம். எனது வகுப்புக்கு வரும் 50 வயதான நபர் ஒருவர் அதிக உயர் குருதி அழுத்தம் இருந்த நிலையில் வந்­தார். ஆனால், இப்போது சாதாரண நிலைக்கு வந்து விட்டார் என வைத்தியர் கூறி ஆச்சரியமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

 

இங்கு வருவோரின் மனம் அமைதி பெறும் மனஉளைச்சலிருந்து விலகி உற்சாகம் ஏற்படும். 

 

*எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டுவரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயற்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

 

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

 

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தெளிவான விளக்கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.

 

இத்தகைய தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.  

 

வர்மக்கலை

 

வரநாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், தனி­யா­க­ பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். 

 

தற்காப்பு கலையானது எல்லோருக்கும் ஏற்ற ஒரு பயிற்சியாகும். இதில் ஆண் பெண் என பால் அடிப்படையில் வேறுபாடு இன்றி அனைவருக்கும் இந்த தற்காப்பு கலையானது அத்தியாவசியமானது. 

 

மேல­திக விப­ரங்­க­ளுக்­கு
Institute for Martial Arts
(karate) Classes
No:49,
Fedrica Road,
Wellawatte,
Colombo -06
077--7302272

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.