Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வாந்திக்கான காரணங்களும் வைத்திய ஆலோசனைகளும் - டாக்டர் கிர்ஷாந்த்.
2015-10-11 09:57:02

(நேர்காணல்: தயா ஜெயா)

 

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும்.

 

உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது என்கிறார் டாக்டர் கிர்ஷாந்த்.

 

வாந்திக்கான காரணங்களும் சிகிச்சைகளும் 

 

இன்றைய நிலையில் பரவலாக வைத்தியர்களை நாடும் நோயாளர்கள் வாந்தி என்ற நோய்க்காரணியையே அதிகளவில் கூறுகின்றனர். 

 

வாந்தி ஏற்படக் காரணம் என்ன-? அதனால் பாரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படுமா இது தொற்று நோயா போன்ற விளக்கங்களை பார்ப்போம். 

 

வாந்தி ஏற்படுவதற்கான காரணம் யாது?

 

வாந்தி என்பது ஒரு நோயாகாது. இது இரைப்பை வைரஸின் வளர்ச்சியால் ஏற்படும் ஒரு விளைவாகும். வாந்தி ஏற்பட பல காரணிகள் உண்டு.

 

அதாவது தலைவலி, தலையில் காயம், இரைப்பை வைரஸின் தாக்கம், சிறுநீர்க்கால்வாய் தொற்று, மதுபான பாவனை, உணவு நஞ்சூட்டம் போன்றவை முக்கிய சில காரணிகளாகும்.  

 

வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான்.

 

அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, இரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் வரும்.

 

குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்தானது. 

 

வாந்தி என்பது நோயாக கருதப்படாத நிலையில் வைத்தியரை நாடுவது அவசியமா?
பொதுவாக பாலூட்டும் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுமாயின் அவசியம் 6 மணி நேரத்திற்குள் வைத்தியரை நாடவேண்டும்.

 

வளர்ந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் வாந்தி இருக்குமாயின் அவசியம் வைத்தியரை அணுக வேண்டும்.

 

அத்துடன் வாந்தியானது எதனால் ஏற்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது தலைவலி, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வாந்தி ஏற்படுமாயின் அவ்வேளையிலேயே வைத்தியரை நாட வேண்டும். 

 

வாந்திக்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே சிலர் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பாவிக்கின்றனர். இது சரியான முறையாகுமா?

 

அதிகளவில் உணவு நஞ்சூட்டம் அல்லது மதுபான பாவனையின் காரணமாகவே வாந்தி ஏற்படுகின்றது.

 

முதலில் உணவு நஞ்சூட்டம் என்றால் என்னவென்பதை அறிந்திருக்க வேண்டும். எமது உடலுக்கு தேவையற்ற ஏதேனும் ஒரு கலவையை கொண்ட உணவு எமது உணவுடன் சேர்க்கப்பட்டு உள்ளெடுக்கப்படுமாயின் உணவு நஞ்சூட்டம் ஏற்படுகின்றது. 

 

இதன் போது எம்மை அறியாமல் உண்ணப்பட்ட உணவின் சமிபாடு இரைப்பையில் நடைபெறாது.

 

அங்கு சுரக்கப்படும் சில சுரப்புக்களின் மூலம் உள்ளெடுக்கப்பட்ட உணவு வாந்தியாக வெளியேற்றப்படும். இதுவும் ஒரு கழிவகற்றல் முறையை சார்ந்த செயலாகும்.

 

இந்நிலையில், மருத்துவரின் சிபாரிசின்றி மாத்திரைகளை உபயோகிப்பதன் மூலம் வெளியேற்றப்பட வேண்டிய கழிவு இரைப்பையில் சேமிக்கப்பட்டு இரைப்பை வைரஸை தோற்றுவிக்கும். 

 

எனவே, உணவு ஒவ்வாமையால் அல்லது மதுபான பாவனையால் ஏற்பட்ட வாந்தி எனின் நன்றாக வாந்தி எடுத்து வயிற்றை சுத்தப்படுத்திக்கொள்ளவது நல்லது. 

 

சிலருக்கு தொடர்ச்சியான வாந்தி காரணமாக உடல் பலவீனம் ஏற்படும். இவ்வாறான நிலையில் என்ன செய்யவேண்டும்?

 

தொடர்ச்சியான வாந்தியின் பின் உடல் பலவீனமடைய காரணம்,  உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையாகும்.

 

எனவே, வாந்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் முடிந்தவரை நீர், குளுக்கோசு, ஜீவனி' போன்றவற்றை எடுக்கவேண்டும்.

 

ஏனெனில், அவற்றில் இனிப்புச்சுவை அதிகளவில் காணப்படுவதால் மனபிரட்டல் ஏற்படலாம். அரிசிக் கஞ்சி, எலுமிச்சை சாறு என்பன சிறந்தவையாகும். 

 

கர்ப்பகால வாந்திக்கு ஏதேனும் மருத்துவ தீர்வு உண்டா?

 

கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி தாய் ஒருவரின் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் காரணமாக இரைப்பையில் ஒட்சிசன் குறைபாடு ஏற்படும். இதனால் உணவுப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு வாந்தி ஏற்படுகின்றது.

 

இதற்கு எவ்வித மருந்து மாத்திரைகளும் வைத்தியரால் பரிந்துரை செய்யப்படமாட்டாது.

 

கட்டுப்படுத்தப்பட முடியாத அளவு வாந்தி ஏற்படுமாயின் கர்ப்பிணித்தாயின் உடல் நிலையை கருதி மருந்து ஊசி மூலம் ஏற்றப்படலாம். வைத்தியர் என்ற வகையில் இதற்கான முக்கிய காரணங்களை கூறுங்கள்-? 

 

பழுதடைந்த உணவைச் உண்பது, 


ஒத்துக்கொள்ளாத உணவைச் உண்பது, 


அளவுக்கு அதிகமாக உணவை உண்பது, 


இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது,

 

முன் சிறுகுடல் அடைப்பு,

 

உணவுக் குழாய்ப் புற்றுநோய்,

 

இரைப்பைப் புற்று,

 

வயிற்றுப்போக்கு,

 

கொலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள்,  சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி,

 

சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.

 

காதும் ஒரு காரணம்தான்!


காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது.

 

இதுதான் நம்மை நடக்கவைக்கிறது. உட்காரவைக்கிறது, உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பஸ்ஸில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங்களின்போதும் வாந்தி வருகிறது.

 

கர்ப்பகால வாந்தி!

 

கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ேஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது.

 

முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது.

 

தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும்.

 

பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜியானாலும் வாந்தி வருவது நிச்சயம்.

 


உளவியல் காரணங்கள்

 

சிலருக்கு கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம்.

 

இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும்.

 

பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பாடசாலைக்கு செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது போன்ற காரணிகள் உதாரணமாகும்.

 

சின்னச் சின்னக் காரணங்கள்

 

பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். 
பாடசாலை விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.

 

இவற்றிற்கான தீர்வு என்ன?

 

வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்தி வருவதற்கான காரணம் என்னவென்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி வருவதை தடுக்கலாம். அதற்கு மருத்துவரின் உதவியை நாடுவதே நல்லது.

 

வாந்தியைத் தடுக்கக் கூடி வழிகள் !

 

# உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவையும், பழுதடைந்த உணவையும் உண்ண கூடாது.

 

# அவசர அவசரமாகச் உண்ணாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் உண்ணாதீர்கள்.

 

# வாந்தி எடுப்பதன் மூலம் உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்.

 

அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லீற்றர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு தேக்கரண்டியாக குடிக்கலாம்.

 

# பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.


மேல­திக விப­ரங்­க­ளுக்கு:


தேச­மா­னிய வைத்­திய நிபுணர் கே.ஆர்.கிர்ஷாந்த்,

சுகாதார அமைச்சின் மாகாண ஆலோசகர், 
ஹெப்பி லைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.
தொலைபேசி இலக்கம்
011-4269137/ 077-7677847

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.