Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மருந்து மாத்திரையின்றிய அக்குபஞ்சர் சிகிச்சை - அக்குபஞ்சர் டாக்டர்.வி.தன­ராஜா.
2015-10-04 11:29:28

(நேர்காணல்: தயா ஜெயா)

 

அக்­கு­பஞ்சர் சிகிச்சை முறை பற்றி  பலர் அறிந்தும் அறி­யா­மலும் இருக்­கி­றார்கள். இது  மருந்து மாத்­தி­ரை­யின்றி நோய்களை ஒரு குத்­தூசி மருத்­துவ முறை­யாகும்.

 

ஏறத்­தாழ இதன் மூலம் சகல நோய்­க­ளையும் குணப்­ப­டுத்த முடியும் என்­கிறார் அக்குபஞ்சர் டாக்டர்.வி.தன­ராஜா.

 

அக்குபஞ்சர் அல்­லது குத்­தூசி மருத்­துவம் (acupuncture)  என்­பது வலியில் இருந்து நிவா­ரணம் பெறு­வ­தற்­காக அல்­லது நோயை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கத்­திற்­காக, பிரத்­தி­யே­க­மான குறிப்­பிட்ட வர்ம உடற்­புள்­ளி­களில் ஊசி­களைக் குத்தி மேற்­கொள்­ளப்­படும்  மருத்­துவம் ஆகும்.  

 

இது வலி நிவா­ர­ணத்­துக்கும் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­கி­றது என்­கிறார் டாக்டர் வி.தனராஜா. 

 

இப்­போது இலங்­கையில் இந்த சிகிச்சை முறைக்கு வர­வேற்­புள்­ளதா?

 

இலங்­கையை பொறுத்­த­மட்டில் பேரா­சியர் அன்டன் ஜய­சூ­ரிய  எனும் வைத்­தி­யரே இலங்­கைக்கு இந்த சிகிச்சை முறையை அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

 

இவர் சீனா சென்று கற்று பட்டம் பெற்று இலங்­கையில் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் தனது முதல் பணியை ஆரம்­பித்தார்.

 

அதன் பிறகு தான் இலங்­கையில் இந்த அக்­கு­பஞ்சர் மருத்­துவம் பிர­பல்­ய­மா­னது. இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக இந்த சிகிச்சை நடை­மு­றையில் உள்­ளது. தற்­போது இந்த சிகிச்சை முறைக்கு அதி­மா­ன­வர்கள் இணை­கி­றார்கள். 

 

காரணம் இந்த சிகிச்சை முறையில் எந்­த­வி­த­மான மருந்து மாத்­தி­ரை­க­ளையும் எடுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

 

தனது உடலில் உள்ள  அனைத்துப் பகு­தி­க­ளிலும் ஒவ்­வொரு உறுப்­புக்­கான வர்­ம­புள்ளி உண்டு. சரி­யான இடத்தில் ஊசி குத்­தப் ப­டும்­போது அந்­தந்த உறுப்­புக்­கான புள்­ளிகள் தூண்­டப்­ப­டு­கின்­றன.

 

நோயைக் குண­ம­டைய வைக்­கின்­றது. உடலின் அனைத்து உட­லி­யங்கு தொழிற்­பாட்­டையும் செயற்­பட செய்­கி­றது. இதுவே அக்­கு­பஞ்சர் சிகிச்சை முறை­யாகும்.

 

 
குத்­தூ­சியின் தன்மை:  

 

குத்­தூசி பொது­வாக துருப்­பி­டிக்­காத உருக்­கினால் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. எனினும், செப்பு, வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோ­கங்­க­ளிலும் கிடைக்­கின்­றது.

 

இவை வழ­மை­யாக ஒரு­த­டவை  மட்டும் பயன்­ப­டுத்தும் ஊசி­யாக இருப்­பினும், சில சந்­தர்ப்­பங்­களில் நோய் நுண்ம ஒழிப்­புக்கு உட்­ப­டுத்தி மீண்டும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 

 

ஒரு­வ­ருக்கு உப­யோ­கிக்­கப்­படும் அக்­கு­பஞ்சர் ஊசிகள் மற்­றொ­ரு­வ­ருக்கு பெரும்­பாலும் உப­யோ­கிப்­ப­தில்லை.

 

ஊசி செலுத்­தப்­படும் போது, துரி­த­மாகச் செலுத்­து­வது வலி உணர்­வதைக் குறைக்கும். இது விறைப்பு, கூச்சம், சிலிர்ப்பு போன்று இருக்கும்.

 

இவ்­வகை உணர்வு இல்­லா­விடின் ஊசி தேவை­யான ஆழத்தில், பொருத்­த­மான புள்­ளியில் செலுத்­தப்­ப­ட­வில்லை என்று அறி­யலாம்.

 

எந்­த­வி­த­மான மருந்து மாத்­தி­ரை­யின்றி ஊசியை மாத்­திரம் பயன்­ப­டுத்தி நோயை குணப்­ப­டுத்தும் ஒரே வைத்­தியம் தான் அக்குபஞ்சர் ஆகும்.

 

இந்த ஊசியில் எந்­த­வி­த­மான மருந்­தையும் உப­யோ­கிப்­ப­தில்லை. உதா­ர­ண­மாக, தடிமன் வந்தால் இதற்­கென மருந்து இல்லை.

 

இது  வைரஸின் தாக்­கு­தலால் ஏற்­ப­டு­கின்­றது. அக்குபஞ்சரை பயன்­ப­டுத்­துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்­தியை தூண்டி விட்டு தடி­மனை அதி­க­ரித்து நோயை முற்­றாக கட்­டுப்­ப­டுத்தும்.  எந்தவித­மான பக்­க­வி­ளை­வு­களும் ஏற்­ப­டு­வ­தில்லை.

 

வர்ம புள்­ளி­க­ளூ­டாக குத்து ஊசி­களை பயன்­ப­டுத்தி ஒவ்­வொரு நோய்­தாக்­கத்­திற்கு ஏற்­ப ஊசி ஏற்­றப்­பட்டு சிகிச்சை வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

 

இந்த ஊசி குத்­தும்­போது கவ­ன­மாக செருக வேண்டும். இந்த ஊசி குத்­து­வதால் நாடி­யிலோ நாளங்­க­ளிலோ ஏதா­வது பாதிப்பு ஏற்­ப­டாது. ஊசி குத்­தும்­போது சிலவேளை­களில் இரத்தம் கசிய வாய்ப்­புள்­ளது.

 

இது எந்­த­வி­த­மான பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது.  குறிப்­பிட்ட பகு­தியில் மாத்­திரம் அதன் சக்தி காணப்­படும்.

 

சரி­யான முறையில் விரல் அளவின் படி சரி­யான அளவின்படி ஊசி­களை குத்த வேண்டும். வயது அடிப்­ப­டையில் அளவில் வேறு­படும். ஊசி குத்தும் போது வலிக்­காது.

 

நாங்கள் பகி­டி­யாக பேசி அவர்­களின் மனதை மாற்றி ஊசியை செலுத்­த­வேண்டும். அப்­போது அவர்­க­ளுக்கு வலி தெரி­யாது. பொது­வாக ஒரு நோயா­ளியை இரண்டு மூன்று வாரங்­களில் குணப்­ப­டுத்­தலாம்.

 

பொது­வாக நோயாளி ஒரு­வ­ருக்கு  பத்து ஊசி­களை பயன்­படுத்­து­கிறோம். நோயைப் பொறுத்து உணவு விட­யத்தில் கட்­டுப்­பா­டாக இருக்­க­வேண்டும்.

 

முதலில் ஊசியை குத்­தும்­போது வலிக்கும் என்ற உள­வு­ரீ­தியில் சொல்­வார்கள், ஆனால் இரண்டு முறை இந்த சிகிச்சை பெற்­று­விட்டால் ஊசி குத்­து­வது அறி­யாமல் போய்­விடும்.  

 

 
இந்த அக்­கு­பஞ்சர் மருத்­துவ சிகிச்சை முறை மூலம் நோய்­களை  எவ்­வ­ளவு காலத்­துக்குள் குணப்­படுத்­தலாம்?

 

அக்குபஞ்சர் அனைத்து நோய்­களைக் குணப்­ப­டுத்தக் கூடி­ய­வ­கையில் அமைந்­துள்­ளது. ஒற்றைத் தலை­வலி, மூட்­டு­வலி, நீரி­ழிவு, தலை­வலி, முடி உதிர்வு, அல்சர், உயர் அழுத்தம், தோல் நோய் போன்ற நோய்­க­ளுக்கு மருந்து மாத்­தி­ரை­யின்றி நோயைக் குணப்­ப­டுத்த முடியம் ஆனால், சத்­திர சிகிச்­சையை அக்­கு­பங்­சரால் குணப்­ப­டுத்த முடி­யாது.

 

நோய்க்­கான எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரித்து நோயை கட்­டுப்­ப­டுத்­த­மு­டியும். நீரிழிவு நோயா­ளர்­க­ளுக்கு இரண்டு மூன்று மாதங்­களில் சிகிச்சை வழங்­கு­வதன் மூலம் நோயை குணப்­ப­டுத்த முடியும்.

 

ஆனால், இவர்கள் உணவு விட­யத்தில் கவ­ன­மாக இருக்­வேண்டும்.  நோயைப் பொறுத்து வேறு படலாம்,  ஒவ்­வொரு நோய்க்கும்  உடலின் நிலைக்கு ஏற்­ற­வாறு காலம் எடுக்கும்.  இது நோய் நிலை­யினைப்  பொறுத்து வேறு­படும். 

 

இந்த மருத்­துவ சிகிச்சை முறை­யா­னது வளர்ந்தோர், சிறு­வர்கள் என்ற வயது பாகு­பாட்டில் சிகிச்சை முறையில் மாற்றங்கள் உள்­ள­னவா?

 

பெரி­ய­வர்கள், சிறு­வர்கள் என்ற வயது வித்­தி­யாசம் இல்­லாமல் அனை­வ­ருக்கும் இந்த குத்­தூசி சிகிச்சை வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

 

உடலில்  உள்ள சரி­யான புள்­ளி­க­ளுக்கு சரி­யான முறையில் ஊசியை குத்­து­வதன் மூலம் உடலில் உள்ள நோய்­களை குணப்­ப­டுத்­தலாம்.

 

ஒவ்­வொரு  நோய்­க­ளுக்கும் ஏற்ப அவர்­களின் உடலில் உள்ள வர்ம இடங்­களின் புள்­ளி­க­ளுக்கு ஏற்­ற­வாறு சிகிச்சை வழங்­கப்­ப­டு­வதால் பெரி­ய­வர்கள், சிறு­வர்கள் என்ற வேறு­பாடு இதில் இல்லை.

 

ஆனால் சிறு­வர்­க­ளுக்கு ஊசி குத்­தினால் ஒரு இடத்தில் அமர்ந்­தி­ருப்­ப­தில்லை. ஒரு சில குழந்­தைகள் மாத்­திரம் தாயின் மடியில் அமர்ந்து இருப்­பார்கள். சிறு­வர்­க­ளுக்­காக அக்­கு­பி­ர­சரை (அழுத்தல் சிகிச்சை) பயன்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு சிகிச்சை அளித்து­ வ­ரு­கின்றோம். 

  
அக்­கு­பஞ்சர் முறை­யி­லான சிகிச்­சையால் நோயா­ளி­க­ளுக்கு ஏதா­வது தோல் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளதா?

 

அவ்­வாறு சொல்ல முடி­யாது. காரணம் ஊசியின் அள­வா­னது மிகவும் சிறி­யது. சுத்­த­மான இத்­த­கைய ஊசியை குத்­து­வதால் எந்த பாதிப்பும் தோலுக்கு ஏற்­ப­டாது.

 

சிறி­த­ளவு இரத்தம் கசி­யலாம். ஆனால், எந்­த­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. வைரஸ் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. காரணம் ஊசியை நீக்­கும்­போதே சரு­மத்தின் துளைகள் மூடிக்­கொள்ளும்.

 

அதே சந்­தர்ப்­பத்தில் ஊசி குத்­து­வதால் வைரஸ் தாக்கி பாதிப்­புக்­குள்­ளா­வ­தற்­கான சாத்­தியக் கூறுகள் இல்லை. 

 

நோய்­களின் தன்­மை­களைப் பொறுத்து ஊசி­களின் எண்­ணிக்கை வேறு­ப­டலாம். சாதா­ர­ண­மாக  10 ஊசி­களை பயன்­ப­டுத்­தலாம். 

 

சாதா­ர­ண­மாக குத்து ஊசி­களை கையில் தான் குத்­து­கிறோம். இதற்கு கரு­வி­களை பயன்­ப­டுத்­து­வ­தில்லை.  

 

ஊசி­களை குறிப்­பிட்ட இடத்­திற்கு ஏற்­ற­வாறு  செருகி பின் உட­லி­லுள்ள வர்ம இடங்­களை ஊக்­கு­வித்து இரத்த நாடி­களில் இரத்த ஓட்டம் அதி­க­ரிக்கும். எந்­த­வி­த­மான மருந்து வகை­க­ளையும் பயன்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.     

 

 இச்­சி­கிச்சை முறைக்கு உணவுக் கட்­டுப்­பாட்டை கடை­பி­டிக்க வேண்டுமா?
எந்த ஒரு சிகிச்சை முறையைப் பெறும்­போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அப்­போது தான்  நோயை குணப்­ப­டுத்­தலாம்.  

 

அக்­கு­பஞ்சர் தொடர்­பாக வைத்­தியர் என்ற வகையில் உங்­களின் கருத்தை கூறுங்கள்?

 

இச்­சி­கிச்சை முறையில் சகல நோய்­க­ளையும் குணப்­ப­டுத்­தலாம். சக­ல­வி­த­மான சரும நோய்­க­ளுக்கும், நோய்­களை பொறுத்தும் காலம் தீர்­மா­னிக்­கப்­படும்.  
ஒவ்­வொரு மனி­தனும் தனித்­தன்மை உடை­யவன். அவ­னு­டைய நோய்க்­கான காரணமும் வேறு­படும். 

 

ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வர்ம  புள்­ளி­களை தேர்வு செய்ய வேண்டும். அக்­கு­பஞ்­சரில் நோய்க்­கான கார­ணத்தை எவ்­வாறு துல்­லி­ய­மாக கண்­ட­றி­வது மற்றும் எந்தப் புள்­ளி­களை பயன்­ப­டுத்­து­வது என்­பது மிக முக்­கி­ய­மாகும்.  

 

அக்­கு­பஞ்­சரில் வித்­தி­யா­ச­மான அணு­கு­முறை மற்றும் நுணுக்­க­மான வகையில் புள்­ளி­களைத் தெரிவு செய்து நோய்க்­கான நாடி­களை பரி­சோ­தனை செய்யும் போது நோயிற்­கான காரணம் தெளி­வாகத் தெரிந்­து­விடும்.

 

மருந்து மாத்­தி­ரை­யிலும், சத்­தி­ர­சி­கிச்சை செய்தும் குண­மாக்­கக்­கூ­டிய நோய் ஒரு சின்ன ஊசி­யினால் குண­மா­கி­விடும் என்றால் நம் எல்­லோ­ருக்கும்  ஒரு  சந்­தேகம் வரும். நியா­ய­மான சந்­தே­கம்தான்.

 

நம் உடம்­புக்­கான மருந்து வேறெங்­கு­மில்லை. நம் உடம்­புக்­குள்­ளேயே உண்டு. இதுதான் அக்­கு­பஞ்சர் மருத்­து­வ­மு­றை­யாகும். 

 

ஆனால், எந்த ஒரு குண்­டூ­சி­யையும் இந்த மருத்­து­வத்­துக்கு பயன்­ப­டுத்­தலாம் என்று யாரும் தயவுசெய்து முயன்­று­விட­வேண்டாம்.

 

அது மிகவும் ஆபத்­தா­கி­விடும். அக்­கு­பஞ்­ச­ருக்கு என பிரத்­தி­யே­க­மாக தயா­ரிக்­கப்­படும் ஊசி­களை மட்­டுமே சரி­யான முறையில் பயன்­ப­டுத்த வேண்டும்.

 

இந்த ஊசி­களில் சிரிஞ் போல் துளை­களி­ருக்­காது. அதனால் இந்த ஊசி­க­ளுக்குள் இரத்தம் தங்­காது. எனவே, இரத்­தத்தின் மூலம் பரவ வாய்ப்­புள்ள நோய்­களும் இந்த ஊசி­க­ளினால் பர­வாது என்­பது குறிப்­பி­டக்­கூ­டிய விடயம்.

 

இருந்­தாலும் ஒரு­வ­ருக்கு பயன்­ப­டுத்தும் அக்­கு­பஞ்சர் ஊசி­களை அடுத்­த­வ­ருக்கு பெரும்­பாலும் பயன்­ப­டுத்­து­வ­தில்லை.

 

முடியுதிர்வுக்கான சிகிச்சை

 

முடி­யு­திர்­வுக்­கான காரணம் ஒவ்­வாமை. அதி­க­ளவு ெஷம்போ, சவர்க்­கா­ரத்தை பாவிப்­பதால் முடி உதிர்­வ­தற்கு கார­ண­மாக அமை­கி­றது. விற்­றமின் குறை­வாலும் முடி­யு­திர்வு அதி­க­ரிக்­கலாம்.

 

சிலர் முகத்­துக்கு பேஸ்வோஸ் பாவிப்­பதால் முன் பக்க முடி உதிர கார­ண­மாக அமை­யலாம். கிழ­மைக்கு ஒரு முறை தலைக்கு ஷெம்போ போட­வேண்டும்.  

 

கிழ­மைக்கு ஒரு­முறை எலு­மிச்சை சாற்றை தலையில் 10 -15 நிமிடம் வைத்­தி­ருந்து நீராட வேண்டும். எலுமிச்ச பழச்சாற்றை போட்டு விட்டு வெ­யிலில் செல்லக் கூடாது.

 

முடி உதிர்வை நிறுத்த குறைந்­தது பத்து ஊசி­களை தலையில் குத்­த­வேண்டும். அதற்கு பிறகு முடி உதிர்வு நின்று விடும். சரி­யாக முடி வளர மூன்று மாதங்கள் செல்லும். 

 

முகப்பொலிவுக்கான சிகிச்சை

 

அக்குபஞ்சர் உங்கள் முகத்தில் இரத்தோட்டத்தை அதிகரிக்கும் மற்றும் மெதுவாக்கும்,  தோல் உறுதியையும் தரும். கொலாஜன் உற்பத்தியை தூண்டும். முகத்தில் தசைகள் வளரும். அதாவது மெலிந்த முகம் பருமனாகும்.

 

உங்கள் தோலில் ஒக்சிஜன், ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தியை அதிகரிக்கும்
அக்குபஞ்சர் செயல்முறையானது வயது தோற்றத்தை குறைத்து முகத்தின் தோலை மென்மையாக்கும், கண் கருவளையங்களும் வீங்கி காணப்படும்.

 

கண்களின் வீக்கத்தை குறைக்கும். கருமை நிறத்திலான முகத்தை பொலிவான முகமாக மாற்ற முடியும்.  

 

அக்குபஞ்சர் பற்றி இங்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. சாதாரணதரம் கற்றவர்களுக்கும், உயர்தரம் கற்றவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு மூன்று வருடகால பகுதியில் இக்கற்கை நிறைவடைந்து சான்றிதழ்க­ளும் வழங்கப்படுகின்றன. 

 

மேலதிக விபரங்களுக்கு

Dr.V.Thanarajah
No:–02
Community Centre Bambalapitiya,
Government Flats,
Bambalapitiya, 
Colombo -04.  
0777302272 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
suresh2015-10-17 01:52:48
Doctor avargale en peyar suresh kumar en vayathu 25.en vayathuketra uyaram en udalililai accupuntuce mulam uyaramaaga ethum valiunda?
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.