Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போசாக்கு குறைபாட்டால் எற்படும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும் - வைத்­திய நிபுணர் கே.ஆர். கிர்ஷாந்த்
2015-09-27 10:33:57

(நேர்காணல்: தயா ஜெயா)

 

போசாக்கு குறைபாடு காரணமாக பலதரப்பட்ட நோய்­களின் தாக்கம் எதிர்­காலத்தில் பரவலாக ஏற்­ப­டுமா என்­ப­தை அறியக் கூடி­ய­தாக உள்­ளது என்­கிறார் வைத்­திய நிபுணர் கே.ஆர். கிர்ஷாந்த்.

 

''இன்றைய நிலையில் எமது நாட்டில் சிறு குழந்தைகளிடையே போசனைக் குறைபாடு காரணமாக பலதரப்பட்ட நோய்கள் பரவலாக காணப்படுகின்றன.

 

இதை கருத்தில் கொண்டு அரசாங்கமும் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தி  உள்ளது.  

 

எனினும், பெற்றோர்களிடையே இது குறித்த தெளிவு குறைவாகவே உள்ளது. அதாவது சில பெற்றோர்கள் தமது குழந்தைகள் போசாக்கு குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.

 

காரணம், நாங்கள் மூன்று நேரம் உணவு வழங்கின்றோம் எமது குழந்தை எந்தநேரமும் தின்பண்டங்களை உண்ணுகின்றது.

 

எனவே, எமது குழந்தையின் போசாக்கு மட்டத்தில் எவ்வித குறைபாடும் இருக்காது என்ற எண்ணப்பாட்டில் உள்ளனர். ஆனால், தமது குழந்தை உண்ணும் உணவு சத்தானது.

 

அவ்வுணவால் உடலின் தொழிற்பாடு அபிவிருத்தியடையுமா என்பது குறித்து இவர்கள் அறிவ தில்லை'' என வைத்தியர் கே.ஆர். கிர்ஷாந்த் தெரிவித்துள்ளார்.

 

சத்தான  உணவுமுறை மற்றும் போசனை குறைபாட்டில் ஏற்படக்கூடிய நோய்கள் அவற்றை அறியக்கூடிய அறிகுறிகள் என்பன பற்றிய சரியான விளக்கத்தையும் தருகிறார்:–

 

போசனை குறைபாடு என்றால் என்ன?

 

உடலில் திசுக்கள் வளர்ச்சிக்கு, குருதி உற்பத்தியாதலுக்கு, உடல் தொழிற்பாட்டிக்கு அவசியமான சத்துக்களாகிய புரதம், காபோவைதரேற்று, விற்றமின் (A, B–1, B–3) கல்சியம் போன்றவற்றின் அளவில் ஏற்படும் வீழ்ச்சி போசனைக் குறைப்பாடாகும். 

 

போசாக்கு குறைப்பாட்டில் அதிகளவில் பாதிக்கப்படுவோர் யார்?


போசனைக் குறைபாட்டில் 1–5 வரையிலான வயதினரே அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர்.

 

அதாவது தாய்ப்பாலில் இருந்து விடுபட்டு ஏனைய உணவுகளை உண்ண ஆரம்பிக்கையில் அரிசிக் கஞ்சி, பயறு கஞ்சி போன்ற உணவுளே குழந்தைகளுக்கு அதிகளவில் வழங்கப்படு கின்றன.

 

இந்த நிலையில் குழந்தையின் போசாக்கு மட்டத்தில் வீழ்ச்சி ஏற்படும். அதாவது காபோவை தரேற்று மாத்திரம் உடலில் அதி கரிக்க ஏனைய வளர்ச்சியை தூண்டும் சத்துக்களின் அளவு குறையும் மேலும் 5–13 வயதினரிடை யேயும் இக்குறை பாட்டின் தாக்கம் காணப்படும். 

 

போசாக்கு குறைபாட்டால் ஏற்படும் நோய்களுக்கான அறிகுறிகள்


=உடல் வீக்கம்


=சுறுசுறுப்பற்ற நிலை


=சதைப்பிடிப்பு குறைதல்


=உலர்ந்த சருமம்


=செந்நிற முடி


=வெளிறிய கண்கள் 


=மஞ்சள் நிற நகங்கள்


=உலர்ந்த உதடு


=தோலில் வெடிப்புக்கள்


=வாந்தி, மயக்கம்

 

போசாக்கு குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் எவை?

 

புரதம் குறைவால்– மரஸ்மஸ்


விற்றமின் B3 குறைவால்  –பெல்லாக்ரா


விற்றமின் D குறைவால்  –ஓஸ்டியோ போரோஸிஸ் (35வயதிற்கு மேல்)


 =ரிக்கெட் (குழந்தைகளுக்கு)
மேலும் குவாஸியக்கோர் =கண்பார்வை குறைதல்        

 

 =மாலைக்கண் நோய் 


=நரம்பு தளர்ச்சி 


=இதய செயலிழப்பு 


=மறதி, எலும்பு வீக்கம் போன்ற நோய்கள் ஏற்படும்.

 

போசாக்கு குறைபாட்டால் ஏற்படும் நோய்களில் இருந்து காத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் எவை?

 

தேசிய உணவு முறையை கடைபிடித்தல் மூலம் மிக இலகுவாக போசாக்கு குறைபாட்டை தவிர்த்துக்கொள்ள முடியும். அதாவது பச்சை அரிசி சோறு, காய்கறி, பழங்கள், பால், முட்டை, இறைச்சி போன்றவற்றை சம அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோதுமை மா, தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் அளவை குறைக்க வேண்டும். 

 


அத்துடன் துரித உணவுகளான பீட்ஸா, பர்கர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன் காய்கறி பழங்களை கொள்வனவு செய்கையில் அவை சேதன உரங்களை கொண்டு பயிரிடப்பட்டவையா என்பதை கேட்டு வாங்கவேண்டும்.

 

காரணம் அசேதன உரங்களின் துணையுடன் வளர்ந்த காய்கறிகளில் சத்து குறைவுடன் நச்சுத்தன்மை காணப்படுகின்றது. 

 

பொதுவாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நோய்த் தொற்றுக்கள் அதிகம். இதற்கும் போசாக்கு தன்மை குறைபாட்டிற்கும் ஏதேனும் தொடர்புண்டா?

 

ஏதேனும் ஒரு நோய் தொற்றுக்குள்ளானவரின் மூலம் அந்நோய் இன்னொருவரை தாக்குமாயின், அதன் மூலம் இரண்டாம் நபர் நோய்த்தாக்கத்திற்கு ஆளாகுவாராயின், நிச்சயமாக அவருக்கு போசாக்கு மட்டம்  குறைவாகும்.

 

(உதாரணமாக ) புரதத்தின் அளவு உடலில் குறையும் போது மரஸ்மஸ்  நோய் ஏற்படும். இந் நோய் காரணமாக திசுக்கள் பாதிப்பிற்குள்ளாகும். இந்நிலையில் மரஸ்மஸ்  நோயாளிகளை நிமோனியா, அம்மை போன்ற தொற்று நோய்கள் தாக்குமேயானால் அந்நோயாளி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

 

எமது நாட்டில் போசாக்கு குறைப்பாட்டை தடுக்கும் முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் குறித்து சிறு விளக்கம் தாருங்கள்...

 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு திரிபோசா வழங்கல்,  5 வயதிற்கு குறைந்த சிறார்களுக்கு திரிபோசா வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கல் போன்ற சேவைகள் நடைமுறையில் உள்ளன.

 

எனினும் மக்களிடையே போசாக்கு குறைபாடு குறித்த சரியான வெளிப்பாடு இல்லை என்பதே உண்மையான விடயம். எனவே, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு எமது ஹெப்பி லைவ் நிறுவனம் நுவரெலியா சிமிர்னா தேவாலயத்திலும்  ஹட்டன் மவுன்ட் வேர்ணனிலும் இலவச மருத்துவமுகாம் மற்றும் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.

 

இதன் போது மக்களுக்கு இலகுவாக விளங்கக் கூடிய வகையில் போசாக்கு குறைபாட்டால் எமது எதிர்கால சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தப்படும்.

 


மேல­திக விப­ரங்­க­ளுக்கு:
தேச­மா­னிய வைத்­திய நிபுணர் 
கே.ஆர்.கிர்ஷாந்த்,

                                                                                                                                                                      
சுகாதார அமைச்சின் மாகாண ஆலோசகர், 
ஹெப்பி லைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.
தொலைபேசி இலக்கம்
011-4269137/ 077-7677847 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.