Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உளரீதியான பாதிப்பிலிருந்து விலகிக்கொள்ள மருத்துவரின் ஆலோசனைகள் (கடந்தவார தொடர்ச்சி)
2015-09-20 10:36:43

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஆற்றலை பிள்ளைகளிடம் வளர்ப்பது குறித்து அங்கொடை தேசிய மனநல சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மனநல வைத்திய நிபுணர் எம்.கணேசனின் கடந்தவார செவ்வியின் தொடர்ச்சி...

 

மது, போதைப்­பொ­ருட்கள், சிகரெட் போன்ற­வற்றை அதி­களவு பாவிப்­பதை தடுக்க என்ன நட­வ­டிக்கை எடுக்­கலாம்?

 

இதில் இரண்டு பிரிவுகள் உண்டு. இதுவரை பாவிக்­கா­த­வர்கள் இந்த பழக்கத்தை ஆரம்பிக்காமல் இருக்க சில நட­வ­டிக்கைகளை எடுக்க முடியும்.

 

ஏற்­க­னவே மது, போதைப்­பொ­ருட்கள் , சிகரெட் பாவிப்­ப­வர்­களை எவ்­வாறு அவற்றினை கட்­டுப்­ப­டுத்­தலாம்? சிகரெட், மது பாவனை ஆகியனவற்றுள் ஒரு­வர் தள்­ளப்­ப­டு­வதை எவ்­வாறு தடுக்கலாம்? என்­பதை  பார்க்­க­­வேண்டும்.

 

இது பற்றி தெரி­யாத பதின்மர் வயதினரிடம் நண்பர் ஒருவர் சிகரெட்டையோ மது­வை­யோ அருந்தக் கொடுக்கும் போது அதை அருந்திப் பார்க்க தூண்­டப்­ப­டு­கின்­றார்.

 

உதா­ர­ண­மாக ஊடகங்­களில் காண்­­பிக்­கப்­ப­டு­கின்ற விளம்­ப­ர­ங்கள் மற்­றது நாடங்­களில், திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் பிள்­ளை­களை மிக­வும் ஈர்க்­கக் கூடியதாக அமைந்து விடுகின்றன. 

 

இவ்வாறான விளம்பரங்களை உண்மையென்று நம்பி சீரழியும் இளம் சமூகத்திற்கு இதன் தாக்கம் பற்றி எடுத்துக் கூறி அவர்களை பாதுகாப்பதே சிறந்த வழி. ஊடகங்களின் பங்கு மிக முக்­கியமாக தேவைப்­ப­டு­கின்­றது.  

 

இன்று இலங்கையை எடுத்துக்­­கொண்டால், 25 சத­வீ­த­மா­­னோ­ர் போஷாக்கு குறை­வானவர்களாகவே காணப்ப­டு­கின்­றார்கள். 

 

இல­ங்­கையில் கூலித் தொழில் செய்யும் ஒருவர் நாளாந்தம் 1,200ரூபா சம்­பளம் பெறு­வார்.

 

இது வாழ்­வா­தா­ரத்­திற்கு போது­மா­னது. இலங்­கையில் போஷாக்கின்­மைக்கு முக்­கிய காரணம் மதுபாவனையே.

 

1,200 ரூபா உழைத்தால் அதில் 600 ரூபாவுக்கு குடித்து விட்டால், மீதியிருக்கும் பணத்தில் குடும்பம் நடத்த பணப் பற்றாக்குறை ஏற்­ப­டு­கின்­றது.

 

இன்று வீதி விபத்­துகள் மிக முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கின்­றன. இதில் 60 சதவீத­மா­ன­வர்கள் மது­பானத்தை அருந்துபவர்களாக இருக்கிறார்கள். 

 

மிகவும் ஆபத்­தான நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­­ட ஆண்களை நோக்குவோமாயின் மது அருந்தி  நேரடி தாக்கத்­திற்­குள்­ளா­ன­வர்­களில் 40 சத­வீ­த­மா­ன­வர்­க­ளே இவ்வாறு காணப்­ப­டு­கின்­றார்­கள். 

 

மாண­வர்­க­ளுக்கு நீங்கள் கூற விரும்­பு­வது என்­ன?

 

பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு மது, போதைப்­பொருள், சிகரெட்  பற்றிய உண்­மைகள் குறித்து அறி­வு­றுத்த வேண்டும்.

 

உதா­ர­ண­மாக, சில விளம்பரங்களைப் பார்க்கும் போது  அவை பிள்ளைகளை ஈர்க்க கூடியதாக உள்ளன.

 

இது பற்றிய விளக்­கத்தை குழந்­தை­க­ளுக்கு  புரியும் வகையில் எடுத்து சொல்­ல­வேண்டும்.

 

விளம்பரம் எதற்காக கொடுக்கப்படுகின்றது என்பது பற்றிய விளக்கம் கொடுக்கவேண்டும்.

 

பத்து, பதி­னைந்து வயதளவில் சிகரெட் குடிக்­கா­வி­ட்டால் இந்த பழக்­கத்தை தொட­மாட்­டார்கள். சிறு­ கு­ழந்­தைகள் எவ்வாறான படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்­பதை அறிய வேண்டும். அதன் பின் நட­வ­டிக்கை எடுக்­க­­­வேண்டும். 

 

ஆண் பிள்ளை,  பெண்­பிள்ளை என்ற பாகு­பாட்டினால் பிள்­ளை­களின் மனம் பாதிப்படைய வாய்ப்­புள்­ளது. இது பற்றி விளக்கம் தாரு­ங்­­கள்...

 

பெற்­றோர்­­க­ளில் பலர் ஆண் பிள்­ளை­க­ளுக்கு பொம்மை துப்­பாக்கி வாங்கிக் கொடுப்­பார்கள்.

 

பெண் பிள்­ளை­க­ளுக்கு சட்­டி­பானை வாங்கிக் கொடுப்­பார்கள். இது தவறு, இதை மாறி மாறி வாங்கிக் கொடுக்க வேண்டும். 

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்­துவம் கொடுப்­ப­தில்லை. இதனால் ஒரு நாடு 50 வீதம் பின்­னு­க்கு தள்ளிப் ­­போ­கி­றது.

 

ஒரு­வரின் மூளை வேலை செய்­வ­தை­விட இரு­வரின் மூளைகள் வேலை செய்தால் அந்த நாடு முன்­­னே­றும். 100 பேர் இருக்கும் சமூகத்தில் 50 பேரின் மூளைகள் வேலை செய்தால் அந்­த நாடு முன்னேறு­வ­தில்லை. 

 

100 பேருக்கு உணவு தேவையென்றால், 100 பேரின் மூளைகள் வேலை செய்தால் தான் அந்த நாடு முன்­­னேறும்.

 

கணவன் வந்தால் மனைவி எழுந்து நிற்கவேண்­டும்.

 

கணவன் உணவு உண்டால் மனைவி தான் கழுவி வைக்க வேண்டும் என அடக்கி ஆளும் தன்மை ஆண்களில் சிலரிடம் காணப்ப­டு­கின்­றது.

 

என்னை என்­றா­வதும் மிஞ்சி விடுவாள் என்ற பயத்­தினால் பெண்­களை ஆளு­வது, கட்­டுப்­ப­டுத்­து­வது இப்­ப­டி­யான முறை­களை கையாளுகிறார்கள்.

 

சிறு­வ­ய­தி­லி­ருந்­­தே ஆண் பிள்ளை என்றால் இவ்­வாறு நடந்­து­கொள்ள­வேண்டும் எனவும் பெண் பிள்ளை நீ அடக்­க­மாக, பொறு­மை­யாக இருக்­க­வேண்டும் எனவும் கூறி வளர்க்கப்படுகின்றனர். இது பெற்றோர் விடும் பிழை. இதற்கு அறியாமை தான் காரணம். 

 

மனப்­பா­திப்­பி­லி­ருந்து சிறு­வர்கள், வளர்ந்­த­வர்­களை எவ்­வாறு பாது­காக்­கலாம்?

 

அந்த வயதுக்குரிய கடமைகள், உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இப்­­போது சில வீடு­களில் 15 வயது பிள்­ளைக்கு தாயே இன்னும் ஊட்­டி­வி­டுவார்.

 

அந்த வய­துக்­குரிய உரி­மை­க­ளை­யும், கட­மை­க­ளை­யும், பிள்ளைகளுக்கு வழ­ங்கவேண்டும். பிரச்­சி­னைகளை தீர்க்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.

 

திற­மை­களை மழுங்­க­டிக்கக் கூடா­து. உதா­ர­ண­மாக பாட­சா­லையில் வீட்டு வேலை செய்யக் கொடுத்தால், ஆசிரியர்களை குறைகூறிவிட்டு, அதை தாயார் தான் செய்து கொடுப்பார்.

 

பிள்ளையானது தனது அறிவுத் திறனில் இதை எவ்­வாறு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்  கொடுக்கவேண்டும்.

 

பிரச்­சி­னையை தீர்க்கும் ஆற்றல் என்­பது தனது அறி­வை­ப் ப­யன்ப­டுத்தி தான் முயற்சி செய்து பார்க்­க­­வேண்டும்.

 

அப்­­போது தான் தனது பிரச்­சி­னையை தீர்த்­துக்­­கொள்­ளலாம். இவ்வாறில்லாமல் வீட்டு வேலை­யை தாயார் செய்து கொடுக்க பிள்ளை பாடசா­லையில் நல்ல மதிப்­பெண் பெ­றுவார். இதை ஆசிரியர் பாராட்டுவார்.

 

பெற்­­­றோர்கள் "உனக்கு கொடுத்த வேலையை நீதான் செய்­ய­ வேண்டும்" என குழந்­தை­களை அறிவுறுத்­த­ வேண்டும்.  

 

பிள்­ளை­களின் ஆற்­­­றலுக்கு ஏற்ப அவ­ர்க­ளி­டமுள்ள திறமைகளைப் பயன்­ப­டுத்தி செய்­வ­தற்கு உத­வி செய்­ய­ வேண்­டும்.

 

பிள்­ளை­­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நாங்கள் வழி­வ­குத்து கொடுக்­க­வேண்­டும். வயதுக்கு ஏற்ப பிரச்சினைக்கு  முகம் கொடுக்க நாங்கள் வழியமைத்து கொடுக்கவேண்டும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.