Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உளரீதியான பாதிப்பிலிருந்து விலகிக்கொள்ள மருத்துவரின் ஆலோசனைகள் - மனநல வைத்திய நிபுணர் எம்.கணேசன்
2015-09-13 10:48:23

(நேர்காணல்: தயா ஜெயா)

 

உளரீதியான பாதிப்பிலிருந்து விலகிக்கொள்ள பிரச்சினைக்கான தீர்வுகாணும் ஆற்றலை பிள்ளைகளிடம் வளர்க்கவேண்டும் என்கிறார் அங்கொடை தேசிய மனநல சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மனநல வைத்திய நிபுணர் எம்.கணேசன்.

 

தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன?

 

பல கார­ண­ங்­கள் உண்டு. அது இரண்டு வகைப்படும். ஒன்று தற்கொலை, மற்றது தற்கொலை முயற்சி.

 

தற்கொலையை எடுத்துக்கொண்டால் நூற்­றுக்கு 50 வீதமானோர் மனநோய் போன்ற கார­ணத்­தினால் பாதிக்கப்படுகின்றனர்.

 

மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்திய சிகிச்சை பெறாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

 

தற்கொலை முயற்சியை எடுத்துக்கொண்டால் பிரச்சினையை தீர்க்கும் ஆற்றல் இல்லா­மையால், போதுமான அளவு சிந்திக்காமல் உட­ன­டியாக தற்­கொலைக்கு முயற்சித்தல்.

 

சிறுவய­தி­லி­ருந்து பிரச்­சினை தீர்க்கும் ஆற்றல் இல்­­லா­மையால் உடனடியாக தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள். 

 

மற்றுமொரு முக்கிய காரணம், அல்கஹோல். 100க்கு 10 சதவீதமானவர்கள் மது பாவனையால் தற்கொலை முயற்சிக்கு தூண்டப்படுகிறார்கள்.

 

மேலும் வறுமை, வேறு காரணங்கள், குடும்ப வன்முறைகள் காரணமாக அமைகின்றன. 

 

தற்­­கொலை முயற்­சிக்­கான காரணம் என்னவென்று பார்த்தால், முதலாவது பிரச்­சி­னையைத் தீர்க்கும் ஆற்றல் இன்மை. இரண்­டா­வது, ''எனக்கு  என்ன செய்வ­தென்று தெரி­ய­வில்லை. யாரா­வது உதவி செய்யுங்கள்'' என வேண்டுகோள் விடுத்தல்.

 

காதலன் காதலி வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டு, ''நீ என்னை காதலிக்காவிட்டால் நஞ்சு குடிப்பேன்'' எனக் கூறி வற்புறுத்தல் மூலம் தங்களின் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளல், காசு தராவிட்டால் நஞ்சு குடிப்பேன் என கூறி பயமுறுத்துதல், தனது மகன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்தால் தான் தற்கொலை செய்வதாக தாய் கூறுவது போன்ற காட்சியை திரைப்படங்களில், தொலைக்காட்சி நாடகங்களிலும் காணலாம்.

 

இன்­னொ­ரு­வரை வற்­பு­றுத்தல் மூலம் தன்­னு­டைய செயற்­பா­டு­களை நிவர்த்தி செய்­து­­கொள்­கிறார்கள்.

 

சிலர் திருமணம் முடித்து மூன்று மாதங்களில் விவாகரத்து செய்வதற்கு முடிவெடுப்பர் இதற்கான காரணம் என்ன?


இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். திருமணம் எப்படி முடிந்தது, யாரால் முடிந்தது, என்ன மாதிரி முடிந்தது என பல காரணங்கள் இருக்கின்றன.

 

திருமணத்திற்கு முன்பே விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் அறியாமல் இருக்கலாம்.

 

ஒருவரை ஒருவர் காதல் செய்தாலும் அவர்களை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். கருத்து பரிமாற்றமின்மையால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருமணத்தின் போது எதிர்பார்த்தவை கிடைக்காமை.

 

உதாரணமாக, பணம், உணவு, வீடு, அன்பு, நட்பை  எதிர்பார்க்கலாம். இதில் கருத்தொற்றுமை இன்மையால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

நாம் திருமணம்  செய்யும் போது ஒருவரை மாத்திரம் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு குடும்ப அங்கத்தவர்களோடு இணைவதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. 

 

திருமணம் செய்பவர் அனைவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திருமணம் செய்து கொள்வதில்லை.

 

பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்வதாலும் இப்பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். உடல் உறவு தொடர்பான எதிர்பார்ப்புகளாலும் இவ்வாறு விவாகரத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

 

சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குட்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் பற்றி விளக்கம் தாருங்கள்?

 

துஷ்பிரயோகத்திற்குட்படுகின்ற சிறுவர்கள் எல்லோரும் தற்கொலை முயற்சி செய்வதில்லை.

 

சிறுவர் துஷ்பிரயோகம் பல இடத்தில் பல விதமாக பலரால் நடக்கின்றது. பிள்ளைக்கு தெரிந்­த­வர்­களால் 95 சதவீதமாக துஷ்பிரயோகம் நடக்கிறது.  

 

மாமா, சித்தப்பா, அப்பா, பாடசாலை ஆசிரியர், தாத்தா, அம்மாவின் நண்பர்கள், அப்பாவின் நண்பர்கள், பாடசாலை சாரதி மூலமாக நடக்கிறது.  

 

தெரி­யா­தவர்களால் 5 வீதம் மாத்­திரமே இவ்வாறு நடக்கிறது. தெரிந்த நபர்­க­ளால் சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­­ரயோகம் செய்­வதை வெளிவரும் சந்தர்ப்பம் மிக குறைவாகவே இருக்கிறது.

 

பெற்­­றோர்­க­ளிடம் கூற அவர்கள் ஏற்­றுக்­கொள்­ளாது பிள்­ளைகள் மீது பழி சுமத்­துகி­றார்கள்.

 

வெளியாரின் பாலியல் துஷ்­பி­ரயோகம் மீண்டும் மீண்டும் நடப்பது மிக குறைவு. இதை தொடர்ச்­சி­யாக செய்ய முடி­யாது.

 

உதா­ர­ண­மாக கடைக்கு சென்ற போது பாலியல் துஷ்­பி­ரயோ­கத்துக்குட்பட்ட சிறுவரோ, சிறு­மி­யோ தொடர்ந்து அக்­க­டைக்கு செல்­வ­தில்லை.

 

வேறு கடைகளுக்கு செல்வர். ஆனால், வீட்­டினுள் செய்யப்படு­கின்ற துஷ்­பி­­­ர­யோ­­க­மா­னது தொடர்ச்­சி­யாக நடக்கும் அபாயமுள்ளது.

 

அதைப்பற்றி அம்­மா­விடம் கூறி­னால் நீ தான் ஏதா­வது தூண்­டுதல் செய்­தி­ருப்பாய் என சிறு­வர்களை திட்டுவார்கள். பாலியல் துஷ்­பிர­யோ­க­மா­னது மரணத்­திற்கு சமன் இல்லாத போதிலும் கொலைக்கு அடுத்தப்படியானது என்று கூறலாம். 

 

காரணம் மரணத்திற்கு சமமான தண்டனையை வழங்குவார்கள். பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஒரு­வரின் எதிர்காலம் பாதிக்கப்படுகி­றது.

 

உலக நாடு­களில் இதற்­காக சட்­ட­ நட­வ­டிக்கைகள் அதி­க­ரித்திருக்­கின்­றன. இல­ங்­கையை பொறுத்­த­மட்டில் 20 வரு­ட சிறைத்தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

தற்­­கொலை செய்ய முயல்பவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு காணப்படும். அது மட்டுமல்ல, பல்­­வேறு வகையில் பாதிக்­கப்­படுவார்கள். 

 

குற்ற உணர்வு,  நான் நல்­லவன் அல்ல கெட்­ட­வன், அசுத்­தப்­ப­டுத்­தப்­ப­ட்­டவன், தன்னை ஒரு­வரும் விரும்­பு­வ­தில்­லை, நல்ல உறவு கிடைப்­ப­தில்­லை, நான் வெறுக்­கப்­பட வேண்­டிய நபர் போன்ற கடு­மை­யான மன உளச்சலுக்கு ஆளாக்கப்படுவார்கள். 

 

மனநிலை பாதிக்கப்படுகின்றமை குறித்து விளக்கம் தாருங்கள்?

 

சிறுமி­யொருவர் வீட்டிலுள்ள நபரால் துஷ்­பி­ரயோகப்படுத்­தப்­ப­ட்டால் நீ தான் செய்­தி­ருப்பாய் என தாய் திட்டுவார்கள். பல்வேறு வயதினராலும் சிறுவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனர்.

 

இதனால் இவ்வயதினரை கண்டால் அவர்களுக்கு கோபம் உண்டாகும். அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும்.

 

எல்­லோ­ரையும் இதே போல் எண்ண வாய்ப்பு அதி­க­முள்­ளது. ஏனென்றால் சிறு­வர்­களை பாது­காப்­பது பெரி­யோ­ர்­களின் கடமை அதை தவ­றவிட்டால் சிறு­­வர்­க­ளுக்கு பெரி­­­யோர் மீது கோபம் ஏற்­­ப­ட அதிக வாய்ப்­புள்­ளது.  

 

மற்­றையது வீட்டில் இருப்­ப­வர்கள் ஏதா­வது செய்தால் அதற்கு குழந்தைகள் மீது குற்றஞ்சுமத்தப்படுவதால் சிறு­வ­ர்கள் உள­ரீ­தி­யாக பாதிப்­ப­டைய அதிக வாய்ப்­­புள்­ளது.

 

மற்­றது பாட­சாலைக்கு கூட இந்த பிள்­ளை­களை சேர்ப்­பதில் சமூகம் அதிக எதிர்ப்பு தெரி­விக்கும். 

 

(தொடரும்)

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.