Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போதைப் பொருள் சம்பந்தமாகப் பரவிவரும் வதந்திகளும் அதன் உண்மைகளும் - நிதர்ஷனா செல்லதுரை
2015-08-23 09:57:24

(நேர்காணல்: தயா ஜெயா)

 

இன்று அனைவரினாலும் போதைப் பொருள் பாவனை தொடர்பாக பல்வேறு திரிபடைந்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

அதனால் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய போதைப் பொருள் வகைகளான சிகரட், மதுபானம், பியர், வைன், கள்ளு, கசிப்பு போன்றவைகள் விளம்பரமாகும் அவல நிலை காணப்படுகின்றது.

 

எனவே, போதைப் பொருள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்துகொள்வோம் என்கிறார் ஊடகப்பிரிவின் இணைப்பதிகாரி நிதர்ஷனா செல்லதுரை. 

 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளமை, எந்த வகை போதைப் பொருளாக இருந்தாலும் அது அசௌகரியமான,  உடலுக்கு ஒவ்வாத பல்வேறு அழுத்தங்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரைவிலக்கணமாகும்.

 

மேலும், அதனால் ஏற்படக் கூடிய அசெளகரியத்தினால் ஒருவித மயக்க நிலை ஏற்பட்டாலும் சுய நினைவு இல்லாமல் போவதில்லை.

 

மேற்குறிப்பிட்ட போதைப் பொருட்களான சிகரட், மதுபானம், பியர் போன்றவற்றினால் மரணங்கள், நோய்வாய்ப்படல், அவலட்சணமாதல்,  பாலியல் பலவீனம் ஏற்படல், வறுமை ஏற்படல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

 

உதாரணமாக சிகரட் புகைப்பதனால் ஒரு வருடத்திற்கு இலங்கையில் 20,000 பேர் இறக்கின்றனர். 

 

இலங்கையில் தொற்றாத நோய்களுக்கும் காரணமாக அமையும் 4 காரணிகளில் முதலிரண்டு இடத்தில் சிகரட் மற்றும் மதுசாரம் காணப்படுகின்றன.

 

எனினும், உற்பத்தி நிறுவனங்களை மேற்குறிப்பிட்ட எந்த பிரச்சினைகளையும் பொருட்படுத்தாது தங்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்குப் நுட்பமான விளம்பரங்களை மேற்கொள்கின்றன.

 

குறிப்பாக, யுத்தத்தின் பின்னர் வடக்கு,  கிழக்கில் தங்களின் உற்பத்திப் பொருட்களின் பாவனையை அதிகரிப்பதற்கு அதிகமான உத்திகளைக் கையாண்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது.  

 

அதில் கிளிநொச்சி B பகுதியில் 1000 குடும்பங்களை தெரிவு செய்து  நிலையான விவசாய அபிவிருத்தி  செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு புகையிலை கம்பனி அனுசரணை வழங்கியமை, கிளிநொச்சி பொலிஸ் நிலையம் அமைத்தமை, சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு 20,000 வீடுகள்  கட்டிக்கொடுத்தமை, அதிகமான மதுபானசாலைகளை அமைத்தமையும் அலங்கரித்தமையும், கடை உரிமையாளர்களுக்கு சன்மானங்கள் வழங்கி கௌரவித்தமை, சட்டத்தைப் பலமிழக்க செய்வதற்காக உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றவற்றை குறிப்பிடலாம் (மேலதிக தகவல்களுக்கு 011 2584416).

 

மேலும், பியர் போத்தல்கள் டின்களாக மாற்றப்பட்டமை, நடிகர்களுக்கு அதிக பணம் கொடுத்து திரைப்படங்களில் கவர்ச்சியூட்டும் காட்சிகளை திணித்தல்,  ஏனைய பொருட்களுக்கு விலை அதிகரிப்பதை போன்று சிகரட் மற்றும் மதுசார வகைகளுக்கு அதிகரிக்காமை, மொத்த தேசிய உற்பத்தியில் சிகரட் அதிகமான வரி 13% அளவு கிடைத்தாலும் அதிகமான  வரியை அரசாங்கத்திற்கு வழங்கும் நிறுவனமாக காட்டிக் கொள்கின்றமை, பியர் டின்களை இளைஞர்கள் நடமாடும் பகுதியில் பரப்பியிருத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

 

ஆனால், இவற்றின் உண்மையை அறிந்துக் கொண்ட அரசாங்கம், அரச சார்பற்ற சில நிறுவனங்கள், சமூக  நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர்களின் பயனான செயற்பாடுகளினால் சிகரட் மற்றும் மதுசார கம்பனிகள் அதிகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிட்டது.

 

எனவே தான் போதைப் பொருள் சம்பந்தமாக போலியான பல வதந்திகளை அவர்கள் சமூக மத்தியில் பரப்புகின்றனர்.

 

இதில் அண்மைக் காலமாக போதைப் பொருள் பாவனையில் மிகப் பிரதானமான பிரச்சினையாக அமைவது மாத்திரைகள், ஊசிகள், ஸ்ப்ரேய் வகைகள் என்பன பாடசாலை மாணவர்கள் மத்தியிலான பாவனை அதிகமெனக் காட்ட முயற்சித்தல் பிரதான அங்கமாக இருக்கின்றது.

 

இலங்கையில் 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றனர்.

 

இதில் மேற்குறிப்பிட்ட மாத்திரைகள், ஊசிகள், ஸ்ப்ரேப் வகைகள் பாவிப்பவர்கள் மிகக் குறைவிலேயே இருக்கின்றார்கள்.

 

பாடசாலை மாணவர்கள் பரீட்சித்துப் பார்க்கும் வயதிலிருப்பதனால் ஊடங்களின் மூலம் அடிக்கடி இவற்றை பாவனை அதிகம் எனக் குறிப்பிடும் போது ஏனைய மாணவர்களும் பரீட்சித்துப்பார்க்க முற்படுகின்றனர். 

 

உண்மையில் பாட சாலை மாணவர்கள் மத்தியில் சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான சாதகமான மனநிலைகளை குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்தி வரும் இத்தருணத்தில், இவற்றைப் பலமிழக்கச் செய்யாமல் ஏனைய போதைப் பொருள் தொடர்பாக எமது கவனத்தை திசைத் திருப்பினால் குறிப்பிட்ட கம்பனிகளுக்கு சாதகமாக அமைகின்றது.

 

எனவேதான் மேற்குறிப்பிட்ட  போலியான யுத்த காலத்தின் பின்னர் வட பகுதியில் சிகரட் மற்றும் மதுசார பாவனையில் ஓரளவு அதிகரிப்பு இருப்பினும், அவற்றை மறைத்து ஏனைய போதைப்பொருள் அதிகரிப்பென வரைவிலக்கணப்படுத்தி வருகின்றார்கள்.  

 

2011ஆம் ஆண்டு சிகரட் 29% , மதுசாரம்  36%, 2012ஆம் ஆண்டு சிகரட் 40% , மதுசாரம் 17.9%, 2013ஆம் ஆண்டு சிகரட்  37.3%, மதுசாரம் 29.7 %, 2014ஆம் ஆண்டு சிகரட் 27.1% , மதுசாரம் 24.9% ஆனால், யாழ். மாவட்டத்தில் சிகரட் மற்றும் மதுசார பாவனையை குறைப்பதற்கான செயற்றிட்டங்களை விட ஏனைய போதைப் பொருட்களை தடுக்கும் செயற்திட்டகள் அதிகரித்து கொண்டிப்பது உண்மையில் வியத்தகு விந்தையாகும்.

 

எந்தவொரு போதைப் பொருளையும் பாவிப்பதற்கு முன்னர் சிகரட்டிலேயே ஆரம்பிப்பர். 100% மான ஏனைய போதைப் பொருள் பாவிப்போரும் சிகரட்டில் ஆரம்பித்தோரே.

 

ஆகவே, சிகரட் பாவனைத் தடுப்பு செயற்றிட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கினாலே மற்றைய போதைப் பொருள் பாவனை தானாகவே தடுக்கப்படும். 

 

ஏனைய புதிய புதிய போதைப் பொருட்களை ஊடங்களில் தணித்து மக்களையும், ஊடங்களை திசைத்திருப்புவதும் சிகரட், சாராயக் கம்பனிகளின் விற்பனைத் தந்திரோபாயங்களில் ஒன்று. எனவே, எவர் எப்படி எங்களை ஏமாற்ற முற்பட்டாலும் ஏமாந்து அசௌகரியப்படாமலிப்பதுடன், ஏனையவர்களையும் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள உண்மையான தகவல்களை அறிந்திருப்பது அவசியமென்பதை புரிந்துக் கொள்வோம்.

 


மேலதிக விபரங்களுக்கு:
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய 
ஊடகப்பிரிவின் இணைப்பதிகாரி
நிதர்ஷனா செல்லதுரை
ADIC
40/18, Park Road,Colombo -05
Tel –- 011 258 4416/
Mob- – 0714 352 849 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
S.Rameshkumar2015-08-26 08:14:06
உண்மையில் இவ்வாறான தகவல்களை மக்களுக்கு வழங்குவதால் மிகவும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும். ஆனால், நீங்கள் அவர்களின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. எனவே சரியான இலக்கம் ஒன்றை தரவும் நன்றி.
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.