Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தெரிவுசெய்யப்பட்ட 48 மருந்துச் சேர்வைகளின் அதிகபட்ச சில்லறை விலை
2016-11-11 12:41:30

48 மருந்­து­களின் விலை­கு­றைப்பு தொடர்­பாக சுகா­தார போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்­ன­வினால் 2016 ஒக்­டோபர் 21 ஆம் திகதி அர­சாங்க வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது.

 

அதில் குறிப்­பி­டப்­பட்ட 148 மருந்­துப்­பொ­ருட்­களின் அதி­க­பட்ச சில்­லறை விலை தொடர்­பான பட்­டி­யல் வாச­கர்­களின் நன்மை கருதி இங்கு பிர­சு­ரிக்­கப்­ப­டு­கி­றது. 


மேற்­படி வர்த்­த­மானி அறி­வித்­தலில், "இயை­பான திக­தி­யன்றும் அதன் பின்­னரும், உற்­பத்­தி­யாளர், இறக்­கு­ம­தி­யாளர், விற்­ப­னை­யாளர் மற்றும் மருந்­தாளர் எவரும், இதற்­கான அட்­ட­வ­ணையின் ii ஆம் நிரலில் தரப்­பட்­டுள்ள ஏதேனும் அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­பட்ட ஔட­தத்தை, அதன் V ஆம் நிர­லி­லுள்ள நேரொத்த பதிவில் விதிக்­கப்­பட்ட அதி­க­பட்ச சில்­லறை விலைக்கு (அ.சி.வி) மேலாக விற்­பனை செய்­த­லா­காது.


    
அட்­ட­வ­ணையில் விதிக்­கப்­பட்ட அ.சி.விக்குக் குறை­வா­ன­தொரு விலையில் அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­பட்ட ஔ­ட­த­மொன்றைத் தற்­போது விற்­பனை செய்­கின்ற உற்­பத்­தி­யாளர், இறக்­கு­ம­தி­யாளர், விற்­ப­னை­யாளர் அல்­லது மருந்­தாளர் ஒருவர், ஏதேனும் விலை­ய­தி­க­ரிப்­பின்றி உளதாம் விலையைப் பேணு­வ­தற்குத் தேவைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்றார்.


 இயை­பான திக­தி­யன்று உற்­பத்தி செய்யப்­பட்ட அல்­லது விற்பனைக்­காகச் சந்­தையில் அல்­லது மருந்­த­கத்தில் கிடைக்­கக்­கூ­டிய அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­பட்ட ஔ­ட­தங்­களின் கையி­ருப்­பி­லுள்ள இனத்தின் ஒவ்வோர் அல­கி­னதும் இத­ன­கத்­துள்ள அட்­ட­வ­ணையில் தரப்பட்­டுள்­ள­வா­றான இயை­பான அதி­க­பட்ச சில்­ல­றை விலை அல்­லது நடை­மு­றை­யி­லுள்ள சில்­லறை விலை ஆகி­ய­வற்றில் எது குறை­வா­னதோ அது, செயல்­மு­றைக்­கு­கந்த வரை விரை­வாக அந்­தந்த வர்த்­தகப் பொதியில் அல்­லது சுட்­டுத்­துண்டில் அச்­சி­டப்­ப­டுதல் அல்­லது அடை­யா­ள­மி­டப்­ப­டுதல் வேண்டும்.
    
இவ்­வொ­ழுங்­கு­ வி­தி­களை நடைமுறைப்­ப­டுத்­து­த­லா­னது தேசிய மருந்­துகள் ஒழுங்கு­ப­டுத்தல் அதி­கார சபை­யி­னதும் சுகா­தார, போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சி­னதும் பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கார சபை­யி­னதும் பொறுப்­பாதல் வேண்டும்.


இவ்­வொ­ழுங்­கு ­வி­தி­களின் ஏற்­பா­டு­களை மீறு­கின்­ற­வ­ரான எவ­ரேனும் உற்­பத்­தி­யாளர், இறக்­கு­ம­தி­யாளர், விற்­ப­னை­யாளர் அல்­லது மருந்­தாளர் தவ­றொன்றைப் புரி­கின்­றா­ரென்­ப­துடன், 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதி­கா­ர­சபைச் சட்­டத்தின் 132 ஆம் பிரி­வின்கீழ் விளங்­கப்­ப­டற்­பா­ல­வ­ரா­தலும் வேண்டும்.


இதற்­கான அட்­ட­வ­ணையில் தரப்­பட்­டுள்ள அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­பட்ட ஔ­ட­தங்­களின் அதி­க­பட்ச சில்­லறை விலையை ஒவ்­வொரு சில்­லறை விற்­பனை நிலை­யத்­திலும் வெளிக்­காட்டி வைத்தல் ஒவ்வோர் உற்­பத்­தி­யா­ள­ரி­னதும் விற்­ப­னை­யா­ள­ரி­னதும் இறக்­கு­ம­தி­யா­ள­ரி­னதும் மருந்தாளரினதும் கடமையாதல் வேண்டும்"  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இம்மருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பாக  011–3071073 அல்லது 011– 3092269 எனும் தொலைபேசி இலக்கங்களின் மூலம் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.