Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (3)
2014-07-10 23:32:19

( தொடர்ச்சி)


1971.11.24 ஆம் திகதி அமெரிக்காவின் நோர்வெஸ்ட்  ஓரியன்ட் எயார்லைன்ஸ் 305 விமானத்தைக் கடத்தி கப்பமாக பெற்ற 2 லட்சம் டொலர் பணத்துடன் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்த டி.பி. கூப்பர் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. அவனுக்கு என்ன நடந்தது என்பது இன்றுகூட புரியாத புதிராத உள்ளது.

 

அமெரிக்காவின் முப்படையினரும் பொலிஸாரும் பொதுமக்களும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு தேடுதல்களில் ஈடுபட்டபோதிலும் டீ.பி. கூப்பர் குறித்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை.


அதனால்தான் உலக வரலாற்றில் மிக மர்மமாக மறைந்த நபர்களில் ஒருவனாக அந்த கூப்பர் விளங்குகிறான்.

 

சுமார் 9 வருடங்கள் கடந்தபின் திருப்புமுனையான அந்த ஒரு சம்பவம் இடம்பெற்றது. 1980 பெப்ரவரிலயில் பிரையன் இங்ரம் எனும் 9 வயதான சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாஷிங்டன் மாநிலத்தின் வான்கூவர் நகரிலிருந்து 14 கிலோம்Pற்றர் தெலைவிலுள்ள கொலம்பிய நதிக்கரையோர பகுதியில் விடுமுறை அனுபவித்துக்கொண்டிருந்தபோது சிதைவடைந்த 3 பணக்கட்டுகளை கண்டெடுத்தான்.

 

இறப்பர் பேண்ட்களால் கட்டப்பட்ட நிலையில் அந்தப் பண நோட்டுகள் இருந்தன. அமெரிக்க சமஷ்டி புலனாய்வு பணியகத்தை (எவ்.பி.ஐ.) சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இப்பணத்தை ஆராய்ந்த அவை டீ.பீ. கூப்பருக்கு வழங்கப்பட்ட கப்பப்பணத்தின் ஒரு பகுதிதான் என்பதை உறுதிப்படுத்தினர்.  

 

கூப்பருக்கு எவ்.பி.ஐ. அதிகாரிகள் கப்பப்பணத்தை வழங்கும்போது அவற்றை மைக்ரோ பிலிமினால் படம்பிடித்துவிட்டே கொடுத்தனர். கூப்பருக்கு கொடுக்கப்பட்ட பணம் அடுக்கப்பட்டிருந்த அதே ஒழுங்கிலேயே பிரையன் இங்ரம் கண்டெடுத்த பணக்கட்டுகளில் நோட்டுக்கள் காணப்பட்டன.


இரு கட்டுகளில் 100 நாணயத்தாள்களும் மற்றொன்றில் 90 நாயணயத்தாள்களும் இருந்தன. அந்த மூன்றாவது பணக்கட்டில் 10 தாள்கள் குறைந்திருந்தன.

 

இப்பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் விமானக் கடத்தல்காரன் கூப்பரை கண்டுபிடிப்பற்கான வழிகளை திறந்துவிடவில்லை. மாறாக அவை சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்படுவதற்கு வழிவகுத்தன.

 

கூப்பருக்கு வழங்கப்பட்ட பணம் கொலம்பியா நதிக்கரையை அடைந்து எப்படி என்பது குறித்து பல ஊகங்கள் தெரிவிக்ப்பட்டன.


அப்பணத்தாள்கள் நீள்வட்டமாக சிதைந்து காணப்பட்டன. அதனால் அவை குறித்த இடத்தில் எவராலும் வேண்டுமென்றே புதைக்கப்படாமல், நீண்டகாலமாக நீரலைகளின் தாக்கத்தற்கு உள்ளாகியிருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. அது உறுதியானனால் முன்னர் கருதப்பட்டதைப்போல் டீ.பி. கூப்பர் மேர்வின் ஏரி பகுதியில் தரையிறங்கவில்லை என்பது உறுதியாக வேண்டும்.

 

அதேவேளை, இப்பணக்கட்டுகள் நீரில் தானாக அடித்துவரப்பட்டிருக்கலாம் என்ற கருத்து தொடர்பாகவும் சந்தேகம் இருந்தது. மூன்றாவது பணக்கட்டில் 10 தாள்கள் குறைந்தது ஏன் என்பது பிரதான சந்தேகம்.  அத்துடன் கப்பப்பணத்தின் எஞ்சிய பணத்தை எடுத்துக்கொண்ட எவரேனும் 3 கட்டுகளை மாத்திரம் விட்டுவிட்டு சென்றிருப்பார்கள் என்பதும் நடைமுறை சாத்தியத்துக்கு முரணாக இருந்தது.

 

 

 

அதேவேளை அப்பணக்கட்டுகள் சில வருடங்களுக்குமுன்பிருந்தே  அதாவது 1973 நவம்பர் மாதமளவிலிருந்தே நீரில் கிடந்திருக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றின் இறப்பர் பேண்ட் நீரின் தாக்கத்தினால் சிதைவடைந்திருக்கும் எனவும் ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

 

அப்பணக்கட்டுகளில் படிந்திருந்த மணற்படிவுகளையும் கருத்திற்கொண்ட சிலர், அப்பணக்கட்டுகள் வேறொரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்த பின்னர் மனிதர்களால் சிலவேளை மிருகங்களால் நதிக்கரையோரத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.


டீ.பீ. கூப்பர் விமானத்திலேயே பணக்கட்டுகள் சிலவற்றை தற்செயலாக தவறவிட்டிருக்கலாம். விமானத்திலிருந்து கூப்பர் குதித்தபின்னர் அப்பணக்கட்டுகள் காற்றில் பறந்து வந்து கொலம்பியா நதியில் விழுந்திருக்கலாம் என அதிகாரியொருவர் கூறினார்.


அதேவேளை உள்@ர் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்கையில்,  தன்னால் இப்பணத்தை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்த கூப்பர் அப்பணத்தை நதியில் கொட்டியிருக்கலாம் அல்லது நதிக்கரையில் புதைத்திருக்கலாம் எனத்தெரிவித்தார்.


ஆனால், இன்றுவரை அப்பணக்கட்டுகள் அவை  கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு எப்படி வந்தன என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்நதிக்கரையில் மேலதிக ஆதாரங்களைத் தேடி பாரிய அகழ்வுகள்மேற்கொள்ளப்பட்டபோது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது ஒரு பெண்ணுடையதாக இருந்தது.

 

பிரையன் இங்ரம் கண்டுபிடித்து பணத்தொகையை அவருக்கும் நோர்த்வெஸ்ட் விமான சேவையின் காப்புறுத்தி நிறுவத்துக்கும் சமமாக பங்கிட்டு வழங்க  1986 ஆம் ஆண்டு அதிகாரிகள் தீர்மானித்தனர். சில நாணயத்தாள்களை எவ்.பி.ஐ. அதிகாரிகள் ஆதாரங்களுக்காக தம்வசம் வைத்துக்கொண்டனர்.

 

கூப்பர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. விமானத்தில் கிடந்த கூப்பரின் கழுத்துப்பட்டி கிளிப் ஒன்றின் மூலம் கூப்பரின் டி.என்.ஏ. மாதிரியை பெற்றுள்ளதாக   2007 ஆம் ஆண்டு எவ்.பி.ஐ. அதிகாரிகள் அறிவித்தனர். கூப்பரை இனங்காண்பதற்காக வரையப்பட்ட மேலும் விபரமான ஓவியங்களும் வெளியிடப்பட்டன.

 

5 வருடங்களுக்கு முன் 2009 ஆம் ஆண்டு ஷியாட்டில் நகரிலுள்ள தேசிய வரலாற்று கலாசார நூதனசாலையொன்றை சேர்ந்த டொம் காயே என்வவர், 1971 ஆம் ஆண்டு காலத்தில் கிடைக்காத ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய ஆய்வுகளை  மேற்கொள்ளவதற்காக தொண்டர் குழுவொன்றை திரட்டியதாக எவ்.பி.ஐ. தெரிவித்தது.


கூப்பர் எனும் இந்த நபர் தனது பெயர் டேன் கூப்பர் என்றே விமான டிக்கெட் விற்பனைக்கூடத்தில் தெரிவித்திருந்தான். விமானக் கடத்தல் குறித்த செய்தியை அறிக்கையிடும் அவசரத்தில் இருந்த செய்தியாளர் ஒருவர் கூப்பரின் பெயரில் முதல் எழுத்து என்னவென தொலைபேசியில் விசாரித்தபோது "டீ" என விமான டிக்கெட் விற்பனை அலுவலர் பதிலளிக்க அதை "பீ" என புரிந்துகொண்ட செய்தியாளர் டீ.பீ. ஆகிய இரு எழுத்களையும் இணைத்து டி.பீ. கூப்பர் என எழுதினார். அதுவே பின்னர் நிலைத்துவிட்டது.


அதேவேளை தன்னை டான் கூப்பர் என கடத்தல்காரன் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு நீண்டகாலமாக பிரெஞ்சு மொழியில் வெளியாகிக்கொண்டிருந்த டேன் கூப்பர் எனும் "சாகச சித்திரத்தொடர்கதை" காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் கூப்பரின் விமானக்கடத்தலுக்குப் பின்னரே இந்த டேன் கூப்பர் சாகச சித்திரக்கதை குறித்து அதிகம் அறியப்பட்டது.


டேன் கூப்பர் என்ற பெயரில் விமானத்தைக் கடத்திய நபர் யாரென்பது தெரியாத நிலையில் பல்வேறு நபர்கள் குறித்து பல தசாப்தங்களாக சந்தேகம் நிலவி வருகிறது. பதமது தமது கடைசிக்காலத்தில், காலஞம்சென்ற தமது உறவினர் தான் டான்  கூப்பர் என சந்தேகதித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.  பிரபலமடைவதற்காக சிலர் பொய்யாகவும் இத்தகைய கதைகளை வெளியிட்டதுண்டு.

 

அண்மைக் காலத்திலும் சிலர் தமது உறவினர்கள் குறித்த சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.


2011 ஆண்டு மார்லா கூப்பர் எனும் அமெரிக்கப் பெண் தனது மாமா எல்.டி.கூப்பர் சந்தேகத்திற்குரிய நபராக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டு தான் 8 வயது சிறுமியாக இருந்தபோது தனது மாமாவும் மற்றொருவரும் தனது பாட்டியின் வீட்டில் வைத்து இரகசியமாக ஏதோ திட்டமிட்டதாகவும் மிக விலை உயர்ந்த வோக்கி டோக்கி பற்றி பேசிக்கொண்டதாகவும் அடுத்தநாள் விமானம் கடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அச்சம்பவம் இடம்பெற்று இரத்தம் தோய்ந்த ஆடையுடன் தனது மாமா எல்.டி.கூப்பர் வீட்டுக்கு வந்ததகாவும் மார்லா கூப்பர் கூறினார். 1999 ஆம் ஆண்டு எல்.டி. கூப்பர் காலமாகியிருந்தார்.

 

இவ்வாறு பல கதைகள் உள்ளன. அதேவேளை, டீ.பீ. கூப்பரை பின்பற்றி விமானக் கடத்தலில் ஈடுபட்டு கப்பப் பணத்துடன் விமானத்திலிருந்து குதித்து உயிரைவிட்டவர்களின் வரலாறும் உள்ளது. 

 

(தொடரும்)


- சத்ருகன்

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (2)

 

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன்(1)

 

* 100 பேரின் மரணத்துக்கு வழிவகுத்த மலேஷிய எம்.எச். 653 விமானக் கடத்தல் (6)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - ( 3)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.