Wednesday  26 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
100 பேரின் மரணத்துக்கு வழிவகுத்த மலேஷிய எம்.எச். 653 விமானக் கடத்தல் (உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் தொடர் 06)
2014-05-10 22:41:48

(கடந்த  வாரத் தொடர்ச்சி)

 

லே­ஷிய எயார்­லைன்ஸின்ஸ் நிறு வனத்தின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய், பல வாரங்­க­ளா­கின்றன. கோலா­லம்பூரிலி­ருந்து மார்ச் 8 ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி புறப்­பட்ட விமானம் தெற்கு நோக்கி பறந்த நிலையில் இந்து சமுத்­தி­ரத்தில் தென் பகு­தியில் வீழ்ந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கிறது. இதனால் அவுஸ்­தி­ரே­லிய கரை­யோ­ரத்­தி­லி­ருந்து 1000 கிலோ­மீற்­றர்­க­ளுக்கு அப்பால் தேடு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டன.


ஆனால், இது­வரை அவ்­வி­மானத்தின் எந்தத் தட­யமும் கண்­டறி­யப்­ப­ட­வில்லை.  இவ்­வி­மா­னத்தை யாரா­வது கடத்­தி­யி­ருக்­கலாம் என விமானம் காணாமல் போய் ஒரு வாரத்தில் மலே­ஷிய பிரதமர் தெரி­வித்­தி­ருந்தார்.


இவ்­வி­மானம்  பயங்­க­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்டு ஆப்­கா­னிஸ்­தானில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பயணிகள் பண­யக்­கை­தி­க­ளாக உள்­ள­தா­கவும் ரஷ்ய உள­வுத்­துறை வட்­டாரங்கள் தெரி­வித்­த­தாக அண்மையில் செய்திகள் வெளி­யா­கின.


ஏற்­கெ­னவே இவ்­வி­மானம் இந்து சமுத்­திர தென் பகு­தி­யி­லுள்ள டியகோ கார்­சியா தீவின் அமெ­ரிக்கப் படைத்­த­ளத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டி­ருக்­கலாம் எனவும் வதந்­திகள் வெளி­யா­கின. இதை அமெ­ரிக்கா மறுத்­தது.


இவ்­வி­மானம் எங்­கேனும் தரை­யிறக்­கப்­பட்­ட­மைக்­கான நம்­ப­க­மான தக­வல்கள் வெளி­வ­ர­ாவிட்­டாலும்,      எம்.எச் 370 விமானம் யாரோ நபரினால் அல்­லது குழு­வினால்  கடத்­தப்­பட்ட நிலையில் விபத்­துக்­குள்­ளா­கி இருக்கலாம் ­என்ற கருத்­துகள் வலு­வ­டைந்து வரு­கின்றன.


எம்.எச்.370 விமானம் கடத்­தப்­பட்டிருக்­கலாம் என்ற ஊகங்கள் வெளி­வரத் தொடங்­கிய வேளை­யிலேயே உலகை உலுக்­கிய விமானக் கடத்­தல்கள் குறித்த இத்­தொடர் ஆரம்பிக்­கப்­பட்­டது.


எவ்­வா­றெ­னினும், மலே­ஷிய விமான­மொன்று கடத்­தப்­பட்ட முதல் சம்­பவம் இது­வல்ல. மலே­ஷி­யாவின் வர­லாற்றில் மிகப் பயங்­க­ர­மான விமானக் கடத்தல் சம்­பவம் 1977 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது. 100 பேர் அச்­சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டனர்.


கடந்த மாதம் வரை மலே­ஷியா எதிர்­கொண்ட மிக மோச­மான விமான அனர்த்­த­மாக அச்­சம்­பவம் இருந்­தது.

 


அந்த விமா­னமும் மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மா­னதுதான். எம்.எச். 653 எனும் அவ்வி­மானம் போயிங் 737-200 ரகத்தைச் சேர்ந்­தது.


1977 டிசெம்பர் 4 ஆம் திகதி இரவு 7.21 மணிக்கு மலே­ஷி­யாவின் பெனாங் நக­ரி­லி­ருந்து தலை­நகர் கோலாம்பூர் நோக்கி அவ்­வி­மானம் புறப்­பட்­டது. மலே­ஷிய விவ­சா­யத்­துறை அமைச்சர் டத்தோ அலி ஹாஜி அஹமட், ஜப்­பானுக்­கான கியூபா தூதுவர் மரியா கார்­சியா இசா­வுஸ்­டெகுய் உட்­பட 97 பய­ணி­களும் 7 ஊழி­யர்­க­ளு­மாக 100 பேர் அவ்­வி­மானத்தில் இருந்­தனர்.


விமானம் புறப்­பட்டு சுமார் 33 நிமிடங்­க­ளின்பின்,  கோலா­லம்பூர் சுபாங் விமான நிலை­யத்தில் தரை­யிறங்­கு­வ­தற்கு தயா­ராகிக் கொண்டிருந்­த­போது கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­க­ளுக்கு அந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்­தது.


விமா­னத்தில் இனந்­தெ­ரி­யாத கடத்தல்காரர் ஒருவர் இருப்­பதாக விமான ஊழியர் ஒருவர் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­களுக்குத் தெரி­வித்தார். அவ்­வே­ளையில் 4000 அடி உய­ரத்தில் விமானம் பறந்­து­கொண்­டி­ருந்­தது. இத்­த­கவல் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்டு விமான நிலை­யத்தில் அவ­ச­ர­கால ஏற்­பா­டுகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்­டன.

 


ஆனால், அங்கு விமானம் தரை­யிறங்­க­வில்லை. சில நிமிடங்­க­ளின்பின் “நாம் சிங்கப்பூர் நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கிறோம்” என விமான  ஊழியர் ஒருவர் தகவல் கொடுத்தார். ஆனால், அந்த  விமானம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்­தையும் சென்ற­டை­ய­வில்லை.


அதன்பின் சில நிமி­டங்­களில் இரு துப்­பாக்கிப் பிர­யோக சத்தங்கள் விமானி அறையின் ஒலிப்­ப­திக்­க­ரு­வியில் பதி­வாகி­யமை புல­னாய்­வா­ளர்­களால் பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.


அன்­றி­ரவு 08.15 மணி­யளவில் விமானத்­து­டனான சகலதொடர்­பு­களும் துண்­டிக்­கப்­பட்­டன. இரவு 8.36மணி­ய­ளவில் வெடிப்புச் சத்த­மொன்றை தாம் கேட்­ட­தா­கவும் எரிந்த பொருட்­களின் சிதை­வுகள் தரையில் காணப்­ப­டு­வ­தா­கவும் மலே­ஷி­யாவின் டான்ஜூங் குப்பாங் எனும் கிரா­மத்­தி­லுள்ள மக்கள் தெரி­வித்­தனர். அவை எம்.எச்.653 விமானத்தின் சிதை­வுகள் என்­பது பின்னர் கண்­டு­பிடிக்­கப்­பட்­டது.

 

 


விமா­னத்­தி­லி­ருந்த 100 பேரும் உயிரி­ழந்­தி­ருந்­தனர். அவர்­களின் உடல்கள் அடை­யாளம் தெரி­யா­த­ளவு சிதைந்­திருந்­தன. அவர்­களின் உடல்கள் பாரிய புதை­கு­ழி­களில் அடக்கம் செய்­யப்­பட்­டன.


விமா­னத்­தி­லி­ருந்த அனை­வ­ருமே உயி­ரி­ழந்­த நிலையில் அச்­சம்­பவம் இடம்­பெற்று சுமார் 37 வரு­டங்கள் கடந்த பின்­னரும் அவ்­வி­மா­னத்தை கடத்­தியவர் யார் என்­பது இன்­று­வரை கண்ட­றி­யப்­ப­ட­வில்லை.


வானில் அசா­தா­ர­ண­மான வகையில் ஏறி இறங்­கிய அவ்­வி­மானம் பின்னர் ஏறத்­தாழ செங்­குத்­தாக தரையில் மோதி­ய­தை நேரில் கண்­ட­தாக சிலர் தெரி­வித்­தனர். அதே­வேளை விமானம் விழு­வ­தற்கு முன் தீப்­பற்­றியதை அவதானித்­ததா­கவும் வெடிப்­புச்­சத்தம் கேட்­ட­தா­கவும் சிலர் கூறினர்.


இரு துப்­பாக்கிப் பிர­யோக சத்­தங்களும் விமா­னி­யையும் துணை விமா­னி­யையும் சுட்­டுக்­கொல்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் ஏற்­பட்­டது என்­பது தெளி­வா­கி­யது. விமா­னிகள் கொல்­லப்­பட்­டபின் தொழிற்சார் ரீதியில் முறையான விதத்தில் விமானம் கையா­ளப்­ப­டாத நிலையில் அது தாறு மாறாக பறந்து விபத்­துக்­குள்­ளா­ன­தாக விசா­ரணை நடத்­திய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 


எனினும் விமா­னியின் அறைக்குள் யாரோ அத்­து­மீறி பிர­வே­சிப்­பது முதல் விமா­னி­யையும் துணை விமானி­யையும் சுட்­டுக்­கொல்­வது வரை ஒலிப்­ப­திவுக் கரு­வியில் பல விடயங்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. ஆனால், அக்­கொடூ­ரத்தை புரிந்த நபர் அல்­லது நபர்கள் யார் என்­ப­தையோ கடத்தலின் நோக்கம் என்ன என்­பதையோ புல­னாய்வு அதி­கா­ரி­களால் கண்­ட­றி­யவே முடியவில்லை.


எம்.எச்.370 விமானத்திற்கு என்ன நடந்தது என சில வாரங்களாக பலர் விடை தேடும் நிலையில், எம்.எச் 653 விமானத்தின் மர்மம் துலங்காமல் 37 வருடங்களாக தாம் தவிப்பதாகவும் அவ்விமானத்தில்  பயணம் செய்து உயிரிழந்த ரிச்சர்ட் ஷெரிங்டன் என்பவரின் மகன் டொம் ஷெரிங்கடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.


தனது தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தாம் இன்னும் விடுபடவில்லை என    எம்.எச்.653 விமானத்தின் தலைமை விமானியான கெப்டன் ஜி.கே கன்ஜூரின் மகளான தேவிகா கன்ஜூர் கூறுகிறார். வரலாற்றின் மிக மர்மமான விமானக் கடத்தல்களில் ஒன்றாக   எம்.எச்.653 விவகாரமும் நீடிக்கிறது.                  (தொடரும்)


(-சத்ருகன்)


(மெட்ரோ நியூஸ் வார இதழ்  25-04-2014)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - ( 3)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.