Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)
2014-04-23 22:13:11

-சத்ருகன்


(கடந்த வாரத் தொடர்ச்சி)


கியூபாவில் பிடெல் கஸ்ட்ரோ ஆட்­சிக்கு வந்­தபின் கியூப விமா­னங்­களில் அமெ­ரிக்­கா­வுக்கு வந்து அர­சியல் புக­லிடம் கோரும் சம்­பவங்­களை கம்யூனிஸியத்­துக்கு எதி­ரான பி­ரசா­ரப்­போரில் கிடைத்த வெற்­றி­யாக அமெ­ரிக்கா கரு­தி­யது. இதனால் கியூப விமா­னங்கள் அமெ­ரிக்­கா­வுக்கு கடத்­தப்­படும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­தன.


ஆனால், அதிக காலம் இந்­நிலை நீடிக்­க­வில்லை. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்தும் கியூபாவுக்கு விமா­னங்கள் கடத்­தப்­படும் சம்­ப­வங்­களும் சில வரு­டங்­களில் ஆரம்­ப­மா­கின.


1961 மே முதலாம் திக­திதான் அமெ­ரிக்க விமா­ன­மொன்று கடத்­தப்­பட்ட முதல் சம்­பவம் இடம்­பெற்­றது. அன்­டு­லியோ ரொமிரெஸ் ஓர்ட்டிஸ் என்­பவர் கியூபாவுக்கு குடி­பெ­யர விரும்­பினார். அவ்­வே­ளையில் அமெ­ரிக்­கா­வுக்கும் கியூபாவுக்கும் உற­வி­லான ராஜ­தந்­திர உற­வுகள் முறி­வ­டைந்­தி­ருந்­தன. அந்­நி­லையில் கியூபாவில் குடி­யேற விரும்­பிய ரமிரெஸ் ஓர்ட்டிஸ் கையாண்ட வழி விமானக் கடத்தல்.


அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­தி­லி­ருந்து புறப்­பட்ட விமா­ன­மொன்றை கியூபாவுக்கு கடத்­தினார் ஓர்ட்டிஸ்.


1961 ஆம் ஆண்டில்  35 வய­தா­ன­வ­ராக இருந்த அமெ­ரிக்கப் பிர­ஜை­யான அன்­டூ­லியோ ரமிரெஸ் ஓர்ட்டிஸ், கொரிய யுத்­தத்­தின்­போது அமெ­ரிக்கப் படையில் பணி­யாற்­றி­யவர். 1961 மே முதலாம் திகதி மியாமி நக­ரி­லி­ருந்து புளொ­ரிடா மாநி­லத்தின் தென்­ப­குதி எல்­லை­யி­லுள்ள கீ வெஸ்ட் தீவு நோக்கி புறப்­பட்ட நெஷனல் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில்  ஏறினார்.


அக்­கா­லத்தில் விமானப் பயணி களையும், அவர்களின் பொதிகளையும் அமெரிக்க விமாநிலையங்களில் சோதனை­யிடும் வழக்கம் இருக்­க­வில்லை. ஓர்ட்­டி­ஸ் துப்­பாக்­கி­யொன்­றையும் கத்­தி­யொன்­றையும் தன்­னுடன் எடுத்துச் சென்­றி­ருந்தார்.


அவ்­வி­மானம் பறந்­து­கொண்­டி­ருந்த­போது விமா­னிக்கு துண்­டுச்­சீட்டை அனுப்­பிய ரமிரெஸ் ஓர்ட்டிஸ்,  விமா­னத்தை தகர்க்­கக்­கூ­டிய அள­வுக்கு வெடிப்­பொ­ருட்கள் தன்­னிடம் இருப்­ப­தா­கவும் விமா­னத்தை கியூபாவின் ஹாவானா நக­ருக்கு கொண்டு செல்­லு­மாறும் அத்­துண்­டுச்­சீட்டில் தெரி­வித்­தி­ருந்தார். வேறு வழி­யின்றி விமா­னத்தை ஹவா­னா­வுக்கு கொண்டு சென்றார் விமானி.


அதற்­குமுன்  அமெ­ரிக்­காவில் உள்ளூர் விமான நிறு­வ­னங்கள் எதுவும் விமானக் கடத்தல் சம்­ப­வங்­களை எதிர்­நோக்­கிய அனு­ப­வ­மில்­லா­ததால், அவ்­வி­மானம் அதற்­கு­ரிய பாதை­யி­லி­ருந்து மறைந்­ததும் அவ்­வி­மானம் கடலில் வீழ்ந்­து­விட்­டது என்றே அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கரு­தினர். தனது விமானம் கியூபாவுக்கு விமானம் கடத்­தப்­பட்­டு­விட்­டது என்­பது அமெ­ரிக்­கா­வுக்கு புதிய அதிர்ச்சி அனு­ப­வ­மாக இருந்­தது.


கியூபாவில் இறங்­கிய ரமிரெஸ் ஓர்டிஸ் கியூபாவில் அர­சியல் புக­லிடம் கோரினார். அவ­ருக்கு புக­லிடம் அளிக்­கப்­பட்­டது. ஆனால் பின்னர் அவர் அங்கு மகிழ்ச்­சி­யக இருக்­க­வில்லை. அவர் எதிர்­நோக்­கிய நெருக்­க­டி­களை பின்னர் பார்க்­கலாம்.


அச்­சம்­ப­வத்தின் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கியூபாவுக்கு விமா­னங்­களைக் கடத்­து­வது அடிக்­கடி இடம்­பெறும் நிகழ்­வாக மாறிப்­போ­னது.
விமா­னத்தில் ஏறி­யபின் “டேக் மி ஹவானா” (என்னை ஹவா­னா­வுக்கு கொண்­டுபோ) என்று கூறு­வது அமெ­ரிக்­காவில் நன்கு பிர­பல்­ய­மான ஒரு வச­ன­மா­கி­யது.


1931 ஆம் ஆண்டில் உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் சம்­ப­வத்தை எதிர்­கொண்ட அமெ­ரிக்க விமானி பிரையன் ரிக்காட்ஸ் மீண்டும் அவ்­வா­றான ஒரு சம்­ப­வத்தை எதிர்­கொண்டார் என இத்­தொ­டரின் முதல் அங்­கத்தில் குறிப்­பிட்­டி­ருந்தோம் அல்­லவா? அவர் எதிர்­நோக்­கிய இரண்­டா­வது சம்­பவம் 1961 ஆண்டில் இடம்­பெற்­றது.


அப்­போது கொண்­டி­னென்டல் விமான சேவை நிறு­வ­னத்தின் போயிங் 707 ரக பய­ணிகள் விமா­ன­மொன்றின் விமானி­யாக ரிக்கார்ட்ஸ் இருந்தார். அவர் லொஸ் ஏஞ்­சல்­ஸி­லி­ருந்து செலுத்­திய விமானம் பீனிக்ஸ் மற்றும் டெக்ஸாஸ் மாநி­லத்தின், எல் பஸோ, நக­ரங்­க­ளுக்­கூ­டாக சான் அன்­டா­னியோ நகரம் நோக்கி புறப்­பட்­டது.  எல் பஸோ நகரம் நோக்கி விமானம் சென்­று­கொண்­டி­ருந்­த­போது  தந்­தையும் மக­னு­மான இருவர் அவ்­வி­மா­னத்தை கியூபாவுக்கு கடத்­தத்­திட்­ட­மிட்­டனர். லியோன் பியர்டன், அவரின் 16 வயது மகன் கொடி பியர்டன் ஆகி­யோரே இந்­ந­பர்­க­ளாவர்.


அமெ­ரிக்கா வாழ்­வ­தற்கு பொருத்­த­மில்­லாத நாடு எனவும் கியூபாவில் புதி­தாக ஆட்­சிக்கு வந்த பிடெல் கஸ்ட்­ரோ­வுக்கு 54 இலட்சம் டொலர் பெறு­ம­தி­யான விமா­னத்தை பரிசாக வழங்க விரும்­பு­வ­தா­கவும் இவர்கள் கூறினர். அதற்­காக கஸ்ட்ரோ தம்மை பாராட்டி வெகு­ம­தி­ய­ளிப்பார் எனவும் அதன்பின் கியூபாவி­லேயே தாம் வசிக்­கலாம் என அவர்கள் நம்­பினர்.


எல்­பஸோ நகரில் விமா­னத்­திற்கு எரி­பொருள் நிரப்­பி­யபின் கியூபாவுக்கு விமா­னத்தை கொண்டு செல்­லப்­போ­வ­தாக லியோன் பியர்டன் தெரி­வித்தார். இத்­த­கவல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி கென்­ன­டிக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

 

தனது எதி­ரா­ளிக்கு மற்­றொரு அர­சியல் துருப்பு­சீட்டு கிடைப்­பதை விரும்­பாத ஜனா­தி­பதி கென்­னடி விமானம் டெக்­சா­ஸி­லி­ருந்து புறப்­ப­டு­வதை தடுக்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள உத்­த­ர­விட்டார். எல் பஸோவில் விமானம் தரை­யி­றக்­கப்­பட்­ட­வுடன் எவ்.ஐ.பி. பொலிஸார் வரும்­வரை  பழு­து­பார்க்கும் பாவனையில் ஊழி­யர்கள் விமா­னத்தை தாம­தப்­ப­டுத்­தினர்.


ஆனால், தாம­தத்தால் எரிச்­ச­லை­டைந்த லியோன் பியர்­டென்­ வி­மா­னி­களை மிரட்டி விமா­னத்தை கிளப்­பு­மாறு உத்­த­ர­விட்டார். விமானம் ஒடு­பா­தையில் ஓடத் தயா­ரா­ன­போது 4 கார்­களில் துரத்திச் சென்­றனர். விமா­னத்தின் டயர்கள் சுடப்­பட்­டதால் அவ்­வி­மானம் புறப்­ப­டு­வது தடுக்­கப்­பட்­டது. லியோன் பியர்­ட­னுமம் கொடி பியர்­டனும் கைதா­கினர்.


ஆனால், அதை­ய­டுத்த தசாப்­த­காலம் உலகில் மிக­அ­திக விமானக் கடத்­தல்கள் இடம்­பெற்­ற­தொரு காலப்­ப­கு­தி­யாகும்.


1958 முதல் 1969 வரை உலகின் மேற்கு அரைக்­கோ­ளத்தில் விமானக் கடத்­தல்கள் என்­பது அடிக்­கடி இடம்­பெறும் விட­ய­மாக மாறி­யி­ருந்­தது. அவற்றில் பெரும்­பா­லான அமெ­ரிக்க விமானக் கடத்­தல்கள்  கியூபாவை மைய­மாகக் கொண்­டி­ருந்­தன.

 

 அதா­வது, 1958 முதல் 1969 வரை­யான உலகில் இடம்­பெற்ற விமானக் கடத்­தல்­களின் எண்­ணிக்கை 177. இவற்றில் 80 சத­வீ­த­மான விமானக் கடத்­தல்கள் மேற்கு அரைக்­கோளப் பகு­தி­யி­லேயே இடம்­பெற்­றன.

 

அத்­துடன் 77 சத­வீ­த­மான விமானக் கடத்­தல்கள் ஒன்றில் கியூபாவில் ஆரம்­பித்­த­வை­யா­கவோ அல்லது கியூபாவுக்கு விமானம் திசை திருப்பப்படும் சம்பவமாகவோ இருந்தன.

 

கியூபாவுக்கு விமானங்கள் கடத்தப்படுவதை தடுப்பது எப்படி என அங்கலாய்த்த அமெரிக்க எவ்.பி.ஐ. அதிகாரிகள் புளோரிடாவின் தெற்கிலுள்ள கீ வெஸ்ட் நகரில் ஹவானா விமான நிலையத்தைப் போன்ற மாதிரி தோன்றமொன்றை ஏற்படுத்துவது குறித்தும் யோசித்தனர்.

 

இதன்மூலம் விமானத்தை கடத்துபவர்கள் தாம் ஹவானாவை அடைந்துவிட்டதாக எண்ணி கீ வெஸ்ட் நகரில் இறங்கக்கூடும் என்பது எவ்.பி.ஐ. அதிகாரிகளின் எண்ணமாக இருந்தது.  விமானக் கடத்தல் சம்பவங்கள் அந்தளவுக்கு மோசமாக ஆரம்பித்திருந்தன.


                                       (தொடரும்)-

(மெட்ரோ நியூஸ் வார இதழ்  11-04-2014)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - தொடர் 3

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.