Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - தொடர் 3
2014-04-16 20:51:09

 

- சத்ருகன்

 

(கடந்த வாரத் தொடர்ச்சி)

 

1950களுக்கு முன்னர் வரை விமானக் கடத்­தல் சம்­ப­வங்கள் அமெ­ரிக்­காவில் அரி­தா­ன­வை­யாக இருந்­தன. ஆனால், 1950களின் பிற்­ப­கு­தியில் நிலைமை மாறி­யது. 1958 முதல் 1969 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் உலகின் மேற்கு அரைக்­கோளப் பகு­தியில் விமா­னக்­க­டத்­தல்கள் சடு­தி­யாக அதி­க­ரித்­தன.


இவற்றில் பெரும்­பா­லான விமானக் கடத்­தல்கள் அமெ­ரிக்கா மற்றும் கியூபா தொடர்­பா­ன­வை­யாக இருந்­தன. 1958 முதல் 1969 வரை உலகில் 177 விமானக் கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இவற்றில் 77 சத­வீ­த­மா­னவை மேற்கு அரைக்­கோளப் பகு­தியில் இடம்­பெற்­றன. அதுவும் 77 சத­வீ­த­மான சம்­ப­வங்­களில் விமா­னக்­க­டத்­தல்கள் கியூபாவில் ஆரம்­பித்­த­­வை­யாகவோ கியூபாவை நோக்கி திசை திருப்­பப்­பட்­ட­வை­யா­கவோ இருந்­தன.


அமெ­ரிக்­காவின் தெற்­கி­லுள்ள புளோ­ரிடா மாநி­லத்­துக்கும் கியூபாவுக்கும் இடை­யி­லான தூரம் வெறும் 145 கிலோ­மீற்­றர்­கள்தான்.


கியூப வான்­ப­ரப்பில் முத­லா­வது விமானக் கடத்தல் 1958 ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்­பெற்­றது. அது  அமெ­ரிக்க ஆத­ர­வு­கொண்ட ஜனா­தி­பதி படிஸ்­டாவின் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பிடெல் ெகஸ்ட்ரோ தலை­மை­யி­லான புரட்சிப் படை­யினர் போராட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்த காலம். கியூபாவின் சி.46 ரக விமா­ன­மொன்றை விமான ஊழி­யர்கள் நால்­வரே கடத்தி அமெ­ரிக்­காவின் மியாமி நகரில் தரை­யி­றக்­கி­யபின் அர­சியல் புக­லிடம் கோரினர்.


அச்­சம்­பவம் இடம்­பெற்று 4 நாட்­க­ளின்பின், 1958 ஏப்ரல் 3 ஆம் திகதி கியூபாவில் இரண்­டா­வது விமானக் கடத்தல் இடம்­பெற்­றது. கியூபாவின் தேசிய விமான சேவை­யான கியூபானா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பய­ணிகள் விமா­ன­மொன்று தலை­நகர் ஹவா­னா­வி­லி­ருந்து கியூபாவின் மத்­திய பகு­தி­யி­லுள்ள சான்ட்ட கிளேரா நக­ருக்குப் புறப்­பட்­டது. ஆனால் அவ்­வி­மா­னத்தை 3 ஊழி­யர்கள் அமெ­ரிக்­காவின் மியாமி நகரில் தரை­யி­றக்கி அர­சியல் புக­லிடம் கோரினர்.


1958 ஒக்­டோ­பரில் கியூப விமா­ன­மொன்றை 14 பய­ணி­க­ளுடன் புரட்­சி­யா­ளர்கள் கடத்தி புரட்­சிப்­ப­டை­யி­னரின் ஆதிக்­கத்­தி­லி­ருந்த பகு­தியில் தரை­யி­றக்­கினர். அமெ­ரிக்­காவின் கவ­னத்தை ஈர்த்து, ஜெனரல் படிஸ்­டாவின் அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா ஆயு­தங்­களை வழங்­கா­ம­லி­ருக்கச் செய்­வதே கடத்­தலின் நோக்கம் என  புரட்­சி­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.


1958 நவம்பர் முதலாம் திகதி கியூபானா விமா­ன­மொ­ன்று அமெ­ரிக்­காவின் மியாமி நக­ரி­லி­ருந்து கியூபாவின் ஹவானா நகரை நோக்கி புறப்­பட்­டது. ஆனால் அதை கியூப புரட்­சி­யா­ளர்கள் கடத்­தினர்.  ரவுல் ெகஸ்ட்­ரோவின் புரட்சிப் படை­யி­ன­ருக்கு ஆயு­தங்­களை விநி­யோ­கிப்­ப­தற்­காக கியூபாவின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள சிய­ராக கிறிஸ்­டலில் விமா­னத்தை தரை­யி­றக்க முயற்­சிக்­கப்­பட்­டது.


ஆனால் இர­வு­நேரம் நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தது. விமா­னத்தின் எரி­பொருள் தீர்ந்­து­கொண்­டி­ருந்­தது. அதனால் சீனித் தொழிற்­சா­லை­யொன்றில் அவ­ச­ர­மாக விமா­னத்தை தரை­யி­றக்க கடத்­தல்­கா­ரர்கள் முயற்­சித்­தனர்.  எனினும், அங்கு தரை­யி­றங்கும் முயற்­சியில் கட­லி­லேயே விமானம் விழுந்து உடைந்­தது. விமா­னத்­தி­லி­ருந்த 17 பேர் உயி­ரி­ழந்­தனர். 6 பேர் காயங்­க­ளுடன் உயிர் தப்­பினர். ஜெனரல் படிஸ்­டாவின் அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா ஆயு­தங்­களை வழங்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­து­வதே தமது நோக்கம் என புரட்சிப் படை­யினர் தெரி­வித்­தனர்.


1959 முற்­ப­கு­தியில் பிடெல் கெஸ்ட்ரோ தலை­மை­யி­லான புரட்சிப் படை­யி­னரின் புரட்சி வெற்றி பெற்­றது. ஜெனரல் படிஸ்­டாவின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்டு  1959 பெப்­ர­வரி 16 ஆம் திகதி கியூபாவின் பிர­த­ம­ராக பிடெல் ெகஸ்ட்ரோ பத­வி­யேற்றார்.


இதன்­பின்னர் கியூபா விமானக் கடத்­தல்கள் குறை­வ­டைந்­த­ன­வையா என்றால் இல்லை என்­பதே பதில். பிடெல் ெகஸ்ட்ரோ அதி­கா­ரத்­துக்கு வந்­ததை முன்னாள் ஜனா­தி­பதி படிஸ்­டாவின் விசு­வா­சி­களும் மக்­களில் சிலரும் விரும்­ப­வில்லை. அவர்கள் விமா­னங்­களைக் கடத்தி நாட்­டை­விட்டு தப்­பிக்க முயற்­சித்­தனர்.


1959 ஏப்ரல் 15 ஆம் திகதி மியா­மி­யி­லிருந்து 3 ஊழி­யர்கள் 19 பய­ணி­க­ளுடன்  புறப்­பட்ட கியூப விமா­ன­மொன்று மியா­மிக்கு கடத்­தப்­பட்­டது. கடத்­தல்­கா­ரர்கள் நால்வர் முன்னாள் ஜனா­தி­பதி படிஸ்­டாவின் ஆத­ர­வா­ளர்கள்.  இவர்­களில் மூவர் இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­க­ளா­கவும் ஒருவர் விமானப் பொறி­யி­ய­லா­ள­ரா­கவும் இருந்­தனர் பின்னர் இவ்­வி­மா­னத்தை கியூபாவிடம் அமெ­ரிக்கா ஒப்­ப­டைத்­தது.ஆனால், தனது ஆத­ர­வா­ள­ரான ஜெனரல் படிஸ்­டாவின் ஆட்­சியை கவிழ்த்­து­விட்டு அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய பிடெல் ெகஸ்ட்­ரோவின் அர­சாங்­கத்தை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை.


அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஐஸ­னோ­வரின் நிர்­வா­கமும் 1961 இல் பத­விக்கு வந்த ஜனா­தி­பதி ேஜான்.எப்.கென்­ன­டியின் நிர்­வா­கமும் தனது கரை­யோ­ரத்­தி­லி­ருந்து வெறும் 145 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள நாடொன்றில் கம்யூனிஸ ஆட்சி நடை­பெ­று­வது குறித்து கவலை கொண்­டி­ருந்­தன.


கம்யூனிஸ ஆட்­சிக்கு எதி­ரான ஒரு பிர­சார யுக்­தி­யாக, கம்யூனிஸ ஆட்­சியை விரும்­ப­வில்லை எனக் கூறி அந்­நா­டு­க­ளி­லி­ருந்து தப்பி வரு­ப­வர்­களை எல்லாம் வர­வேற்­பதில் அமெ­ரிக்­காவும் ஏனைய மேற்­கு­லக நாடு­களும் ஆர்வம் காட்­டின.


இதனால், கியூபாவி­லி­ருந்து தப்­பி­வந்து அமெ­ரிக்­காவில் அர­சியல் புக­லிடம் கோரு­வ­தையும் ஒரு பிர­சார வெற்­றி­யாக அமெ­ரிக்கா நோக்­கி­யது. இதன் ஒரு அங்­க­மாக கியூபாவி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு விமா­னங்கள் கடத்­தி­வந்து புக­லிடம் கோரப்­படும் சம்­ப­வங்­க­ளையும் அமெ­ரிக்கா பிர­சார வெற்­றி­யா­கத்தான் கரு­தி­யது. இப்­போது உள்­ளதைப் போல் விமானக் கடத்­தல்­களை  பயங்­க­ர­வாத குற்­ற­மாகக் கருதும் சட்­டங்கள் அப்­போது அமெ­ரிக்­காவில் இருக்­க­வில்லை. மாறாக, கியூபாவி­லி­ருந்து வந்த விமானக் கடத்தல் காரர்களுக்கு அமெரிக்காவில் புகலிடம் அளிக்கப்பட்டதுடன் கியூபாவினால் பணம் வழங்கப்பட வேண்டியுள்ள கம்பனிகளும் தனி நபர்களுக்கும் அவ்விமானங்களை அமெரிக்க நீதிமன்றங்கள் விநியோகிப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் அனுமதியளித்தது.


“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற கதையாக அமெரிக்க அரசாங்கத்தின் இத்தகைய போக்கு அமெரிக்காவையும் திருப்பித் தாக்கத் தொடங்கியது. கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாத்திரமல்லாமல், அப்படியே எதிர்த்திசையிலும் கடத்தல்கள் இடம்பெற்றன. இதனால் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தது அமெரிக்கா.  


              (தொடரும்)

 

(மெட்ரோ நியூஸ் வார இதழ் 04-04-2014)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.