Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள்
2014-03-29 20:17:54

(தொடர் 01)

 

       -சத்ருகன்

 

கடந்த 8 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை  மலே­ஷி­யாவின் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்­பட்ட மலே­ஷிய எயார்­லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்­க­ளா­கின்­றன.


பெய்ஜிங் நோக்­கிச் ­செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்­துக்­குள்­ளா­கி­ய­மைக்­கான தட­யங்கள் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.


மலே­ஷிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளின்­படி, அந்த விமானம் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படு­கி­றது. பயணத் திசையை எதிர்­பு­ற­மாக மாற்­றிக்­கொண்டு பய­ணித்­தமை, பாதை மாறி செல்­வ­தற்­கான பயண வழி­காட்டல் முறைமை கணி­னியில் முன்­கூட்­டியே பதி­வு­செய்­தி­ருந்­தமை, பறக்­க­வேண்­டிய உய­ரத்­தை­விட பல ஆயிரம் அடிகள் விமானம் தாழ்­வாக பறந்­தமை, விமா­னத்தின் தொடர்­பு­சா­த­னங்கள் துண்­டிக்­கப்­பட்­டமை, கட்­டுப்­பாட்டு நிலை­யத்­து­ட­னான தொடர்பை இழந்த பின்­னரும் பல மணித்­தி­யா­லங்கள் பயணம் செய்தமை என பல்­வேறு விட­யங்கள் மூலம் அவ்­வி­மானம் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம்  என்று சந்­தே­கத்­துக்­கான கார­ணங்­க­ளாக கூறப்­ப­டு­கின்­றன.


இவ்­வே­ளையில் உலகில் இடம்­பெற்ற பல மோச­மான விமானக் கடத்தல் சம்­ப­வங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.


அமெ­ரிக்க ரைட் சகோ­த­ரர்கள் 1903 இல் வெற்­றி­க­ர­மான தமது முதல் விமானப் பறப்பை மேற்­கொண்­டனர். அதன்பின் பல்­வேறு நாடு­களின் விஞ்­ஞா­னிகள் சிறந்த முறையில் விமா­னங்­களை தயா­ரிப்­ப­தற்­கான ஆய்­வு­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த வேளையில் சில குற்றவாளி­களின் மூளைகள் விமா­னங்­களை கடத்­து­வது குறித்து சிந்­தித்துக் கொண்­டி­ருந்­தி­ருக்கும் போலும்.


பல நாடு­களில் விமான சேவைகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் இடம்­பெற்­று­விட்­டது. பதி­வு­செய்­யப்­பட்ட தக­வல்­க­ளின்­படி உலகின்  முதலா­வது விமானக் கடத்தல் தென் அமெ­ரிக்க நாடான பெருவில்  1931 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது.


அமெ­ரிக்க விமா­னி­யான பெரி ரிக்கார்ட்ஸ் 1931 பெப்­ர­வரி 21 ஆம் திகதி இருவர் பயணம் செய்­யக்­கூ­டிய விமா­ன­மொன்றை பெரு நாட்டின் தலை­நகர் லீமா­வி­லி­ருந்து அரி­குய்பா நக­ருக்கு செலுத்திச் சென்றார். அவ்­வி­மானம் தரை­யி­றங்­கி­ய­வுடன் ஆயுதம் தரித்த சிலர் விமா­னத்தை சூழ்ந்து கொண்­டனர்.


தாம் பெருவின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக கிளர்ச்­சியில் ஈடு­பட்டுள்ள புரட்சிப் படை­யினர் என ஆயுதபாணிகள் தம்மை அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்­டனர். பேரி ரிக்­கார்ட்ஸின் விமா­னத்தை தடுத்­து­வைத்த அச்­சிப்­பாய்கள் விமா­னத்தில் தமது துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை எடுத்துச் சென்று அவற்றை லீமா நகரில் வைத்து விமா­னத்­தி­லி­ருந்­த­வாறு கீழே போட வேண்டும் எனக் கூறினார்.

 


தனக்கு வழங்­கப்­பட்ட பயிற்­சிகள், அறி­வு­றுத்­தல்­களை கருத்­திற்­கொண்ட விமானி பெரி ரிக்கார்ட்ஸ், அக்­கோ­ரிக்கையை நிறை­வேற்ற மறுத்தார்.
அதனால் அவ்­வி­மா­னத்தை பறப்­ப­தற்கு கிளர்ச்­சி­யா­ளர்கள் அனு­ம­திக்­க­வில்லை. இந்த இழு­பறி  10 நாட்­க­ளுக்கு மேல் நீடித்­தது.


அவ்­வ­ருடம் மார்ச் 2 ஆம் திகதி விமானி பெரி ரிக்கார்ட்ஸுக்கு திடீ­ரென மகிழ்ச்­சி­யான செய்தி கிடைத்­தது.  தமது போராட்டம் வெற்­றி­பெற்­று­விட்­ட­தாக பெரி ரிக்­கார்ட்­ஸிடம் கிளர்ச்சிப் படை­யினர் தெரி­வித்­தனர்.


விமா­னத்­துடன் பெரி ரிக்கார்ட்ஸ் திரும்பிச் செல்ல அனு­ம­திப்­ப­தாக கூறிய கிளர்ச்­சி­யா­ளர்கள், ஒரே­யொரு நிபந்­த­னையை மாத்­திரம் விதித்­தனர். தமது சகா ஒரு­வரை லீமா நக­ருக்கு ஏற்றிச் செல்ல வேண்டும் என்­பது தான் அந்த நிபந்­தனை.


அதை பெரி ரிக்கார்ட்ஸ் ஏற்­றுக்­கொள்ள, சேதம் எது­வு­மின்றி விமா­னத்தை விடு­வித்­தனர் கிளர்ச்­சி­யா­ளர்கள்.


(இச்­சம்­பவம் இடம்­பெற்று பல வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இவர் செலுத்திச் சென்ற மற்­றொரு விமா­னமும்  கடத்தல் முயற்­சி­யில் சிக்­கிக்­கொண்­டது தனிக்­கதை)  அக்­கா­லத்து விமா­னங்­களைப் போலவே விமான உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் முறை­மையும் நோக்­கமும் எளி­மை­யாக இருந்­தன.


ஆனால், எல்லா விமானக் கடத்­தல்­க­ளுமே அப்­படி எளி­மை­யா­ன­தாக இருக்­க­வில்லை. கொடூ­ர­மான கடத்தல் காரர்­க­ளிடம் சிக்­கிய விமா­னி­களும் பய­ணி­களும் அநி­யா­ய­மாக உயி­ரி­ழந்த பல சம்­ப­வங்கள் வர­லாற்றில் இடம்­பெற்­றுள்­ளன.

 


ஆட்­சி­மாற்­றங்கள், புரட்­சிகள், நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பாரிய யுத்­தங்­க­ளுக்கும் விமானக் கடத்தல் சம்­ப­வங்கள் அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­தன.
விமா­னங்­களைக் கடத்­து­வது கடும் பயங்­க­ர­வாதச் செய­லாக கரு­தப்­ப­டு­கி­றது. இக்­க­டத்தல் அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக விமானப் பய­ணத்­து­றை­யிலும் சோத­னைகள், கெடு­பி­டிகள் அதி­க­ரித்­தன.


பயங்­க­ர­வாதத் திட்­டங்கள், அர­சியல் நோக்­கங்கள் மாத்­திரம் விமானக் கடத்­தல்­க­ளுக்கு கார­ண­மாக அமை­ய­வில்லை.


அச்­சு­றுத்தி கப்பப் பணம் பெறு­வ­தற்­காக, புக­ழுக்­காக, தமது சகாக்­களை விடு­விப்­ப­தற்­காக, தஞ்சம் கோரு­வ­தற்­காக விமா­னங்­களைக் கடத்­தி­ய­வர்கள் ஒரு­பு­ற­மி­ருக்க “திரிலுக்­காக” விமா­னங்­களைக் கடத்­திய மன­நிலை கோளாறு கொண்­ட­வர்­களும் உள்­ளனர்.


நூற்­றுக்­க­ணக்­கானோர் பயணம் செய்யும் விமா­னங்கள் கடத்­தப்­ப­டும்­போது அப்­ப­ய­ணி­களின் உயிர் குறித்த அச்சம் கார­ண­மாக பதை­ப­தைப்பு அதி­க­ரிக்­கி­றது.


இதனால் விமானக் கடத்­தல்­களை முடி­வுக்கு கொண்­டு­வர பல்வேறு வழிகளில் அரசுகள் முயற்சிப்பது வழக்கம். அதிரடி தாக்குதல்கள் மூலம் விமானக் கடத்தல்கள் முறியடிக்கப்பட்ட அல்லது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சம்பவங்களும் உண்டு. கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி விமானத்தையும் மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு அரசுகள் தள்ளப்பட்ட வரலாறும் உண்டு.


இலங்கையரினாலும் வெளிநாடொன்றின் பாரிய  பயணிகள் விமானமொன்று கடத்தப்பட்டமையும் வரலாறாக உள்ளது. அக்கடத்தலுக்கான காரணம் பெரும்பாலான விமானக் கடத்தல்களுக்கான காரணத்தைவிட வித்தியாசமானது.     (தொடரும்)

 

(மெட்ரோ நியூஸ் வார இதழ் 21-03-2014)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.