Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஈர்ப்பு அலைகள்
2016-02-19 15:28:06

படலை ஜேகே

 

டந்த சில நாட்களாகவே மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இந்த ஈர்ப்பு அலைகள். நூறு வருடங்களுக்கு முன்னாலே அல்பேர்ட் ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை, இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. 

 

நாம் எல்லோருமே ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஈர்ப்பு அலைகள்? வெண்முரசு நீளத்துக்குப் பாகம் பாகமாக விவரிக்கவேண்டியதை அம்புலிமாமா அளவுக்குள் சுருங்கச்சொல்ல முயல்கிறேன். 

 

ஈர்ப்பு அலைகளை விளக்குவதற்கு முன்னாலே ஐன்ஸ்டீனுடைய சார்பு விதிகளைப்பற்றி மேலோட்டமாகப் பார்க்க வேண்டும். 

 

நீங்கள் 100km/h வேகத்தில் செல்லும் ஒரு ரயில் வண்டியினுள்ளே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன் இருக்கையிலே உசைன் போல்ட் உட்கார்ந்திருக்கிறார்.

 

ரயில் நூறு கிலோமீற்றர் வேகத்தில் சென்றாலும் ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு ரயில் கண்ணாடிகளை மூடிவிட்டால் அந்த வேகத்தை உணருவது கடினம். 

 

முன்னே உட்கார்ந்திருக்கும் உசைன் போல்ட் 100km/h வேகத்திலே பயணம் செய்வது போலவும் உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில், நீங்கள் இருவருமே ரயிலுக்குள் இருப்பவர்கள். ரயிலின் சட்டத்தில் நீங்கள் இருவரும் ஓய்வு நிலையில் இருக்கிறீர்கள். 

 

சீரான வேகத்தில் இயங்கும் ஒரு சட்டத்தில் (inertial systems) உள்ள பொருட்கள் எல்லாவற்றுக்கும் பௌதீக விதிகள் ஒன்றாகவே இருக்கும். மாறாது. இப்போது திடீரென்று பயிற்சி செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உசைன் போல்ட் ரயிலுக்குள்ளேயே எழுந்து ஓடத் தொடங்குகிறார். 

 

அப்படி அவர் ஓடும் வேகம் 50km/h என்று வைப்போம். ரயிலுக்குள் இருக்கும் உங்களுக்கு அவர் ஓடுவது 50km/h வேகமாகவே தெரியும். அதே சமயம் ரயிலுக்கு வெளியே நின்று உசைன் ஓடுவதைப் பார்ப்பவருக்கு உசைனின் வேகம் வேகம் ரயிலின் வேகத்தையும் சேர்த்த 150km/h ஆகத் தெரியும். 

 

மேலே சொன்னது நியூட்டன் விதித்த சார்பு விதி. இதனை நியூட்டனுக்கு முன்னரேயே கலிலியோ சொல்லிவிட்டார். கலிலியோவுக்கு முன்னரேயே உலகின் ஏதாவது ஒரு மூலையிலிருந்த சியாங்யுங்கோ சுப்பையாவோ கூட இதனைச் சொல்லியிருக்கலாம். 

 

ஏனெனில், இதனை Aப் பொதுப்புத்தியாலேயே அனுபவத்தின் மூலம் கண்டறியலாம். இந்த விதி அவ்வளவு சிக்கல் இல்லாதது. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த விதிக்கு ஆப்பு காத்திருந்தது. நியூட்டனின் சார்பு விதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தியது. எல்லா சட்டங்களுக்கும் பொருந்தியது. 

 

ஒன்றைத்தவிர. அதுதான் ஒளி. நீங்கள் பயணம் செய்கின்ற ரயில் திடீரென்று அதிவேகமாக 250,000km/s வேகத்தில் செல்ல ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ரயிலுக்கு வெளியிலிருந்து பார்ப்பவருக்கு ரயில் 250,000km/s வேகத்தில் செல்வது போலவே தோன்றும். 

 

சிக்கல் இல்லை. ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும்போது நீங்களும் உசைன் போல்டும் ரயிலின் சட்டத்தில் அசையாமலேயே இருப்பீர்கள். அதுவும் சிக்கல் இல்லை. ஆனால், திடீரென்று உசைன் போல்ட் ஒளியாகமாறி ஒளியின் வேகத்தில் ரயிலுக்குள்ளேயே ஓடத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். 

 

ஒளியின் வேகம் கிட்டத்தட்ட 300,000km/s.  அப்போது தான் இடியப்பச் சிக்கல் ஆரம்பிக்கிறது. ரயிலுக்குள் இருக்கும் உங்களுக்கு உசைன் போல்ட் 300,000km/s வேகத்தில் செல்வதாகத் தெரியும். 

 

ரயிலுக்கு வெளியே நின்று பார்ப்பவருக்கு உசைன் போல்ட் ரயிலின் வேகத்தையும் சேர்த்து 550,000 km/s வேகத்தில் ஓடுவது போலத் தெரியவேண்டும் அல்லவா? ஆனால், வெளியில் நிற்பவருக்கும் உசைன் போல்ட் 300,000km/s வேகத்தில் ஓடுவதாகவே தெரிவார். 

 

ரயிலுக்கு வெளியே இன்னொருவர் காரிலே எந்த வேகத்தில் போனாலும் அவருக்கும் உசைன் போல்ட் 300,000km/s வேகத்தில் ஓடுவதாகவே தெரிவார். ஒளியின் வேகமான 300,000km/s எந்தச் சட்டத்திலும் மாறவில்லை. ஒளியின் வேகம் நியூட்டனின் சார்பு விதிக்குள்ளே அகப்படவில்லை. 

 

அதெப்படி எந்தச்சட்டத்திலும் ஒளியின் வேகம் ஒன்றாகவே இருக்கிறது? விஞ்ஞானிகள் குழம்பிப்போனார்கள். ஒரு சமாளிபிகேஷனாக மக்ஸ்வெல் என்றவர் ....... முழுக்கட்டுரையையும் வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்

 

 

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.