Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
"பேண்ட் வாத்தியக் கலைஞர்களை மக்கள் கௌரவப்படுத்துவதில்லை" - ட்ரம்பட் இசைக்கலைஞர் பெ.புண்ணியமூர்த்தி
2016-02-07 11:48:49

சிலாபம் திண்­ண­னூரான்

 

காலச்­சூழல், ஆட்சி நிலை, மக்­களின் போக்கு ஆகிய நிலை­க­ளுக்கு ஏற்பவே இசைக் கருவி­க­ளிலும் பெரும் மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன.

 

எனவே, காலத்­திற்குக் காலம் இலக்­கி­யப்­போக்கு மாறு­வது போல் வாத்­தி­யக்­ க­ரு­வி­க­ளிலும் மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. 

 

கிறிஸ்­து­வுக்கு 1,500 ஆண்­டு­க­ளுக்கு முன் தோன்றி இன்றும் வாழும் ட்ரம்பட் (Trumpet) என அழைக்­கப்­படும் ஊது கொம்பு இசைக் கரு­வியை வாசிக்கும் கலைஞர் பெ.புண்­ணி­ய­சேகர் இன்று எம்­முடன் பேசு­கிறார்.

 

“தெஹி­யோ­விட்­டயைச் சேர்ந்த நான், எனது பதி­னெட்டு வயதில் ட்ரம்பட் இசைக் கரு­வியை வாசிக்க ஆரம்­பித்தேன். எனக்கு ட்ரம்பட் வாசிக்க சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆசை.

 

எனது அண்ணன் வீர­முத்து  ட்ரம்பட் இசைக்­க­ரு­வியை வாங்கிக் கொடுத்து மைக்கல் மாஸ்­ட­ரிடம் அழைத்துச் சென்று இவ்­ வாத்­தியக் கரு­வியின் வித்­தை­களை கற்­றுக்­கொள்ளச் செய்தார்.  

 

எனது இந்த முன்­னேற்­றத்­துக்கு மைக்கல் மாஸ்­டரும் வீர­முத்து அண்­ணா­வுமே  காரணம். 

 

பின்னர் எனது மாமா சபா மாஸ்டர், எனது அண்ணா மோகன் மாஸ்டர் ஆகி­யோ­ரிடம் கற்­றுக்­கொண்டேன்.

 

பத்து மாதங்­களே பயிற்சி பெற்றேன். நான் ஆறாம் வகுப்­பு­வரையே கல்வி கற்­றவன். அப்பா பூசாரி. அவர் தம்பு, தபேலா வாசிப்பார்.

 

முதன் முத­லாக தல­பிட்­டிய தோட்­டத்து திரு­வி­ழாவில் ட்ரம்பட் வாசித்தேன். அது ஒரு பொன்­னான நாள். என் வாழ்க்­கையை புரட்டிப் போட்ட நாள். அந்த நாள் என் வாழ்க்­கையில் புனி­த­மான நாள்.

 

அன்­றைய திரு­வி­ழாவில் மக்கள் எங்­களை சூழ்ந்து வர பேண்ட் வாத்­திய கலை­ஞர்­களின் இசை வெறி தெறிக்க நான் குனிந்து நிமிர்ந்து, வளைந்து, ட்ரம்­பட்டை வாசிக்க எனக்குள் உற்­சாகம் வளர்ந்­தது.

 

உற்­சாகம் வளர வளர புதுப்­புது பாடல்­களை நான் வாசிக்க இளம் சமூகம் என்னை சுற்றி  சூழ்ந்துக் கொண்டு விசில் அடித்து உற்சா­கப்­ப­டுத்­தினர்” என தன்னைப் பற்றி கூறினார் புண்ணியசேகர்.

 

இந்த இசைக் கரு­வியைப் பற்றி தெரி­யுமா?

 

ஆமாம். இவ் இசைக் கரு­வியை ஊது கொம்பு என தமிழில் அழைப்பார்கள். இது மிகப் பழைய இசைக் ­க­ரு­வி­களில் ஒன்று. இது ஆரம்ப காலத்தில் நீள் வளைய வடி­வத்தில் பித்­தளைக் குழாயால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

 

ஆனால், இன்று வெள்ளை இரும்பால் இவ் இசைக்­க­ருவி நிர்மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. குழாயின் ஒரு முனையில் வாயால் ஊது­வதன் மூலம் உள்­ளே­யுள்ள வளி அதிர்ந்து ஒலி உண்­டா­கி­றது. 

 

இத்­தொழில் உங்­க­ளுக்கு பிடித்­துள்­ளதா?


“இது முக்­கி­ய­மான கேள்வி தான். எந்தத் தொழி­லிலும் தர்மம் உள்­ளது. அந்த தர்­மத்தை இந்த தொழி­லிலும் கலை­ஞர்கள் வழங்­கு­கின்­றனர். நேரம், இரவு, பகல், காலம், சிரமம் பாராது நிகழ்­வு­களில் இவ் இசைக் கரு­வியை இசைக்­கிறோம். 

 

பேண்ட் வாத்­தியக் கலை­ஞர்­களை மக்கள் கௌர­வப்­ப­டுத்­து­வதில்லை. கண்­ணி­யப்­ப­டுத்­து­வ­தில்லை.

 

ஆனால், எந்­த­வொரு நிகழ்­வி­னதும் செல்­வாக்கை அலங்­க­ரிப்­பது இசை வாத்­தியக் கலை­ஞர்­களே. இதை எவ­ராலும் மறுக்­கவோ, மறுப்புத் தெரி­விக்­கவோ இய­லாது. 

 

இது­வரை நான் நாடு முழு­வ­து­மாக திருவிழா, திரு­ம­ண­வீடு, பூப்­பு­னித நீராட்டு ­விழா, பௌத்­த­மத பெர­ஹரா, கிரிக்கெட் போட்­டிகள், தேர்தல் கால நிகழ்­வுகள் என ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட நிகழ்­வு­களில் ட்ரம்பட் வாசித்­துள்ளேன்.

 

ஆனால், இந்­ நி­கழ்­வு­களில் கலந்து கொண்டு அனு­ப­வித்­துள்ள நரக வேதனைகள் கொஞ்சமல்ல. நாம் எவ்வளவுதான் இனிமையான பாடல்களை வாசித்தாலும் வீதிகளில் செல்வோரும், காடையர் கூட்டமும், ஏனையோரும் பேண்ட் வாத்­திய கலை­ஞர்கள் மீது கூறும் வார்த்­தைகள் மிக மிக கேவ­ல­மா­னவை.  

 

தகாத வார்த்­தை­களால் திட்­டு­வார்கள். ஒவ்­வொ­ரு­வரும் விரும்பும் பாடல்­களை வாசிக்கச் சொல்­வார்கள். அடி வயிற்­றி­லி­ருந்து காற்றை இழுத்து எடுத்து அதை ரச­னை­யோடு இசை­யாக நான் வெளி­விடும் போது ஏற்­படும் வலி மற்­ற­வர்­க­ளுக்குத் தெரி­யாது.

 

நிகழ்ச்சி நிர்­வாகம் முதல் அனை­வரும் சண்­டித்­தனம் காட்­டு­வார்கள். சில நேரங்­களில் எதிர்த்து பேசி­வி­டுவேன். அதில் ஒரு முரட்­டுத்­த­னமும் இணைந்­தி­ருக்கும். அப்­போது பயந்து நடுங்கி விடு­வார்கள். 

 

எங்­களின் உழைப்பே வாத்­தியக் கரு­விகள் தான். அதுதான் எனக்கு சோறு போடு­கி­றது. திரு­வி­ழாக்­களில் ட்ரம்பட் வாசிக்கும் போது சிலர் இடிப்­பார்கள்.

 

இதனால் ட்ரம்­பட்டின் முனை பல்­லையும்  உடைத்து, உதட்­டிலும்  காயத்தை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வங்­களும் உண்டு. சில இடங்­களில் உரிய மரி­யாதை கிடைக்கும். சில இடங்­களில் நடக்கும் நிகழ்வில் எங்­களின் உழைப்பைப் பெற்­றுக்­கொண்டு இறு­தியில் அவ­ம­திப்பே கிடைக்கும்” என நொந்து கொண்ட வரை சமா­தா­னப்­ப­டுத்­தினோம். மீண்டும் எங்­க­ளுடன் பேசினார். 

 

“திரு­வி­ழாக்­களில் இசைக்­க­ரு­வியை வாசித்துக் கொண்டு கோஷ்­டி­யாக எங்கள் அணி வீதியில் பய­ணித்து கொண்­டி­ருக்­கையில் சிலர் சிறிய கற்­க­ளையும், கட­லை­யையும் எங்கள் மீது வீசு­வார்கள்,

 

தலையை தட்­டு­வார்கள். இப்­படி அநா­வ­சி­ய­மாக எங்­களை உசுப்­பேற்றி விடு­வார்கள். சேட்டை செய்­வார்கள்” என அவர் தெரிவித்தார். 

 

அடி வயிற்­றி­லி­ருந்து காற்றை இழுத்­தெ­டுத்து அதை சுதியோடு இசை­யாக வெளி­யி­டு­வதன் வாயி­லாக உடல் உபா­தைகள் ஏற்­ப­டாதா? எனக் கேட்டோம்.

 

“பதி­னெட்­டுக்கும்  மேற்­பட்ட சுரங்கள் ட்ரம்பட் இசையில் உள்­ளன. பல இரா­கங்கள் உள்­ளன. மூச்சை உள் இழுத்து வாசிப்­பதால் பல அபா­யங்கள் உள்­ளன.

 

மார­டைப்பு, இரத்தக் கொதிப்பு, இரு­தய நோய், மூலநோய், விதை­ வீங்­குதல் போன்ற நோய் அபா­யங்­களை அனு­ப­விக்க வேண்­டி­வரும்.

 

உண்­மை­யி­லேயே ட்ரம்பட் வாத்­தியக் கலை­ஞரின் உள்­ளாடை மிகவும் இறுக்­க­மாக இருக்க வேண்டும். இல்­லா­விடின் விதை வீங்கி விடும்.  

 

அண்­மையில் கொழும்பு கொஸ்கஸ் சந்­தியில் (பலா­மரச் சந்தி) கந்­தா­னையைச் சேர்ந்த ஒரு ட்ரம்பட் கலைஞர் இசைக்­கருவியை நிகழ்­வொன்றின் போது வாசித்துக் கொண்டு வருகையில் வீதியில் வைத்தே மார­டைப்பால் மர­ண­மானார். 

 

இவ்­வாறு பல்­வேறு மனித தொந்­த­ர­வுகள், உடல் உபா­தை­களுக்கு மத்­தி­யி­லேயே ட்ரம்பட் இசைக் கரு­வியை பல்­வேறு நிகழ்­வு­களில் வாசிக்­கிறோம்.

 

நடு வீதியில் சுடும் வெயிலில் திரு­விழாக்­களின் போது ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் மத்­தியில் அம் மக்­களை இசை உல­குக்குள் இழுத்துச் செல்ல ட்ரம்பட் வாசிக்­கிறேன்.  

 

பாட­லுக்கு ஏற்ற வகையில், பேண்ட் வாத்­தியக்  கலை­ஞர்கள் இசையின் மூல­மாக மக்­களை வேறு ஒரு உல­குக்கு எடுத்துச் செல்­கிறோம். 

 

ஆனால், எங்­க­ளுக்கு எவ்­வித மனித அங்­கீ­கா­ரமோ, கௌர­வமோ, பாது­காப்போ கிடைப்­ப­தில்லை என்­பதை பெரும் மனவே­த­னை­யுடன் தெரி­விக்­கின்றேன்.

 

சகோ­தர சிங்­கள மக்கள் மத்­தியில் கௌரவம் கிடைக்­கின்­றதா? எனவும் கேட்டோம். அப்­போது அவரின் முகத்தில் இன்ப ரேகைகள் படர்ந்­தன. 

 

“சகோ­தர சிங்­கள மக்கள் எங்­களை இசைக் கலை­ஞர்­க­ளாக ஏற்­றுக்­கொள்­கின்­றனர். கண்­டிய நடனக் கலை­ஞர்­க­ளுக்கும், அதன் வாத்­தியக் கலை­ஞர்­க­ளுக்கும் வழங்கும் கௌர­வத்­தையும், அங்­கீ­கா­ரத்­தையும் எங்­க­ளுக்கும் வழங்­கு­கின்­றனர். 

 

இதில் மாற்றுக் கருத்து இல்லை. சகோ­தர பௌத்த மத நிகழ்­வுகள் பல­வற்றில் கலந்து கொண்டிருக்­கின்றேன். எங்­களின் பேண்ட் இசைக் குழு­ தங்­கு­வ­தற்கும், உணவு, வசதி என அனைத்து வச­தி­க­ளையும் செய்­து­கொ­டுப்­பார்கள்.

 

நாங்கள் கேட்­கா­ம­லேயே அனைத்­தையும் வழங்­கு­வார்கள். இவர்­க­ளிடம் ஓர் இசைக் கலைஞர் என்­ப­தற்­கான கௌரவம், அங்­கீ­காரம், கண்­ணி­யப்­ப­டுத்தல் அனைத்தும் கிடைக்­கின்­றது. 

 

நாட்டின் தென்பகு­தியில் இடம்­பெறும் பல விழாக்­களில் எங்கள் இசைக்­குழு பணி­யாற்­றி­யுள்­ளது. சகோ­தர சிங்­கள கலை­ஞர்கள், தமிழ் பேண்ட் குழு கலை­ஞர்கள், நட­னக்­கா­ரர்கள் என ஐம்­ப­துக்கு மேற்­பட்ட கலை­ஞர்கள் நிகழ்வின் பின்னர் அனை­வரும் ஒரே குடும்­ப­மாக ஒரே இடத்தில் தங்­குவோம்.

 

அங்கு சாதி, மத, இன வோறு­பா­டுகள் தொலைந்து அனை­வரும் ஒன்று சேர்ந்து கலை­ஞர்­க­ளாக ஒன்­றாக சாப்­பிட்டு ஒரே வீட்டில் நித்­திரை கொள்வோம். 

 

இங்கு தான் சொர்க்கம் இருக்கும். சிங்­கள சகோ­த­ரர்­களின் சின்ன, சின்ன கவ­னிப்­புக்கள் எங்­களை அதி­ர­டி­யாக ஆட்டி வைத்­து­விடும்.

 

இவர்கள்  எங்­களின் உழைப்­புக்­கேற்ற ஊதி­யத்தை முறை­யாக வழங்­கு­வார்கள்.

 

உழைப்பை  முழு­மை­யாக பெற்­றுக்­கொண்டு இறு­தியில் தக­ராறு பண்­ண­மாட்­டார்கள். நல்­லதோர் கௌரவம் கலை­ஞர்­க­ளுக்கு நிகழ்ச்சி ஏற்­பாட்­டார்­களால் கிடைக்கப் பெறு­கின்­றது. காசு பணம் எதற்­குங்க. அனை­வருக்கும் மனித நேயம் இருக்க வேண்டும்” என்றார் சேகர். 

 

உங்­களின் இக்­ க­லையை உங்­களின் குழந்­தை­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் கற்றுத் தரு­வீர்­களா?


“ஐயோ! எனது பிள்­ளை­க­ளுக்கு கற்­றுத்­தர மாட்டேன். நான் படும் கஷ்டமும் வேதனையும் என்னோடு முடிவடைய வேண்டும். நான் மட்டுமல்ல, இதைத்தான் பல பேண்ட் கலைஞர்களும் சொல்லுகிறார்கள்.  

 

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு கௌரவம் இருந்தது. இன்று பலரும் எங்களை வெறும் பொம்மையாகவே பார்க்கின்றனர்.

 

இன்று கரகம், காவடி நடனக்காரர்கள் தமிழர்கள் மத்தியில் அருகிவிட்டார்கள். இதற்கு காரணம் விழா ஏற்பாட்டாளர்கள். ஊதியத்தை வழங்குவதில் கஞ்சத்தனம். 

 

பார்வையாளர்களின் நக்கல் வார்த்தைகள், தொல்லைகள். இவையே காரணமாகும்” என கவலையுடன் கூறி நொந்து கொண்டார் கலைஞர் சேகர்.

 

தலைவலி வந்தவருக்குத் தான் அதன் வலியின் தாக்கம் தெரியும் என்பதை சேகரின் வார்த்தைகள் உணர்த்தின. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.