Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மது, மாது, போதைப்பொருட்களுக்கு அடிமையாகிய பின் திருந்தி வாழும் இளைஞன்
2016-01-31 10:30:43

சிலாபம் திண்­ண­னூரான்


இளம் வயதில் போதை­வஸ்­துக்கு அடி­மை­யாகி வாழ்க்­கையை தொலைத்து திருந்தி வாழும் ஒரு­வரே இன்று எம்­மோடு இணை­கிறார்.

 

கொழும்பைச் சேர்ந்த 38 வயதைக் கொண்ட பிரபாத் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற இரு குழந்­தை­களின் தந்தை இப்­போது உங்­க­ளுடன் பேசு­கிறார். 

 

தெரிந்தும் தெரிந்து வைத்து இருந்தும் தெரி­யா­ததைப் போல் செய்த முட்டாள்தன­மான செயல்­களால் என் இள­மைக்­காலம் கசப்­புடன் கழிந்­தது.

 

இதனால் விளைந்­தது பெருந்தீமை. வித்து சிறி­ய­துதான் ஆனால் மரம் எவ்­வ­ளவு பெரி­யது. அடர்த்­தி­யா­னது. அந்த மரத்தைப் போன்­றதே அறி­யா­மையால் வரும் கேடு என எம்மிடம் தெரி­வித்து நொந்து கொண்டார் பிரபாத்.

 

“எப்­படி இருந்­தவன். இப்­ப­டி­யா­கிட்­டேனே” என நடிகர் விவேக் ஸ்டைலில் அவர் வார்த்­தை­களை வெளி­யி­டு­கையில் எமது மனத்­திற்­குள்ளும் துக்கம் அடைத்துக் கொண்­டது.

 

தன் வாயைத் திறந்து தனது மன­திற்குள் தேக்கி வைத்­தி­ருந்த அவ­லத்தை எம் முன்­னி­லையில் கொட்­டினார். 

 

“நான் நான்காம் வகுப்­பு ­வ­ரையே கல்வி கற்­றுள்ளேன். அதற்குமேல் என்னால் கல்வி கற்றுக் கொள்ள இய­ல­வில்லை.

 

குடும்ப வறு­மையும் எங்­க­ளுடன் இணைந்து கொண்­டதால் கல்வி­யையும் தொலைத்து விட்டு இளம் வயதில் மாந­கர சபையின் நகர சுத்­தி­க­ரிப்பு பிரிவில் இணைந்து வீதி குப்­பை­களை அள்ளும் தொழிலில் இணைந்தேன். அதுவும் கசந்­தது.

 

புறக்­கோட்­டை­யி­லி­ருந்த மீன் சந்தை, மற்றும் கரு­வாட்டு கடை­களில் சுமை­ தூக்கும் தொழி­லா­ளி­யாக செயல்­பட்டேன். இங்குதான் என் இளம் வாழ்க்­கையில் கீறல்கள் விழுந்­தன. கஷ்டப்­பட்டு உழைப்த்தேன்.

 

கை நி­றைய பணம் புரண்­டது. நண்­பர்­களின் பெருக்கம் அதி­க­ரித்­தது. அறி­யாமை என்னை ஆட்டி வைத்­தது. முதலில் நண்­பர்­களுடன் இணைந்து ஜொலிக்­காக சிகரெட் பாவ­னைக்குள் புகுந்தேன்.

 

பின்னர் மது பாவ­னையில் இறங்­கினேன். கையில் பணம் தாண்­டவம் ஆட வேலைகள் அனைத்தும் நிறை­வ­டைந்­ததன் பின்னர் குளித்­து­விட்டு நன்­றாக உடை­களை அணிந்துக் கொண்டு நண்­பர்­க­ளுடன் பார்­க­ளுக்குள் நுழைந்து மது அருந்­துவேன். சிறுக, சிறுக மது­வுக்கு அடி­மை­யான நான் பின்னர் மது என்னைத் துரத்தத் தொடங்­கி­யது.

 

பின்னர் பக­லிலும் குடிக்க ஆரம்­பித்தேன்” என எங்கள் முன் தன் கடந்த கால மனக்­க­வ­லையை இறக்கி வைத்தார் பிரபாத்.

 

“குடிப்­ப­ழக்­கத்­தினால் எனது தொழிலும் பறி­போ­னது. பின்னர் சிறு சிறு தொழில்­களில் ஈடு­பட்டேன்.

 

நாள் கூலி­யாக கிடைக்கும் பணத்தில் கஞ்­சா­வுக்கும் அடி­மை­யானேன். பின்னர் அபின் சாப்­பிட பழ­கினேன். வீட்டில் தாய், தந்தையின் பேச்­சுக்கள் மிகவும் கடு­மை­யாக இருந்­தன. 

 

போதை வெறி­யுடன் வீடு சென்றதால் என்னை வீட்­டாரும் வெறுக்கத் தொடங்­கினர். துன்­பமும், கவ­லையும் இணைந்த கலவை என்னை மன ரீதி­யாக தாக்­கி­யது...” எனத் தொடர்ந்து கருத்து தெரி­வித்­த­ வரை தடுத்து, இவ்­வாறு மாற்றம் பெற யார் காரணம் எனக் கேட்டோம்.

 

“அது­தானே ஆரம்­பத்­தி­லேயே சொன்னேன். நண்­பர்கள் தான் அவர்­க­ளிடம் யோச­னை­களை கேட்க அவர்­களும் ஒவ்­வொரு வகை­யான போதை­வஸ்­துக்குள் என்னைத் தள்­ளினர்.

 

அப்­போது எனக்கு வயது வெறும் 23 தான். இந்­ நி­லை­யில்தான் கொழும்­புக்கு வெளியே புற­ந­கரில் சப்­பாத்து, குடை ­தி­ருத்தும் தொழிலில் இறங்­கினேன்.

 

இதில் எனக்கு ஏற்­க­னவே சிறு பயிற்சி இருந்­தது. அங்கு சென்றதும் மீளவும் இத்­ தொ­ழில் மூல­மாக பணம் என் கைகளில் தவழ்ந்­தது. நண்­பர்கள் என்னை விட்­ட­தாக இல்லை.

 

அவர்­களும் என்னை துரத்த மது, சிகரெட், கஞ்சா, அபின் என போதை­வஸ்­து­களும் என்னைத் துரத்தத் தொடங்­கின.

 

அதன் பயன் மாதுவை தேடி அலையத் தொடங்­கினேன். சுடும் வெயிலில் குடையை விரித்து அதன் நிழலில் வீதி­யோ­ரத்தில் சப்­பாத்து, செருப்பு, குடைகள், பேக் வகை­களை ‘ரிப்பேர்’ செய்து கொடுத்து பணம் சம்­பா­திக்கும் என் வாழ்­வி­யலில் விழுந்த ஓட்­டையை ரிப்பேர் செய்ய இய­லாது திண்­டா­டினேன்.

 

வேலை முடிந்து மாலையில் புதிய அலங்­காரம் செய்­து­கொண்டு மாதுவை தேட ஆரம்­பித்தேன். ‘மைனரைப்’ போன்று அலங்­காரம் செய்து கொண்டு பெண்­க­ளுடன் விடு­தி­க­ளுக்குள் நுழைந்தேன்.

 

இவ்­வா­றான பெண்கள் என்னைத் தேடி வரத் தொடங்­கினர். இவர்­க­ளுடன் தினமும் கூத்­தா­டினேன். முதலில் இவர்­களால் மகிழ்ச்­சி­யாக இருந்­தது.

 

பின்னர் இடி­ விழும் என கற்­ப­னையில் கூட எனக்குள் யோசனை எழ­வில்லை. மது, மாது என்பன எனது நண்­பர்­க­ளாக மாறின. 

 

பின்னர் மதுவை கைவிட்டு ஹெரோயின் போதைப் பொருளை நாடிச் சென்றேன். இவை­க­ளி­லி­ருந்தும் தப்பிச் செல்ல வழி கிடைக்­க­வில்லை. அப்­போது அனை­வரும் என்னை வெறுக்கத் தொடங்­கினர். 

 

ஹெரோயின் பாவிப்­பதால் ஒரு வகை ஜொலி இருக்கும் என நண்­பர்கள் சொன்­னதால் அதில் காலை வைத்தேன். ஒரு ஜொலியும் இல்லை. இது வெறும் பைத்­தி­யக்­காரக் கதை. உடல் வலி எடுக்கும், தூக்கம் வரும்.

 

மாட்டை விட கேவ­ல­மாக வேலை செய்­யலாம். சுய­சிந்­தனை எம்­மை­விட்டு அகன்று விடும். என்ன செய்­கிறோம் என்­பது எமக்கே தெரி­யாது. 

 

ஹெரோயின் பாவித்து பழக்­கப்­பட்­டு­விட்டால், ஹெரோயின் கிடைக்­காத அல்­லது பாவிக்­காத தரு­ணத்தில் வாந்தி வரும். உடல் செத்து போன மாதிரி மாறி­விடும்.

 

ஒன்­றுமே விளங்­காது. ஹெரோயின் வாங்­கு­வ­தற்கு பணம் இல்­லாத தரு­ணத்தில் திருட்டு தொழிலில் நுழைய வேண்டி ஏற்­படும். 

 

பணத்­திற்­காக கொலையும் செய்ய மனம் துடிக்கும். போதை தலைக்கு ஏறி­யதும் இனிப்புப் பண்­டங்­க­ளையே சாப்­பிட ஆசை வரும். பைத்­தி­யக்­கா­ர­னைப்­போல உளறிக் கொண்டு வீதி­யோரங்­களில் வீழ்ந்­து­ கி­டந்தேன். 

 

ஹெரோயின் பாவிப்­பதற்கு பணம் தேடி திருட்டு தவறு­களையும் செய்யத் தூண்டும்.

 

ஹெரோயின் பாவ­னை­யா­ளர்கள் தங்­களின் போதை ஆசையை தீர்த்துக் கொள்ள, தன் மனை­வியைக் கூட பல­ருக்கு வாட­கைக்கு விடும் சந்­தர்ப்­பங்­களை நான் நேரில் கண்­டவன்.

 

இது ஒரு கேவ­ல­மான செயல். போதையின் தாக்கம் பலரின் குடும்­பத்தை கேவ­லப்­ப­டுத்தி உள்­ள­துடன் சுக்கு நூறாக உடைத்தும் உள்­ளது..” என்­ற­வ­ரிடம் அவரின் பேச்சை தடுத்து சில கேள்­வி­களை எழுப்­பினோம்.

 

போதை பொரு­ளுக்கு அடி­மை­யா­ன­வர்கள் எதற்­காக கை, கால்­களை சவ­ரக்­கத்­தியால் கிழித்­துக்­கொள்­கி­றார்கள் என்று கேட்டோம். 
 

 

ஹெரோயின் போதைப் பொருள் இல்­லாத தரு­ணத்தில் வெறியால் தங்­களின் உடலை சவ­ரக்­கத்­தியால் தாறு­மா­றாக கிழித்துக் கொள்­வார்கள்.

 

அதில் அவர்­க­ளுக்குள் ஒரு சந்­தோஷம் இரத்தம் நிலத்தில் சொட்டு சொட்­டாக விழு­வதை பார்த்து ரசிப்­பார்கள். இது ஒரு மிரு­கத்­தனமான போதையின் உச்­ச­க்கட்­ட­மாகும்.

 

பணம் இல்­லா­விட்டால் போதைப் பொருள் கொள்­முதல் செய்ய கொலை செய்­யவும் தூண்டும். வீட்டு சமையல் பாத்­தி­ரங்­களை திருடி யாருக்­கா­வது விற்று பணத்தை பெறுவோம்.

 

போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் கொண்டு வரும் பொருட்­களை கொள்­முதல் செய்­ய­வென முன்பின் அறி­மு­க­மற்­ற­வர்கள் எங்­களை பின் தொட­ரு­வார்கள். அடி­மாட்டு விலைக்கு திருட்டு பொருட்­களை வாங்­கு­வார்கள்.

 

பழைய போத்தல் கடை உரி­மை­யா­ளர்கள் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளான குடுகா­ரர்­களை கண்டால் ஏசி துரத்தி விடு­வார்கள்.

 

ஹெரோயின் பாவ­னை­யார்­கள் குடு­காரர்கள் என்றே அழைக்­கப்­ப­டு­வார்கள். இவர்கள் தங்­க­ளுக்குள் பைத்­தி­யக்­கா­ரர்­களைப் போல தனி­மையில் பேசிக் கொள்­வார்கள்” என அவர் பதி­ல­ளித்தார்.

 

“எவ்­வாறு நீங்கள் இவ்­வா­றான கேவ­ல­மான நிலை­யி­லிருந்து விடு­பட்­டீர்கள்?” எனக் கூறு­மாறு கேட்டோம்.

 

“உண்­மை­யி­லேயே நான் ஒரு கேவ­ல­மான வாழ்க்­கைக்குள் எனது இளம் வயதை தொலைத்­து­விட்டேன். இனி அந்த இள­மையை பெற இய­லுமா?

 

போதைப்பொருள் பாவ­னை­யா­ளர்­களை சட்­டத்­தினால் மட்டும் ஒழித்து விட இய­லாது. மது, ஹெரோயின், கஞ்சா, அபின், பெண் பாவ­னை­யி­லி­ருந்து விடு­பட வேண்­டு­மானால் இப்­போதைக்கு வாழ்­ப­வரின் மனம் திருந்த வேண்டும்.

 

இது முக்­கி­ய­மா­ன­தாகும். எனது மனம் பேசி­யது. அடேய் மடையா இது ஒரு இழி­வான செயல் என சொன்­னது. பல தடவை எனக்குள் மனம் பேசி­யது. சிந்­தித்தேன். பின்னர் உண்­மை­யி­லேயே வெட்­கப்­பட்டேன். அப்­போது மேற்­சொன்ன இழி­வான செயல்­களை விட்­டொ­ழித்தேன்.

 

இதற்­காக கொழும்பை விட்டு அனு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள  மாமியின் வீட்­டுக்குச் சென்றேன். புதிய உறவு, புதிய சூழல் என்னை முற்­றாகத் திருப்­பிப்­போட்­டது.

 

அனு­ரா­த­பு­ரத்தில் பல தொழில்­களில் ஈடு­பட்டேன். முற்று முழு­வ­து­மாக மனம் திரும்­பினேன். வாழ்க்­கையில் மாற்றம் தென்­பட்­டது.

 

எனது மாமியின் மகளை திரு­மணம் செய்து கொண்டேன். எனது மாமி இறந்­தபின் 2008 இல் மீண்டும் கொழும்­புக்கு வந்தேன்.

 

எனது பழைய நண்­பர்­களை எல்லாம் கைவிட்டு சுய புத்­தி­யுடன் செயற்­படத் தொடங்­கினேன். மீன் சந்­தையில் மீன்­ பி­டிக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் மீன் பெட்­டி­களை தூக்கும் தொழிலில் இறங்­கினேன்.

 

பின்னர் மீண்டும் எனது பழைய தொழி­லான சப்­பாத்து, குடை செருப்பு திருத்தும் தொழிலில் இறங்­கினேன். இது நடந்­தது 2012இல். சுய தொழிலில் நல்ல வரு­மானம் கிடைத்­தது.

 

இன்று கம்­பஹா மாவட்­டத்தின் பிர­பல நகரில் இரண்டு பேச்­சர்ஸ்சில் காணி வாங்கி வீடு நிர்­மா­ணித்து அனைத்து வச­தி­களோடும் வாழ்­கிறேன். இன்றும் நடைபாதை­யில் தான் தொழில் புரி­கின்றேன்.

 

எனக்கு இன்று கிடைத்­தி­ருக்கும் நிம்­மதி பெரிய வசதி படைத்த செல்­வந்­தர்­க­ளுக்கு கூட இருக்­குமா என்­பது சந்­தே­க­மாகும்.

 

சத்­தி­ய­மாக இதை நான் சொல்­லு­கிறேன்” என தான் திருந்தி வாழ ஆரம்­பித்த கதையை கூறினார் பிர­பாத்.

 

“இன்­றைய இளம் சமூ­கத்­திற்கு என்ன சொல்ல விரும்­பு­கிறீர்கள்?”

 

இன்­றைய இளம் சமூ­கத்­திற்கு எனது வாழ்க்கை பெரிய பாட­மாகும். வாழ்க்­கையில் நல்­ல­வர்­களை இனம் காண்­பது சிர­ம­மா­னது. பலர் திருந்த வேண்டும் என்பதற்காக எனது கதையை சுருக்கமாக சொல்லியுள்ளேன்.

 

நிதானமாய் இருங்கள். தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் உட்கொள்ளாதீர்கள். தீங்கு விளைவிக்கக்கூடிய செயலில் ஈடுபடாதீர்கள். உங்களை நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள்.

 

ஒழுக்க நெறிகளிலிருந்து பிறழாதீர்கள். வாழ்க்கையினை மகிழ்ச்சிகரமாக நடத்திச்செல்ல, சிறந்த உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது மிக அவசியம் என்பதை உணருங்கள்.

 

அப்போது ஒழுக்க நெறிகளை கைவிட மாட்டீர்கள். அனைவரும் வளமோடு வாழவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும் என்றார் பிரபாத்.

 

நாங்களும் அவரிடமிருந்து விடை பெற்று வீதிக்குள் இறங்கி திரும்பி பார்க்கையில் சப்பாத்தை பெரிய ஊசியால் தைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பிரபாத். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.