Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
டியூட்டி ப்றீ போத்தல் மூலம் முறியடிக்கப்பட்ட விமானக் கடத்தல்
2016-01-25 21:48:56

(நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்; 
உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள்
 - தொடர் 88-)

 

    (சத்ருகன்)
 

நியூ­ஸி­லாந்­துக்கு அக­தி­யாக சென்ற சோமா­லியப் பெண்­ணான ஆஷா அலி ஆப்­திலே, 2008 ஆம் ஆண்டு உள்ளூர் சேவையில் ஈடு­பட்­டி­ருந்த விமா­ன­மொன்றை கடத்த முயன்று விமா­னி­க­ளையும் பயணி ஒரு­வ­ரையும் கத்­தியால் குத்திக் காயப்­ப­டுத்­தி­யமை குறித்து கடந்த இரு வாரங்­க­ளாக பார்த்தோம்.

 

 

நியூ­ஸி­லாந்தில் இடம்­பெற்ற முதல் விமானக் கடத்தல் அதுதான். ஆனால், நியூ­ஸி­லாந்து விமா­ன­மொன்றை கடத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முதல் முயற்சி அது­வல்ல. 

 

ஆஷா அலியின் நட­வ­டிக்­கைக்கு 21 வரு­டங்­க­ளுக்கு முன் நியூ­ஸி­லாந்து விமா­ன­மொன்று கடத்­தப்­படும் அச்­சு­றுத்­தலை எயார் நியூ­ஸிலன்ட் நிறு­வனம் எதிர்­கொண்­டது. 

 

பசுபிக் சமுத்­தி­ரத்தில் நியூ­ஸி­லாந்­துக்கு வட கிழக்கில் சுமார் 2000 கிலோ­மீற்றர் தூரத்திலுள்ள தீவுக்­கூட்ட நாடான பிஜியிலேயே இக்­க­டத்தல் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

1987 மே 19 ஆம் திகதி எயார் நியூ­ஸிலண்ட் நிறு­வ­னத்தின் நிறு­வ­னத்தின் பிளைட் ரி.ஈ.024 விமானம் ஜப்­பானின் டோக்­கி­யோ­வி­லி­ருந்து பிஜிக்கு ஊடாக நியூ­ஸி­லாந்தை சென்­ற­டையும் பய­ணத்தை ஆரம்­பித்­தது. காலை 7.15 மணி­ய­ளவில் பிஜியின் நாதி சர்­வ­தேச விமான நிலை­யத்தை அவ்­வி­மானம் வந்­த­டைந்­தது. 

 

அவ்­வி­மான நிலை­யத்தில் விமா­னங்­க­ளுக்கு எரி­பொருள் நிரப்பும் ஊழி­ய­ராக பணி­யாற்­றிய அம்ஜெத் அலி, தனது அடை­யாள அட்­டையை விமான ஊழியர் ஒரு­வ­ரிடம் காட்­டி­விட்டு விமா­னத்­துக்குள் ஏறினார். 

 

105 பய­ணி­களும் 27 ஊழி­யர்­களும் இருந்­தனர். விமா­னத்­துக்குள் நுழைந்த அம்ஜாத் அலி விமா­னத்தின் கத­வு­களை பூட்­டி­விட்டு, விமானி அறையை நோக்கிச் சென்றார். தன்­னிடம் டைனமைட் வெடி­பொ­ருட்கள் இருப்­ப­தாக தலைமை விமானி கிறேம் கிளெ­ச­னிடம் அம்ஜத் அலி கூறினார். அவ்­வி­மானம் கடத்­தப்­ப­டு­கி­றது என்ற தகவல் பரவத் தொடங்­கி­யது. 

 

எதற்­காக விமா­னத்தைக் கடத்த அம்ஜத் அலி திட்­ட­மிட்டார்?
அது பிஜியின் பாரிய அர­சியல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யிருந்த கால­மாகும். பிஜியின் சனத் தொகையில்  பெரும்­பா­லானோர் சுதேச பிஜி இனத்­த­வர்­க­ளா­கவும் சுமார் 38 சத­வீ­த­மானோர் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரா­கவும் உள்­ளனர்.

 

இவர்­களில் பெரும்­பா­லானோர் பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சிக்­கா­லத்தில் 1879 முதல் 1916 வரை­யான காலப்­ப­கு­தியில் தொழி­லா­ளர்­க­ளாக சென்று பிஜியில் குடி­யே­றிய இந்­தி­யர்­களின் வாரி­சுகள்.  இந்தோ பிஜி­யர்கள் என இவர்கள் அழைக்கப் படு­கின்­றனர்.

 

1987 ஏப்ரல் மாதம் சுதே பிஜி இனத்தைச் சேர்ந்த டாக்டர் திமோசி பவேத்ரா, இந்தோ பிஜி­யர்­களின் தேசிய சம்­மே­ளனக் கட்­சியின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்து பிர­த­ம­ரானார்.

 

ஆனால் ஒரு மாதமே அவர்  அப்­ப­த­வியில் இருக்க முடிந்­தது. 1987 மே 13 ஆம் திகதி கேணல் சித்­தி­வேனி ரபுகா, இரா­ணுவப் புரட்சி நடத்தி, பிர­தமர் பவேத்­திரா தலை­மை­யி­லான ஒரு மாத கால அர­சாங்­கத்தை கவிழ்த்து, தானே ஆட்­சி­ய­தி­கா­ரத்தைக் கைப்­பற்­றினார்.

 

38 வய­தான அம்ஜத் அலி ஒரு இந்தோ பிஜியர் ஆவார். இந்தோ பிஜி­யர்­களின் ஆத­ர­வு­ட­னான  டாக்டர் திமோசி பவேத்­ராவின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டமை அம்ஜெத் அலிக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

 

புதிய அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகை­யிலும் பதவி கவிழ்க்­கப்­பட்ட பவேந்­தி­ரா­வுக்கு ஆத­ர­வா­க­வுமே விமான கடத்­த­லுக்கு திட்­ட­மிட்டார் அம்ஜத் அலி.

 

ரபு­காவின் படை­யி­னரால் கைது 6 நாட்­க­ளுக்­குமுன் கைது செய்­யப்­பட்ட பவேத்­தி­ரா­வையும் அவரின் அமைச்­ச­ரவை அங்­கத்­த­வர்­க­ளான 27 பேரையும் விடு­விக்க வேண்டும் என்­பது அம்ஜத் அலியின் முக்­கிய கோரிக்­கை­களில் ஒன்­றாக இருந்­தது. 

 

விமா­னத்தின் பய­ணிகள் அனை­வ­ரையும் (இவர்­களில் பெரும்­பா­லானோர் ஜப்­பா­னி­யர்கள்) விமான ஊழி­யர்கள் 24 பேரையும் விடு­விப்­ப­தற்கு அம்ஜத் அலி இணங்­கினார். ஆனால் விமா­னிகள் இரு­வ­ரையும் விமானப் பொறி­யி­ய­லா­ள­ரையும் பண­யக்­கை­தி­க­ளாக அவர் தடுத்து வைத்தார்.  

 

அவ்­வி­மா­னத்தை லிபி­யா­வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் உத்­த­ர­விட்டார். 

 

நாதி சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த அவ்­வி­மா­னத்­துக்குள் சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் விமா­னிகள் இரு­வ­ரையும் விமானப் பொறி­யி­ய­லா­ள­ரையும் அம்ஜத் அலி தடுத்து வைத்­தி­ருந்தார். இது தொடர்­பாக பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. 

 

பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் அந்த திடீர் திருப்­பு­முனை ஏற்­பட்­டது.
தலைமை விமானி கிறேம் கிளீ­சனும் துணை விமா­னியும் அம்ஜத் அலி­யுடன் உரை­யா­டிக்கொண்டிருந்­த­போது வானொலி தக­வ­லொன்­றினால் அம்ஜத் அலியின் கவனம் திருப்­பப்­பட்­டது.

 

அந்த ஒரு சில கணங்­களில்  விமானப் பொறி­யி­ய­லா­ள­ரான கிறேம் வோல்ஸின் மூளையில் ஓர் அதி­ரடித் திட்டம் உதித்­தது. 

 

டியூட்டி ப்றீ சலு­கையில் வாங்­கப்­பட்ட விஸ்கி போத்­த­லொன்று கிறேம் வோல்ஸின் அருகில் இருந்­தது. உட­ன­டி­யாக அந்த போத்­தலை கையி­லெ­டுத்த அவர், அம்ஜத் அலியின் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டார்.

 

அவ்­வ­ள­வுதான் அம்ஜெத் அலி நிலைக்­கு­லைந்து விழ, அவர் உட­ன­டி­யாக மடக்கிப் பிடிக்­கப்­பட்டு பிஜி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார். 

 

“நல்­ல­வேளை அந்த போத்தல் உடை­ய­வில்லை. அதி­லுள்ள மது­பா­னத்தை நான் அருந்­த­போ­வ­தில்லை.

 

இந்த போத்­தலில் விமான ஊழி­யர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். அதனை நினை­வுச்­சின்­ன­மாக நான் வைத்­தி­ருக்­கப்­போ­கிறேன்” என்கிறேம் வோல்ஸ் கூறி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

 

விமா­னத்­துக்குள் வெடி­பொ­ருட்­களை கொண்டு சென்­றமை தொடர்­பா­கவே அம்ஜத் அலிக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. அவ்­வ­ழக்கில் அவ­ருக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 

 

பின்னர் பிஜி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் அம்ஜத் அலி தெரி­வானார். ஆனால், அவரின் மனைவி மற்றும் குடும்­பத்­தினர் நியூ­ஸி­லாந்தில் குடி­யே­றினர். 2009 ஆம் ஆண்டில் அம்ஜெத் அலியும் நியூ­ஸி­லாந்தில் நிரந்­தர வதி­விட உரிமை பெற்றார்.

 

அவர் அடிக்­கடி நியூஸிலாந்துக்கும் பிஜிக்கும் சென்று வந்தார்.  எயார் நியூஸிலண்ட் விமானங்களிலும் அவர் பயணம் செய்வது தொடர்பான தகவல் 2014 ஆம் ஆண்டில் வெளியாகியது. குறிப்பிடத்தக்கது. 

 

விமானக் கடத்தல் முயற்சியை ஆதரிக்காவிட்டாலும் அம்ஜத் அலி எவரையும் காயப்படுத்தவில்லை.

 

அப்போது பிஜியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்தியர்களின் பிரதிபலிப்பை புரிந்துகொள்கிறேன்” என பிளைட்  ரி.ஈ.024 விமானத்தின் தலைமை விமானியும் பணயக் கைதிகளில் ஒருவராக இருந்தவருமான கிறேம் கிளீசன் செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

(தொடரும்)

 

 

தொடர்புடைய கட்டுரைகள்:

 

* நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி  விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண்  -2

 

* நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி
விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண் 1

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (3)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (2)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன்(1)

 

* 100 பேரின் மரணத்துக்கு வழிவகுத்த மலேஷிய எம்.எச். 653 விமானக் கடத்தல் (6)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - ( 3)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.