Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தெய்­வீக சிலை­களை செதுக்கும் ஸ்தபதி
2016-01-24 10:44:59

சிலாபம் திண்­ண­னூரான்

 

“விஞ்­ஞானம் வளர்ந்­து­வரும் நிலையில் எமது முன்­னோர்கள் எமக்­க­ளித்த பல்­வேறு கலை­க­ளையும் இன்­றைய நிலையில் நாம் தொலைத்­து­வி­டக்­கூ­டாது.

 

நானூறு, ஐந்­நூறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் எமது மூதா­தை­யர்கள் நிர்­மா­ணித்த ஆலய கட்­டட கட்­ட­மைப்பை பார்­வை­யிட்டு இன்றும் ஆங்­கி­லேயர் மூக்கில் விரலை வைத்து அதி­ச­ய­மாக பார்­வை­யி­டு­கின்­றனர்” என்­கிறார் தமிழ்­நாடு நாகப்­பட்­டினம், திருக்­க­டை­யூரைச் சேர்ந்த அ.அன்­ப­ரசன். 

 

 

இவர் ஒரு ஸ்தபதி (சிற்பக் கலைஞர்). கொழும்பில் பிர­சித்தி பெற்ற ஆல­ய­மொன்றில் தெய்வச் சிலை­களை வடி­வ­மைத்துக் கொண்­டி­ருந்த 35 வயது இளை­ஞ­ரான அன்­ப­ரசன், மெட்ரோ நியூஸுக்கு வழங்கிய செவ்வி இது.

 

எவ்­வாறு சிற்பத் தொழிலை பழ­கி­னீர்கள்? எனக் கேட்டோம்.

 

“சிற்பக் கலைத் தொழில் எமது பரம்­ப­ரைத்­தொ­ழி­லாகும். எனது 16 வய­தினில் இக் ­க­லையை எங்கள் பரம்­பரை குருவின் மூல­மாக கற்றுக் கொண்டேன்.

 

அவரே எனது குரு. எனது முன்­னோர்கள் திருக்­க­டையூர், வேலூர், காஞ்­சி­புரம், ஸ்ரீரங்கம், உச்சிப் பிள்­ளையார் கோவில், சம­ய­புரம் என தமி­ழ­கத்தில் புகழ்­பெற்ற பல ஆல­யங்­களின் புன­ருத்­தா­ரண பணி­களில் ஈடு­பட்­ட­வர்கள். அவர்­களின் வழித் தோன்­றலில் இக்­ க­லையை முன்­னெ­டுத்து வரு­கின்றேன்.

 

இன்றும் இக்­க­லையை பயின்று வரு­கின்றேன். எனது யாழ். நண்பர் ஸ்தபதி கே. விஜ­யனின் அழைப்பின் ஊடாக இலங்­கை­யிலும் பல ஆல­யங்­களில் ஆலய புன­ருத்­தா­ரண கட்­ட­மைப்பு பணி­களை வேத, சாஸ்­திர முறைப்­படி முன்­னெ­டுத்து வரு­கின்றேன்” என பதி­ல­ளித்தார் அன்­ப­ரசன்.

 

தமி­ழகம் தவிர்ந்த வேறு எந்­தெந்த நாடு­களில் உங்­களின் பணிகள் இடம்­பெற்­றுள்­ளன?

 


“உண்­மையில் இந்­தி­யாவில் சுமார் நூற்றுக்கும் மேற்­பட்ட சிறிய, பெரிய ஆல­யங்­களில் எனது திற­மையை அடை­யா­ளப்­ப­டுத்தி உள்ளேன். மலே­ஷியா, இலங்கை ஆகிய நாடு­க­ளையும் குறிப்­பி­டலாம். 

 

இலங்­கையில் பன்­னி­ரெண்டு ஆல­யங்­களில் எனது பணிகள் இடம்­பெற்­றுள்­ளன.”

 

எவ்­வா­றான கருங்­கல்லில் சிலை­களை செதுக்­கு­வீர்கள்? 

 

“சிற்­பங்­களை பாவைக் ­கல்­லி­லேயே செதுக்க இயலும். பெரும்­பாலும் இக் கல் இனம் புதுக்­கோட்டை பிர­தே­சத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

 

கர்­நா­டக மாநி­லத்­திலும் பாவைக்கல் பெறப்­ப­டு­கி­றது. இக் கல் வகை­களால் ரேகைகள் இல்­லாத, செதில்கள், வெடிப்­புக்கள் இல்­லாத பாவைக் கல்­லி­லேயே சிலை­களை வடிக்­கலாம். இக் கல் இன­மா­னது மிகவும் இறுக்­க­மா­ன­தா­கவும் உறு­தி­யா­ன­தா­கவும் இருக்கும்.

 

 

இக்­ கல்லில் சிலை­களை வடி­வ­மைத்தால் சுமார் இரு நூறு வரு­டங்­க­ளுக்கு மேல் பழுது ஏற்­ப­டாது. 

 

இலங்­கையில் திரு­கோ­ண­மலை மற்றும் வவு­னி­யாவில் வெள்ளைக் கல் இனம் உள்­ளது.

 

இக் கல் ஆலய வாசல் படி­க­ளுக்கு உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. வவு­னி­யாவில் மர­புக்கல் இனம் உள்­ளது. இக் கல் வகையில் சிலை­களை செதுக்­கலாம்.

 

தெய்வ உருவ சிலை­களை வடி­வ­மைத்த பின்னர் எவ்­வாறு அச்­சி­லை­க­ளுக்கு உயிர் தரு­கி­றீர்கள் எனவும் கேட்டோம். 

 


“சிலை­யொன்று ஆகம விதி­க­ளுக்கு அமைய வடி­வ­மைக்­கப்­பட்­டதன் பின்னர் தொட்டி அமைத்து அத்­ தொட்­டியில் நீர் நிரப்பி, சிலையை நாற்­பது நாட்­க­ளுக்கு அதற்குள் வைத்­து­வி­டுவோம்.

 

கற்­சி­லை­யா­னது தொட்டித் தண்­ணீரை இழுத்துக் கொள்ளும். தண்­ணீரை கற் சிலை உறிஞ்சி இழுத்துக் கொள்­வ­தினால் சிலையில் அதிர்­வு­களும் வெடிப்­பு­களும் ஏற்­பட வாய்ப்பு இல்­லாது போகின்­றது.

 

இதற்கு பின்னர் ஆலய கும்­பா­பி­ஷேகம் இடம்­பெ­ற­வுள்ள தினத்­திற்கு பதி­னைந்து நாட்­க­ளுக்கு முன் நவ­தா­னி­யத்தில் மூழ்க வைத்து பின்னர் பிர­திஷ்டை செய்­யப்­படும்.

 

கும்­பா­பி­ஷேகம் இடம்­பெறும் முதல் நாள் இரவு அஷ்­டப்­பந்­தனம் சாத்­திய பிறகு தெய்­வச்­சி­லையின் கண் திறப்பு விழா இடம்­பெறும்.

 

இந்­ நி­கழ்வை பக்­தர்கள் பார்க்க அனு­ம­திப்­ப­தில்லை. இச்­ச­டங்கு மிகவும் முக்­கி­ய­மா­னது. சாதா­ரண சிலை­யாக காணப்­பட்ட இச்­சிலை இப்­போது தெய்­வீகத் தன்­மையை அடையும் நிலைக்குள் செல்­கி­றது.

 

இச்­ சி­லையின் எதிரே பெரிய முகம் பார்க்கும் கண்­ணாடி வைக்­கப்­படும். சிவாச்­சா­ரி­யார்கள் முன்­னி­லையில் தங்கம், வெள்ளி ஊசி­களால் நாங்கள் மந்­தி­ரங்­களை ஓதிக் கொண்டே தெய்­வத்தின் கண்­களை திறப்போம்.

 

அப்­போது எங்­க­ளுக்குள் ஒரு­வித பயமும் பக்­தியும் ஊடு­றுவ, உடல் நடுங்கும். மிக இர­க­சி­ய­மாக நடை­பெறும் இச்­ ச­டங்கு இரவு 12 மணிக்குப் பின்­னரே இடம்­பெறும்.

 

அது­வரை, சாதா­ரண சிலை­யாகக் காணப்­பட்ட சிலை தெய்­வீ­கத்­தன்­மையைப் பெற்­று­விட பீடத்தில் யந்­தி­ரங்கள் பதி­யப்­பட்டு சிலை பிர­திஷ்டை பண்­ணப்­படும்” என ஸ்தபதி அன்­ப­ரசன் தெரி­விக்க நாங்­களும் வியந்து போனோம். இவ்­வ­ளவு இர­க­சியம் உள்­ளதா என அதிர்ச்சியடைந்தோம். 

 

 

சீமெந்­தினால் சிலைகள் வடி­வ­மைக்­கப்­ப­டு­கின்­றன. இச் ­சிலைகள் சில காலங்­களில் வெடிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் தன்­மையைக் கொண்­டது எனவும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார் அன்­ப­ரசன்.

 

மரபு வழி­களை கைவிட்டு சில இடங்­களில் சிலை­களை வடிக்­கி­றார்கள். இது பற்­றிய தங்கள் கருத்­தென்ன?

 


“மரபு வழி என்­பது ஆகம விதி­க­ளின்­படி பய பக்­தி­யுடன் தெய்வ சிலை­களை வடி­வ­மைக்க வேண்டும். வெறு­மனே பணத்­திற்­காக இக்­க­லையை கேவ­லப்­ப­டுத்தக் கூடாது.

 

அனைத்துக் கலை­களும் தெய்­வீகத் தன்­மை­களைக் கொண்­டது. இதை உணர வேண்டும். பணத்­திற்­காக முறை­யற்ற வகையில் சிலை­களை வடித்­த­வர்­களில் ஏரா­ள­மானோர் பாவ தோஷங்­களை தேடிக்­கொள்­கின்­றனர்.

 

அதை அனு­ப­வித்தும் உள்­ளனர். எமது முன்னோர் பாது­காத்த கலை­களை குட்டிச் சுவ­ராக்கி சேதா­ரப்­ப­டுத்தி விடு­கின்­றனர். பணத்­திற்­காக சிற்­பக்­க­லையை சேதா­ரப்­ப­டுத்­து­ப­வர்­களை எண்ணி சற்று வேத­னைப்­ப­டு­கிறேன்.

 

இலங்­கையைப் பற்றி உங்கள் கருத்து எவ்­வாறு?

 

இந்­ நாடு ஒரு அழ­கிய இயற்கை வளம் கொண்ட வள­மான தேசம். கலைகள்  அனைத்­தி­னதும் பிறப்­பிடம் இந்­தியா. இருந்தும் இலங்­கையில் கலை­களை வளர்க்­கவும் கலையை போற்­றவும் ஆர்வம் உள்­ள­வர்கள் நிறைய உள்­ளனர். இங்கு கலைகள் வளர்­கி­றது. வளர்க்­கப்­ப­டு­கி­றது.

 

இங்­குள்­ள­வர்கள் மத்­தியில் பக்தி அதிகம். அனைத்து மதத்­தி­னரும் குறிப்­பாக பௌத்த மக்கள் இந்து தெய்­வங்­களின் மீது பெரும் நம்­பிக்கை வைத்­துள்­ளதைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

 

உங்­க­ளது சாத­னைகள் குறித்து?

 

“என்னைப் பொறுத்­த­வரை பல பெரும் பழைமை கொண்ட ஆல­யங்­களை மரபு ரீதி­யாக புன­ருத்­தா­ரணம் செய்­துள்ளேன். பல ஆதீ­னங்கள் பாராட்டி கௌர­வித்­துள்­ளன.

 

இலங்­கையில் வட பகு­தியில் வர­லாற்று சிறப்பு வாய்ந்த ஆல­யங்­களில் நண்பர் கே. விஜ­ய­னுடன் இணைந்து திருப்­பணி வேலை­களை முன்­னெ­டுத்­துள்ளேன்.

 

 

செம்­மொழி மாநாட்டில் பல தமிழ் அறி­ஞர்கள், தமிழ் வர­லாற்று விற்­பன்­னர்­களின் உரு­வங்­களை சிலை­யாக வடி­வ­மைத்தேன். இளங்கோ சொல்­லாலும் மன்னன் செங்­குட்­டுவன் கல்­லாலும் கண்­ண­கிக்குக் கோயில் எழுப்­பினான் சேரன் செங்குட்டுவன் காலத்தில்.

 

இக்காலத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் சிலை வடித்து முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பாராட்டைப் பெற்றேன். 

 

இது போன்று பல சம்பவங்களை கூறலாம். இன்று இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து இளைஞர்களுக்கு சிலை வடிவமைப்பு கலையை பயிற்றுவிக்கிறேன். 

 

இந்த இளைஞர் சமூகம் இக் கலையை பயின்று இந் நாட்டில் இக் கலையை வளர்க்க வேண்டும். இதன் காரணமாகவே இவர்களுக்கு சிற்பக் கலையை கற்றுத் தருகிறேன். இதுவும் என்னை பொறுத்தவரை சிறியதோர் சாதனையாகவே எண்ணுகிறேன்.”

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.