Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண் - 2
2016-01-18 22:25:36

(நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்; 
உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள்
 - தொடர் 87-)

 
(சத்ருகன்)
 

(கடந்த வார சுருக்கம்: 


2008 பெப்­ர­வரி 8 ஆம் திகதி நியூ­ஸி­லாந்தின் பிௌன்ஹெய்ம் நக­ரி­லி­ருந்து கிறைஸ்ட்சேர்ச் நகரை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த 19 ஆச­னங்கள் கொண்ட விமா­ன­மொன்றை கடத்தி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு கொண்டு செல்­வ­தற்கு ஆஷா அலி ஆப்­திலே எனும் சோமா­லிய பெண் முயற்­சித்தார். 

 

நியூ­ஸி­லாந்தின் ஈகிள் எயார்வேஸ் நிறு­வ­னத்தின் பிளைட் 2279 எனும் அவ்­வி­மா­னத்தில் ஆஷா அலி தவிர மேலும் 7 பய­ணி­களும் இரு விமா­னி­களும் இருந்­தனர். 3 கத்­தி­களை வைத்­தி­ருந்த ஆஷா­வு­ட­னான பேராட்­டத்தில் விமா­னிகள் இரு­வரும் பயணி ஒரு­வரும் காய­ம­டைந்­தனர். 

 

எனினும் கடத்தல் முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்டு கிறைஸ்ட்சேர்ச் நகரில் விமானம் தரை­யி­றங்­கி­யபின் ஆஷா கைது செய்­யப்­பட்டார்.

 

அப்­போது 33 வய­தானவ­ராக இருந்த ஆஷா­வுக்கு  எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.

 

விமா­னத்தை அவுஸ்­தி­ரே­லியா கடத்தி செல்ல அல்­லது விமா­னத்தை அழித்து அனை­வ­ரையும் கொல்­வ­தற்கு திட்­ட­மிட்­ட­தா­கவும் அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.)

 

இவ்­வ­ழக்கு விசா­ர­ணையின் போது சாட்­சி­ய­ம­ளித்த தலைமை விமானி, மேற்­படி விமானக் கடத்தல் முயற்­சி­யின்­ போது இடம்­பெற்ற திகி­லான அனு­பங்­களை நினை­வு­ கூர்ந்தார். 

 

'ஆஷா என்னை நோக்கி கத்­தி­யொன்றை நீட்­டி­ய­தி­லி­ருந்து இவ்­வி­மானக் கடத்தல் நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­கி­யது. நான் அவரின் மணிக்­கட்டை பற்­றிப்­பி­டிக்க முயற்­சித்தேன்.

 

ஆனால் எனது கையில் காயம் ஏற்­பட்­டது. விமா­னத்­தி­லி­ருந்த ஏனைய 7 பய­ணி­களும் தத்­த­மது ஆச­னங்­களில் இருந்­தனர். அவர்­களில் பலர் அழ ஆரம்­பித்­தனர். 

 

ஒரு கட்­டத்தில் நாம் அனை­வரும் இறக்­க­போ­கிறோம். அது எப்­ப­டி­யெனத் தெரி­ய­வில்லை என ஆஷா கூறினார்'  என விமானி தனது சாட்­சி­யத்தில் கூறிப்­பிட்டார். 

 

ஆஷா சில தரு­ணங்­களில் குழப்­ப­ம­டைந்­த­வ­ரா­கவும் சில தரு­ணங்­களில் ஆத்­தி­ர­ம­டைந்­த­வ­ரா­கவும் காணப்­பட்டார் என பய­ணிகள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

 

''அப்­பாவி பய­ணி­க­ளையும் விமான ஊழி­யர்­க­ளையும் கடத்­திய ஆஷா­வுக்கு அதிக பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இதையே சமூகம் எதிர்­பா­ரக்­கி­றது'' என அரச தரப்பு சட்­டத்­த­ரணி பைப் கியூரி நீதி­மன்­றத்தில் கூறினார்.

 

ஆனால், அவ­ருக்கு குறைந்­த­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் எனவும் நன்­ன­டத்தை அடிப்­ப­டையில் விடு­த­லை­யா­கு­வ­தற்கு கால­ வ­ரம்பு எதுவும் விதிக்­கப்­ப­டக்­கூ­டாது எனவும் ஆஷா ஆப்­திலே தரப்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி எலி­ஸபத் பல்கர் கோரினார்.

 

மன­நலன் பாதிக்­கப்­பட்ட ஆஷா­வுக்குத் தேவை­யான சிகிச்­சை­களுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தா­ததாக அவ­ருக்­கான தண்­டனை இருக்க வேண்டும் எனவும் சட்­டத்­த­ரணி எலி­ஸபத் பல்கர் கோரினார். 

 

அத்­துடன் ஆஷா ஆப்­தி­லேவின் பின்­னணி குறித்த நீண்ட அறிக்­கை­யொன்­றையும் சட்­டத்­த­ரணி எலி­ஸபத் வாசித்தார்.  ஆஷா­வினால் சொல்­லப்­பட்ட கதையை சட்­டத்­த­ரணி எலி­ஸபெத் அந்த அறிக்­கையில் எழு­தி­யி­ருந்தார். 

 

'சோமா­லி­யாவில் 17 பிள்­ளை­களைக் கொண்ட குடும்­ப­மொன்றைச் சேர்ந்­தவர் ஆஷா அலி ஆப்­திலே.  ஆனால், 1991 ஆம் ஆண்டு சோமா­லி­யாவில் சிவில் யுத்தம் ஆரம்­ப­மா­ன­தை­ய­டுத்து ஆஷாவின் குடும்பம் தலை­நகர் மொகா­தி­ஷூ­வி­லி­ருந்து வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார். 

 

ஆஷா தனி­யாக வசித்த நிலையில், தனது பாட்­டனாரை சந்­தித்து அவ­ருடன் தங்­கி­யி­ருக்க ஆரம்­பித்தார். ஆனால், பாட்­ட­னாரை தீவி­ர­வா­திகள் துண்­டுத்­துண்­டாக வெட்டி கொன்­றனர். 

 

 

 சோமா­லி­யாவில் பல வரு­ட­காலம் அவர் அக­திகள் முகாமில் வசித்­த­போது தான் எதிர்­கொண்ட வன்­மு­றைகள், ஏனைய ஆபத்­துகள் குறித்து ஆஷா கூறினார். நிவா­ரணப் பொருட்­க­ளுக்­காக 3 நாட்கள் வரை வரி­சையில் காத்­தி­ருந்­த­தா­கவும்; ஆஷா தெரி­வித்தார். 

 

ஆஷாவின் குடும்­பத்­தினர் எத்­தி­யோப்­பி­யா­வுக்குச் சென்­ற­தாக தெரி­கி­றது. பின்னர் ஆஷா அலி ஆப்­திலே  நியூ­ஸி­லாந்­துக்கு வந்தார். 

 

1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து நியூ­ஸி­லாந்தில் தனது வாழ்க்கைப் போராட்டம் குறித்தும் ஆஷா கூறினார்.  அக­திகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், தான் ஆஷாவின் 'உரி­மை­யாளர்' எனக் கூறி­ய­துடன் அவ­ருடன் உறவை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­வ­தாக கூறினார்.

 

ஆஷாவை அந்­நபர்  பின் தொடர்ந்து வந்தார்.  ஆஷாவைப் பற்றி பொய்­யான தக­வல்­களை பொலி­ஸா­ருக்கும் அவ­ருக்கு தொழில் வழங்­கி­ய­வர்­க­ளுக்கும் அந்­நபர் வழங்­கினார். 

 

தான் வீதி­களில் வசித்­த­ போது,  பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி பொலிஸார் பல தடவை ஆஷாவை கைது செய்­தாக ஆஷா தெரி­வித்தார்.

 

 ஆஷாவின் சகோ­தரி ஒருவர் நியூ­ஸி­லாந்­துக்கு வந்­தபின் அச் சகோ­த­ரியை ஆஷா­வி­ட­மி­ருந்து பிரித்த அதி­கா­ரிகள் அவரை கிறைஸ்சேர்ச் நக­ரி­லுள்ள அகதிகள் முகா­மொன்­றுக்கு அனுப்­பினர்.

 

தனது சகோ­த­ரியை தன்­னி­ட­மி­ருந்து கொண்­டு­சென்­றபின் ஆஷா துவண்டு போனார். தான் ஒரு பைத்­தியம் என அவர் தன்னை வர்­ணித்­துக்­கொண்டார். விமா­ன­மொன்றைக் கடத்தி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் செல்­வ­தற்கு அவர் தீர்­மா­னித்தார்.

 

தான் செய்த காரி­யத்தை அவர் உணர்ந்­துள்ளார். அந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது விமா­னத்­தி­லி­ருந்­தவர்­க­ளுக்கு மிக அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­ப­தையும் அவர் அறிவார்.

 

ஆனால், எவ­ரையும் கொல்லும் நோக்கம் அவ­ரிடம் இருக்­க­வில்லை' என சட்­டத்­த­ரணி எலி­ஸபெத் வாசித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

 

ஆஷாவை பரி­சோ­தித்த மருத்­துவர் ஒருவர், விமானக் கடத்தல் இடம்­பெற்ற வேளையில் ஆஷா மன அழுத்­தத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்­த­தாக தெரி­வித்தார். 

 

 

நியூ­ஸி­லாந்தில் நடை­பெற்ற முதல் விமானக் கடத்தல் சம்­பவம் அதுதான். எனவே இவ் ­வ­ழக்கு விசா­ர­ணைக்­கான வழி­காட்­டல்கள் எதுவும் இல்லை என இவ்­ வ­ழக்கை விசா­ரித்த நீதி­பதி கிறிஸ்டைன் பிரெஞ்ச் நீதி­பதி பிரெஞ் கூறினார்.

 

ஆனால், வெளி­நா­டு­களில் இத்­த­கைய விமானக் கடத்தல் குற்­றங்­க­ளுக்கு 5 முதல் 25 வரு­டங்கள் வரை­யான சிறைத்­தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர். 

 

இறு­தியில் 2010 ஓகஸ்ட் மாதம், ஆஷா­வுக்கு  9 வருட சிறைத்­தண்­டனை விதித்து நீதி­பதி  கிறிஸ்டைன் பிரெஞ் தீர்ப்­ப­ளித்தார். குறைந்­த­பட்சம் 6 வரு­டங்கள் வரை அவர் நன்­ன­டத்தை அடிப்­ப­டை­யிலும் வெளி­வர முடி­யாது எனவும் நீதி­பதி கிறிஸ்டைன் பிரெஞ்ச் தெரி­வித்தார். 

 

இத்­த­கைய குற்­றங்­க­ளுக்கு குறைந்­த­பட்சம்  15 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் என நீதி­பதி கூறினார். மேற்­படி விமானக் கடத்தல் முயற்­சிக்கு முன், ஆஷா ஆப்­திலே ஏற்­கெ­னவே  பல வழக்­கு­களில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டி­ருந்தார். 

 

ஆனால், ஆஷா குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டமை மற்றும்  மன நலன் பாதிக்­கப்­பட்ட பின்­னணி ஆகி­ய­வற்றை கருத்­திற்­கொண்ட நீதி­பதி  கிறிஸ்டைன் பிரெஞ்ச், 9 வருட கால சிறைத்­தண்­டனை மாத்­திரம் விதித்தார்.

 

மேற்­படி விமா­னத்தில் பயணம் செய்­த­வர்கள் சிலர் தாம் மர­ண­ம­டை­யக்­கூ­டிய அச்­சு­றுத்­தலை எதிர்­நோக்­கிய சம்பவத்தை மீள நினைவுகூற விரும்பாமையால் சாட்சியம் அளிக்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

அவ் விமானத்தின் விமானிகளில் ஒருவர் விமானம் மேற்படி சம்பவத்தின் பின் செலுத்துவதையே கைவிட்டதாக நீதிபதி கிறிஸ்டைன் பிரெஞ்ச் தெரிவித்தார். 

 

6 வருடங்கள் சிறையில் இருந்தபின், தன்னை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்குமாறு 2014 ஆம் ஆண்டு ஆஷா அலி மனுத் தாக்கல் செய்தார்.

 

எனினும். நீதிமன்றம் நிராகரித்தது. ஏற்கெனவே 27 வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என மனுவை விசாரித்த குழு கருதியது.

 

தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் 40 வயதான ஆஷாவின் தண்டனைக் காலம் 2017 ஆம் ஆண்டில் முடிவடைகிறது.

 

தொடரும்....

 

தொடர்புடைய கட்டுரைகள்:

 

* நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி
விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண்

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (3)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (2)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன்(1)

 

* 100 பேரின் மரணத்துக்கு வழிவகுத்த மலேஷிய எம்.எச். 653 விமானக் கடத்தல் (6)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - ( 3)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.