Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண்
2016-01-12 22:23:48

(நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்; 
உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள்
- தொடர் 86-)

 

-சத்ருகன்-

 

சோமா­லி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் குத்தி காயப்­ப­டுத்தி விமா­ன­மொன்றை கடத்த முயன்ற சம்­பவம் சுமார் 6 வரு­டங்­க­ளுக்­கு முன் இடம்­பெற்­றது. 

 

2008 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 8 ஆம் திகதி காலை 7.40 மணி­ய­ளவில் நியூஸிலாந்தின் பிளென்ஹெய்ம் நக­ரி­லி­ருந்து  கிறைஸ்ட்சேர்ச் நகரை நோக்கி அவ்­வி­மானம் புறப்­பட்­டது. 

 

ஆஷா அலி அப்திலே கைது செய்யப்பட்டபோது....


 

அது, எயார் நியூஸிலண்ட் நிறு­வ­னத்தின் பிராந்­திய சேவைப் பிரி­வான ஈகிள் எயார்வேஸ் நிறு­வ­னத்தின் சார்பில் எயார் நெஷனல் நிறு­வ­னத்­தினால் உள்ளூர் சேவையில்  ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பிளைட் பிளைட் 2279 விமா­ன­மாகும். பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் ஜெட்ஸ்ரீம் 32 ரகத்தைச் சேர்ந்த,  19 ஆச­னங்கள் கொண்ட விமானம் அது. 7 பய­ணி­களும் இரு விமா­னி­களும் அவ்­வி­மா­னத்தில் இருந்­தனர். 

 

விமானம் புறப்­பட்டு 10 நிமி­டங்கள் கடந்த நிலையில் பய­ணி­களில் ஒரு­வ­ரான பெண், விமானி அறைக்குள் நுழைந்து கத்­தியைக் காட்டி விமா­னி­களை மிரட்­டினார். 

 

விமா­னத்­துக்குள் இரு வெடி­குண்­டுகள் இருப்­ப­தாகக் கூறிய அப்பெண், விமா­னத்தை அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு திசை திருப்­பு­மாறு கூறினார்.  அப்பெண் 33 வய­தான ஆஷா அலி அப்­திலே எனவும் அவர் சோமா­லி­யா­வி­லி­ருந்து நியூஸிலாந்­துக்கு சென்­றவர் என்­பதும் பின்னர் தெரி­ய­வந்­தது.

 

அவரின் நிபந்­த­னைக்கு விமா­னிகள் உடன்­ப­ட­வில்லை. அதனால் விமா­னி­களை அப்பெண் கத்­தியால் தாக்க ஆரம்­பித்தார். 

 

அவர் கையில் ஒன்­றல்ல, இரண்­டல்ல 3 கத்­திகள் இருந்­தன. விமா­னி­களும் விமா­னத்­தி­லி­ருந்த ஏனைய 6 பயணி­களில் சிலரும் அப்­பெண்ணை மடக்கிப் பிடிக்க முயன்­றனர். இதில் விமா­னி­களும் பெண் பயணி ஒரு­வரும் காய­ம­டைந்­தனர். 

 

இக்­க­டத்தல் முயற்சி மற்றும் தாக்­கு தல் குறித்த விடயம் வான் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்டு நிலை­யத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தை­ய­டுத்து முழு அள­வி­லான அவ­ச­ர­கால தயார் நிலை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

 

அவ்­வி­மா­னத்தை ஒரு­வாறு கிறைஸ்ட்சேர்ச் விமான நிலை­யத்தில் காலை 8.06 மணி­ய­ளவில் விமா­னிகள் தரை­யி­றக்­கினர்.

 

அதன்பின் பய­ணிகள் விமா­னத்­தி­லி­ருந்து இறங்­கு­வ­தற்கு ஆஷா அனு­ம­தித்தார். அவரின் கவனம் திசை திரும்­பி­ய­போது தலைமை விமானி அப்­பெண்ணை திடீ­ரென தள்ளி நிலை­கு­லையச் செய்தார். 

 

ஆஷாவின் கையி­லி­ருந்து கத்­தியை பறிப்­ப­தற்கு தலைமை விமானி முயன்றார். இதன்­போது விமா­னியின் கையில் வெட்டுக் காயம் ஏற்­பட்­டது.

 

விமா­னத்தை தரை­யி­றக்­கிய துணை விமானி, விரைந்­து­வந்து ஆஷாவின் கையி­லி­ருந்த கத்­தியை உதைத்து அகற்­றினார். 

 

பின்னர் பொலிஸார் விமா­னத்­துக்குள் நுழைந்து ஆஷா அலி ஆப்­தி­லேவை கைது செய்­தனர். 

 

விமா­னிகள் இரு­வரும் வைத்­தி­யசா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.  

 

துணை­வி­மா­னியின் பாதத்தில் ஏற்­பட்ட கத்திக்குத்து காயத்­துக்­காக தையல் போடப்­பட்டு மறுநாள் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றினார்.  

 

தலைமை விமா­னியின் இரு கைக­ளிலும் காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. அவ­ருக்கு சத்­தி­ர­சி­சிக்­சைகள் செய்­யப்­பட்­டன.

 

 

விமா­னிகள் என்ற வகையில், பய­ணி­களின் பாது­காப்­புக்கு தாம் மிகுந்த முன்­னு­ரிமை வழங்­கு­வ­தா­கவும் தமது உள்­ளு­ணர்வு, தாம் இரு­வரும் பெற்ற பயிற்­சிகள், அனு­ப­வங்கள்  ஆகி­ய­வற்­றினால் சிறந்த இந்த விமானக் கடத்தல் முயற்­சியை முறி­ய­டிப்­பதில் சாத­க­மான முடிவு ஏற்­பட்­ட­தா­கவும் விமா­னிகள் தெரி­வித்­தனர். 

 

அதே­வேளை, உயிர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் நில­விய சூழ்­நி­லையில், விமா­னத்தை செலுத்தி பாது­காப்­பாக தரை­யி­றக்­கி­ய­மைக்­காக துணை விமா­னிக்கு தான் பகி­ரங்­க­மாக நன்றி தெரி­விப்­ப­தாக தலைமை விமானி கூறினார்.

 

“அவரின் தொழிற்சார் தன்­மை­யா­னது, ஒட்­டு­மொத்த நிலை­மையை சமா­ளிப்­ப­திலும் குற்­ற­வா­ளியை கையாள்­வ­திலும் தனது கவ­னத்தை செலுத்­து­வ­தற்கு வாய்ப்பு கிடைத்­த­தாக தலைமை விமானி கூறினார். 

 

எயார் நியூஸிலண்ட் நிறு­வனம் எயார் நெஷனல் நிறு­வனம், விமா­னி­களின் சங்­கத்­தினர், வான் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்­டா­ளர்கள், பொலிஸார் ஆகி­யோ­ருக்கும் தலைமை விமானி நன்றி தெரி­வித்தார்.

 

இவ்­விரு விமா­னி­களின் செயற்­பாட்டை எயார் நெஷனல் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஜேசன் கிறே வெகு­வாக பாராட்­டினார்.  

 

இவ்­வி­மா­னிகள் பய­ணி­களை பாது­காப்­ப­தற்­காக எவ்­வித தயக்­கமும் இன்றி தமது உயிர்­களை பொருட்­ப­டுத்­தாமல் துணிந்து செயற்­பட்­ட­தாக ஜேசன் கிறே கூறினார். 

 

ஆஷா அலி அப்­திலே மீது அவர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.  விமா­னி­க­ளையும் பய­ணி­க­ளையும் தாக்கி காயமேற்படுத்தியமை, விமானத்தை அவுஸ்திரேலியாவுக்கு கடத்துவதற்கு அல்லது விமானத்தை அழித்து அதிலிருந்த அனைவரையும் கொல்வதற்கு முயற்சித்தமை முதலனான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

 

யார் இந்த ஆஷா அலி அப்திலே, அவர் ஏன் நியூஸிலாந்துக்குச் சென்றார், அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது, இப்போது அவர் எங்கிருக் கிறார் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

 

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (3)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (2)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன்(1)

 

* 100 பேரின் மரணத்துக்கு வழிவகுத்த மலேஷிய எம்.எச். 653 விமானக் கடத்தல் (6)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - ( 3)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.