Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இந்நாளில் முன்னாள் போராளிகள்
2015-12-27 11:46:40

(ஆர்.இந்துமதி)

 

யாருக்­காக ஆயு­த­மேந்தி சுதந்­திரம் கேட்டு போரா­டி­னோமோ அதே சமூகம் இன்று புனர்­வாழ்வு பெற்ற எம்மை “பாது­காப்பு பிரி­வி­னரால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டவள்” என விமர்­சித்து சமூ­கத்­தி­லி­ருந்து ஒதுக்கி வைத்­தி­ருப்­பது வேத­னை­ய­ளிக்­கி­றது” என முன்னாள் பெண் போரா­ளி­யொ­ருவர் தெரி­விக்­கிறார்.

 

2009 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இலங்கை இரா­ணு­வத்­துக்கு எதி­ராக போரா­டிய போரா­ளிகள், புனர்­வாழ்வு அ­ளிக்­கப்­பட்டு இன்று சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்ட போதும் “இன்று  தமது ‘முன்னாள் போராளி’ என்ற அடை­யா­ளத்தை அழிப்­ப­தற்­கா­கவும் வாழ்­வா­தா­ரத்­துக்­கா­கவும் இன்று தினந்­தினம் போராடி வரு­கின்­றனர்.

 

உயிரைத் தியாகம் செய்­யத்­ து­ணிந்த போரா­ளி­க­ளாக இருந்த அவர்கள் இன்று ஏதோ ஒரு மன­ப­யத்தில் இருப்­பதை புனர்­வாழ்வு பெற்ற பின்னர் தற்­போது சமூ­கத்­துடன் ஒன்­றிணைந்து வாழும் போரா­ளிகள் சிலரை சந்­தித்­த­போது அறிந்து கொள்ள முடிந்­தது. 

 

வாகனம் ஓட்டும் திறமை உட்­பட பல திற­மைகள் இருந்த போதும் ‘முன்னாள் போராளி’ என்ற அடை­யாளம் கார­ண­மாக தான் ஒதுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் திற­மைக்­கேற்ற வேலையை தேடிப்­போனால் குறைந்த சம்­ப­ளத்­துக்கு அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் பெண் போரா­ளி­யான மணி­மே­கலை (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தெரி­வித்தார்.

 

கிளி­நொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த மணி­மே­கலை (34)  இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில், “சாதா­ர­ண­தரம் படித்­த­வுடன் தனிப்­பட்ட விருப்பம் கார­ண­மாக நான் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் 23 வயதில் இணைந்தேன்.

 

இறுதி யுத்தம் வரை நான் அமைப்பில் இருந்தேன். விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் மோட்டார் படை­ய­ணியில் பணி­யாற்­றிய நான் கடு­மை­யான பணி­க­ளையும் செய்தேன். அதன் விளை­வாக இன்று உடல் ரீதி­யான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கிறேன்.

 

இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து தடுப்பு முகா­முக்கு அனுப்­பப்­பட்ட போது உயி­ரோடு மீண்டும் ஊர் வரு­வோமா என்ற பயம் இருந்­தது.

 

பின்னர் இரண்டு வரு­டங்கள் தடுப்பு முகாமில் எனக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட போதும், அதனால் எந்­த­வொரு பிர­யோ­ச­னமும் இல்லை என்­றுதான் சொல்ல வேண்டும். 

 

தடுப்பு முகாமில் உண­வுக்கு பஞ்­ச­மி­ருக்­க­வில்லை. ஆனால் இரா­ணு­வத்தால் வழங்­கப்­பட்ட பயிற்­சிகள் வாழ்க்கைக்கு பய­ன­ளிப்­ப­தாக இல்லை. புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு வீடு திரும்பியவுடன் எந்த தொழிலும் இல்லை. குடும்­பத்தில் மிகவும் கஷ்­ட­மாக இருந்­தது. 

 

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட எங்­க­ளுக்கு வேலை தரு­வ­தாக அர­சாங்­கமும் இரா­ணு­வமும் உறு­தி­ய­ளித்தபோதும் இது­வ­ரைக்கும் எனக்கு எந்த வேலையும் கொடுக்­க­வில்லை.

 

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு கொடுப்­ப­தாக கூறிய தொழில்­வாய்ப்­புகள் இன்று வெளி­யாட்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கின்றன.

 

குறிப்­பாக சிவில் பாது­காப்பு பிரி­வினால் வழங்­கப்­படும் தொழில் வாய்ப்­பு­க­ளுக்கு பல தட­வைகள் விண்­ணப்­பித்­த­போதும் சாத­க­மான பதில்கள் எதுவும் கிடைக்­க­வில்லை எனத் தெரி­வித்தார்.

 

வாகனம் ஓட்டும் திறமை தனக்கு இருந்த போதும் பெண்­ணென்ற கார­ணத்தால்  அது போன்ற பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான வாய்ப்­பினை சமூகம் பெற்­றுத்­தர மறுப்­ப­தாக தெரி­வித்த மணி­மே­கலை, இன்று 7000 ரூபா எனும் குறைந்த  சம்­ப­ளத்­துக்கு ஸ்டூடியோ ஒன்றில் பணி­பு­ரிந்து வரு­கிறார்.

 

“இப்­போது எங்­க­ளுக்கு தொழில் பிரச்­சி­னைதான் இருக்­கின்­றது. தொழில் இல்­லா­த­தனால் எங்­களை வறுமை வாட்­டு­கி­றது.

 

உத­வியும் கிடைப்­ப­தில்லை. என்­னிடம் மோட்டார் சைக்கிள் இருப்­பதை கண்­ட­வுடன் எனக்கு சமுர்த்தி கூட தர முடி­யாது என கூறி விட்­டார்கள். 

 

இயக்கம் இருந்த கால கட்­டத்தில் சனங்கள் இவ்­வாறு கஷ்­டப்­ப­ட­வில்லை. முன்னர் பொது­மக்கள் பாது­காப்பை உணர்ந்­தனர். எந்த நேரத்­திலும் வெளியில் சென்று வரலாம்.

 

ஆனால் தற்­போது பெண்கள் 6 மணிக்கு பின்னர் வெளியில் செல்­வ­தற்கு பயப்­ப­டு­கின்­றனர்.

 

இதை­யெல்லாம் நினைக்கும் போது மன­வே­த­னை­யாக இருக்­கின்­றது.” என தெரி­வித்த மணி­மே­கலை மீண்­டு­மொரு போர் வந்­து­விடக் கூடா­தெ­னவும்  அதனை தாங்கும் சக்தி தங்­க­ளுக்கு இல்லை எனவும் தெரி­வித்தார்.

 

சொந்த ஊரில் நிரந்­த­ர­மாக வேலையைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­தனால் தனது கண­வரை வெளி­நாட்­டுக்கு பணி­பு­ரி­வ­தற்­காக அனுப்பி வைத்­துள்ள மணி­மே­கலை, கண­வனின் சம்­ப­ளத்தை எதிர்­பார்த்து தனது இரு பிள்­ளை­க­ளுடன் வறு­மை­யோடு போராடிக் கொண்­டி­ருக்­கிறார்.

 

1993 ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­துள்ள சிவ­நேசன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) 1996 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற யுத்­தத்தின் போது தனது காலொன்றை இழந்­துள்ளார்.

 

ஒரு வரு­ட­கால சிகிச்­சையின் பின்னர் இயக்­கத்தில் தன்னை மீண்டும் இணைத்­துக்­கொண்ட அவர், விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் நிர்­வா­கப்­ப­ணி­களில் ஈடு­பட்­டி­ருந்­தவர். இது குறித்து அவர் தெரி­வித்­த­தா­வது:

 

“2009 ஆம் ஆண்டு  இரா­ணு­வத்­திடம் நான் சர­ண­டைந்த போது உண்­மை­யான தக­வல் ­களை இரா­ணு­வத்­துக்கு வழங்­கினேன். பொய்­யான தக­வல்­களைக் கூறி வீணாக பிரச்­சி­னையில் மாட்டிக் கொள்­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை.

 

இரண்டு வரு­டங்கள் தடுப்பு முகாமில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டேன்.

 

இத­னை­ய­டுத்து தடுப்பு முகா­மி­லி­ருந்து இரா­ணு­வத்தால் வெறும் 250 ரூபா காசுடன் கிளி­நொச்­சிக்கு பஸ்ஸில் ஏற்றி விடப்­பட்டேன். பின்னர் கிளி­நொச்சி வந்து இறங்­கி­ய­வுடன் நான் எனது மனை­வி­யுடன் ஆட்டோ மூலம் எனது வீட்­டுக்குச் சென்ற போது கையி­லி­ருந்த 250 ரூபா­வையும் ஆட்­டோ­வுக்கு கொடுத்து விட்டு வெற்­றுக்­கை­யுடன் வீட்­டுக்கு வந்தேன்.

 

எனது நண்­பர்கள் சிலர் கடை வைத்­தி­ருந்த போதும் எவரும் எனக்கு தொழில்­வாய்ப்­பினைத் தர முன்­வ­ர­வில்லை.  

 

முன்னாள் போரா­ளி­யாக  நான் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­­பட்­ட­தாலும் பாது­காப்பு தரப்பின் மீது சமூகம் கொண்ட அச்­சத்தின் கார­ண­மா­கவும் நான் சமூ­கத்­தி­ல்­ தனித்து விடப்­பட்டேன்.

 

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளி­க­ளுக்கு நிதி­யு­த­வி வழங்­கு­வ­தாக அர­சாங்­கமும் இரா­ணு­வமும் உறு­தி­ய­ளித்­த­போதும் இது­வரை அவ்­வா­றான எந்­த­வொரு உத­வியும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.” என்றார்.

 

‘முன்னாள் போராளி’ என்ற அடை­யா­ளத்­தினால் ஊன­முற்­றோர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிதி­யு­த­வியைக் கூட என்னால் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

 

ஊன­முற்­றோர்­க­ளுக்­கான நிதி­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான விண்­ணப்­ப­ப் படிவத்தில், ‘குறித்த நபர் அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவோ இரா­ணு­வத்­துக்கு எதி­ரா­கவும் செயற்­ப­ட­வில்லை’ என்­பதை உறுதி்ப்படுத்த வேண்டியதாக உள்ள நிலையில் ‘முன்னாள் போராளி’ என்ற அடை­யாளம் கார­ண­மாக அவ்­வு­று­திப்­பாட்டை கிராம சேவகர் ஊடாக பெற்­றுக்­கொள்­வதில் சிக்­கல்கள் நிலையில் ‘முன்னான் போராளி’ என்ற அடை­யாளம் கார­ண­மாக அவ்­வு­று­திப்­பாட்டை கிராம சேவகர் ஊடாக பெற்­றுக்­கொள்­வதில் சிக்­கல்கள்  காணப்­ப­டு­கின்­றன. 

 

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்ட போதும் அரச சேவை­க­ளினை பெற்­றுக்­கொள்ளும் போதும் நாம் ‘முன்னாள் போராளி’ என அடை­யா­ளப்­ப­டுத்­தப்ப­டு­வது எமக்கு முட்­டுக்­கட்­டை­யா­கவே இருந்து வரு­கின்­றது.’’

 

“நான் வாழும் இந்த கிரா­மத்தில் மக்­க­ளுக்­கான பொதுச் சேவையை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற ஆவல் உள்­ள­போதும் முன்னாள் போராளி என்ற அடை­யாளம் அதற்கும் தடை­யாக உள்­ளது.

 

குழு­வாக இணைந்து முற்­பட்டால் பாது­காப்புத் தரப்­பினர் மற்றும் இச்­ச­மூகம் மீண்டும் நாம் பழைய பாதையில் செல்ல முயல்­வ­தாக அடை­யா­ளப்­ப­டுத்தி விடுமோ என்ற அச்­சமும் எனக்கு இருந்தே வரு­கின்­றது” எனவும் அவர் கூறினார். 

 

நாம் சற்று நேர்­மை­யாக செயற்­பட முயற்­சித்தால், தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக தமது அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்­தி­வரும் சில சமூ­கப்­பி­ர­தி­நி­திகள் தமக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தோடு நின்று விடாமல் ‘முன்னாள் போராளி’ என்ற அடை­யா­ளத்தை சுட்­டிக்­காட்டி தம்மை புறந்­தள்ள முயற்­சிப்­ப­தாக தெரி­விக்கும் சிவ­நேசன், தான் கால்­களை மட்­டுமே இழந்­துள்­ள­தா­கவும் தனது நம்­பிக்­கையை இன்றும் இழக்­க­வில்லை.

 

முச்­சக்­க­ர­வண்டி சார­தி­யாக உள்­ள­போதும் ஊன­முற்­றோ­ருக்­கான சிறப்பு வாகன சாரதி அனுமதிப்­பத்­தி­ரத்தை பெறு­வ­தற்கு போதிய பணம் இல்­லா­ததால் வாகன அனு­மதி பத்­தி­ர­மின்­றியே முச்­சக்­க­ர­வண்டி செலுத்தி வரு­கிறேன்.  வாழ்­வா­தா­ரத்­துக்­கான தொழில் வாய்ப்­பு­களில் சில சமா­ளிப்­பு­களை அவ்­வப்­போது முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

 

நான் புனர்­வாழ்வளிக்­கப்­பட்­ட­தா­லேயே உங்கள் முன் நான் பய­மில்­லாமல் இந்த விட­யங்­களை பேசு­கிறேன். எனது பிள்­ளை­க­ளுக்கும் நான் எனது கால்­களை இழந்த விடயம் பற்றி கூறி­யுள்ளேன். எதையும் என் பிள்­ளை­க­ளி­ட­மி­ருந்து நான் மறைக்க விரும்­ப­வில்லை.

 

சமூ­கத்­துக்கு நற்­பணி செய்ய வேண்­டு­மென்ற ஆவல் மனதில் உள்ள போதும் முன்னாள் போராளி  என்ற அடை­யா­ளத்­துடன் மக்­க­ளுக்கு பொதுச்­சே­வை­யாற்ற முடி­யா­தென்ற ஆதங்­கத்தை மனதில் மறைத்­துக்­கொண்டு, குடும்­பத்­துக்கு நல்ல ஒரு தலை­வ­னா­கவே இருக்க விரும்­பு­கிறேன்” என அவர்  தெரி­வித்தார்.

 

“இனத்­துக்கு நான் செய்ய வேண்­டிய அனைத்து கட­மை­க­ளையும் பூர்த்தி செய்­து­விட்டேன் எனது கண்­க­ளையும் இழந்து விட்டேன்.

 

இனி எனது இறுதி மூச்சு வரை கட­வு­ளுக்கு ஊழியம் செய்­யவே விரும்­பு­கிறேன்” என இறுதி கட்ட யுத்­தத்தில் இரா­ணு­வத்­துக்கு எதி­ராக போரா­டிய ஜேசு­தாசன் தெரி­வித்தார்.

 

13 ஆண்­டுகளாக விடு­தலை புலிகள் அமைப்பில் போராடி இறுதி கட்ட யுத்­தத்தின் போது உயர் பதவி ஒன்­றி­ணையும் வகித்து பார்­வையை இழந்த பின்னர் இரா­ணு­வத்தால் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட ஜேசு­தாசன், ஒன்­றறை வருட காலம் தடுப்பு முகாமில் வழங்­கப்­பட்ட தொழிற்­ப­யிற்­சிகள் எதுவும் வாழ்க்­கையை நடத்தி செல்லும் அள­வுக்கு பிர­யோ­ச­ன­மாக இருக்­க­வில்லை எனத் தெரி­விக்­கின்றார்.

 

“முன்னாள் போராளி என்ற அடை­யா­ளத்­துடன்  சமூ­கத்தில் இணைக்­கப்­பட்ட பின்னர் சில சம­யங்­களில் சமூ­கத்தால் தனித்து விடப்­பட்டேன்.

 

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு அர­சாங்கம் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறிய வேலை­வாய்ப்­புகள் உரிய காலத்தில் பெற்றுத் தரப்­ப­டா­ததன் கார­ண­மாக நான் உட்­பட   புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான போரா­ளிகள் வாழ்க்­கையை கொண்டு செல்­வதில் சிக்­கல்­களை எதிர்­கொள்­கிறோம்” எனத் தெரி­வித்தார்.

 

முன்னாள் போரா­ளி­யென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு தடுப்­பு­மு­காமில் இரண்­டரை வரு­டங்கள் புனர்­வாழ்வு முகாமிலிருந்த இரா­ஜ­லிங்கம் தினேஷ் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது), “புனர்­வாழ்வு என இரண்­ட­ரை­யாண்­டுகள் வைத்­தி­ருந்­தார்கள்.

 

அதனால் எங்­க­ளுக்கு எந்த வித பயனும் இல்லை. அந்த காலத்தை இழந்­ததன் மூலம் எங்­க­ளது வாழ்க்­கையை இழந்த­தாக உணர்­கின்றோம்.

 

விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த பொது­மக்கள் இறுதி யுத்­தத்தின் போது 7 நாட்கள் கட்­டாய பயிற்சி பெற வேண்­டு­மென்­பது இரா­ணு­வத்­துக்கு தெரிந்த விட­ய­மாகும். யுத்­த­மு­னையில் ஆயு­த­மேந்தி போரா­டி­ய­வர்­க­ளையும் , 3 நாட்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் கட்­டாய வேலையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளையும் சம­மாக கருதி இரண்­டரை ஆண்­டுகள் புனர்­வாழ்வு­என்ற பெயரில் தடுத்து வைக்­கப்­பட்­டமை நியா­ய­மற்­ற­தொன்­றாகும்.

 

புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­யினால் நான் வாழ்க்­கையில் பலவற்றை இழந்­த­தாக உணர்­கின்றேன். என்­னோடு தடுப்பு முகாமில் இருந்த சுமார் 2000 பேர், இன்று வேலை­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

 

தற்­போது எங்­க­ளுக்கு வேலை­யில்லாப் பிரச்­சி­னையே பிர­தா­ன­மாக உள்­ளது. இத­னால்தான் இளை­ஞர்கள் பலர் இன்று முறை­யற்ற செயல்­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

 

அவர்­க­ளுக்கு தொழில் ஒன்று இருந் தால் இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட மாட்­டார்கள். பாலியல் வன்­முறை போன்ற கொடூர சம்­ப­வங்கள் யுத்­தத்தின் பின்னர் மிக மோச­மான நிலையை அடைந்­துள்­ளது.

 

வேலை­யில்லாப் பிரச்­சினை இவ்­வா­றா­ன­தொரு நிலையை தோற்­று­வித்­துள்­ளது. ‘இருக்க வேண்­டி­ய­வர்கள் இருந்தால் இது­போன்ற பிரச்­சி­னைகள் ஏற்­ப­ட­வாய்ப்­பில்­லை’­யென தெரி­வித்தார்.

 

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போராளி என்ற ஒரே கார­ணத்தால் சமூ­கத்­தினால் தொடர்ந்து புறந்­தள்­ளப்­பட்டு வரும் நான் சாதா­ரண பெண்­க­ளைப்­போல இல்­லற வாழ்க்­கையில் நுழை­வ­தென்­பது எட்டாக் கனி­யா­கவே இருந்து வரு­வ­தாக முன்னாள் பெண் போரா­ளி­யான சியா­மளா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தெரி­வித்தார்.

 

விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த போது தொண்டர் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றிய சியா­மளா,  (35), புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் அதே ஆசி­ரியை தொழிலை பெற்­றுக்­கொள்­வ­தற்கு போராடி வரு­கிறார்.

 

தொண்டர் ஆசி­ரி­யை­யாக பணிப்­பு­ரிந் ­த­தற்­கான சான்­றி­னைக்­கோரி குறித்த பாட­சாலை அதி­ப­ரைச்­சந்­தித்து பேசிய போது, “அவர்­களின் (விடு­த­லைப்­பு­லிகள்) காலத்தில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றி­ய­மைக்­கான சான்­றினை வழங்­கினால் யார் பாது­காப்பு விசா­ர­ணைக்கு போவது?” என்ற பதிலை அதிபர் சியா­ம­ளா­வுக்கு தெரி­வித்­துள்ளார்.

 

அன்­றாட வாழ்க்­கை­யினை நடத்­து­வதே போராட்­ட­மாக உள்ள நிலையில் சமூ­கத்தின் சுடு­சொற்­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கிறேன்” என சியா­மளா தெரி­வித்தார்.

 

பெண் போரா­ளி­களின் தற்­போ­தைய வாழ்க்கை நிலை குறித்து கருத்து வெளி­யிட்ட அங்­கி­லிக்கன் திருச்­சபை பாதி­ரியார் எஸ்.கே.டேனியல், பல­வீ­ன­மான பாத்­தி­ர­மாக சமூ­கத்­தினால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் முன்னாள் பெண் போரா­ளிகள் பாது­காப்பு பிரி­வி­னரால் பாலியல் ரீதி­யாக கையா­ளப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேக கண்­ணோடு சமூகம் பார்த்து வரு­வ­தாக தெரி­வித்தார்.

 

தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­ப­ட்டி­ருந்த முன்னாள் விடு­தலைப் புலிப் போரா­ளிகள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்டு சுமார் 4 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இன்று அவர்கள் ஒரு­வித அச்­சத்­துடன் வாழ்ந்து வருகின்றனர்.

 

அதுமட்டுமல்லாது ஏதோவொரு வகையில் சமூகத்தில் ஒதுக்கப்பட்டும் வருகின்றனர்.

 

முன்னாள் விடுதலை புலிப்போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மூன்று விடயங்களாக பிரிக்க முடியுமென  பாதிரியாரான எஸ்.கே.டேனியல் தெரிவிக்கின்றார்.

 

“விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் போராடி  பின்னர் இராணுவத் தினரிடம் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இராணுவத்தின் முகவர்களாக செயற்படு கிறார்களோ என்ற அச்சம் இப்பகுதி மக்கள் சிலரிடம் காணப்படுகிறது.

 

இரண்­டா­வ­தாக இறுதி கட்ட யுத்­தத்தில் விடு­தலைப் புலி­களால் இப்­ப­குதி மக்­க­ளுக்கு ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வங்கள் பொது­மக்கள் மத்­தியில் முன்னாள் போரா­ளிகள் குறித்த வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

அடுத்­த­தாக புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் பெண் போரா­ளிகள் விட­யத்தில் சமூ­கத்தில் சிலர் தொடர்ந்து தவ­றான கண்ணோட்டத்தையே கொண்டுள்ளனர்.

 

பெண்கள் ஒழுக்கம் என்­ப­ன­வற்றில் சிறந்து விளங்­க­வேண்­டு­மென நினைக்கும் சமூகம் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட பெண்கள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சந்தேகிக்கின்னர். இதனால் அவர்­களை திரு­மணம் முடிப்­ப­தற்கு சிலர் தயங்­கு­கின்­றனர்.

 

இத­னி­டையே தனியார் தொண்டு நிறு­வ­னங்கள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­வந்­தாலும் முன்னாள் போரா­ளி­களின் முழு­மை­யான தேவை­களை பூர்த்தி செய்­வ­தில்லை. அவர்கள் தமது இலக்கை அடையவே முயற்­சிக்­கின்­ற­னர்”­எ­னவும் பாதிரியார் எஸ்.கே டேனியல் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.