Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
“போலியான ஆவணங்களுடன் பலர் வருவார்கள்” – டைப்பிஸ்ட் நஸீரா
2015-12-13 11:09:00

“சிலாபம் திண்ணனூரான்”

 

வாழ்க்­கையில் தொடர்­க­தை­யாக துன்­பத்தை அனு­ப­வித்து, ஓர் இலட்­சி­யத்தை முன்­னெ­டுத்து, வாழ்க்கைப் பய­ணத்தை தொடர்ந்தார் ஒரு பெண் தட்­டெ­ழுத்­தாளர்.

 

“தட்­டெ­ழுத்து (டைப்பிங்) தொழிலைக் கற்­றுக்கொள். இது உன் வாழ்க்­கையை வள­மாக்கும்”- இது ஒரு தந்தை தனது மக­ளுக்கு சின்னஞ் சிறு வயதில் கூறிய வார்த்­தைகள். இவ்­வார்த்­தைகள் இச்­சி­று­மியின் மனதில் தட்­டெ­ழுத்துப் பொறியின் (டைப்­ரைட்டர்) அச்­செ­ழுத்­துக்­க­ளாக பதிந்­தது அன்று. 

 

 

தன் தந்­தையின் வார்த்­தையை தன் இலட்­சிய பய­ணத்தின் முத­லீ­டாக மனதில் ஏற்­றிக்­கொண்டு பய­ணத்தை ஆரம்­பித்தார் இப்பெண். இப்­ப­ய­ணத்தின்  இடையில் எத்­தனை முட்கள் அதையும் கடந்து வலி­க­ளையும் சுமந்துகொண்டு வலி­மை­யோடு தர­மான வாழ்க்கை வாழ பய­ணத்தை ஆரம்­பித்­த­வர்தான் செல்வி நிசார் நஸீரா (42). 

 

கொழும்பில் வசிக்கும் நஸீரா உண்­மை­யி­லேயே ஒரு துணிச்­சலைக் கொண்ட இலட்­சியப் பெண்தான். இவரின் தகப்­பனார் ஒரு தனியார் நிறு­வ­னத்தில் அக்­கா­லத்தில் டைப்­பிஸ்­டாக வேலை செய்­துள்ளார்.

 

மூன்று மொழி­க­ளையும் கற்றுத் தேர்ந்த தனது டைப்பிஸ்ட் தொழில் பறி­போக, பல்­வேறு நட­மாடும் வர்த்­தக தொழில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு நஸீ­ராவின் கல்வி, கற்றல் செயல்­பா­டு­க­ளுக்கு  பெரும்­பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­துள்ளார். 

 

நஸீரா ஆரம்­பத்தில் கொழும்பு-7 இலுள்ள பௌத்த மகளிர் கல்­லூ­ரியில் ஐந்தாம் தரம் வரை கல்­வியை கற்­றவர். இவர் பின்னர் ஒன்­பதாம் தரம் வரை அல்­ஹிக்மா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்றார்.

 

குறைந்த வரு­மானம் குடும்­பத்தை மிரட்ட, இவரின் கல்­விக்கும் முற்­றுப்­புள்ளி விழுந்­தது.

 

இத்­தாக்கம் நஸீ­ரா­வையும் தாக்­கி­யது. கல்­வியைத் தொலைத்த நஸீரா அச்­சகம், புத்­தக வர்த்­தக நிலையம், புத்­தகம் பைன்டிங், தொலைத்­தொ­டர்பு (கொம்­யு­னி­கேசன்) நிறு­வ­னங்கள் என மாறி மாறி பல தொழில்­க­ளுக்குள் நுழைந்தார். 

 

எட்டு மணித்­தி­யா­லங்­க­ளை­விட வேலையை பெற்­றுக்­கொள்ளும் தொழில் தரு­னர்கள், நாட்டின் பொரு­ளா­தார சூழல் மாற்­றத்­திற்கு ஏற்­ற­வ­கையில் தனக்கு ஊதி­யத்தை வழங்­கு­வ­தில்லை என தெரி­வித்தார் நஸீரா. 

 

“பின்னர் பல சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் இலி­கி­த­ராக தொழில் பார்த்தேன். இரவு 11 மணி வரை தொழில் செய்ய வேண்­டிய நாட்­களும் வரும். பொரு­ளா­தார நெருக்­க­டியால் முகம் சுழிக்­காது தொழில் வலி­யையும் சுமந்து கொண்டு தொழில்­பு­ரிவேன்.

 

இவ்­வா­றான இரவுவேலை நாட்­களில் வாப்­பாவும் உம்­மாவும் அலு­வ­லக வாசலில் எனக்­காக இரவு 11 மணி வரை காத்­தி­ருப்­பார்கள். இது எவ்­வ­ளவு கொடுமை. 

 

இதன் பின்னர் எனது வாப்பா நான் படும் கஷ்­டத்தை பார்த்து “நீ வேலைக்கு போக வேண்டாம். கணினி மூல­மான டைப்பிங் முறையை கற்­றுக்கொள். நான்  பணம் தரு­கிறேன்.

 

இதை நல்ல முறையில் கற்றுக் கொண்டால் எதிர்­காலம் நன்­றாக இருக்கும்” என்றார். 

 

அப்­போது என் வாப்பா சாம்­பி­ராணி, ஊது­பத்தி வியா­பாரம் செய்தார். இவ்­வி­யா­பா­ரத்தில் சொற்ப இலா­பமே கிடைக்கும்.

 

அந்த ஆதா­யத்தில் தான் எங்­களின் முழு குடும்­பமும் ஓடி­யது. மாதம்  ஐந்­நூறு ரூபா கொடுத்து  கம்­பி­யூட்டர் டைப்பிங் பயின்றேன். 

 

எதிர்­காலம் நல­மாக இருக்கும். கஷ்­டப்­ப­டாமல் எதையும் பெறவும் முடி­யாது. சாத­னை­களை படைக்­கவும் இய­லாது. கஷ்­டப்­பட்டு எதை கற்றுக் கொண்­டாலும் அது வாழ்க்­கைக்கு பெரும் பயனை பின்னர் கொடுக்கும்.

 

எந்த விட­யத்­திலும் தாழ்வு மனப்­பான்மை கொள்­ளக்­கூ­டாது என எனது வாப்பா என்­னிடம் அடிக்­கடி தெரி­விப்பார். எனது வாப்­பாவின் அந்த வச­னங்கள் எனக்குள் வளர்ந்­தது. எனது வாழ்க்­கையின் மாற்­றத்­திற்கு எனது வாப்­பாவின் அறி­வு­ரைகள் உர­மாக மாறின. 

 

நான் கம்­பி­யூட்டர் டைப்பிங் முறை­மையை ஒரு வரு­டத்தில் சிறப்­பாக கற்றுத் தேர்ந்தேன். தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் டைப்பிங் பயிற்­சியில் முத­லிடம்  பெற்றேன். 

 

இதன் பின்னர் தனியார் சட்ட நிறு­வ­னத்தில் டைப்­பிஸ்­டாக தொழில் புரிந்தேன்.

 

இங்கு வைத்து சட்­டத்­து­றையின் சில நுணுக்­கங்­க­ளையும் பல்­வேறு வகை­களைக் கொண்ட ஆவ­ணங்­க­ளையும் டைப்பிங்  செய்­கையில் மேற்­கொள்ள வேண்­டிய  நுணுக்­கங்­க­ளையும் கற்­றுக்­கொண்டேன்.

 

“இவ்­வாறு கற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது வீடு வீடாகச் சென்று இந்­திய புட­வை­களை பேரம் பேசி விற்ற காலமும் எனது வீட்­டிற்­குள்ளும் புட­வை­களை விற்ற காலமும் எனது மன­திற்குள் அசை­போடும்” என நஸீரா. தெரி­வித்தார்.  

 

எம்­மோடு அவர் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­போது பலர் பல்­வேறு கடி­தங்கள், ஆவ­ணங்­களை டைப் செய்­து­கொள்­வ­தற்­காக அங்கு பலர் கூட்­ட­மாகக் கூட, நாமும் சிறிது ஓய்வு எடுத்தோம். 

 

வேலைகள் முடி­வ­டைய எம்­முடன் மீண்டும் பேச ஆரம்­பித்தார் நஸீரா. “தனியார் சட்ட நிறு­வ­னத்தில் தொழில் புரி­கையில் என்­னிடம் ஒரு சகோ­தர சிங்­கள அன்பர் ஆவணம் ஒன்றை  சிங்­கள மொழியில்  செய்து கொள்ள வந்தார்.

 

அவர் யார்? என்ன தொழில் என்­பதை அவர் என்­னிடம் தெரி­விக்க, நான் முன் பின் தெரி­யாத அவ­ரிடம் “உங்கள் டாம் வீதி கட்­ட­டத்தில் நான் கம்­பி­யூட்டர் டைப்பிங் தொழிலை செய்ய  இடம் ஒதுக்கி தர முடி­யுமா” எனக் கேட்டேன்.

 

“யோசிப்போம்” என ஒரே வார்த்­தையில் பதிலை வழங்கி விட்டு போய்­விட்டார். மூன்று  வாரங்­களின் பின்னர் என்­னிடம் வந்த அவர், தனது கட்­ட­டத்தின் வாக­னத்­த­ரிப்­பி­டத்தில் ஒரு சிறு­ப­கு­தியை எனது டைப்பிங் தொழி­லுக்­காக வழங்­கு­வ­தாக தெரி­வித்தார்.

 

அந்­நேரம் இந்த உல­கமே என் கைகளுக்குள் அடங்கி இருப்­ப­தாக உணர்ந்தேன். இது நடந்­தது 2011 ஆம் ஆண்டில்.

 

இன்றும் அதே இடத்தில் கம்­பி­யூட்டர் டைப்பிங் தொழிலைச் செய்து வரு­கின்றேன். எனக்குத் துணை­யாக என் உம்மா காலை­யி­லேயே  என்­னோடு வந்­து­விடுவார்.

 

இன்று  நான் இருக்கும் நிலையைப் பார்ப்­ப­தற்கு வாப்பா  இல்­லாமல் இருப்­பது எனக்கு மிகவும் கவ­லை­யாக உள்­ளது எனத் தெரி­வித்தார் நஸீரா.

 

“இத்­தொ­ழிலில் என்ன மாதி­ரி­யான சிக்­கல்­களை இனம் கண்­டுள்­ளீர்கள்?” 

 

“இத்­தொ­ழிலின் பல சிக்­கல்கள் உள்­ளன. பல்­வேறு பொய்­யான தக­வல்­க­ளுடன் பல சான்­றி­தழ்கள், சத்­தி­யக்­க­ட­தா­சிகள் என பலர் தேவை­க­ளுக்­காக டைப்பிங் செய்து கொள்ள வரு­வார்கள். இவர்­க­ளுடன் மிக கவ­ன­மாக  செயற்­பட வேண்டும். 

 

2014 இல் அகில இலங்கை சமா­தான நீதி­வா­னாக நான் நிய­மனம் செய்­யப்­பட்டேன். மும்­மொ­ழி­க­ளிலும் நான் செயற்­ப­டு­வதால் பல்­வேறு கார­ணங்­களைத் தெரி­வித்து போலி­யான சான்­றி­தழ்­களில் கையொப்பம் பெற பலர் வரு­வார்கள். நான் கையெ­ழுத்­தி­டு­வ­தில்லை.

 

பின்னர் வரும் சிக்­கல்­க­ளுக்கும் விசா­ர­ணை­க­ளுக்கும் உள்­வாங்­கப்­பட்டு விடுவோம். மன­திற்குள் சந்­தேகம் எழுந்தால் டைப்பிங் செய்தோ கையெ­ழுத்­தி­டு­வதோ இல்லை” எனத் தெரி­வித்தார்.

 

“நல்­லதோர் அனு­ப­வ­சாலி என்ற வட்­டத்­திற்குள் வாழும் நீங்களும் மெட்ரோ நியூஸ் வாச­கர்­க­ளுக்கு சொல்ல விரும்­பு­வ­தென்ன?

 

“பெற்­றோர்கள் அனு­ப­வ­சா­லிகள். அவர்­களின் ஒவ்­வொரு அனு­ப­வமும் பாட­மாகும்.

 

அவர்­களின் வாக்­குகள் பலிக்கும் என் வாழ்க்கையில் பல வலிகளை ஏற்றுக்கொண்டு வாப்பாவின் பின்னர் பொறுப்போடு செயலாற்றி உம்மாவோடு வாழ்கின்றேன். 

 

வாழ்க்கை என்பது புரிந்தவனுக்குச் சாதனை, புரியாதவனுக்கு வேதனை.  படித்தவனுக்கு ஆராய்ச்சி  மண்டபம், படிக்காதவனுக்கு அது சத்திரம் என்பதை உணர வேண்டும்.

 

கல்வி கற்றால் அக்கல்வியின் மூலமாக உயரலாம். இன்று அதுதான் நிம்மதியாக உள்ளேன். இதை அனைவரும் உணரவேண்டும். பொறுப்புடன் வாழுங்கள். பொறுமையுடன் வாழுங்கள். வெற்றியை தொடலாம் என்றார்” நஸீரா.

 

(படங்கள்: கே.பி.பி.புஷ்பராஜா)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.