Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சும்மா அதிருதுல்ல...!
2015-11-15 11:58:04

‘சும்மா அதி­ரு­துல்ல...’ இந்த அதிர்வை பறையைத் தொட்­டாலே உணர்வு பூர்­வ­மாக உண­ர­மு­டியும். இசைக் கலைஞர் மு.விக்­னேஸ்­வரன் இழுத்­துக்­கட்­டிய அந்தப் பழுப்­பே­றிய பறையை முழங்க, நம்மை யாரோ தட்டி எழுப்பும் உணர்வு எமக்குள் படர்ந்­தது. 

 

அடித்தால்  எட்­டுத்­தி­சையும் ஒலிக்கும் பறை விடு­த­லைக்­கான இசை மொழி.

 

ஆதி­கா­லத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். தமிழ் இனத்தின் தொன்மை அடை­யா­ளமாய் விண்­ணையும் அதிர முழங்­கிய பறை. இன்று ஆதிக்க சக்­தி­களின் நாக­ரீக வரு­கை­யினால் ஒதுக்கித் தள்ளப்பட்­டதன் வலியை எமக்கு விப­ரித்தார் இரு­பத்­தெட்டே வயதான இளைஞர் விக்­னேஸ்­வரன்.

 

“பறை வெறும் கரு­வி­யல்ல. ஆதி­கா­லத்தின் மனி­தனின் இயல்பு வாழ்க்­கை­யோடு வாழ்ந்த கருவி.

 

இன்று கைப்­பேசி எந்­த­ளவில் மக்­களின் வாழ்­வி­ய­லோடு இணைந்­துள்­ளதோ அத­னை­யும்­விட அன்று பறை பல மடங்­குகள் மனி­தனின் வாழ்­வோடு ஊடு­ருவி இருந்­தது. அன்று பறையே தகவல் தொடர்பு சாத­ன­மாக விளங்­கி­யது.

 

அன்று பறை கொட்டி பொங்கி எழும்பும் புனலை தடுத்­தார்கள். போர்ப்­பறை கேட்டு வீரர்கள் திரள்­வார்கள். எதி­ரிகள் பறை கேட்டு ஓடி­னார்கள்.

 

உழவர் பறை ஒலித்­தது பயிர்­வ­ளர. உழைக்கும் வர்க்கம் சோர்வை எட்­டாது இருக்க இந்த பறை மொழிதான் கை கொடுத்­தது. மக்­களின் அனைத்து தேவைக்கும் பறை ஒலித்தே செய்­தியை வழங்­கி­னார்கள்.

 

சங்க இலக்­கி­யத்­திற்­குள்ளும் சிலப்­ப­தி­காரம், சீவ­க­சிந்­தா­மணி போன்ற காப்­பி­யங்­க­ளிலும் பறை பற்­றிய தக­வல்கள் உள்­ளன” என தக­வல்­களை அவர் வழங்­கு­கையில் நாமும் அதிர்ந்துப் போய் விட்டோம். பறை பற்­றிய சேக­ரிப்பா ஆய்வா என வியந்தோம்.

 

“வாழ்­வியல் கூறு­க­ளுடன் இணைந்து செயல்­பட்ட பறையை மறப்­பதும், மறக்­க­டிப்­பதும் எந்­த­வ­கையில் நியாயம்?” என எம்மைப் பார்த்து கேள்­வியை தொடுத்து விட்டு மீண்டும் தனது தோளில் தொங்­கிய பறையை தடவி தடி­களால் ஒலி எழுப்ப அக்கம் பக்­கத்­தாரும் கூட்­டமாய் கூடி­விட்­டனர். 

 

“பார்த்­தீர்­களா அனை­வ­ரையும் இணைக்கும் சக்தி பறைக்கு மட்­டுமே உண்டு. இந்த கைப்பே­சியால் இய­லுமா" என ஆவே­ச­மாக வார்த்­தை­களை வெளியேவிட்டார் விக்­னேஸ்­வரன்.

 

களுத்­துறை மாவட்டம் றைகம மேற்­பி­ரிவு இங்­கி­ரி­யவில் வாழும் இளை­ஞ­ரான விக்­னேஸ்­வ­ர­னிடம் 'புதுப்­புது வாத்தியக் கரு­வி­களின் வருகை அதி­க­ரித்து வரும் தரு­ணத்தில் பறையின் மீது ஏன் பெரும் ஆதிக்கம் செலுத்­து­கி­றீர்கள்” எனக் கேட்டோம்.

 

“இது எனது வலியின் வெறித்­த­ன­மாகும். சிறு­வ­யது முதல் பறையின் மீது எனக்கு பெரும் ஆவல் இருந்­தது. என்­றா­வது ஒரு நாள் பறை இசைக்­க­ருவி எனது தோளில் தொங்க வேண்டும், எனது பறை இசை கேட்டு மக்கள் வியக்க வேண்டும்.

 

ஆதி தமி­ழனின் இசைக்­க­ருவி பறை இதை வாழ­வைக்க வேண்டும். இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி அமரர் அப்­துல்­கலாம் ஐயா, “இளை­ஞர்­களே கனவு காணுங்கள்” என்றார்­ தானே.

 

அவர் வழியில் நாள் தோறும் பறை முழங்­கு­வது போல் மனதில் நினைத்து, நினைத்து கனவு காண்பேன். அது பலித்­தது.

 

காமன் கூத்­துக்கு எங்­க­ளது தோட்­ட­ம் பிர­சித்­த­மா­னது. காமன்­கூத்து முப்­பது நாட்­க­ளுக்கு தோட்­டத்தில் இடம்­பெறும். அக்­காலத்தில் வெளியிடங்­க­ளி­லி­ருந்து பறை கலை­ஞர்கள் வருகை தந்து பறை முழங்­கு­வார்கள்.

 

சிலர் பறை  கரு­விக்குப் பதி­லாக எக்ஸ்­ரே­வுக்குப் பயன்­ப­டுத்தும் பிளாஸ்டிக் அட்­டையை சதுர பல­கையின் ஆணியால் பதி­ய­வைத்து பறை­யாக பாவித்­தார்கள். 

 

நானும் 2010 இல் இவ்­வாறு பறை கருவி செய்து காமன் கூத்தின் இறுதி தினத்­தன்று வாசித்தேன். தோட்­டத்­தினர் என்னை பிளாஸ்டிக் பறையை வாசிக்க அனு­ம­திக்­க­வில்லை.

 

பறை அடித்­த­வர்கள் என்னை கேவ­லப்­ப­டுத்­தி­னார்கள். பல்­வேறு வகையில் அவ­மா­னப்­ப­டுத்­தினர். இது என்னை வெகு­வாகப் பாதித்­தது.

 

இது நடந்த மறு­வ­ருடம் காமன் கூத்தின் இறுதி நாளன்று இறுக்­கு­தென்ன பிர­தேச கலை­ஞர்கள் இருவர் மட்­டுமே பறை வாசித்­தனர்.

 

அக்­க­லை­ஞர்கள் தங்­களின் பறையை வழங்கி என்னை வாசிக்க செய்­தனர். அன்று எனது நீண்ட கால கனவு நிறை­வ­டைந்­தது” என்றார் மகிழ்ச்சி முகத்தில் கூத்­தாட.

 

உங்­க­ளுக்கு குரு யார் எனக் கேட்­ட­போது, ““எனக்கு குரு இல்லை. எனது தந்தை ஒரு காலத்தில் வீமன் மாஸ்டர் இசை குழுவில் கிளா­ரிநெட்  இசைக்கருவியை வாசித்­தவர்.

 

அதன் தாக்­கமும், பறையின் மீது உள்ள ஆர்­வமும் என்னை இன்று பறை இசைக்  கரு­வியின் கலை­ஞ­ராக பரி­ணாமம் பெற வைத்­துள்­ளது. 

 

அதன் பய­னாக ஒன்­பது ஆயிரம் ரூபா வட்­டிக்கு பணம் பெற்று ஆறு பறைகள் கொள்­முதல் செய்தேன்.

 

இப்­போது இரு­பத்­தைந்து பறைகள் என்­னிடம் உள்­ளன. விக்கி பாபறை (விக்கி பப்­பர பேண்ட்) என்ற வாத்­தியக் குழுவை ஏற்­ப­டுத்தியுள்ளேன். 

 

எனது இக் குழுவில் பத்­துப்பேர் அங்கம் வகிக்­கின்­றனர். நாட்டின் பல பகு­தி­க­ளுக்கு எனது குழு செல்­கின்­றது. எனது குழு கட்­டுப்­பாட்­டுக்குள் செயற்­ப­டு­கின்­றது.

 

குழு அங்­கத்­த­வர்கள் அனை­வரும் பறை இசைக் கரு­வியை கண்­ணி­யப்­ப­டுத்தி, கௌரவம் வழங்கி செயல்­பட வேண்டும்.

 

நிகழ்­வு­களின் போது மது அருந்­துதல், வெற்­றிலை சப்­புதல், புகை பிடித்தல் என பல கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. 

 

எங்கள் வாத்­தியக் குழுவின் சீருடை அணிந்தே நிகழ்­வு­களின் பறை முழங்க வேண்டும். பொறு­மை­யுடன் செயல்­பட்டு இக்­க­ரு­வியின் பெரு­மையை அழி­யாது பாது­காக்க வேண்டும் என்ற கட்­டுப்­பாட்­டுடன் ஒற்­று­மை­யாக அனை­வரும் செயற்­ப­டு­கிறோம்.

 

உவ­கைப்­பறை, அரிப்­பறை, சாக்­காட்­டுப்­பறை, ஐந்­தி­ணைப்­பறை, தலைப்­பறை வெறி­யாட்­டப்­பறை என இப்­பறை கருவி எத்­தனை அவ­தா­ரங்­களை எடுத்­தி­ருக்­கி­றது. 

     

 

இவ்­வா­றான பறையை அழி­யாது பாது­காக்க வேண்­டி­யது இன்­றைய இளை­ஞர்­களின் சமூக கட­மை­யாகும்” எனக் கூறினார்.

 

பறையை எங்கு வாங்­கு­வீர்கள் எனக் கேட்­ட­போது, “நான் வட்­டிக்கு பணம் பெற்று செய­லாற்­று­வதை எனது அப்பா தெரிந்து கொண்­டதும் அவரே பறையை தயா­ரிப்­பதில் ஈடு­பட்டு வெற்­றியும் பெற்றார்.

 

பெண் ஆட்டின் தோலால் பறை தயா­ரிக்க வேண்டும். இவ்­வா­றான பறையின் சத்தம் கிட்­டத்­தட்ட ஒரு மைல் தூரம் வரை செல்லும். அதற்கும் பல விதி முறைகள் உள்­ளன” என்றார். 

 

இவ்­வாறு தக­வல்­களை வழங்­கி­ய­வ­ரிடம் எவ்­வா­றான விழாக்­களில் கலந்து கொள்­வீர்கள் எனக் கேட்டோம்.

 

“அனைத்து விழாக்­க­ளிலும் கலந்து கொள்வோம். மரண வீட்டின் சடங்­கு­களில் மட்டும் எமது குழு பறையை வாசிக்­காது. ஆரம்­ப­காலம் முதல் இதைக் கடைப்­பி­டித்து வரு­கின்றோம்.

 

இது­வரை முப்­ப­துக்கும் மேற்­பட்ட பேய்­களை விரட்டும் நிகழ்­வு­களின் பறை வாசித்­துள்ளேன். பேய் விரட்டும் பூசா­ரிகள் எங்­களை அழைத்துச் செல்­வார்கள்.

 

பேய் பிடித்­த­வரை பூசாரி உடுக்கை அடித்து அவ­ருக்குள் இருக்கும் பேயை அடக்கி கைப்­பற்ற எத்­த­னிக்­கையில் நாங்­களும் பறையை அடித்து பேயை மடக்க வேண்டும்.

 

சுடு­காட்­டிலும் பூசா­ரி­யோடு இணைந்து இரவு 12 மணி­முதல் விடிய 4 மணி­வரை பறையை அடித்து பேயை விரட்டும் பூசையில் இணைந்து கொள்வோம்” என விக்­னேஸ்­வரன் கூறினார்.

 

“பேய் இருப்­பது என்­பது உண்­மையா?” எனக் கேட்­ட­போது “எனக்கு அது பற்­றிய தெளிவு இல்லை. பேய் இருக்கா, இல்­லையா என்­பதை நானும் தேடி வரு­கின்றேன்.

 

அண்­மையில் சுடு­காட்டில் பேய் பிடித்­த­வ­ருக்கு பூசாரி பரி­காரம் செய்து கொண்டு இருக்­கையில் பேயினால் பாதிக்­கப்­பட்­டவர் எனது பறையை கிழித்து ஆவே­சப்­பட்டார்.

 

பின்னர் பூசாரி கத்­தியை தூக்கிக் கொண்டு ஓடி­வர பேய் அடங்கி விட்­டது. தேசிக்­காயை என் தலை மீது வைத்து பூசாரி வெட்டி என்னை அவ்­வி­டத்­தி­லி­ருந்து ஒதுக்கி வைத்தார்.

 

இவ்­வா­றான நிலையில் எனக்குள் பேய் தேடல் வளர்ந்தே உள்­ளது. கொழும்பு, கொம்­பனி வீதியில்  கூட பேய் விரட்ட பறை முழங்­கி­யுள்ளேன்”  என பதி­ல­ளித்தார்.

 

“பறை வாசிப்­பதால் உங்­க­ளுக்கு எவ்­வா­றான தாக்கம் ஏற்­பட்­டுள்­ளது?”

 

“நிறைய தாக்கம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால், நான் சேதாரம் ஆக­வில்லை. தைரியம் வளர்ந்­தது.

 

ஆதியில்  மனிதன் கூட்­டமாய் கூடி வாழ்ந்தப் போது தன் இனத்­திற்கு வரும் ஆபத்தை உணர்த்­தவும், விலங்­கு­க­ளிடம் இருந்து தற்­காத்துக் கொள்­ளவும் எழுப்பிக் கொண்ட எச்­ச­ரிக்கை ஒலிதான் பறை ஒலி. இந்த இர­க­சியம் இன்று மக்­க­ளுக்குத் தெரி­யா­துள்­ளது.

 

பறை என்றால் சொல். அறிவி(த்தல்) என்­பதே பொரு­ளாகும். இதை இன்று சாதி கரு­வி­யாக்கி விட்­டார்கள்.  பெரும் வர­லாற்றைக் கொண்ட பறை, தமிழ் சமூ­கத்தின் சொத்து, தோலிசைக் கரு­வி­களின் ஆதி மூலமே பறை எனப்­படும் தப்­பு­ ஆகும்.

 

ஆரம்­பத்தில் சாதி வியா­தியால் என்னை பறை வாசிக்க உற­வுகள் தடை­வி­தித்­தனர். அதையும் உடைத்து பறையை தொட்டேன். பறை வாசிப்­ப­வர்­களை ஒதுக்க வேண்டும் என்­றனர்.

 

பின்னர் கேலி செய்­தார்கள். இவ்­வா­றான வலி­களை எல்லாம் சுமந்து கொண்டே பறையை வாசிக்­கின்றேன். இன்னும் சமூக மாற்றம் ஏற்­ப­ட­வில்லை.

 

நாங்­களும் வாத்­தியக் கலை­ஞர்­களே. சாதி கட்­டுப்­பா­டு­களை தகர்த்து சாதி வேறு­பாட்­டுக்கு அப்பால் பறையை தோலில் சுமக்­கின்றோம்” என்ற அவரின் முகத்தில் சோகம் அப்பிக் கொள்ள தொடர் பேச்­சுக்கு சிறு இடை­வேளை கொடுத்தோம்.

 

சிறிது நேரத்­தின்பின் மீண்டும் தொடர்ந்த அவர், “டப்பா அடி, சினிமா அடி, மருள் அடி, சாமிக்­கட்டு அடி, மார­டிப்பு அடி, வாழ்த்து அடி, கர­காட்ட அடி, காவடி ஆட்ட அடி என பல வகை­க­ளி­லான உணர்­வு­களை பறை கொப்­ப­ளிக்­கின்­றது” என்றார்.

 

உங்­களின் எதிர்­கால நட­வ­டிக்­கை­களை எந்த வகையில் அமைத்துக் கொள்ள உள்­ளீர்கள் எனக் கேட்­ட­போது, “வட­மா­கா­ணத்தில் யாழ் மண்ணில் எமது உற­வுகள் மத்­தியில் அங்கு இடம்­பெறும் திரு­வி­ழாவில் எனது குழு பறை முழங்க வேண்டும்.

 

இதற்கு நல்லூர் கந்­த­சாமி சுவா­மிகள் கருணை வழங்­குவார் என்ற நம்­பிக்கை எனக்கு நிறைய உண்டு. 

 

வவு­னி­யாவில் ஏற்­க­னவே பறை வாசித்தோம். நல்ல உற்­சா­க­மான வர­வேற்பு கிடைத்­தது. இவ்­வா­றான வர­வேற்பே எங்­க­ளுக்கு கிடைக்கும் விற்றமின் சத்தாகும்.

 

இந்நாட்டுக்கு வெளியேயும் எங்கள் குழு பறை முழங்க வேண்டும். தமிழினம் புலம் பெயர்ந்து எங்கெங்கும் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் எங்களின் பறை ஒலி அதிர வேண்டும்.

 

பறை முழங்க ஆசைப்படுவோர் என்னுடன் இணையுங்கள். பறை அடிகளை கற்றுத்தருகிறேன். அன்று எமது பாட்டனும், பூட்டனும் பறையாட்டம் கண்டவர்கள் எதற்கும் பறையை பயன்படுத்தினார்கள்.

 

பிறகு ஏன் பறையை ஒதுக்கி வைக்க வேண்டும். இளைஞர்களே பறை இசைக்கருவியை பாதுகாத்து உலகம் முழுவதும் அதிரடியாக, அட்டகாசமாக தொடர்ச்சியாக பறையை முழங்க என்னோடு இணையுங்கள்” எனக் கூறி மீண்டும் பறையை இசைக்க ஆரம்பித்தார்.  அட்டகாசமாக பறை முழங்க அவரிடமிருந்து விடை பெற்றோம். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.