Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
''மதுவுக்கு அடிமையாகி மீண்ட பின் மற்றவர்களுக்கு நல்வழி காட்டும் பெண்''
2015-11-08 11:23:45

(சிலாபம் திண்ணனூரான்)

மது அருந்­து­வது ஓர் இழி­வான செயல் என்று எப்­போது உணர்­கி­றார்­களோ, மதுவை அருந்­து­வ­தற்கு எப்­போது உண்­மை­யி­லேயே வெட்­கப்­ப­டு­கி­றார்­களோ, அப்­போது தான் மது வெறி­யர்கள் மதுப் பழக்­கத்தை விட்­டொ­ழிப்­பார்கள்.
மது பாவ­னை­யா­ளர்­களின் மனம் போகும் போக்­குக்கு எல்­லையே இல்லை. எந்­த­வொரு ஊசியின் இருப்­பக்­கமும் கூர்­மை­யாக இருக்­காது.

 

அந்த ஊசியைப் போன்­ற­வர்­களே மது­வுக்கு அடி­மை­யா­ன­வர்­களும். அவர்­க­ளுக்கு சொந்தப் புத்­தியும் இல்லை. அடுத்­த­வர்கள் புத்­தி­மதி சொன்­னாலும் கேட்­கவும் மாட்­டார்கள்” என்­கிறார் திரு­மதி பி.ஏ.வயலட்.

 

தான் மது­வுக்கு அடி­மை­யாகி வாழ்க்­கையைத் தொலைத்­தபின் இன்று பலரை நல்­வ­ழிக்கு இட்டுச் செல்லும் இயந்­தி­ர­மாக செயற்­ப­டு­கிறார் திரு­மதி பி.ஏ.வயலட் (63 வயது) எனும் புதுமைப் பெண்­ம­ணி­.

 

சிலாபம் ஜய­பிம பிர­தே­சத்தில் வசிக்கும் பி.ஏ.வயலட், ஒரு பெண்­ கு­ழந்­தையின் தாயாவார்.

 

தான் எவ்­வாறு மது­வுக்கு அடி­மை­யா­ன­தையும் அதி­லி­ருந்து வெற்­றி­க­ர­மாக மீண்­ட­தையும் எவ்­வித தயக்­கமும் இன்றி எமக்குத் தெரி­வித்தார். 

 

ஒவ்­வொ­ரு­வரின் சோகக்­க­தையும் அடுத்­த­வ­ருக்கு பெரி­யதோர் பாட­மாகும். இந்த மது பாவ­னையால் நான் பட்ட கஷ்­டங்­களை விட எனது கணவன், பிள்­ளைகள் எதிர்­கொண்ட அவலம் மிக அதிகம் என்­கிறார் வயலட். 

 

தனது கடந்த காலம் குறித்து அவர் கூறு­கையில், “நான் திரு­மணம் முடித்து மிக சந்­தோ­ச­மாக இல்­லற வாழ்க்­கையில் பய­ணித்துக் கொண்­டி­ருந்தேன்.

 

நல்ல கணவர். அவர் கட்­டட ஒப்­பந்­தக்­காரர். எமக்கு பணத்­திற்குப் பஞ்­ச­மில்லை. ஒரு பெண் குழந்­தைக்குத் தாயானேன்.

 

எனது திரு­ம­ணத்தின் பின் வரு­டா­வ­ருடம் குழு­வாக தனி பஸ் வண்­டியில் கதிர்­காமம், நயி­னா­தீவு, மடு, சிவ­னொ­ளி­பாத மலை என பல இடங்­க­ளுக்கும் யாத்­திரை செல்வோம்.

 

இவ்­வாறு யாத்­திரை சென்­று­வ­ரு­கையில் இரவில் சிறி­த­ளவு மது குடிக்கப் பழ­கினேன்.

 

முதலில் பயணம் செல்­லு­கையில் மாத்­தி­ரமே குடித்து வந்தேன். கூட்­ட­மாக அனை­வரும் குடிப்போம். உண்­மையில் அது ஒரு விநோ­த­மா­ன குடிக்கும் நிகழ்­வாகவே இருந்­தது. 

 

ஆனால், அப்­ப­ழக்கம் எனது முப்­பத்­தைந்­தா­வது வயதில் என்னை முழுக் குடி­கா­ரி­யாக மாற்­றி­யது.

 

கணவன் தொழி­லுக்குச் சென்று விடுவார். பிள்­ளையும் பாட­சாலை சென்­றபின் தனிமை என்னை வாட்­டி­யது.

 

இந்தத் தனிமை என்னை முழுக் குடி­கா­ரி­யாக மாற்றம் பெற­வைத்­து­விட்­டது. காலை­யி­லையே  குடிக்கப் பழ­கினேன். 

 

வெளியே சொன்னால் வெட்­கக்­கேடு. கணவர், மகள், உற­வி­னர்கள் என்னைத் திட்­டு­வார்கள். புத்தி சொல்­லு­வார்கள். வீட்டார் என்னை திட்டும் போது எனக்குள் இருந்த கள்­ளச்­சா­ராய வேகம் என்னைத் திசை­தி­ருப்பி அவர்கள் மீது என்னை ஏவி விடும். நான் போடும் சத்­தத்தில் அவர்கள் அடங்கிப் போய் விடு­வார்கள்.

 

இரவு சாப்­பாடு நேரத்தில் மிக வேக­மாகக் கத்தி அவர்­களை அடக்கி விடுவேன். 

 

அப்­போது மது வெறி என்னை உச்­சக்­கட்ட வெறியில் நிலை நிறுத்தி வேடிக்கைப் பார்க்கும்.

 

எனது அம்மா, அப்பா என்னை திட்டிப் பேசு­வார்கள். இய­லாத போது சத்­த­மிட்டு ஒப்­பாரி வைத்து அழு­வார்கள். என்­னதான் இவர்கள் ஒப்­பாரி வைத்து அழு­தாலும் காலையில் தனி­யாக வீட்டில் நான் சுதந்­தி­ர­மாக வடி­சா­ராயம் குடிப்பேன்.

 

அதுவும் நாறிப்­போன பழங்­களால் தயா­ரிக்கப்படும் கசிப்­பையே குடித்தேன்” என்றார்.

 

பணம் எங்கே, எப்­படி உங்­களின் மது பாவ­னைக்கு கிடைத்­தது?

 

நான் தையல் கலையில் இப்­பி­ர­தே­சத்தில் பிர­சித்தி பெற்­றவள். தையல் தொழில் மூலம் பணம் கிடைக்கும்.

 

எனது குடி வெறியின் தாக்­கத்தால் தையல் தொழிலும் பின்­ன­டைவை எட்­டி­யது. எனது கணவர் கட்­டட ஒப்­பந்­தக்­கார­ர்.

 

ஆகையால், வீட்டில் பணத்­திற்குத் தட்­டுப்­பா­டுகள் இல்லை. அவர் பெட்­ட­கத்தில் வைக்கும் பணத்தை எப்­போதும் கணக்குப் பார்ப்­ப­தில்லை.

 

எனது அன்­றாட குடிக்­காக, எவ­ருமே இல்­லாத போது அவ்­வப்­போது பணக்­கட்­டு­களில் தேவை­யான பணத்தை உருவிக் கொள்வேன் என்றார் வயலட் குறு­கு­றுக்கும் மனத்­தோடு.

 

குடி வெறி உச்­சத்தை தொட்டால் என்ன செய்­வீர்கள்?  எனக் கேட்டோம்...

 

உண்­மை­யி­லேயே வெறி உச்­சத்­துக்கு சென்­றதும் என்ன செய்­கிறேன் என எனக்கே தெரி­யாது.

 

வெற்­றி­லையை வாயில் திணித்து சப்பி சப்பி வீடு முழு­வ­தையும் அசிங்­கப்­ப­டுத்தி விடுவேன்.

 

நிதா­னத்தை இழந்து உள­றுவேன். இவ்­வாறு பெரும் குடி­கா­ரி­யாக சுமார் பதி­னெட்டு வரு­டங்கள் வாழ்ந்தேன்.

 

கேவலம் அவ்­வாழ்க்­கையை இன்று நினைக்­கையில் எனக்குள் கோபம் பொத்துக் கொண்டு வரு­கின்­றது எனத் தெரி­வித்தார்.

 

இந்தக் குடியால் எதையெல்லாம் இழந்­தீர்கள்?

 

ஆண்கள் குடித்தால் அவர்கள் எதை­யா­வது சொல்லித் தப்­பித்துக் கொள்­வார்கள். பெண்­களால் அவ்­வாறு செயற்­பட இய­லாது.

 

பெண்­களின் வாழ்க்கை முறை­யா­னது பெரும் வித்­தி­யா­சத்தைக் கொண்­டது. சமூக கட்­டுப்­பாட்­டுக்குள் அடங்கி வாழ­வேண்டும்.

 

மற்­ற­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக வாழ வேண்டும். உண்­மை­யோடு ஒத்து வாழ வேண்டும். முதலில் ஒரு சிறிய அளவு மது என்னை பல பிரச்­சி­னை­க­ளுக்கு இட்டுச் சென்­று­விட்­டது. 

 

தனி மனி­தரின் குடித்­தாக்கம் எனது குடும்­பத்­தையும் உற­வி­னர்­க­ளையும் பாதித்­தி­ருக்­கின்­றது.

 

அந்தத் தாக்­க­மா­னது பல தீமை­க­ளையே கொடுத்­தது. எவ்­வித நன்­மை­யையும் கொடுக்­க­வில்லை. மனை­வி­யாக, தாயாக இருந்த நான் ஒரு குடும்­பப்­பெண்­ணாக அடை­யாளம் காணும் வழி­மு­றை­க­ளி­லி­ருந்து தொலைந்து போனேன்.

 

குடி­வெ­றியால் மற்­ற­வர்­களை மிரட்டிப் பணிய வைத்தேன். எவ்­வ­ளவு கேவ­ல­மான செயல். பணம்,பாசம், கௌரவம் அனைத்­தையும் இழந்தேன். இனிய இள­மைக்­கா­லத்தை இழந்தேன்.

 

ச்சே ! ஒரு மிகவும் கேவ­ல­மான வாழ்க்­கையை வாழ்ந்து விட்டேன். இரவும், பகலும் தூக்­கத்தை இழந்தேன்.

 

இன்று இவை­களை நினைக்­கையில் வெளியே எவ­ருக்கும் தெரி­யாத வகையில் மன­திற்குள் அழு­கிறேன் என அவர் தெரி­விக்­கையில் அவரின் வார்த்­தைகள் அறுந்து அறுந்து விழுந்­தன. 

 

இவ்­வாறு குடிக்கு அடி­மை­யா­கிய நீங்கள் எவ்­வாறு சம வாழ்க்­கைக்கு மீண்டும் வந்­தீர்கள்? 

 

குடிக்கு அடி­மை­யாகி உச்­சத்தை எட்­டி­யதும் நான் பித்­துப்­பி­டித்­தது போலானேன். உளறல் சத்தம் அதி­க­ரித்­தது.

 

அக்கம் பக்­கத்­தா­ருக்கு பெரும் தொந்­த­ர­வுக்­கா­ரி­யாக மாற்றம் பெற்றேன். பின்னர் வடி­சா­ராயம் என்னைத் தேடி வரத் தொடங்­கி­யது.

 

முதலில் உடலில் தாக்கம் ஏற்­பட்­டது. உடல் உறுப்­பு­களில் முதலில் இதயம் பாதிக்­கப்­பட்­டது.

 

வைத்­தியம் செய்தோம். ஆனால், குடியை மட்டும் என்னால் கைவிட இய­ல­வில்லை. அப்­போது வெற்­றி­லையையும் அதிகம் பயன்­ப­டுத்தத் தொடங்­கினேன்.

 

சாரா­யத்­தையும் அள­வுக்­க­தி­க­மாகக் குடித்தேன். இக் குடிப்­ப­ழக்கம் ஒரு வழயில் மட்­டு­மல்­லாது, அது பல வழி­களில் எனது உயிரைக் குடித்து வரு­வதை என்னால் அறிய முடி­யாதிருந்­தது.

 

ஒரு சிறிய அளவு மது என்னைக் கட்­டுப்­பாட்­டோடு செயற்­ப­டவும் விட­வில்லை.

 

அதன் பின்னர் என்ன நடந்­தது?

 

நான் குடிக்கு முழு­மை­யாகி விட்ட நிலையில், சிலாபம் தெதுறு ஓயா கிரா­மத்து புனித ஜூட் தேவஸ்­தா­னத்தில் (2005 இல்) இடம்­பெற்ற அல்­கஹோலிக்ஸ் அனா­னிமஸ் என்ற பொது சேவை மையம் குடி நோயா­ளர்­களை மீளவும் இயல்பு வாழ்க்­கைக்கு எடுத்துச் செல்லும் கூட்­டத்­திற்கு தேவஸ்­தா­னத்தின் வண.அருட் தந்தை ஜெய­சூ­ரியா  என்னை தனது காரில் கொண்டு சென்று கூட்­டத்தில் அம­ர­வைத்தார்.

 

அப்­போது என்  சுய­நி­னை­வையும் இழந்து நடக்­கவும் இய­லாத நிலையில் இருந்தேன். 

 

கூட்டம் நிறை­வ­டைந்­ததும் இப்­போது சேவை மையத்தின் தற்­போ­தைய மக்கள் தகவல் தொடர்­பாளர் பிரிவுத் தலைவர் ஜெரமி டயஸ் என்னைப் பற்றி விசா­ரித்தார்.

 

எனது விப­ரத்தைத் தெரி­வித்தேன். கை, கால்கள், நடுங்­கின. என்னை உடி­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சேர்ப்­பித்து சிகிச்சை பெற வைத்தார். 

 

அவர் பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்கி அவரின் பல கூட்­டங்­க­ளுக்கு அழைத்துச் சென்றார்.

 

அங்கு நடக்கும் கருத்­து­ரை­களைக் கேட்டு மனம் திருந்தினேன். பின்னர் பல கத்­தோ­லிக்க தேவஸ்­தா­னத்தில் ‘அல்­கஹோலிக்ஸ் அனா­னிமஸ்’ சேவை மையம் நடத்தும் நிகழ்­வு­களில் இணைந்து பணி­யாற்றத் தொடங்­கினேன்.

 

நான் குடி­நோ­யி­லி­ருந்து விடு­பட்டு பத்து வரு­ட­மா­கி­விட்­டது. நானும் அவ் அமைப்பின் பிரிவை ஆரம்­பித்து சிலாபம் ஜய­பிம, தெதுறு ஓயா புனித ஜூட் தேவஸ்­தா­னத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­களில் காலை பத்து மணிக்கு வண. அருட் தந்தை திலான் மெரியன் தலை­மையில் குடி­நோயில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு விடு­தலை கிடைக்கும் வகையில் இன, மத வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் சேவை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

 

இது­வரை எவ்­வாறு உங்­களின் சேவை வெற்றி பெற்­றுள்­ளது?

 

இது­வரை முப்­பது பேர் வரையில் மருந்து இல்­லாது குடி­நோ­யி­லி­ருந்து வெளி­வரச் செய்­துள்ளோம்.

 

இதற்கு மருந்து தேவை­யில்லை. அறி­வுரை மூலமே அவர்­களை குணப்­ப­டுத்­து­கிறோம். அவர்­களின் மனதை மாற்ற பெரும் முயற்சி செய்வோம். குடியை அவர்கள் வெறுக்கும் வரை அறி­வு­ரையை வழங்­குவோம்.

 


 “இப்போது தங்களின் நிலைமை எப்படி?” எனக் கேட்டோம்...

 

“மிகவும் சந்தோஷமான வாழ்க்கையில் நுழைந்துள்ளேன். குடியை நிறுத்திய பின்னர் பெரும் வெற்றியை நோக்கி குடும்பமே செல்கிறது. நான்கு தடவை இந்தியா முழுவதும் குடும்பமாக சுற்றுலா சென்றோம்.

 

இன்று சகல வசதிகளுடன் வாழ்கின்றோம். இதனை விட என்ன தேவை உள்ளது. குடிநோயாளிகளை குணப்படுத்தலே எனது கடைமையாக இன்று உள்ளது” என்றார் வயலட் மெல்லிய சிரிப்போடு...

 

“இறுதியாக சமூகத்திற்கு என்ன செய்தியை சொல்ல விரும்புகிறீர்கள்?” எனவும் கேட்டோம்...

 

“குடியால் மக்கள் பாதிப்படைகிறார்கள். குடிப்பவர்கள் மீது உங்களுக்கு அன்பிருந்தால் அவரின் அல்லது அவளின் குடிநடத்தையை நிறுத்த உதவுங்கள்.

 

குடியால் நான் பட்ட அவஸ்தை பெரும் சோகக் கதையாகும். விழிப்புடன் செயற்படுங்கள்.

 

குடிப்பழகத்துக்கு எதிராகச் செயற்படுங்கள். அதைத் தடுக்க முனையுங்கள். குடி குடியைக் கெடுக்கும். கேவலமானது தான் குடிப்பழக்கம். 

 

வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திச்செல்ல நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது மிக அவசியம் என உணருங்கள்.

 

இளம் சமூகமே! குடிப்பழக்கம் உங்களின் உடலின் மூளை, ஈரல், இரத்தம்,சிறுநீரகம் போன்றவற்றில் தீங்கை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

மது இல்லா சமூகத்தை ஏற்படுத்த அனைவரும் எங்களுடன் கைகோருங்கள்” என்றார் வயலட்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.