Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நாங்களும் இவ்வுலகில் வாழப் பிறந்தவர்களே! எங்களை சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்: ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய சசினி கூறுகிறார்
2015-11-01 12:01:56

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

நாங்­களும் இவ்­வு­லகில் வாழப் பிறந்­த­வர்கள்.

 

ஏனை­ய­வர்கள் அனு­ப­விக்கும் அனைத்து உரி­மை­களும் எமக்கு உரி­யவை. எங்­க­ளையும்  இச் சமூ­கத்தின் அங்­கத்­த­வ­ராக நோக்குங்கள்.

 

கோண­லான பார்­வையை எங்கள் மீது செலுத்­தா­தீர்கள்.  

 

நாங்­களும்  இறை­வனின்  படைப்பில் பிறந்­த­வர்­களே”  என்­கிறார் செல்வி சசினி. இவரின் வர­லாறு சோகம் நிறைந்­தது. 

 

ஆணாகப் பிறந்து பெண்­ணாக மாறி­யவர் சசினி. கொழும்பு நாரஹேன்­பிட்­டி­யி­லுள்ள “ஹார்ட் டூ  ஹார்ட் (Heart 2  Heart) அமைப்பின் தலை­மை­ய­கத்தில் அண்­மையில் இவரை சந்­திக்க முடிந்­தது.

 

”நான் கொழும்பு  முகத்­து­வா­ரத்தைச் சேர்ந்­தவள். நான் தமிழ் குடும்­பத்தில் பிறந்தேன். அப்பா கால­மா­கி­விட்டார். என்­னுடன் பிறந்­த­வர்கள்  மூவர். நான் 

 

முகத்­து­வா­ரத்தைச் சேர்ந்த பிர­பல தமிழ் பாட­சா­லையில் கல்வி கற்றேன்.

 

எனது பத்து வயது வரை நான் ஏனைய சிறு­வர்­களைப் போலவே வாழ்ந்தேன். பத்து வயதின் பின்னர் எனது உடலில் வித்­தி­யாசம் தோன்­றி­யது.  

 

பெண்­களைப் போல பாட­சாலை மாண­வி­க­ளுடன்  பழகத் தொடங்­கினேன்.

 

அவர்­க­ளுடன் நடனம் ஆடு­வது, விளை­யா­டு­வது பாடுவது என மாற்றம் ஏற்­படத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து, தொல்லைகள் உச்சத்தை தொட்­டன. 

 

பெண்­களைப்   போன்று ஆடை­ய­ணிந்து கொள்ள விரும்­பினேன். பலரும் என்னை பல­வாறு விமர்­சனம் செய்­தனர்.

 

பலரின் கேலி­க­ளுக்கு உள்­ளானேன்.  இதனால் எனக்குள் எழும்பும் கோபத்தை அவர்கள் மீது வசை  சொற்­களால் திட்­டுவேன். அவர்கள் அடங்கிப் போய்­வி­டுவர். 

 

எனது பதி­னைந்து வயதில் வீட்டை விட்டு வெளி­யேற்­றப்­பட்டேன். நடை­பா­தையில் இரவு நேரங்­களில் தங்­குவேன்.

 

இரவில் பலரின் வீடு­க­ளுக்கு  முன்னால்  வீதி­களில் பாது­காப்­பாக நிறுத்தி வைக்­கப்­பட்டு இருக்கும்   முச்­சக்­க­ர­வண்­டி­களில் உறங்குவேன். 

 

விடிய ஐந்து மணி­யா­கி­யதும் எழுந்து நண்­பர்­களின் வீடு­க­ளுக்குச் சென்­று­வி­டுவேன்”  கலங்­கிய கண்­க­ளுடன் சசினி கூறினார்.

 

“இவ்­வாறு காலத்தை கழித்துக் கொண்டு இருக்­கையில், மட்­டக்­கு­ளியில் தேயிலை பொதி செய்யும் நிறு­வ­னத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.  

 

தந்தை இறந்­தபின்,  சொத்­து­களில் எனக்­கு­ரிய பங்கை பெறு­வ­தற்கு பெரும் சிர­மப்­பட்டேன். 

 

பின்னர் எனது குடும்­பத்­தாரால் வாட­கைக்கு விடப்­பட்­டி­ருந்த வீட்டை சட்­ட­ரீ­தி­யாக பெற்று இன்று அவ்­வீட்டில்  வாழ்­கின்றேன். எனக்கு பெற்றோர் சசி­குமார் என பெய­ரிட்­டனர். பின்னர் எனது பெயரை  சசினி என மாற்றிக் கொண்டேன். 

 

இன்றும் எனது  அம்மா, அக்கா, அண்ணன் அனை­வரும் என்னை ஆணாகத் தான் நோக்­கு­கி­றார்கள்.  அப்­போது எனக்கு கோபம் பொத்துக் கொண்­டு­வரும்” என்­கிறாள் சசினி. 

 

தொடர்ந்தும்  பெண்­ணா­கவா வாழ விரும்­பு­கின்­றீர்கள்?

 

“நான் பெண்­தானே. மூக்­குத்தி அணிந்து, காது முழு­வதும் தோடுகளை அணிந்து  கவர்ச்­சி­யான உட­லோடு தானே இருக்­கின்றேன்” என நளி­னத்­தோடு பதி­ல­ளித்தார் சசினி.

 

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், “நான் முழுப்­பெண்­ணாக  அடை­யாளம் காட்ட  ‘ஹோர்மோன்’ சிகிச்­சையை மேற்கொண்டு  மார்­ப­கங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டேன்.

 

இச்­சி­கிச்­சையை இந்­நாட்டில்  மேற்­கொண்டேன். இலங்­கையில் எங்கள் மத்­தியில் அழ­கு­ராணிப் போட்டி நடத்­தினால்  நான் தான் வெற்­றி­பெ­றுவேன்.  

 

 

இன்னும் உடலை கவர்ச்­சி­யாக  மாற்ற எதிர்­கா­லத்தில்  சிசிச்­சை­களை  வெளி­நாட்டில் மேற்­கொள்வேன்” என்றார்.

 

இப்­போது  என்ன தொழில் புரி­கி­றீர்­கள்?

 

அரச நிறு­வனம் ஒன்­றுடன் இணைந்து எச்.ஐ.வி.எயிட்ஸ்  நோய் பற்­றிய விழிப்­பு­ணர்வு  நிகழ்­வு­களை மேற்­கொண்டு வரு­கிறேன்.  

 

மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா, அனு­ரா­த­புரம், கொழும்பு எனும் மாவட்­டங்கள் தோறும்  இவ்­வி­ழிப்­பு­ணர்வு  நிகழ்­வு­களில் பங்குபற்றி வரு­கின்றேன்.

 

எச்.ஐ.வி.தொற்று, எயிட்ஸ் நோய் பற்­றிய  முழு­மை­யான  அறிவு மக்கள் மத்­தியில் தேவை. இதை முன்­னெ­டுத்து வரு­கின்றேன்.  

 

அதே­வேளை, இவ்­வா­றான மக்­க­ளுக்­கான  வேலைத்­திட்­டத்தில் நாங்கள் இணைந்து செயற்­ப­டு­வதால், மக்­களின் மத்­தியில் எங்களைப் பற்றி பரப்­பி­வி­டப்­படும் தவ­றான விமர்­ச­னங்கள், பொய்­யான தக­வல்கள்  பரப்­பப்­ப­டு­கின்­றன.

 

மக்­க­ளுக்கு நீங்கள்  என்ன செய்­தியை சொல்ல விரும்­பு­கி­றீர்கள்?

 

“என்­னைப்­போன்­ற­வர்கள் இந்­நாட்டில் மட்­டு­மல்ல பல நாடு­களில் வாழ்­கின்­றனர். நாங்கள் அனை­வரும் பெண்­ணா­கவே வாழ விரும்­பு­கின்றோம்.

 

தயவு செய்து எங்­களை ஓரினச் சேர்க்­கை­யா­ளர்கள் என மட்­ட­மாக விமர்­சனம்  செய்­யா­தீர்கள். 

 

என் முகம், கழுத்தைப் பாருங்கள், அவை பெண் தன்­மை­யைத்­தானே கொண்­டுள்­ளன.

 

நான் பெண்­மை­யாக  மாறத் தொடங்­கி­யதும் என் முடியை  பல­வந்­த­மாக வெட்டி அவர்­களின் கோப ஆக்­ரோ­ஷத்தை என்­மீது செலுத்­தினர். 

 

“அனைத்து துன்­பங்­க­ளையும் அனு­ப­வித்தேன். தொழில் இல்லாமல் பணமும் இல்­லாமல் பட்­டினி கிடந்­துள்ளேன்” என விழி­களில் திரண்ட கண்­ணீ­ருடன் தொடர்ந்த சசினி, “சூரி­யனும், சந்­தி­ரனும் எங்­களை வெறுப்­ப­தில்லை.

 

அவை எம் மீது சந்­தேக பார்­வையைச் செலுத்­து­வ­தில்லை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பெரும் பூதங்­களும் எங்­களை ஏற்­றுக்­கொண்டே உள்­ளன.

 

ஆனால், நாங்கள் பஸ்ஸில் பய­ணிக்க இய­லா­துள்­ளது.  நடந்து செல்ல முடி­யாது. எங்­களை வேடிக்கைப் பொரு­ளாக அல்­லது வித்­தைக்­கா­ர­னாக  பலரும் பார்க்­கின்­றனர். 

 

மற்­ற­வர்­க­ளுக்கு எங்­களால் ஏதும் தொல்லை ஏற்­ப­டு­கின்­றதா? ஏன் எங்­களை அவ­மா­னப்­ப­டுத்­து­கின்­றனர்.  

 

இவ்­வு­ல­கத்தில் எங்­க­ளையும் மனி­தர்­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளுங்கள். நாங்கள் பாவப் பிறப்­பல்ல. உங்கள் சகோ­த­ரி­க­ளாக ஏற்­றுக்­கொள்ள முன் வாருங்கள். எங்­களை காயப்­ப­டுத்­தா­தீர்கள்.

 

சமூ­கத்தின் பார்­வையில் காயப்­பட்டு காயப்­பட்டு எங்கள் உள்ளமும் இத­யமும்  நொறுங்­கிப்­போ­யுள்­ளன  என வேத­னை­யுடன் கூறினார்.

 

'ஹார்ட் டூ  ஹார்ட்' அமைப்பு மூல­மாக உங்­களின் எவ்­வி­த­மான உரி­மைக்­காக போரா­டு­கி­றீர்கள்?

 

“உண்­மை­யி­லேயே  எங்­க­ளுக்­கான பெண்மை என்ற அடை­யாள உரிமை கிடைக்கவில்லை.

 

 

பாகிஸ்தானில் எங்களைப் போன்றவர்களுக்கு அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெண் என குறிப்பிடப்படுகிறது.  

 

இலங்கையிலும் எங்களுக்கு  தேசிய அடையாள அட்டையில்   பெண் என்பதை அடையாளப்படுத்தி  அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். இது ஒரு சலுகையான கோரிக்கை அல்ல, எங்களின் உரிமையுமாகும்.

 

இவ்விடயத்தை மனித உரிமைகள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம்.

 

எங்களை பெண் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளோம். எங்களுக்கான உரிமைகளையே கேட்கின்றோம்” என்றார் பிரகாசமான முகத்துடன்...

 

(படங்கள் கே.பி.பி. புஷ்பராஜா)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.