Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிலாபம் அம்­ப­கந்­த­வி­லயில் 60 அடி உயர மனி­தரின் புதை­குழி
2015-10-25 10:39:42

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

சிலாபம் பிர­தே­சத்­தி­லள்ள பழை­மை­யான புதை­கு­ழி­யொன்றில் 60 அடி உய­ர­மான மனிதர் ஒருவர் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. 

 

வெகு காலத்­துக்­கு முன் இந்­நாட்­டுக்கு அறு­பது அடி உய­ரத்தைக் கொண்­ட­வர்கள் வருகைத் தந்­துள்­ளனர் எனவும் அவர்­களில் ஒரு­வரின் புதை­கு­ழியே இது எனவும் கூறப்­ப­டு­கி­றது.

 

சிலாபம் அம்­ப­கந்­த­வில, பனு­கஸ்­தென்ன என்ற கட­லோரப் பகு­தியில் மேற்­படி மண்­ணறை இன்றும் உள்­ளது.

 

இவ்­வா­றான மண்­ணறை உள்­ளமை சிலா­பத்தைச் சேர்ந்த பல­ருக்கு இன்­று­வரை தெரி­யா­துள்­ளது. இம் மண்­ணறை இஸ்­லா­மிய ஆன்­மீ­க­வா­தி­யி­ன­தாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

சிலா­பத்­தி­லி­ருந்து 5 கி. மீ. தூரத்தில் அம்­ப­கந்­த­வி­லயின் கடற்­க­ரையில் கட­லி­லி­ருந்து 100 மீற்றர் தொலைவில் இம் மயானம் உள்­ளது. 

 

இம் மயானம் பல்­வேறு விசேட தன்­மை­களைக் கொண்­ட­தாகும். அறு­பது அடி­களை உய­ர­மாகக் கொண்ட மனி­தன் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளதை அடை­யாளம் காண்­ப­தற்­காக, மணல் அறு­பது அடி நீளத்­திற்கு குவிக்­கப்­பட்டு மேடாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

இந்த மணல் மேட்டை கலைத்து விட்டால் இரவில் தானாக மணல் குவியல் ஏற்­ப­டு­வ­தா­கவும் இப்­பி­ர­தேச மீனவ சமூ­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர். 

 

இவர்­களில் பெரும்­ப­லானோர் கிறிஸ்­த­வர்­க­ளாக இருந்­தாலும் இம் மீனவ சமூ­கத்­தினர் இம் மண்­ணறை மீது பெரும் பற்று கொண்­டுள்­ளனர்.

 

இம் மண்­ண­றையின் நம்­ப­கத்­தன்­மையை வெளியே கொண்டு வரு­வ­தற்­காக கட்­டு­ரை­யாளர் 1974 ஆம் ஆண்டு முதல் பல்­வேறு கோணங்­களில் ஆய்வை மேற்­கொண்­டதன் பய­னா­கவே இன்று சிறி­த­ள­வா­வது மெட்ரோ நியூஸ் மூல­மாக இவ்­வா­றான தக­வல்கள்  வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­கின்­றன. 

 

ஆதி­காலம் தொட்டே பல்­வேறு வகை­யா­ன­வர்கள் சிலா­பத்தில் கடல் முத்­துக்­களை கொள்­முதல் செய்­வ­தற்­காக வருகை தந்­துள்­ளனர்.

 

சிலா­பத்தின் கடலின் முத்­துகள் அக்­கா­லத்தில் மிகப் பிர­சித்­த­மா­னவை. அல்லி மகா­ரா­ணி­கூட சிலா­பத்தில் முத்துக் குளித்­தலை மேற்­கொண்­ட­தாக பல நூல்­களில் தக­வல்கள் பதி­வா­கி­யுள்­ளன.

 

சிலா­பத்தின் முந்­தைய பெயர் சலாபம் ஆகும். இது நாள­டைவில் சிலா­ப­மாகி­விட்­டது. இன்றும் சிங்­கள சகோ­தர இனத்­த­வர்கள் பலர் சிலா­பத்தை முத்­துப்­புர என்றே கூறுவர். சிலாபம் என்­பதன் கருத்து முத்­துக்­கு­ளித்தல் என்­ப­தாகும்.

 

 

தற்­போது, இம் மயா­னத்­திற்கு அருகில் வசிக்கும் கே.ஆர். மரியா பர்­ணாந்து ( 79) என்ற வயோ­திபப் பெண்­ம­ணி­யிடம் இது குறித்து கேட்டோம்.

 

“நாங்கள் இவ்­வூரின் பூர்­வீகக் குடிகள். நாங்கள் மீன­வர்கள். நான் கரு­வாட்டு வியா­பாரம் செய்­கின்றேன். இம் மண்­ணறை பற்றி பலரும் பல­வித வகையில் முரண் முர­ணான கருத்­துக்­களை தெரி­விக்­கின்­றனர்.

 

இம் மண்­ண­றையை ஒட்­டியே எனது காணியும் உள்­ளது. இப் பிர­தேசம் புனி­த­மான பிர­தேசம். எனது வீட்டு முக­வரி கூட முஸ்­லிம்­கந்த அசல (முஸ்­லிம்­ மலை அருகே) என்றே பதி­யப்­ப­டு­கி­றது. 

 

இது சிலாபம் வஹாப் முத­லாளி அவர்­க­ளுக்கு சொந்­த­மான காணி. எனது தந்­தையும் இதை சொல்வார்.

 

நான் சிறு­மி­யாக இருந்த காலத்தில் வஹாப் முத­லாளி இங்கு அடிக்­கடி வந்து சமய வழி­பாட்டில் ஈடு­ப­டுவார். அவர் கால­மா­கி­விட்டார்.

 

பெரிய புயல் காற்று வீசி­னாலும் மழை பெய்­தாலும் மண்­ணறை மேல் காணப்­படும் மணல் குவி­ய­லா­னது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் கலைந்­ததே இல்லை. இவ்­வி­டத்தில் இஸ்­லா­மி­யர்கள், மார்ச் மாதத்தில் வருடா வருடம் பெரும் அன்­ன­தானம் வழங்­கு­வார்கள். 

 

இங்கு கட்­ட­டங்கள் கட்ட வேண்டாம் என ஒரு­வரின் கனவில் பல வரு­டங்­க­ளுக்கு முன் அறியக் கிடைத்­ததால் இங்கு இன்­று­வரை எவ்­வித கட்­ட­டமோ, அலங்­க­ரிப்போ இல்லை. 

 

சுனாமி அனர்த்­தத்­தின்­போது கூட இக் கிரா­மத்தில் வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்­தன.

 

கடல் அலை எழும்பி வந்­தது. கடற்­கரை மணல் பல இடங்­க­ளுக்கும் காற்றில் பறந்­தது. ஆனால், இம் மண்­ண­றைக்கு எவ்­வித சேதமும் ஏற்­ப­ட­வில்லை.

 

கடலில் மீன் கிடைக்­கா­விட்டால் இம் மண்­ணறை அருகில் வந்து உட்­கார்ந்து மன்­றா­டுவோம். மறுநாள் எங்­களின் கோரிக்கை நிறை­வேறும்.

 

குழந்தைப் பாக்­கியம் கிடைக்­காத இஸ்­லா­மிய சகோ­த­ரிகள் இரவில் தங்கி முழு இரவும் வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வார்கள்.

 

1966 ஆம் ஆண்­டுக்குப் பின்­னரே இஸ்­லா­மி­யர்கள் இங்கு இரவில் சமய வழி­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். 

 

எங்கள் சமூ­கத்­தி­ன­ருக்கும் இம் மண்­ண­றையின் மீது பெரும் நம்­பிக்கை உள்­ளது என தக­வல்­களை வழங்­கினார்” அப்பெண். இவரை அடுத்து இம் மயா­னத்­திற்கு அருகே உள்ள வீட்­டிற்குச் சென்று விபரம் கேட்டோம்.

 

ஆர்.கே. ஓவன் நிஸ்­ஸங்க என்ற இம் மீனவ இளைஞர் மேலும் சில தக­வல்­களை வழங்­கினார்.

 

“இது ஒரு பக்தி மய­மான பூமி. இந்த இடத்தை மயான பூமி (சு - சான பூமி) என்றே அழைப்போம்.

 

ஆனால் இங்கு ஒருவர் மட்­டுமே அடக்கம் செய்­யப்­பட்­டுள்ளார். அவரின் மண்­ண­றையை ஹெட்­ட­ரியான் என்றே சொல்­கிறோம்.

 

இவ்­வி­டத்தை ஹெட்­ட­ரியான் கந்த என்றே பலரும் அழைக்­கின்­றனர்.

 

இந்­நிலப்பரப்பு இரண்டு ஏக்­கரைக் கொண்­ட­தாகும். இம் மண்­ண­றையில் இஸ்­லா­மியர் ஒரு­வரே அடக்கம் செய்­யப்­பட்­டுள்ளார்.

 

கிரா­மத்­த­வர்­களோ, வெளி­யாரோ மண்­ண­றைக்கு எவ்­வித தீங்­கையும் செய்ய மாட்­டார்கள்” என்றார் இவ் இளைஞர்.

 

இவ்­வா­றான நிலையில் இப்­பி­ர­தேச மக்கள் வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலும் சிலாபம் வஹாப் முத­லா­ளியின் மகனும் சட்­டத்­த­ர­ணியும் சிலாபம் நகர சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான டபிள்யூ. சாதிக்குல் அமீ­னுடன் தொடர்­பு­கொண்டு கேட்டோம்.

 

அவர் தெரி­வித்த தகவல் அடிப்­ப­டையில் கொச்­சிக்­கடை பல­கத்­து­றைக்கு சென்றோம்.

 

அங்கு 1998 ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக வருடா வருடம் மார்ச் மாதத்தில் அம்­ப­கந்­த­வில மண்­ண­றையில் இடம்­பெற்­று­வரும் கந்­தூ­ரிக்கு பொறுப்­பாக இருந்து வழி நடத்தும் மௌலவி அஸ்­ஸெ­யிது பனூல்தீன் மௌலானா காதி­ரியை சந்­தித்தோம். 

 

அவர் கொடுத்த விப­ரங்கள் மிகப் பெறு­ம­தி­யா­னவை.
“மூஸா நபி அவர்­களின் காலத்தில் அறு­பது அடி உய­ரத்தைக் கொண்ட மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர்.

 

இது வர­லா­றாகும். இதை நூல்­களில் காணலாம். தமி­ழ­கத்தில் தஞ்­சாவூர் மாவட்­டத்தின் முத்­துப்­பேட்டை சேகு தாவூத் ஒலி அறு­பது அடி­களைக் கொண்­டவர்.

 

இவர் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை வருடா வருடம் இலட்­சக்­க­ணக்­கான வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணிகள் பார்­வை­யி­டு­கின்­றனர்.

 

அறு­பது அடி உய­ரத்தைக் கொண்ட பலர் மார்க்கப் பணிக்­காக அரபு நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­துள்­ளனர்.

 

கற்­பிட்டி வாசல் துறை கட­லோ­ரத்­திலும், பாணந்­துறை பள்­ளி­முள்­ள­யிலும், மாத்­த­றையில் கோட்­ட­கொ­ட­விலும், திரு­கோ­ண­ம­லையில் கண்­ணி­யா­விலும் இவர்கள் மர­ண­மா­னதன் பின்னர் அடக்கம் செய்­யப்­பட்­டனர்.

 

அவ்­வா­றான ஒரு தீர்க்­க­த­ரி­சியின் அடக்­கஸ்­த­லமே சிலாபம் அம்­ப­கந்­த­வி­லயில் காணப்­ப­டு­கி­றது.

 

இவர்கள் அக்­கால சமூ­கத்தின் மத்­தியில் பெரும் பல சாலிகள். இவர்கள் பெரும் மலை­களை குடை­யக்­கூ­டிய சக்­தியைக் கொண்­ட­வர்கள்.

 

பெரும் கற்­களை தங்­களின் நகத்தின் மூல­மாக சுரண்­டு­வார்கள். கற்­பா­றை­களை நகர்த்தி தூக்கும் வல்­ல­மையைக் கொண்­ட­வர்கள். 

 

இவர்கள் அக்­கா­லத்தில் மரக்­க­லத்தில் இலங்­கைக்கு வந்­த­வர்கள். இடையில் மர­ணத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் கடற்­கரைப் பிர­தே­சத்தில் அடக்கம் செய்­யப்­பட்­டனர். பின்னர் இப்­பி­ர­தே­சத்தில் பல அற்­பு­தங்­களைக் காட்­டி­யுள்­ளனர். 

 

இவர்கள் கட­லோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கடற்­தொ­ழிலில் குறைவை எட்­டு­கையில் இவர்­க­ளிடம் வருகை தந்து முறை­யி­டும்­போது கடற்­தொ­ழிலில் வளம் பெரு­கு­கி­றது.

 

அக்­கா­லத்தில் இஸ்­லா­மிய வர­லாற்­றுப்­படி அறு­பது அடி மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர்.

 

அம்­ப­கந்­த­வில அறு­ப­தடி சியா­ரத்தை இப்னு பதூத்­தாவும் வழி­பாடு செய்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆதி சமூகக் கூட்­டத்­தி­ன­ருக்கு பள்­ளி­வாசல் கட்­ட­டங்கள் கட்ட முடி­யாது.

 

1965 இல் அம்­ப­கந்­த­வில சியா­ரத்தில் கட்­டடம் எழுப்ப சிலர் கட்­டடப் பொருட்­களைக் கொண்டு வந்­தனர்.

 

இப்­பூ­மியில் இறக்கி வைத்த சில மணித்­தி­யா­லங்­களில் திடீ­ரென உதித்த கடல் அலைக்குள் சிக்கி அப் பொருட்கள் அனைத்தும் கட­லுக்குள் போய்­விட்­டன.

 

இச் சியாரத்தின் தலைப்பகுதியில் பிறை நட்சத்திரமும், கால் பகுதியில் முக்கோணமும் அடையாளமாகக் காணப்படுகின்றமை அடக்கப்பட்டதற்கான அடையாளங்களாகும். என்றார்.

 (படங்கள் கே.பி.பி. புஷ்பராஜா)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.