Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிரட்டைகள் மூலம் அழகிய பொருட்களை உருவாக்கும் கலைஞர் மார்க் அன்டனி
2015-10-18 10:52:00

“சிலாபம் திண்­ண­னூரான்”

 

“உமது பெயரை மற்­ற­வர்கள் கூறும் வகையில் வேலை செய்” தனியார் கம்­ப­னி­யொன்றில் நான் தொழில்­பு­ரி­கையில் என் முகத்தை முறைத்துப் பார்த்து அக்­கம்ப­னியின் உயர் அதி­காரி எனக்கு கூறிய வார்த்தை தான் இது.

 

 

அப்­போது எனக்கு வயது வெறும் பதி­னா­றுதான். உலகம் தெரி­யாத பருவம் அது. உயர் அதி­கா­ரியின் மிரட்டல் வார்த்­தைகள் என் வயிற்றைக் கலக்­கின. அன்­றைய தினம் இரவின் உறக்­கத்தை நான் தொலைத்தேன். 

 

அதன்பின், என்­றா­வது ஒரு நாள் எனது பெயர் அந்­நி­யர்­களால் பேசப்­பட வேண்டும் என்ற வெறி கன­வோடு வாழப் பழ­கினேன்” என்­கிறார் கட்டு நாயக்க பிர­தே­சத்தில் மட்­டு­மல்­லாமல் ஏனைய பகு­தி­க­ளிலும் பெயர் பெற்று பெரும் செல்­வாக்­கோடு வாழும் 56 வயதைக் கொண்ட மார்க் அன்­டனி.

 

இவர் பல்­க­லை­களின் சிறப்பைக் கொண்­டவர். சூரிய ஒளியைக் கொண்டு பல­கை­களில் நுட்­ப­மாக உரு­வப்­படங்­களை நிர்­மா­ணிப்­பவர். 

 

அதை­விட தேங்காய் சிரட்­டை­களைக் கொண்டு மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் வகை, வகை­யான பொருட்­களை நிர்­மா­ணிப்­பவர்.

 

இந்த அழ­கிய பொருட்­களின் தயா­ரிப்­பு­க­ளுக்கு வித்­திட்­டது இலைக்­கஞ்சி வியா­பாரம் என்றால் ஆச்­ச­ரி­ய­மாக இருக்கும்.

 

“எனது 28 வய­து­வ­ரையும் தனியார் கம்பனி­களில் தொழில் புரிந்தேன். எனது பதி­னாறு வயதில் மன­திற்குள் பதிந்த எனது மேல­தி­கா­ரியின் வார்த்­தை­களை மறக்­க­வில்லை. அவரின் வார்த்­தை­களின் வேகம் அதி­ர­டி­யாக எனது 28 வயதில் என்னைப் புரட்டிப் போட்­டது.

 

இது முடி­யாது என எதை­யுமே கைவிட்டு விடக்­கூ­டாது. முயற்சி செய்து பார்ப்போம் என்ற யோச­னையில் இலைக்­கஞ்சி வியா­பா­ரத்தை ஆரம்­பித்தேன்.

 

 

இவ்­யோ­சனை எனது மன­தி­லி­ருந்து உதிர்ந்­தது. 1987இல் இலைக்­கஞ்சி வியா­பா­ரத்தை சிறி­தாக ஆரம்­பித்தேன். சிறிது, சிறி­தாக வியா­பாரம் வளர்ந்­தது. உட­லுக்கு பலனைக் கொடுக்கும் ஆயுர்வேத இலை­களை கொள்­முதல் செய்து கஞ்­சி­யாக உற்­பத்தி செய்தேன்.

 

இந்­நாட்டின் கட்டுநாயக்க பகு­தியில் தான் சைக்கிள் ஓட்ட வீரர்கள் வாழ்­கின்­றனர். வீட்டின் பின் பகு­தியில் இவ்வியா­பா­ரத்தை நான் ஆரம்­பிக்க இந்த ­சைக்கிள் ஓட்ட வீரர்கள் காலையில் தங்­களின் பயிற்­சியின் பின்னர் இங்கு இலைக் கஞ்சி அருந்த வரு­வார்கள்.

 

சர்க்­கரை நோயா­ளிகள், இரு­தயம், இரத்­தோட்ட நோயா­ளிகள் என பலரும் இன்று வருகை தரு­கின்­றனர்.

 

வியா­பாரம் காலை 6.30க்கு ஆரம்­ப­மாகும். மு.பகல் பத்து மணிக்கு முடி­வ­டையும். எமது விமா­னப்­ப­டையைச் சேர்ந்த பிர­பல சைக்கிள் ஓட்ட வீரர்கள் பலர் தினமும்  இங்கு வரு­வார்கள். இலைக் கஞ்­சியை அருந்­து­வார்கள்.

 

இந்­நி­லையில் தான் 1987இல் கஞ்சி வியா­பா­ரத்தை ஆரம்­பித்து 1988இல் தேங்காய் சிரட்­டை­களை கொண்டு பல­வி­த­மான பொருட்­களைத் தயா­ரிக்கும் கைத்தொழிலை ஆரம்­பித்தேன்.

 

இலைக் கஞ்சி தயா­ரிப்­பிற்­காக 1987களில் குறைந்­தது ஐந்து தேங்­காய்­களை பயன்­ப­டுத்­துவேன்.

 

முன்னர், அச்­சி­ரட்­டை­களை எறிந்­து­வி­டுவோம். ஏன் இதை எறிய வேண்டும். இதன் மூலம் பயன்­பெற இய­லுமா என யோசித்தேன்.

 

 

அதன் பய­னாக உதித்­ததே இந்த சிரட்டை கைத்­தொ­ழி­லாகும்” என்­கிறார் மார்க் அன்­டனி.

 

“முதலில் தேங்­காயை உடைக்­காது தேங்­காயை அறுத்து எடுப்­ப­தற்­காக வெள்ளை இரும்­பினால் ரம்பம் ஒன்றை தயா­ரித்தேன்.

 

 

பின்னர் சிரட்­டையின் உள் பகு­தியை சுத்தம் செய்ய திருப்­புளி கரு­வி­யையும் தயா­ரித்தேன். தேங்­காயை பாதி­யாக வெட்­டாது முக்கால் பகு­தி­யாக வெட்ட வேண்டும். அப்­போதே பொருட்­களைத் தயா­ரிக்­கலாம். 

 

தேங்­காயை உடைத்தால் அது பல கோணங்­களில் உடையும். அதனால் பொருட்­களைத் தயா­ரிக்க இய­லாது.

 

முதன் முத­லாக பெரும் சிர­மப்­பட்டு உண்­டி­யலை தயா­ரித்தேன். பின்னர் தேநீர் அருந்­து­வ­தற்­கான கோப்­பையை தயா­ரித்தேன். காலங்கள் மாற, மாற, புதுப் புதுப் பொருட்­களை தயா­ரித்தேன்.

 

கோப்­பைகள், மலர்ச்­சாடி, பூந்­தொட்டி, உண்­டியல் மெழு­கு­திரித் தாங்கி, சைக்கிள், அசோகச் சக்­கரம், 7 அடி­யி­லான குத்­து­விளக்கு, மின்­வி­ளக்கு கவசம் என பல­த­ரப்­பட்ட உற்­பத்­தி­களை தயா­ரிக்­கின்றேன்” எனவும்  மார்க் அன்­டனி தெரி­வித்தார்.

 

தேங்காய் சிரட்டை மூல­மாக முன் தேவை­க­ளுக்­காக அறி­விப்­ப­வர்­க­ளுக்கும் அவர்­களின் மாதி­ரி­க­ளுக்­கேற்ற வகையில் தயா­ரித்து வழங்­குவேன்.

 

பிறந்­தநாள் உட்­பட பல நிகழ்­வு­க­ளுக்கு பரிசு வழங்­கவும் கொள்­முதல் செய்­வோரும் உள்­ளனர். கொழும்­பிலும், நீர்­கொ­ழும்பு, நொச்­சி­யா­கம உட்­பட பல பாட­சா­லை­களில் கண்­காட்­சி­களை நடத்தியுள்ளேன்.

 

மேலும் சில பாட­சா­லை­களில் தேங்காய் சிரட்டை மூல­மாக பொருட்கள் தயா­ரிக்கும் செய்­ முறை­களைப் பயிற்­று­வித்­துள் ளேன். வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களும் கொள்­முதல் செய்­வார்கள். 

 

இலங்­கைக்கு வெளி­யேயும் கடல் கடந்து எனது தயா­ரிப்­புக்கள் சென்­றுள்­ளன. என்று தக­வல்­களை வழங்­கிய மார்க் அன்­டனி தொடர்ந்து அவரின் வெற்­றியை பற்­றிய தக­வல்­களை வழங்­கு­கையில், மத்­து­க­மையைச் சேர்ந்த இந்தி விக்­கி­ர­ம­சிங்க என்ற மின் பொறி­யி­ய­லாளர் இங்­கி­லாந்தில் வாழ்­கின்றார்.

 

விடு­மு­றைக்­காக அண்­மையில் எமது நாட்­டுக்கு வருகை தந்­தி­ருந்­த ­போது என்­னைப்­பற்றி கேள்­விப்­பட்டு இங்கு வரு­கை­தந்தார்.

 

 

அவரின் எண்­ணத்தில் உதித்­த­வாறு ஐந்து மின் குமிழ் கவ­சங்­களை நிர்­மா­ணித்து தரு­மாறு கேட்டார். அவர் கொடுத்­த­வாறு மின்­குமிழ் கவ­சங்­களை தயா­ரிக்க சுமார் 13 நாட்கள் சென்­றன.

 

இதற்­காக மிகப் பெரிய தேங்­காய்கள் 25 கொள்­முதல் செய்து அத்­தேங்காய் சிரட்­டை­களின் மூல­மாக மின் குமிழ் கவ­சத்தை நிர்­மா­ணித்து முடித்தேன். நான் இம்­மின்­குமிழ் கவ­சத்­திற்கு 1500 ரூபாய் விலை மதிப்­பிட்டேன்.

 

ஆனால் இந்தி விக்­கி­ர­ம­சிங்­கவோ பத்­தா­யிரம் ரூபாய் கொடுத்து விடை பெற்றார். எனது வாழ்க்­கையில் இது மறக்க இய­லாத சம்­பவம். இது எனது தொழில் அல்ல. இது எனது வினோத உழைப்பு. பகல் சாப்­பாட்டின் பின்­னரே விர­ய­மாகும் சிரட்­டை­களின் மூல­மாக புதுப் புது கண்­டு­பி­டிப்­புக்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கின்றேன்.

 

இந்த சிரட்டை கிண்­ணங்­களை எதற்­காக செய்­துள்­ளீர்கள் எனக் கேட்டோம்.
இது காலம் வரையும் சைக்கிள் ஓட்ட வீரர்­க­ளுக்கு போட்­டியில் வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு தயா­ரிப்பு கிண்­ணங்­க­ளையே வழங்கி வந்­தனர்.

 

எதிர்­வரும் காலங்­களில் எனது தயா­ரிப்­பான சிரட்டை வெற்­றிக்­கிண்­ணங்கள் வழங்­கப்­படும் அதற்­கா­கவே கிண்­ணங்­களை தேங்காய் சிரட்­டையில் தயா­ரித்து வரு­கின்றேன்” என அவர் பதி­ல­ளித்தார்.

 

“சைக்கிள் ஓட்ட வீரர்­களின் கோரிக்­கைக்கு இணங்க, ஒரு அங்­குலம் நீளம் கொண்ட சைக்­கி­ளையும் ஓட்ட வீர­ரையும் வடி­வ­மைத்­துள்ளேன். இது எனது தொழி­லன்று "உமது பெயரை மற்­ற­வர்கள் கூறும் வகையில் வேலை செய்” என்ற எனது 16 வயதில் எனது அன்­றைய அதி­காரி கூறி­யதன் பிர­தி­ப­லிப்பே இது­வாகும். இன்று நான் அனைத்து மொழி பத்­தி­ரிகை ஊட­க­வி­ய­லா­ளர்­களால் கௌர­வப்­ப­டுத்­தப்­பட்டு பேசப்­ப­டு­கிறேன்.

 

தொலைக்­காட்­சி­களில் என்னைப் பற்­றிய தக­வல்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இதை­விட எவ்­வித தேவையும் எனக்­கில்லை. என்னை வாழ­வைப்­பது இலைக்­கஞ்­சி­யே­யாகும்.

 

இச்­சி­ரட்டைக் கலையை இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­று­விக்க ஆசை கொண்­டுள்ளேன். அதற்­கான பொரு­ளா­தாரம் என்­னிடம் இல்லை. எவ­ரா­வது முயற்சி செய்து பயிற்சிக் கூடம் அமைத்துக் கொடுத்தால் இக்­க­லையை பெரும் கைத்­தொ­ழி­லாக இந்­நாட்டு இளை­ஞர்கள் மத்­தியில் கொண்டு செல்வேன்.

 

வருங்­கா­லத்தில் இக்­கலை உற்­பத்தி பொருட்­க­ளுக்கு நல்ல கிராக்கி உள்­ளது என்றார் மார்க் அன்­டனி.

 

இன்­றைய இளை­ஞர்­க­ளுக்கு என்ன தக­வல்­களை வழங்க யோசித்­துள்­ளீர்கள் எனக் கேட்டோம்.

 

 

இன்­றைய இளைஞர்கள் கைத்தொலைபேசியுடனேயே நேரத்தை வீணடிக்கிறார்கள். கழிவுப் பொருட்களில் இருந்து நல்ல கண்டுபிடிப்புக்களை மக்கள் முன் வைக்கலாம். நம்மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

 

நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த உலகத்தில் இருக்க இயலாது. நம்பிக்கையே நமக்குக் கடவுள் எனத் தெரிவித்தபோது அவரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. 

 

அவரிடம் விடை பெற்று வீதிக்கு வந்தோம். மார்க் அன்டனியின் பட்டறையிலிருந்து தேங்காய் சிரட்டையை ரம்பத்தின் மூலம் அறுக்கும் அறுவைச் சத்தம் மட்டும் நீண்ட நேரத்திற்கு சங்கீதமாக ஒலித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு. 

 

படப்பிடிப்பு:கே.பி.பி.புஸ்பராஜ்

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.